ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Thursday, April 30, 2009
ஐயோ மக்களைக் காப்பாத்துங்கள்- கலைஞர்
உங்களுக்கு நான் ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லப்போறேன் என்று ஜெயலலிதா ஒரு சுவாரஸ்யம் நிறைந்ததும் மனம் பதைபதைக்கக் கூடியதுமான விடயத்தைக் கூறியிருக்கின்றார். மிகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து சந்த தகவல் என்று கருணாநிதி -ராஜபக்ஸ -சோனியா இணைந்து செய்த கூட்டுச் சதி பற்றி வெளிப்படுத்தியுள்ளார். எடுத்ததற்கெல்லாம் அவதூறு வழக்குப்போடும் கருணாநிதி இது பற்றி வாயே திறக்காதது ஏன்?
ஆகவே அவர் இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றார் என்ற பின்னணியில் அவரிடம் க்ரேட்கப்பட வேண்டிய சில விடயங்கள் இவை.
திடீர்ப் போர் நிறுத்தம் அதிரடி உண்ணாவிரதம் பற்றித்தான் சொல்லுகின்றேன். இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற ஒரே காரணத்தை மனதில் வைத்து தமிழரின் எதிரியான ராஜபக்சேயுடன் இணங்கிப் போன கேவலமான காரியத்தை கலைஞர் செய்தார் என்பது வேதனைக்குரியதே.
இவருக்கும் லங்கா ரத்னா இந்து ராம் போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம். அவர் நான் தமிழர்களின் எதிரி என்று சொல்லிலும் செயலிலும் நேரிலும் கூறிச்செய்பவர். ஆனால் இவரோ தமிழர்களின் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தைக் காட்டிக்கொடுப்பவர்.
"தேர்தலில் ஜெயலலிதாவிற்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால் ஜெயலலிதாவிற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கே அவர் சொல்கிறபடி மத்திய அரசு அமைந்துவிட்டால் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சனை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதைக் கேளுங்கள். தேர்தல் நடக்கும் தேதியான மே மாதம் 13ஆம் தேதிவரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்போழுதான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று மீண்டும் என் தயவில் மத்திய அரசு அமைந்தால் நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டி விடலாம். " - ஜெயலலிதா
இப்படி ஒரு கீழ்த்தரமான எண்ணமும் சிந்தனையும் கொண்டவரையா நாங்கள் தமிழினத் தலைவர் என்று காலாதி காலமும் போற்றி வந்தோம்.
கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு என்ற அண்ணாவின் இலட்சியத்தை வழி முறையை கலைஞர் எப்போதோ காற்றில் விட்டு விட்டார் என்பதை நாம் அறிவோம். ஆனால் தன் மானத்தையும் இழந்து எதிரியின் காலில் தெண்டனிட்டு இரந்து நிற்பார் என்று நாங்கள் நம்பியிருக்கவில்லை. ஆனால் இப்போது நம்புகின்றோம். காலம் பெரிய ஆசான். மழையில் முளைத்த காளான்களை உடனும் இனம் காட்டிவிட்டிருக்கின்றது.
"நீங்கள் எனக்கு உதவினால் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். எனவே உங்களுக்குப் பிரச்சனை வராமல் தடுக்க மே மாதம் 13ஆம் தேதி வரை போர் நடத்தாமல் பொறுத்திருங்கள். இங்கு தேர்தல் முடிந்தவுடன் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று கருணாநிதி" - ஜெயலலிதா
என்னே ஒரு நாணயம் ... தலைவன் என்று நம்பிப் போற்றியிருந்த மக்களுக்குக் கொடுக்கும் நற்செயல்.
குறளோவியம் எழுதிய கலைஞரே படிக்காத ஒரு குறளை ஞாபகப் படுத்த வேண்டியிருக்கின்றது.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.
"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் "
அதற்கான நேரம் வந்து விட்டதென்றே படுக்கின்றது. தமது அந்திமக் காலத்தின் வீழ்ச்சியைக் கலைஞரே உணரத் தொடங்கி விட்டார்.
"நான் உங்களைத் தான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இருக்கும் போது, உங்கள் நெஞ்சில் நான் இருக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும். இந்த ஜனநாயக புனிதப் போரில் பார்லிமென்டில் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று ..." -கருணாநிதி
அவர் வார்த்தைகளிலேயே தோல்வியின் முகத்தைத் தரிசிக்கத் தொடங்கி விட்டார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இத்தனை வருட காலம் அவரைச் சூழ்ந்திருந்த பெருமை புகழ் ஞானம் கெளரவம் கல்விச் செருக்கு அத்தனையும் அவரை விட்டு ஓடிவிட்டது. மக்கள் மீது இருந்த நம்பிக்கையும் போய் விட்டது. இறுதி இறுதியாக தொண்டர்களைப்பார்த்து கெஞ்சும் இழி நிலை வந்து விட்டது.
தேர்தல் எக்காலத்திலும் புனிதப்போர் அல்ல. புனிதப்போர் என்பது கொண்ட கொள்கைக்காகவும் நம்பிக்கைக்காகவும் போராடுவது. அது மகத்தான தியாகத்தை முன்னிறுத்தி செய்யப்படுவது. ஆண்டவனுக்கு நேர்மையாகச் செய்வது. ஈழ விடுதலை ஒரு புனிதப்போர். துன்பப்படும் மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படுவது.
தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வருவது. பருவ காலம் போல மாறிமாறி வருவது. சட்டபூர்வமானது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் ஒரு வழி முறை . பொருத்தமற்ற வார்த்தைகளைப் பாவித்து மக்களைக்குழப்புவதே ஒரு ஏமாற்றுத்தனம்.
"அவர்களும், நானும் எதிர்பார்ப்பது, கட்சியினரின் கடின உழைப்பே. எறும்பு போல சுறுசுறுப்பு காட்டி தொண்டர்கள் உழைப்பர் என எனக்கு தெரியும். உழைத்த களைப் பில் உறங்கிவிடக் கூடாது என்பதை உள்ளத்தில் நிறுத்தி உழைக்க வேண்டும் "-கருணாநிதி
ஏன் ? மக்களுக்கு இவர் இதுவரை என்ன செய்தார் ?
"தன்னலம், குடும்ப நல ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அதன் தீமை, வேதனையை நீங்கள் தாங்கி வருகிறீர்கள். 2004ல் உங் களால் ஓட்டுப் பெற்று மத்தியில் தி.மு.க., ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, கடந்த ஐந் தாண்டில் நீங்கள் என்ன பயன், நன்மை பெற்றீர்கள். நாட்டில் பொருளா தார சீரழிவு. நதிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம். விலைவாசி உயர்வுதான் உங்களுக்கான பரிசு. நிர்வாக திறமையின்மை, அலட்சியம், மணல், அரிசி கடத்தல், அராஜகம், ரவுடிகள் அட்டூழியம் போன்றவைகளைத்தான் கருணாநிதி தலைமையிலான அரசு செய்து வருகிறது. மின்சாரத்துக்கு விடுமுறைவிட்டு விவசாயத்தை அழித்துவிட்டனர்." -ஜெயலலிதா
இதற்காகவா ? தொண்டர்கள் உழைக்க வேண்டும். உழைப்பின் களைப்பில் உறங்கும் தொண்டனையும் வருத்தும் என்னே உயர்வான மனம்.
நன்கு சிந்தித்து அதனால் மக்கள் எடுக்கும் முடிவின் மூலம் தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பதே கலைஞர் இதயத்தை இனிக்கச் செய்யும் மக்கள் கடமையாகும்.
பதிவுலகமும் தேர்தலும்
பதிவுலகத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது சுவாரஸ்யமாக இருக்கின்றது. ஈழத்துப்பிரச்சினை முழு அளவில் இத்தேர்தல் களத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது. அது பற்றிய நம்பிக்கையும் பயமும் நம்பிக்கையீனமும் கொண்டதாக அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது. மகிழ்ச்சியும் காழ்ப்பும் வெறுப்பும் கொண்டதான உணர்ச்சிகள் காட்டமாகவும் மிதமாகவும் வெறுப்பாகவும் வெளிக்காட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நமக்கேன் வம்பென்று ஒதுங்கிப்போபவர்களையும் காணமுடிக்கின்றது. அப்படிப்பட்டவர்கள் கும்மி கும்மாளம் அவியல் தொவையல் என்று பதிவுகளைப்போட்டு காலந் தள்ள நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளார்கள்.
ஒரு காலத்தில் தேனீக்கள் போல மொய்க்கப்பட்டவர்கள் எல்லாம் ஈயடிக்கும் பரிதாபம் எலக்ஷன் வரை நீடிக்கும் என்றே தோன்றுகின்றது. அந்தளவிற்கு உணர்ச்சிகளின் குவியலாகப் பார்க்கப் படும் இந்த எலக்ஷன் காலத்தில் ஈழத்திலும் தமிழகத்திலும் இழந்த உயிர்கள் மிக அதிகம்.
அதுமட்டுமில்லாத சிறப்பு குற்றச்சாட்டு இந்தப் போரின் பின்னணியில் இந்தியா பங்கு கொண்டிருக்கின்றது என்பது. இந்தியாவின் பங்களிப்பை தேர்தலின் பொருட்டு மறைத்தும் உயர்த்தியும் வெளிப்படுத்தும் தலைவர்களால் தேர்தல் மேடைகளில் சூடு பறக்கின்றது. தமிழக மக்கள் பிரச்சினையெல்லாம் அடிபட்டுப்போகும் அளவில் ஈழப்பிரச்சினை என்ற ஒரே அச்சிலேயே இந்தத்தேர்தல்க் களம் சுற்றிக்கொண்டிருக்கின்றது.
பதிவர்களில், கட்சிகளின் நீண்ட நாள் தொண்டர்கள் நம்பிய கொள்கைகளுக்காகப் போராடிக்கொண்டிருக்க பொதுவில் இருப்பவர்கள் கள நிலைக்கேற்ப கட்சி மாறிக்கொண்டிருக்கின்றார்கள். கட்சித் தொண்டர்களுக்கு அடித்து ஆட இடமில்லாது அரைத்தமாவை அரைக்கும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்கின்றது.
இன்றைய நிலை மட்டுமில்லாது அன்றைய "மகிழ்ச்சிக்கால" கட்சி அனுபவங்களையும் இரை மீட்ட முற்படுகின்றார்கள். அவர்களுடைய மனமும் நிறமும் ஒரே இடத்தில் ஊறியிருப்பது புரிந்து கொள்ளப்பட வேண்டியது தான். கட்சி நிலைகளை செயற்பாடுகளை வக்காலத்து வாங்குவதற்கு முன்னால் ஈழத்தமிழர் பிரச்சினையில் அவர்கள் நிலைப்பாடு எடுக்க வேண்டிய அதிமுக்கிய நடவடிக்ககள் பற்றிய அபிப்பிராயங்களை முன் வைத்தால் கட்சி தாண்டிய உண்மை முகத்தைப்புரிந்து கொள்ள முடியும். அப்படி யாரும் வெளிவரத் தயங்குவது அவர்களைப் பற்றிய புரிதலில் மயக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பதிவர்களுக்குத் தீனி போடும் வகையிலேயே அரசியல் கட்சிகளின் செயற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ்-தி.மு.க, அ.தி.மு.க-ம.தி.மு.க கூட்டணியே பதிவுகளில் முழுமையான தாக்கம் செலுத்துகின்றன. பா.ஜ.க, விஜய காந்த் மற்றும் உதிரிகளாக தேர்தல் களம் காண்போர் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையே இங்கு காணப்படுகின்றது.
உதிரிக்கட்சிகளின் தாக்குதலும் குற்றச்சாட்டுகளும் அவர்களைப்போலவே இடையிடையே எரியும் தீக்குச்சிகளைப்போல எரிந்து அணைந்து போகின்றன செய்திகளில்.
சுவாரஸ்யம் இரு பெரும் கூட்டணிக்கட்சிகளைச் சுற்றியே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் மேலுள்ள ஈழ யுத்தம் சார்ந்த குற்றச்சாட்டானது அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க வை சுதந்திரமாக தேர்தல் யுத்தத்தைச் சந்திக்க முடியாது முடக்கிப் போட்டிருக்கின்றது. தமிழர்களோடு எப்போதும் "தமிழால்" பேசும் கலைஞர் இப்போது தேசியத்தை அடைகாக்கும் வேலையைச் செய்யும் இக்கட்டில் மாட்டிக்கொண்டிருக்கின்றார். அப்படியில்லையாயின் கலைஞரை அடிக்க இங்கு ஆளே இருக்க மாட்டார்கள். காங்கிரஸ் என்ற மறைப்பைக் கண்ணில் கட்டிய குதிரையின் வேகம் போல நிதானமாக ஓடுவதே கலைஞருக்கு விதிக்கப்பட்டிருக்கின்றது.
தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "பிரபாகரன் என் நண்பர்"போன்ற சாணக்கிய ராஜதந்திர தொலை நோக்கு ஆயுதங்களைப் பறியில் போட வைத்து விட்டது காங்கிரஸ். "தனித்தமி்ழீழம் " அமைத்துக் கொடுப்பேன் என்று கர்ஜித்துக் களம் இறங்கியுள்ள ஜெயலலிதா என்ற புலியைக் களத்தில் சந்திப்பதற்கு கலைஞரிடம் ஆயுதங்கள் இல்லாது தற்காப்புச் சண்டையில் இறங்கியுள்ளார்.
ஆயுதங்கள் வேண்டுமெனின் தடைக்கல்லாய் இருக்கும் காங்கிரஸைக் கழட்டி விடவேண்டும் .அதற்கு காலமும் நேரமும் மனமுமில்லாது விதியின் வழியில் கலைஞர் செல்ல முடிவு செய்திருப்பது உடன் பிறப்புகளை கலக்கமடையச் செய்திருக்கின்றது.
அந்தக்கலக்கமே அபி அப்பா போன்ற பதிவர்களை "உடன் பிறப்புகளுக்கு உற்சாக பாடம்" போன்றவற்றை பாகம் பாகமாக எழுத வைத்திருக்கின்றது. தி.மு.க வின் கல்தோன்றாக் மண்தோன்றாக் காலத்துப் பெருமைகளை தூசு தட்ட வைத்திருக்கின்றது. வழமையாக கலஞர் தான் இவ்வகை "ஞாபகப் படுத்தும் " கடிதங்களை எழுதுவார். இப்போது தொண்டர்களும் கடிதம் எழுதப் பழகிக் கொள்கின்றார்கள். அவ்வளவிற்கு அவர்கள் "சைடு வீக்கு".
அ.தி.மு.க விற்கு அந்தமானில காத்தடிச்சா கோடியாக் கரையில மழை பெய்யிற மாதிரி தி.மு.க விற்கு எதிரான மழை போயஸ் கார்டனில் கொட்டி செழிப்பூட்டிக் கொண்டிருக்கின்றது. அதற்கு சசி ,ரோசாவசந் , நிலவுப் பாட்டு போன்றோரின் பதிவுகளே சாட்சி. ஏன் அ.தி.மு.க விற்கு வாக்குப் போட வேண்டுமென்ற கேள்வியை முன் வைத்து இவர்களில் யாரும் வாக்கு கேட்கவில்லை. ஆனால் காங்கிரஸைத் தோற்கடிக்க வேண்டிய காரணங்களை அடுக்கி வைத்திருக்கின்றார்கள். கழுதையோடு சேர்ந்த வாலாக தி.மு.க விற்கும் இது எதிராகப் போய் விடுகின்றது.
அதே நேரம் ஈழத்தமிழ் பதிவர்களான பருத்தியன், கவிஷன் போன்றோரின் தம் மக்கள் கொல்லப்படும் நேரத்திலும் "கண்டு கொள்ளாது" இருந்த கலைஞர் மீது ஏற்பட்ட மனக்குறை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகப் பதிவுக் களத்தை அதிரடித்துக் கொண்டிருக்கின்றது.
பதிவுலகமும் இன்று பிரச்சாரத்தில் நடுத்தர மேல்தட்டு மக்களால் கண்டு கொள்ளப்படும் பிரச்சார ஊடகம் என்ற அளவில் இதன் தாக்கமும் பெரிதாக இருக்கும். எழுதுபவர்களை விட பதிவுலக பதிவுகளை வாசிக்கும் மக்கள் தொகை மிக அதிகம் என்பதால் இதன் தாக்கமும் பெரிய அளவில் இருக்கும். பெரும் பத்திரிகை ஊடகங்களும் பெரும் எழுத்தாளர்களும் பதிவுலகில் கால் வைத்து இந்த ஜோதியில் கலந்திருப்பதே இதை உறுதி செய்கின்றது.
உலகத்தின் எந்தப்பகுதியில் இருப்பவரும் இன்று தமிழகத் தேர்தலில் கருத்தும் அபிப்பிராயமும் சொல்லமுடிந்ததே பதிவு்லகின் ஆளுமைக்கும் அது ஏற்படுத்தக் கூடிய தாக்கத்திற்கும் சான்றாகும்.
குறிப்பு: இங்கு குறிப்பிடப் பட்டிருக்கும் பதிவர்களின் பெயர்கள் நட்பு அடிப்படையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. விருப்பமற்றவர்கள் தெரிவித்தால் மன்னிப்புடன் பெயர்கள் அகற்றப்படும். பலரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லையென்பதால் அவர்கள் பங்களிப்புகள் குறைத்து மதிப்பிடப்படுவதாக கொள்ளல் ஆகாது.
Wednesday, April 29, 2009
ஜெயலலிதாவை ஆதரிப்போம்
இன்று ஜெயலலிதா மனந் திறந்து பேசியிருக்கின்றார். ஒரு மனப்போராட்டத்தில் இருந்து தெளிபு பெற்றதாகவே அவர் உரை இருக்கின்றது. ஏதோ ஒன்று குறித்து பரிகாரம் தேடும் ஆவேசம் அதில் தொனிக்கின்றது.
ஈழத்தமிழர் குறித்த ஆழ்ந்த அனுதாபமும் ஆதங்கமும் அதில் வெளிப்பட்டிருந்தது. பல தலைவர்களின் தலைகள் அதில் உருட்டப்பட்டது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்ற கபடநாடகம் ஆடமுற்பட்டவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார். இந்திய ஆட்சியாளர்களின் கரிசனையற்ற அலட்சியம் பற்றி கேள்வியெழுப்பியுள்ளார்.
யுத்த நிறுத்தத்தை சிங்கள அரசு அறிவித்திருப்பதாகத் தமிழகத்தில் கூறப்பட்ட கயமை பற்றி இடித்துரைத்துள்ளார். தேர்தல் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்ட காங்கிரஸ் -தி.மு.க வின் கபடத்தை நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத்தமிழ் மக்களை பகடைக்காயாகப் பாவிக்கும் இழிதனம் பற்றி கோபம் கொப்புளிக்க இடித்துரைத்துள்ளார்.
அப்படிப்பட்டவர் இத்தனை தூரம் தெளிவுடன் சிந்திக்ககூடியவர் அதே தவறை விடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவரை ஆதரிப்போம்.
எப்படி அவரால் உதவி செய்ய முடியும் என்றும் தெளிவுறுத்துகின்றார். 1971 இல்
எந்த சர்வதேசச் சட்டங்களின் படி பங்களாதேசம் உருவாக இந்திரா உதவினாரோ 1990 இல் எந்த சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இராஜீவ் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பினாரோ அதே சர்வதேசச் சட்டங்களின் பிரகாரம் உதவ முடியும் என்று தெளிபு படுத்தியுள்ளார்.
அதை நாம் இல்லை, முடியாது என்று சொல்ல எந்த முகாந்திரங்களும் இல்லை. இதை சர்வதேச சமூகம் தடை போட முடியாது. பங்களாதேசத்திற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டபோது அனுமதித்த அதேசர்வதேச சமூகம் இலங்கைக்கு அமைதிப்படை செல்ல அனுமதித்த சர்வதேச சமூகம் இப்போதும் அனுமதிக்க முடியாது என்று சொல்ல முடியாது.
சர்வதேச நாடுகளை விட ஈழத்தின் மேல் அதிக அக்கறை கொள்ள இந்தியாவிற்கு அதிக உரிமையுள்ளது.
தன் கட்சியின் ஆதரவு பெற்ற அதிகாரம் செலுத்தக் கூடிய அரசு மத்தியில் ஆட்சியேறும் போது தான் நினைத்ததைச் செய்ய முடியும் என்று கூறியிருக்கின்றார். ஆகவே அது அவ்வாறு நிகழுமாயின் ஏன் அந்த வாய்ப்பை அவருக்குக் கொடுக்கக் கூடாது.
ராஜபக்ஸே கருணாநிதியின் கூட்டுச் சதியைப் பற்றி கூறியிருக்கின்றார். அது எவ்வளவு தூரம் உண்மை ..முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது பற்றி இங்கு விவாதிக்கத் தேவயில்லை.
ஆனாலும் இத்தகைய எந்த நம்பிக்கையையும் தி.மு.க இதுவரை தரவில்லை. ஆடிய அனைத்தும் வெறும் நாடகம் என்னும் சாதாரண மனிதருக்கும் சந்தேகம் ஏற்படும் வகையில் இருக்கின்றன. நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எவரும் கிடைக்கும் சிறு துரும்பைதானும் பற்றிக்கரை சேரவே முயல்வார்கள் . அந்த வகையில் வாக்குறுதி இன்று ஈழத்தமிழர் இருக்கும் நிலையில் துரும்பல்ல பெரும் படகு.
படகில் ஏறிக்கரை சேர ஏன் உதவக்கூடாது? இந்த ஒரு நோக்கத்திலேனும் ஜெயலலிதாவை இத்தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். ஆம் நாம் ஜெயலலிதாவையும் அவர் கூட்டணியையும் ஆதரிப்போம்.
எழுதுவதே முட்டாள் தனம்
சில வேளைகளில் எழுதுவதே முட்டாள்தனமாகப் படுகின்றது. சாக்கடைக்குள் கால் வைக்காது வீதியைக்கடக்கும் ஜாக்கிரதையுடனேயே எல்லோரும் கடந்து போவது தெரிகின்றது. சாக்கடையுடன் வாழ்வது பற்றிய கவலை பெரிதாகத் தெரியவில்லை. தன் வீட்டுக் கதவு வரை சுத்தமும் சுதந்திரமும் இருந்தால் போதுமென்ற கவனம் இருக்கின்றது.வீதியில் இறங்கும்போது பல கவசங்களைப் போட்டுச் செல்லும் தந்திரம் தெரிகின்றது.
மிகப்பெரி்ய கவசம் அப்பாவி வேஷம் போட்டு மனம் நிறைய நரித் தந்திரத்துடன் கூர்மையாக வாழ்ந்து முடிப்பது. மலையாள எழுத்தாளர் பால் ஸக்கரியா ஓரிடத்தில் சொல்லியதைபோல மக்களில் அதிகம் பேர் அடிப்படை வாதிகளாக மாறிவருகின்றார்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நடுத்தர வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்திற்கு உயர்ந்து கொண்டிருக்கும் கீழ்த்தர வர்க்கத்தினரும் இவ்வாறான மனநிலையில் சமூக அக்கறையைக் குறைத்துக் கொள்கின்றார்.
தான் தன் குடும்பம் என்ற சுயநலம் உயர்ந்து போவதுதான் இதற்குக் காரணம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. ஒரு நிலையான வேலை, அதனால் கிடைக்கும் செளகரியங்கள் இத்துடன் வாழ்க்கை முடிந்ததாக தப்பிதமான முடிவில் இருக்கின்றார்கள் என்றே படுக்கின்றது.
இவ்வாழ்க்கையை அலைக்கழிக்கும் எந்த விடயத்தைப் பற்றியும் அதிக அக்கறை கொள்ளும் மனநிலையில் இல்லாதிருக்கின்றார்கள்.
தமிழ் நாடு ஒரு தேர்தல் நேரத்தில் இருக்கும் போதும் அதுவிதமான எந்த முடிவும் அற்றிருக்கின்றார்கள்.தங்களுக்கு என்ன வேண்டுமென்ற குறைந்த பட்ச தெரிவைக் கூட சொல்லமுடியாதவர்களாக அல்லது சொல்ல விரும்பாதவர்களாக இருக்கின்றார்கள். இது வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு சாபக்கேடாகவே வளர்ந்து செழித்திருக்கின்றது. எவ்வளவு ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும் அனுசரித்துப் போகும் ஒரு கொடூரத்தைச் செய்ய முடிகின்றது.
இதனால்தான் இந்தியாவில் ஒரு வாட்டர் கேட் ஊழல்போல் எதுவும் வெளிப்படுவதுமில்லை. அதனால் மாற்றங்களும் ஏற்படுவதில்லை. அப்படியே வெளிப்பட்டாலும் அரசியல்வாதிகள் இலகுவில் தப்பித்து விடுகின்றார்கள். ஒரு சாதாரண எம் .எல்.ஏ கூட கேள்வி கேட்க முடியாத சட்டத்திற்கு அப்பாற்பட்ட பிம்பத்துடன் நடமாட முடிகின்றது.அவர்களுடன் கூட இருப்பவர்களுக்கும் அத்தகைய ஒரு "காப்பு" வழங்கப்படுகின்றது. அதனாலேயே அவர்களைச் சுற்றி ஒரு ஜால்ராக் கூட்டம் எப்போதும் சுற்றிக்கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் "மிஸ்டர் பிரசிடெண்ட்" என்று கூப்பிட்டு கேள்வி கேட்கும் உரிமை மிகப் பெரும் ஜனநாயக நாட்டில் மறுக்கப்படுகின்றது. பொருத்தமில்லாத அடைமொழிகளை போட்டு அழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் கற்பிக்கப்படுகின்றது. புனிதப் பிம்பங்களாக உயர்த்தும் ஒரு போலித்தன்மை உருவாக்கப்படுகின்றது.
இல்லாவிட்டால் 64 கோடி ரூபா இந்திய மக்களின் வரிப்பணத்தைத் திருடியவனைத் தப்பிக்கவிடும் கயவாணித் தனத்தைப் பார்த்தும் சும்மா இருக்கமுடியுமா? ஒரு வேளை சோற்றுக்கு அல்லல்ப்படும் மக்கள் இருக்கும் நாட்டில் இது எத்தனை பயங்கரமானது.எத்தனை கோடி மக்களின் ஒரு வேளை சோற்றைத் திருடிச் செல்ல நம் அரசியல் வாதிகளே உடந்தையாயிருக்கின்றார்கள். நாம் எதையும் கண்டு கொள்ளாது ஆமைகள் போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
ஊழல் புகழ் வாதிகளை தலைவர்களாகத் தேர்ந்தெடுத்து புளகாங்கிதமடைகின்றோம்.என்ன ஒரு மந்தைத்தனமான வாழ்க்கை? இதையும் கடந்து எங்களைப் பற்றி எவ்வாறு உயர்வாகச் சொல்லிக் கொள்கின்றோம்.
பால் ஸக்கரியா சொல்வதைப்போல,அரசியலுக்கு சாகசத்தன்மையும், அதீதமான கடின உழைப்பும், அதனோடு மன மற்றும் உடற் கஷ்டங்களை சந்திக்கும் மனோபலமும் தேவை. மன விழிப்புணர்வும், மக்களை ஏற்றுக்கொள்ளவைத்து ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்பும் பேச்சும் தேவை . அதற்குக் கூட தயாரில்லாதவர்களை குறைந்தபட்ச மரியாதையுடனும் நினைக்க முடியவில்லை.
இப்போது மீண்டும் முதல் வரிக்கு வருகின்றேன். இப்போதெல்லாம் எழுதுவதே முட்டாள்தனமாகத் படுகின்றது ... அத்துடன் இந்த வரியையும் சேர்த்துக் கொள்ளலாம். "அதை வாசிப்பவர்களைப் பொறுத்து.."
" பசி " தம்பரம்
"பசி" தம்பரம் புதிசா ஒரு ஜோக்கடிச்சிருக்காப்பல. இந்தியா சிங்கள அரசுக்கு ஒண்ணும் உதவி செய்யல எல்லாம் வேலையத்த பயலுவள் கதை அப்படீன்னுருக்கார்.. ஆனா சிங்களப் படை தளபதியும் சிறிலங்கா பாதுகாப்பு படைச் செயலாளரும் நெக்குருகி இந்தியாவுக்கு நன்றி சொல்லியிருக்காங்க. அவங்க பெரிய மனசுக்காரங்க. நன்றி மட்டும் சொன்னாப்போதாது என்னென்ன தந்தாங்க எப்பிடியெப்படித் தந்தாங்கன்னு பட்டியல் வேற சொல்லிப்புட்டாங்க...
இந்தப்பயபுள்ள "பசி"தம்பரம் என்னடான்னா கோமாளி வேஷம் போட்டு எலக்ஷன் மேடையெல்லாம் கூத்தடிச்சிட்டிருக்காப்பல. இம்மாம் ஜனங்க செத்துப்புட்டாங்க ஈழத்தில.. உலகத்தில இருக்கிற தமிழ் மக்கள் எல்லாம் அழுதுகிட்டிருக்காங்க..
"இடுக்கண் வருங்கால் நகுக"ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காகல்ல..இந்த மக்கள் தான் சிரிக்கிறாகல்ல..நாமளாவது சிரிப்புக் காட்ட்டாலாம்னு பபூன் வேஷம் போட்டிருக்காப்பல..பிரபாகரனையும் தோழர்களையும் சரணடைங்க ..உயிருக்கு ஒண்ணும் டேஞ்சரில்லன்னு மெகா காமடி பண்ணியிருக்காப்பல... இம்புட்டுச் சனங்களையும் இத்தாலி சானியாள்கூட சேர்ந்து கொல்லுரதே அவங்களைப் புடிச்சு தூக்கில போடன்னு இந்த உலகத்துக்கே தெரியும் இவரென்னடான்னா .. காமடி பண்ணிக்கிட்டிருக்காரு..
முன்னைய ராஜாக்க காலத்தில அரசர் கூட ஒரு காமடியன் இருப்பாராம் ,தெனாலி ராமன் பீர்ப்பால்னு... இப்போ அப்படியெல்லாம் தனியா இருக்கிரதில்ல.. ஏன்னா ராஜாக்களே இப்போ காமடியனா இருக்காங்க.. அப்படிப்பட்ட காமடியனுக்குள்ளே இவரு பபூன் வேஷம் போட்டிருக்கப்பல...
பர்சை ஆட்டையைப் போட்டுட்டான்னு ஒரு ஆறு வயசுக் குழந்தையை என்னா அடி அடிச்சு சித்திர வதை பண்னினாக நம்ம போலீஸ்காரவுக... நாமெல்லாம் டீ.வி யில பார்த்து மனு நீதிச் சோழன் காலத்தில வாழுறாப்பல மிதப்பில நடந்தோமே..
அப்படிப்பட்ட ஊரில 64 கோடி களவெடுத்த களவாணி இத்தாலி பேமானிய விட்டிடலாம்னு சொல்லிப்புட்டாக..முன்னாடி விசாரிச்ச சி.பி.ஐ ஆபீஸரே சொல்லியிருக்காக ..அவரு கமிஷன் வாங்கியதற்கு ஆதாரம் இருக்குன்னு ...சுவிஸில போயி 500 பக்கத்திர்கு ஆவனமெல்லாம் வாங்கி வந்திருக்காப்பல...
இது முன்னாடியும் ஒரு பதிவு போட்டிருக்கேன்..யாரும் கண்டுக்கல்லே.. சிலம் டாக் இந்தியான்னா கைதட்டி சந்தோஷப்பட்டுக்கிடுவோம்.. நம்ம யார் கிட்டேயும் இப்போ சொரணையே கிடையாதுங்க ...தோலெல்லாம் இப்போ நல்ல ஸ்ராங்காகிக்கிட்டே வருதுங்க..நம்ம தோலைத்தாண்டி எதுவுமே உள்ளார போவாதுங்கோ...
அப்பிடி நாமெல்லாம் இருக்கப்போ "பசி" தம்பரம் காமடி பண்ணுரதில என்ன தப்புன்னுரேன்...
இந்த பபூனுக்கு வட நாட்டில செருப்படி கொடுத்தானுங்கோ..ஆனா நாம மட்டும் ..நம்ம பிரதிநிதியா அனுப்பி வைக்கிரோம்.,, பாருங்க என்னா பெருமை எங்களுக்கு .. எங்க சார்பில செருப்படி வாங்கி வர ஒரு ஆளிருக்குன்னு எங்களுக்கு எவ்ளவோ பெருமை... ஏன்னா நாமெல்லாம் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" பாருங்க..
Tuesday, April 28, 2009
எலேய் ராமநாதா.. - மு.க
நிசப்தமான இரவு. அள்ளித் தெளித்து விட்டதைப்போல நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. மனதைக்கொள்ளை கொள்ளும் அழகு. இவை எதிலும் மனம் செல்லவில்லை. எடுத்த முயற்சியெல்லாம் தோற்றுப்போவதைத் தாங்க முடியவில்லை. மொட்டை மாடியின் அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்கும் தலைவர் நடந்து கொண்டிருந்தார்.
''எலேய் ராமநாதா.." தலைவருடன் கூடவே நடந்து கொண்டிருந்த நாமநாதன் "ஐயா " என்றார் வினயத்துடன்.
யோசனையுடன் கண்களை இடுக்கி "என்னையா... யாரையும் நம்பமுடியல்லே.."
ராமநாதன் எதுவும் சொல்லாது தலைவரையே பார்த்துக் கொண்டிருந்தார். தலைவரின் நிழல் போல இத்தனை காலமும் கூடவே இருந்த அவருக்குத் தெரியாதா..தலைவரின் மன உளைச்சலை... இந்த வயதிலும் நிம்மதியில்லாது அவர்படும் துயரத்தைப் பார்க்க சகிக்கவில்லை. என்ன செய்வது வேஷம் போட்டாகிவிட்டது ..ஆடித்தான் முடிக்கணும்..
"இந்தளவுக்கு ஊதிப்பெரிசாக்கிட்டாங்களே... இந்தம்மா கூட கூட்டு வைச்சதே பிழையாயிடுச்சேயா.. அனியாயத்துக்கு வீம்பு பிடிக்கிராங்க.. தேர்தலைபத்தி நெனைக்கிராங்களா... போன மகராசன் போய்ச் சேர்ந்திட்டான்... இந்தம்மா கூட இருந்து குப்பை கொட்ட வேண்டியது என் தலையெழுத்து்...ராஜா மாதிரி இருந்த நான் கூஜா தூக்க வேண்டிய கேவலம்.."
ஒன்றும் பேசாது தலையாட்டிக்கிட்டிருந்தார் ராமநாதன். கொட்டட்டும் ..திறந்து வைச்ச சோறும் மூடி வைச்ச மனசும் கெட்டுப்போயிடும் .. மனசில கிடக்கிறத கொட்டிட்டாலாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்..
"ஈழத்துக்காரங்க முரட்டுப் பசங்க ராமநாதா .. நாங்க நெனக்கிரமாதிரியெல்லாம் அவங்க விட்டிட்டுப் போயிட மாட்டாங்க.. போன நவம்பரில முடிஞ்சிடும்னாங்க ...எல்லாம் அந்த முகர்ஜியும் பானாசினாவும் பண்ணுர வேல"
"ஆமாமா .." ஒத்து ஊதினார் ராமநாதன். தலைவர் பேச்சுக்கு எப்போ மறுப்புச் சொல்லியிருக்கார் இப்போ சொல்வதற்கு.
"அத நம்பித்தானே கூட்டு வைக்கச் சம்மதித்தேன்.. எல்லாம் இந்தப் பேராண்டியின் வேலை.." கோபம் பேரனின் மேல் திரும்பியது. டெல்லி அமைச்சர் பதவி அள்ளித் தந்ததில் சொக்கிப் போய் பேராண்டி ஆடிய ஆட்டம் இது. இந்தமுறையும் கூட்டு வைச்சால் அதிகளவு அமைச்சர் பதவியை அள்ளிக்கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தையில் மயங்கிப்போனேன்.
ஒன்றைக்கட்டினவனே நிம்மதியில்லாது இருக்க ரெண்டைக் கட்டினேனே .. இருப்பதைதானே நினைக்கமுடியும் ஆண்டதையும் அனுபவிச்சதையும் நெனைவு வைக்க முடியுமா? என்ன.. தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ரெண்டு பொண்டாட்டியும் புருஷன் பேச்சைக் கேட்பதை விட்டே எவ்வளவோ காலம் ஆகி விட்டது. தன் பிள்ளை ,பிள்ளையின் பேரன் என்று அள்ளிக் கொள்வதிலேயே குறியாய் இருக்கி்றாளுக... என்னங்கடி நான் உங்க புருஷனடி என்று சொன்னால்.. உன் காலம் முடிஞ்ச பிறகு நாங்க என்ன சீனியர் ஹோமிலா இருக்க முடியும்.. கடைசி வரை கெளரவமா பிள்ளைகளோடு இருக்க இப்பவே அவங்களோடு சேர்ந்தால் தானே உண்டுன்னு ..கட்சி மாறிட்டாளுக..
கடைசி வரை நானும் நிம்மதியாய் இருக்க என்று ஒத்து ஊதப்போக இருந்ததும் கெட்டான் வேலாண்டின்னு ..எல்லாம் தலைகீழாகிவிட்டது. இப்படி சாமப்பேயாக தூக்கமில்லாது கிடந்து உலையவேண்டியதாகிவிட்டது.
"என்னையா ராமநாதா.." "சொல்லுங்க ஐயா" ராமநாதன் பெளவியமாகக் கையைக்கட்டிக் கொண்டு கேட்டார். பேசாம நம்மூருலேயே இருந்திருக்கலாம். நம்மகிட்டே இல்லாத பணமா ?.. ப்ண்டமா?...
இந்தக் காலத்துப் பசங்களுக்கு இந்தியாவே போதாது..உலகையே அள்ளனும்னு.. ஆசை..பேராசை..
அலுத்துக் கொண்டார்.
உண்ணாவிரதம் இருந்து வந்ததில் இருந்து வெட்கத்தில் உடல் கூசிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு செங்கல்லாக வைத்துக்கட்டியெடுத்த தமிழினத்தலைவர் , தானைத் தலைவர் என்ற பொற்கோட்டை கண்முன்னாலேயே சடசடவென்று நொருங்கிப் போவதைக் கண்டு இதயம் வெம்பிவெம்பி அழுகின்றது.
உடனிருப்பவர்களே கேவலமாகப் பார்க்கும் போது உடன்பிறப்புகளின் முன்னால் எப்படி முகத்தைக் காட்டுவது..கடிதம் எழுதி ஆற்றக்கூடியதா? கவிதை எழுதித் தேற்றக்கூடியா இந்தத் துக்கம்.. இந்த தள்ளாத வயதில் செய்த பாவம் அனைத்தும் சுத்திப் பிடிப்பதைப்போல மூச்சுத் திணறுகின்றது... காலையில டாக்டர் வந்து பிறஷர் ஏறிடிச்சு சுகர் இறங்கிடிச்சுன்னு கத்தப்போறார்...
எல்லாம் சரியாக இருக்கின்றது என்று சொல்லி்யதால் தானே அந்த அதிகாலை வேளையில் வீராப்பாகக் கிளம்பிப் போனேன்... அது இப்படிப் புஷ்வாணமாகப் போகும் என்று யாருக்குத் தெரியும்.. அந்த வழுக்கை மூஞ்சி முகர்ஜியும் இந்த இத்தாலிச் சனியாளும் இப்போது சாரி சொல்லி என்ன பயன் ... சாரி உடுத்திப் போகும் நிலையில் தான் ஆண்மை இழந்து நிற்கின்றேனே.
அந்தச் சிங்கள ராஜபக்ஷேயின் கண்ணிலயே முழிக்கக் கூடாது.. இப்படி கண்ணிலே வெரலை விட்டு ஆட்டிட்டானே.. அரசியலுக்கே லாயக்கில்லாத நாயி.. ஆட்சிக்கு வந்தமா..அள்ளினமான்னு போய்க்கிட்டே இருக்காம.. இது என்ன கூத்து.. அதுவும் புலிங்கூட ...சிறீபெரும்புத்தூரிலயே இந்த ஆட்டம் ஆடினவனுங்க இவனை விட்டுடுவானுங்களா... வைக்கிற குண்டில என் பங்குக்கும் ஒரு குண்டு சேர்த்து வைக்கட்டும்...நாயி நடுரோட்டில சிதறிப் போகணும்..
எல்லாம் இந்த ஆணவம் பிடிச்ச பொண்ணால் வந்தது ..அவளுக்கு புத்தி சொல்லும் இந்த சகுனி துக்ளக் சோவைச் சொல்லணும். பி்ளேட்டையே திருப்பிப் போட்டுட்டாளே... பிரபாகரன் என் நண்பன் என்றால் குய்யோ முறையோ என்று கத்தியவங்கள் எல்லாம் இப்போ எங்கே போயிட்டாங்க... இந்தப் பொம்பிள்ளை சொல்லிட்டாலே பேஸ்த்து அடிச்சு நின்னுட்டாங்களா? இவன்களையெல்லாம் அப்போ..பெரியார் சொன்னபோதே அடிச்சுப் போட்டிருக்கணும்.. விட்டு வைச்சது பிழையாய்ப் போய்ட்டுது.. இன்னைக்கு கொழுத்து என்னையே கொத்திப் போட்டானுங்க... வாங்கிற பொட்டிக்கு செய்தி போடுறாங்களா.. அப்படியே போட்டாலும் நம்ம காலையே வாருற மாதிரில்லே போடுறானுங்க...
இருபத்தி மூணை வெச்சுக்கிட்டு பதினாறைக் கொடுத்தேனே இந்தக் காங்கிரஸ்காரனுக்கு... நன்றி கெட்ட பயலுகள்.. எல்லாரும் ஓடி ஒளிச்சிட்டானுவள்... அறிக்கையை விட்டு ஆறுதல் படுத்திரானுவளா...அதுவும் இல்லே... போனெடுத்து தேறுதல் சொல்லுரானுகளா ..அதுவுமில்லே ..போனக்கூட போர்த்தி வெச்சுட்டு ஓடி ஒளிச்சிட்டானு்க.
இவனுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்ய முடியுமா? முதுகுவலி வந்ததும் நல்லதாய்ப் போய்ட்டது.. நாலு ஊரோடு முடித்துக் கொள்ள வேண்டியது தான்...நாலு சீட்டாவது கெடைச்சா அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்... யாருமில்லாத நமக்கு ஆண்டவனை விட்டா யாரிருக்கார். அதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாத நம்ம நெலமை..
"எலேய் ராமநாதா.." தலைவர் அழுகின்றாரா...ராமநாதன் வெலவெலத்துப் போவிட்டார். குரல் அவ்வளவு நலிந்திருந்தது. பாழாப்போன இந்த கறுப்புக் கண்ணாடியக் கழட்டினா என்ன ?.. கண்ணில என்ன தெரியுதுன்னு பார்க்க முடியாம. தலைவர் தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தார்.
இப்படியே ரோட்டில் நடந்தால் அண்ணா சமாதி வந்து விடும். அதைச் சொல்லவா முடியும்...
இது தான் காதல் என்பதா? சோனியா , கருணாநிதி, சி.பி.ஐ
நளினி விவகாரம்:
முறைப்பாடு : சி.பி.ஐ. விசாரணையில் கடந்த 10 ஆண்டாக எந்த முன்னேற்றமும் இல்லை.18 ஆண்டுகளாக இந்த 7 பேரும் சட்டவிரோதமாக ஜெயிலில் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலைக்கும், இவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
ஆகவே இவர்களை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். இந்த மனுமீதான விசாரணை முடியும்வரை 7 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்
சி.பி.ஐ. பல்முனை கண்காணிப்புக் குழு எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி பதில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஜெயின் கமிஷன் அறிக்கை அடிப்படையில் கொலை சதி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில்
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அடிப்படை தகுதி கிடையாது.உச்ச நீதிமன்றம் தண்டித்த பிறகு தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.மனுவில் உள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
(கருணாநிதி)தமிழக அரசின் உள்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், "இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட இத்தாலியத் தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சிவப்பு சுற்றறிக்கை விவகாரம்:
(இட்டாலி மாபியா) குவாத்ரோச்சி மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் தேடுதல் பட்டியலில் நீண்டகாலம் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சிபிஐ கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 12 வருட சிவப்பு சுற்றறிக்கை சர்வதேச போலீசின் (இண்டர்போல்) இணையதளத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 30ந்தேதி சிபிஐ அதிகார்வபூர்வமாக தெரிவிக்கும் எனத்தெரிகிறது. '1999 முதல் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டரீதியான ஆலோசனையின் அடிப்படையில் சிபிஐ இந்நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் இதுகுறித்து வழக்கின் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படும்' எனவும் சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் பாஹல் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிய மூன்று வாரங்களே உள்ள நிலையில் குவாத்ரோச்சிக்கு ஆதரவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் (ஏய்யா மக்களே உங்களுக்கு இது முக்கியம்னு தெரியுமா?) வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சட்டரீதியான (64 கோடி மக்கள் பணத்தைக் களவெடுத்தவனை நல்லவன் எனக் கூறும் சட்டமும் இருக்கின்றதா?)ஆலோசனையின் அடிப்படையில் சிபிஐ இந்நடவடிக்கை (?)
இன்னும் கைது செய்யப்படாத விசாரணை செய்யப்படாத குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் பற்றி எப்படி?என்ன?எவ்வாறு? முடிவெடுக்க முடியும்.
(அப்படியென்றால் பிரபாகரனையும் அவ்வாறு விடுவதில் காங்கிரஸுக்கு இந்திய அரசிற்கு என்ன தடை இருக்கக் கூடும்? தெரிந்தவர் சொல்லுங்கள்)
இது யாரால் ( இட்டாலிய மாபியா சோனியாவால்) யாருக்காக (இட்டாலிய மாபியா குவாத் ரோச்சிக்காக ) எடுக்கப்பட்டது என்று கொள்ளலாமா? மக்களே !!
உங்கள் ஓட்டு இவர்களுக்கா???
சர்வதேச ராணுவ நடவடிக்கையை கோருகின்றார் கலைஞர்
கலைஞரின் உண்ணாவிரதம் பற்றி பலவிதமான கருத்துக்கள் அவரைச் சாடியும் வாழ்த்தியும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. உலகத் தமிழினத் தலைவரிடம் பல விடயங்களை எதிர்பார்த்து ஏமாந்ததனால் இக்கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம்.
உண்மையில் கலைஞர் உளப்பூர்வமாக ஈழப்பிரச்சினையில் தன் பங்கினை ஆற்றவில்லை என்பதே முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சாரம்.
மற்றும் படி கலைஞர் மீது ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் வேறு மனவருத்தம் கிடையாது.
லக்கிலுக் என்ற பதிவர் இப்போது கலைஞரின் ஆஸ்தான பேச்சாளராக ஒரு பதிவினை வெளியிட்டிருக்கின்றார். அவரின் கேள்விகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் உலகத் தமிழினத்தின் பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற கோதாவில் கலைஞர் இதைச் செய்வாரா? என்ற கேள்வியை அவர் முன் வைக்கின்றேன்.
கேள்வி : மதியம் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம் என்பது ஏற்கனவே தெரிந்துதான் கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தாரா?
லக்கிலுக் : விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம் என்று அறிவித்தபிறகும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வேண்டுகோள் விடுத்தபின்பும், ராஜபக்ஷே என்ன சொன்னார் என்பதை இங்கே பார்க்கவேண்டும். ”பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும்வரை போர்நிறுத்தம் என்பது கனவிலும் நடக்காது”. விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் ராஜபக்ஷே அசைந்து கொடுக்காத சூழலில் தான் இறுதிமுயற்சியாக கலைஞர் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொடூர இனயுத்தம் செய்துகொண்டிருந்த இலங்கை அரசு இனி கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருப்பதற்கு கலைஞரே காரணம். இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும். இலங்கை அரசின் அந்த அறிவிப்புக்குப் பிறகு அவசர அவசரமாக பதிவிட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலருக்கும், தமிழ்நாட்டின் இண்ஸ்டண்ட் தமிழுணர்வாளர்களுக்கும் இருந்த பதட்டம் என்னவென்றால் உயிர்ப்பலி குறையும் என்கிற மகிழ்ச்சியை விட, அதற்கு கருணாநிதி காரணமாகிவிட்டாரே என்பதாகத்தான் இருக்கிறது.
இப்போது வாக்குறுதியை மீறியாச்சு - இதோ தகவல் +ஆதாரம்
"கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் அரச தலைவரின் செயலகத்தால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மைக்கால போர்களின் போது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது" எனவும் நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.
"கனரக ஆயுதப் பாவனை, வான்படைகளின் தாக்குதல் என்பன பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருப்பதால் அவற்றின் பாவனையை நிறுத்துமாறு எமது பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என அரச தலைவரின் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவசிக்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வாறு கனரக ஆயுதங்களை சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருப்பதை அரச தலைவரின் செயலகம் ஒப்புக்கொள்கின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகின்றது.
"கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதை ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம் இறுதியாக தன்னுடைய அதிகாரபூர்வமான ஏமாற்று வேலையையும், கொடூரமான இராணுவ தந்திரோபாயத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
"ஐ.நா. பாதுகாப்புச் சபை சிறிலங்காவின் மணலில் தனது தலையைப் புதைத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்வதுடன், இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ள துஷ்டபிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அனைத்துலக ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டியது அவசியமானதாகும்" எனவும் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியிருக்கின்றார். - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் 28/04 /2009
கேள்வி இதுதான் : இப்போது கலைஞர் சர்வதேச ராணுவ நடவடிக்கையை (சோனியாவைக் கேட்டாவது அல்லது சொந்த மூளையைப் பாவித்தாவது) கோருவாரா?
குறிப்பு: கலைஞர் அவ்வாறு எநடவடிக்கை எடுத்தால் 40 உம் அவருக்கே
விசேட செய்தி
Monday, April 27, 2009
கல்லெறி விழுந்ததால் கலைஞர் உண்ணாவிரதம்
கலைஞர் உண்ணாவிரதம் இருந்து பழரசம் குடித்த குளிர் (பழரசம் குளிர்தானே) ஆறமுன்னர் ராஜபக்ஸ அண்ட் கோ போர்நிறுத்தமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது என்று மறுப்பறிக்கை விட்டு விட்டது. கலைஞர் முகத்தில் ஈயாடவில்லை என்று கேள்வி. திட்டமிட்டு பார்த்துப் பார்த்து செய்த ட்ராமா புஷ்வாணமாகிப் போனதில் கோபாலபுரத்தில் எல்லோரும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றார்களாம்.
போனில் அகப்பட்ட ப.சிதம்பரம் எங்கே தவறு நடந்தது என்று தெரியாது மிடறு விழுங்கிக் கொண்டதாக தகவல். அதே சூட்டோடு கொழும்பிலிருக்கும் இந்தியத் தூதரைக் காச்சு காச்சென்று காச்சிவிட்டார்களாம்.
தமிழீழம் வாய்ஸ் விட்ட ஜெயலலிதா மீது ஏகக் கடுப்பில் இருந்த மகிந்தர் கோஷ்டி தமிழ்நாடு என்றவுடனே வெகுண்டெழுந்து அவ்வாறான அறிக்கை விட்டுவிட்டதாக காரணம் சொல்லப்பட்டதாம். அவர் வேறு இவர் வேறு (நம்மாள்) என்று சொல்லி விளங்கப்படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டதாம்.
இனி மேல் கவனமாக இருப்பதாகவும் உறுதி தரப்பட்டதாம். இன்னும் ஒரு "முயற்சி" எடுக்கக் கூறப்பட்ட ஆலோசனையை தி.மு.க தரப்பு மறுத்துவிட்டதாம். ஏற்கனவே டங்குவார் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இமேஜை எப்படி உயர்த்துவது என்று தீவிர ஆலோசனையில் இருக்கின்றார்களாம்.
அதில் " லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது கல் வீசப்பட்டதையும் இந்திய இறையாண்மையையும் இணைத்து உண்ணாவிரதத்திற்கான காரணமாகக் கூறும் ஆலோசனை " கோபாலபுரத்தில் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளதாம்.
நாளை புதிய அறிவித்தல் கிடைக்கும். எதிர்பார்த்திருங்கள்.
தமிழகத் தேர்தலும் ஈழத்தமிழனும்
ஈழத்தில் கொலைக்களம் சூடு பிடித்திருப்பதைப் போலவே தமிழகத்தில் தேர்தல்க்களமும் சூடு பிடித்திருக்கின்றது. யாருக்கு வோட்டு? என்பதில் அடிதடி குத்து வெட்டு என்ற அளவில் கருத்துகள் பரிமாறப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
திராவிட தமிழ் அரசியலும் இந்துத்துவ தேசிய அரசியலும் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. திராவிட தமிழ் தனித்துவங்களை இலகுவாக மழுங்கடிக்கும் தேசியவாத அரசியலில் திராவிடக் கட்சிகள் இணைந்து கொள்வதில் போட்டி போடுகின்றன.
இந்தியத் தேசியத்திடமிருந்து திராவிட தமிழ்ப்பாரம்பரியங்களைக் காப்பார்கள் என்ற நம்பிக்கை கொண்டிருந்த திராவிடக்கட்சிகள் இன்று இந்திய தேசியத்தில் கலந்து கொள்ள அவற்றைக் கைவிடுவதும் அடகு வைப்பதுவும் நடந்து கொண்டிருக்கின்றது.
கொள்கை நோக்கமின்றி தமது சுயலாபங்களையும் குடும்ப நன்மைகளையும் மையமாக வைத்தே இந்திய ஜோதியில் கலப்பதில் முண்டியடிக்கின்றார்கள். இதன்மூலம் இவர்களை நம்பிய மக்களுக்கு இரட்டைத் தீங்கை ஏற்படுத்துகின்றார்கள்.
1) திராவிட தமிழ் பாரம்பரியத்தை அழிக்க உதவு கின்றார்கள்.
2) இந்தியத் தேசியத்தில் கலப்பதால் ஏற்படும் மேலதிக தேசிய சுரண்டலின் பழுவை மக்கள் மீது திணிக்கின்றார்கள்.
இந்திய தேசியத்தால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பயனடையாதவர்கள் தான் தமிழகத்தில் அதிகளவு இருக்கின்றார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகையவர்களே பெரும் பான்மையாக இருக்கின்றார்கள்.
காரணம் இந்தியத் தேசியம் என்பது பொருளாதார அதிகார பலம் மிக்கவர்களால் உருவாக்கப்பட்டது. தொடர்ந்தும் சாமானிய மக்கள் மீதான சுரண்டலுக்காக காப்பாற்றப்படுவது. இந்தியாவின் வெளிநாட்டு உள்நாட்டுக் கொள்கைகள் இவர்களாலேயே உருவாக்கப் படுகிறது. இதை ஒவ்வொரு சாமானியனும் புரிந்து கொள்ளும் வரை இந்த இழுபறி நிலை நிலைத்தே இருக்கும். இன்றைய உலக அரசியல் பொருளாதாரப் போக்கும் இத்தகைய தடைகள் அற்ற பரந்த நுகர்வுச் சந்தையை வேண்டி நிற்பது இந்தியத் தேசியத்தை இன்னும் வலுப்படுத்தும் காரணியாகும்.
இன்று ஈழத்தின் பிரச்சினையும் அன்னிய சக்திகளின் விருப்பு வெறுப்புகளின் போக்கில் முன்னெடுத்துச் செல்லப்படுவதற்கு உலகின் இத்தகைய போக்கே காரணமாகும். ஈழ விடுதலை என்பது பரந்த நுகர்வுச் சந்தைக்கு எதிரானனதாக பார்க்கப்படுவதே ஈழப்போரின் அனைத்துப் பின்னடைவுகளுக்கும் காரணமாகும். ஆனாலும் மக்களின் இனவிடுதலை என்பது இத்தகைய தடைகளையும் மீறி சாத்தியமாகக் கூடியதே.
இன்று ஈழத்தில் இத்தகைய நுகர்வுச் சந்தையை வேண்டி நிற்கும் முதலாளித்துவப் போட்டியே இத்தனை மனிதப் பேரழிவுகளுக்கும் காரணமாயிருக்கின்றது.
இன்று ஈழத்தில் அதிகளவு தாக்கத்தை உருவாக்குவது இந்திய முதலாளிகளின் தனி மனித பேராசைகளும் காங்கிரஸின் தனி மனித அரசியல் காழ்ப்புக்களும் என்று சொன்னால் அது மிகையில்லை. இத்தகைய நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவதில் அல்லது அதன் ஆதிக்கத்தை தற்காலிகமாகவேனும் குறைத்து மனிதப் பேரவலத்தைத் தடுப்பதில் தமிழகத் தேர்தல் உதவக் கூடும்.
ஈழத்துப் பிரச்சினையின் உக்கிரம் எப்போதெல்லாம் கொழுந்து விட்டெரிகின்றது என்று கவனித்துப் பார்த்தீர்களேயானால் அது காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இந்திரா காந்தி காலத்தில் ஈழப்பிரச்சினையில் மூக்கை நுழைத்த இந்தியா இராஜீவ் காலத்தில் யுத்தம் செய்து இன்று சோனியா காலத்தில் உக்கிரத்தாண்டவம் ஆடுகின்றது. இது எவ்வாறு சாத்தியமாகின்றது?
இந்தியாவின் பாரம்பரியக் கட்சி என்ற சலுகையில் அதிகளவு முதலாளித்துவ கொள்ளையரின் அமோக ஆதரவிற்குரியது காங்கிரஸ் கட்சி. முதலாளிகளைத் தட்டிக்கொடுத்து அதிக சலுகைகளை வழங்குவதன் மூலம் மக்களை மேலும் மேலும் உறிஞ்ச வழி வகுத்துக் கொடுக்கின்றது. இந்தியாவில் அதிகளவில் ஏழை மக்களுக்குத் தீங்கு செய்யும் காங்கிரஸ் கட்சியின் படு போக்கிரித்தனங்களை அம்பலப்படுத்தும் சரியான வலுவான தேசியளவிலான எதிர்க்கட்சிகள் அமையாதது இந்திய ஏழை மக்களின் துரதிர்ஷ்டமே.
காங்கிரஸ் ஆட்சி ஏழை மக்களுக்கு எதிரான கொள்கைகளாலேயே வழி நடாத்தப் படுகின்றது. பொருளாதார எதிர்மறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதே நேரம் முதலாளித்துவ இருப்பை உறுதி படுத்தும் வகையில் பிரதேச இன் மொழி வாதங்கள் மழுங்கடிக்கப்படுகின்றன. இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகின்றன. பொடா தடா எமர்ஜென்ஸி என்ற அடக்கு முறைச்சட்டங்கள் பெரும் பாலும் காங்கிரஸ் ஆட்சியிலேயே அமுலுக்கு வருகின்றன. அதே நேரம் அதனை எதிர்க்கும் மக்கள் போராட்டங்கள் கிளர்ச்சிகள் என்பனவும் காங்கிரஸ் ஆட்சியிலேயே வெளிக்கிளம்புகின்றன.
இந்த மக்கள் விரோதப் போக்கு இந்தியா முழுமைக்கும் பொதுவானது. இதன் அடிப்படையை இனங் காணுவது தமிழகத்தில் யாரை ஆட்சிக்குக் கொண்டு வருவது என்பதைத் தீர்மானிக்க உதவும்.
அ.தி.மு.க , தி.மு.க இரண்டிலும் கூடியளவு திராவிட தமிழ்த் தேசியத்தைப் பேசக்கூடிய கட்சி தி.மு.க தான். ஆனாலும் அதன் சமீபத்தைய நடவடிக்கைகள் இது தொடர்பான அதன் தீவிரத்தைக் குறைத்துள்ளதைக் காட்டுகின்றது. அ.தி.மு.க அதன் ஆரம்ப காலத்திலிருந்தே திராவிட தமிழ்ப் பாரம்பரியம் பற்றி அதிகம் பேசவில்லை. தனி மனித புகழே அதன் வெற்றிக்கு என்றும் காரணமாயிருந்திருக்கின்றது. அது இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் ஒரு கட்சியாகவே இன்றைய தலைமையால் வழி நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழக ஏழை மக்கள் புறக்கணிக்க வேண்டிய கட்சியாக என்றும் இருப்பது காங்கிரஸ் கட்சியே. அதன் மீது கொண்டிருக்கும் காழ்ப்பினால் அல்லாமல் அது கொண்டிருக்கும் கொள்கைகளால் என்பது இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய முக்கிய விடயமாகும். தமிழகத்தில் காங்கிரஸை ஓரந்தள்ளுவதன் முதல் படியாக அது இணைந்துள்ள தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
மக்களுக்கெதிரான கட்சியை ஒதுக்குவது மக்களின் உடனடி நீண்ட கால நல்வாழ்விற்கு இன்றியமையாதது ஆகும். அதன் மூலம் காங்கிரஸுடன் கூட்டணி சேரும் பயம் அதிகரிக்கும். அது நாளடைவில் காங்கிரஸை முகவரி அற்றுப் போகச் செய்யும்.
காங்கிரஸ் போன்ற அதி தீவிர முதலாளித்துவக் கட்சி ஆட்சியில் இல்லாது போதல் ஈழத் தமிழ்ப்போராட்டத்தில் அதிகரித்து வரும் நெருக்கடிகளை குறைத்து ஆசுவாசப் படுத்தும். ஆனாலும் ஈழ விடுதலை போக வேண்டிய தூரம் அதிகம் என்பதில் சந்தேகம் இல்லை.
Sunday, April 26, 2009
புலிகள் தப்பினார்கள்
என்னவும் நடக்கும் இந்த உலகத்தில். அப்படித்தான் நினைக்கத் தோன்றுகின்றது. எத்தனை இலகுவாக மக்கள் காதுகளில் பூ சுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வார்த்தகளை வளைத்துப்போடும் கலையை எங்கிருந்து தான் கற்றுக்கொண்டிருக்கின்றார்களோ. மக்கள் இவர்களைப்பற்றி "மண்ணாங்கட்டி முண்டங்கள்" என்று நினைப்பார்கள் என்பதில் கிஞ்சித்தும் கவலையி்ல்லை. ஒரே விதத்தில் முட்டாள் தனத்தை எவ்வளவு காலம் செய்வார்கள்.
மக்கள் இவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் புரியாதிருக்கின்றார்களா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா? ஆயாசமாக இருக்கின்றது.
புதிதாக ரீல் விட்டிருக்கின்றார் ஜெயலலிதா. தீவிரவாதிகளிடம் இருந்து அவர் உயிருக்கு ஆபத்தாம் , குறி வைத்திருக்கின்றார்களாம். அட இந்தத் தீவிரவாதிகளும் பொழுது போகாமல்தான் இருக்கின்றார்களா? கொள்கை நோக்கம் எதுவுமில்லாத வெறும் அடியாட்கள் தானா? இவர்கள்.
அப்படி இவரைக் குறி வைக்க இவர் என்னதான் செய்து விட்டார். இவரை விட பெரும் "பீலா" விடும் ஜோக்கர்கள் எல்லாம் மத்தியில் இருக்கின்றார்கள். சொட்டு இரத்தம் புகழ் ப். சி ,பிரணாப். இவர்களையெல்லாம் விட்டு விட்டு சிவனேன்னு ஐந்து வருடம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இவரையா தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
இப்போது தான் ஞானம் வந்தது என்று ஆறுதலாகவிருந்தது. அதற்கிடையில் அரசியல் ஸ்டண்ட். அதுவும் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ப.சி இன் உள்துறை.
"தமிழீழ ஆதரவு "அலையில் கவரப்பட்டு ப.சி விளையாடுகின்றது போலும். அல்லது வெளிப்படையாகவே சொல்வது தானே சினம் கொண்ட சிங்களப் படைதான் தீவிரவாதிகளாக வருகின்றது என்று.
அதுவும் அதிகாரபூர்வமான அறிவித்தலாம். ப.சி வீட்டிற்குப் போக முதல் கடைசி கடைசியாக அரக்கு சீல் வைத்து முத்திரை குத்தியிருக்கின்றது. ஆசை யாரை விட்டது.
நல்ல வேளை புலிகள் தப்பித்தார்கள். அம்மாதான் ஆதரவாளராச்சே. உறுமிய உறுமல் இன்னும் காற்றில் உலரவில்லை.
அரக்கு சீல் அடித்து விட்டவ்னெல்லாம் மூளையால யோசிக்க மாட்டாங்களா? உள்வீட்டுச் சதியெல்லாம் இனி சாத்தியமல்லவே. அம்மாவின் பாதுகாப்புக்கும் அவனுங்க தானே ஆவன செய்யவேண்டும்.
முதுகுவலியில் அவதிப்படும் கருணாநிதி தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்யவிடாது தடுப்பதாக ஏன் நீங்கள் உளரவில்லை. இதில் காங்கிரஸ், ரா, சி.பி.ஐ ஆகியோரின் பங்களிப்பு இருக்கின்றதே. மாடம், பொன்னான வாய்ப்பைத் தவற விட்டு விட்டீர்களே. அதனால் என்ன? இரண்டாவது இணைப்புக் கொடுத்து விடுங்கள். மக்கள் இதற்கெல்லாம் பழகி விட்டார்கள்.
போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.
சாருவும் "நானும்"
விதியில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா ?
உண்டு.உதாரணம் இராஜீவின் மரணம்.
என்று சாரு ஒரு கேள்வி பதிலில் எழுதியிருந்தார். விதி வலிது என்பதில் எனக்கும் சமீப காலங்களாக நம்பிக்கை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. வழமை போல "புளக்கு"ளைச் சுவாசித்துக் கொண்டிருந்த போது இணைப்புகளில் தாவித்தாவி எங்கெங்கோ போய் விட்டிருந்தேன். தாவித் திசை தெரியாது திரிந்ததில் மீண்டும் படிக்கும் எண்ணமிருந்த பக்கங்களுக்கு வர முடியாது போய் விட்ட துர்ப்பாக்கியமும் நிகழ்ந்திருக்கின்றது. அப்படித்தான் சாருவின் கோணல் பக்கங்களுக்கும் போயிருந்தேன். விதி பற்றிய கேள்விக்கு சாருவின் இந்தப் பதில் என்னை யோசிக்க வைத்தது.
ஈழத்துப் போராட்டத்தில் இராஜீவின் மரணம் தொடர்பு பட்டதை என்னால் எப்போதும் இரசிக்க முடிந்ததில்லை. போராட்டத்தின் மூர்க்கம் வெளிப்பட்ட அளவு தந்திரம் வெளிப்படவில்லை என்பது தான் என் கருத்து. ஒரு இனத்தின் சுதந்திரப் போராட்டத்தின் மீது எதிர்மறையான பயங்கரவாத மாயை படிந்து போனதும் அப்போது தான். அதன் பின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற உலகப்பயங்கரவாத இருளின் மடியில் ஒளியிழந்து என்னென்னவோ நடந்து கொண்டிருக்கின்றது.
விதிக்கும் இராஜீவின் மரணத்திற்கும் இருக்கும் தொடர்பைப் போல கொத்துக்கொத்தாய் மடிந்து போகும் ஈழ மக்களின் மரணங்களும் விதியால் எழுதப்பட்டதா என்ற சர்ச்சை இங்கு எழுகின்றது. விதி என்று புறங்கையால் ஒதுக்கிவிட்டுப்போவதாயின் மனித விழுமியங்களின் பங்கு இங்கு என்னவாகின்றது ? வல்லாதிக்கச் சக்திகளின் சுரண்டலின் பிடிவாதம் இத்தனை மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பதை மறுதலிக்கும் நம்பிக்கையை நாம் வாழும் வாழ்க்கை நமக்குக்கொடுத்துக் கொண்டிருக்கின்றதா? அப்படிப்பட்ட ஒரு செளகர்ய உலகில் தானா நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்?
எழுத்தாளர்கள் ஒரு வகையில் போராளிகளாக இருப்பது இந்த சமூக அமைப்பில் தவிர்க்க முடியாதது. எதையாவது எதிர்க்கவோ மறுதலிக்கவோ வேண்டிய இம்சையை இச்சமூக அமைப்பு நாளும் நமக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றது. ஒரு எழுத்தாளனை எவ்வாறு புரிந்து கொள்ளலாம்?
உங்களைப் பற்றி?
என் படைப்புகளின் மூலம் அறிந்து கொள்வது சரியாக இருக்கும்.
சமூக அக்கறையற்ற படைப்புகள் மூலம் அல்லது மேதமைத் தன்மையை வெளிப்படுத்தும் "விலாச"படைப்புகள் மூலம் யாரையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. ஒரு தனி மனிதனைப்பற்றிய ஒரு பகுதியையோ அல்லது அவன் சிந்தனையின் நிழலையோ அறிந்து கொள்ளலாமே தவிர முழுமையாக அறிய முடியாது. அது தேவையும் அற்றது.
அவன் படைப்பின் ஆதர்சத்தால் வாசகனைக் கவர்ந்து கொண்டானே தவிர தன் குணாதிசயத்தால் அல்ல.
அதையே நிறுவுவது போல புளக்கர் உலகத்தின் ஒரு சிலரைத் தவிர அத்தனை பேரையும் ஒட்டு மொத்தமாக புறந்தள்ளும் சாரு, அவர்களைப் பொருட்டாகவே மதிக்கவில்லை. அவருடைய தரத்திற்கு அவர்கள் பதிவுகள் கிறுக்கல்களாக இருக்கலாம். அது அவரின் தனிப்பட்ட கருத்தாகத்தான் இருக்க முடியும்.
படைப்புகள் மூலமாக அல்லாமல் - வெறும் இலக்கியத் தகராறுகள் மூலம் தாங்கள் பரபரப்பு ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளனவே ?
சிந்தனைத் தளத்தில் நடக்கும் விவாதங்களை ' தகராறுகள்' என்று சுருக்குவது வெகுஜனப் பத்திரிக்கைகளின் பார்வை. வெகுஜனப் பத்திரிக்கைகளுக்கு சிறுபத்திரிக்கைகளில் நடக்கும் எந்தச் செயல்பாடுகளைப் பற்றியும் யாதொரு அறிவும் கிடையாது. கடந்த நாற்பது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் உலக இலக்கியத் தரத்துக்கு ஏதேனும் நடந்திருக்கிறது என்றால் அது சிறு பத்திரிகைகள் மூலமாக மட்டும்தான். ஸ்வீடனைச் சேர்ந்த திரைப்பட மேதை பெர்க்மனைப் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டுமானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் சிறு பத்திரிக்கைகள். எல்லா மொழிகளிலும் வெகுஜனப் பத்திரிகைகள் உண்டு. ஆனால் தமிழ் நாட்டைப் போல் இந்த அளவுக்கு கலை , இலக்கியம் பற்றி எதுவுமே தெரியாத ஞான சூன்யங்களை பிற மொழிகளில் பார்க்க முடியவில்லை. என் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு மலையாளிக்கு நான் ஒரு எழுத்தாளன் என்று தெரிகிறது. அவர் என் எழுத்தைப் பற்றி என்னுடன் விவாதிக்கிறார். ஆனால் என் வீதியில் உள்ள எந்தத் தமிழருக்கும் நான் ஒரு எழுத்தாளன் என்று தெரியாது.
என்று பதிலளிக்கின்றார்.
"உலக இலக்கிய தரம் " என்ற அலம்பல் இங்கு ஏன் வந்தது என்று புரியவில்லை. நமது வாழ்க்கைத்தரமே உலக தரத்திலில்லாத சமுதாயத்தில் "உலகத் தரம் " என்ற சொல்லடை மட்டும் வந்து சாதிக்கப் போவது என்ன? முதலில் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை பொருளாதார சிந்தனா மட்டத்தில் உயர்த்தும் கடமையைப் புறந் தள்ளும் எழுத்தாளனால் நமக்கு ஆகப்போவது தான் என்ன? "ஏலியான்" போல் இந்தச் சமூகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் இவர்கள் பற்றிய பிரக்ஞை நமக்கு ஏன் வர வேண்டும்?
ஞான சூன்யங்களால் நிரம்பியிருக்கும் சமுதாயத்தை பற்றிய சிந்தனயில்லாது ஸ்வீடனைச் சேர்ந்த திரைப்பட மேதை பெர்க்மனைப் பற்றி தெரிந்து கொள்வதில் என்ன இலாபம் இருக்கின்றது?
சமுதாய அக்கறை குறிக்காது எழுதும் எழுத்துக்களோ வெறும் இலக்கியத் தகராறுகளோ அல்லது சாருவே கூறுவதைப்போல (மேற்குலக) சிந்தனைத் தளத்தில் நடக்கும் விவாதங்களோ நம் சமூக மக்கள் சிந்தனை மட்டத்தில் என்ன மாறுதல்களைக் கொண்டு வரக்கூடும். அப்படிப்பட்ட எழுத்துக்களின் உண்மையான அக்கறைதான் என்ன?
"புளக்கு"களில் எழுதப்படும் எழுத்துக்கள் தான் சமூகத்தின் அத்தனை கரடுகளையும் வெளிப்படுத்துகின்றன என்பது என் எண்ணம். ஏனெனில் இவ்வெழுத்துகள் மேதமை மிக்கவர்களாக எண்ணிக்கொள்ளும் எழுத்தாளர்களால் அல்லாமல் அறியும் ஆர்வம் கொண்ட வாசகர்களாலேயே எழுதப்படுகின்றன. இது வரை "தெரிவு செய்யப்பட்ட" செய்திகளையும் "புரட்சி" எழுத்துக்களையும் வாசித்து வந்த வாசகன் தான் வாழும் சமூகத்தின் வாசனையை அது எத்தனை அழுக்காக இருந்தாலும் சுவாசிக்கத் தொடங்கியுள்ளான்.
இதுவே இன்றைய எங்கள் சமுதாயத்தில் அரசியல் பொருளாதார சிந்தனா மட்டத்தில் மாற்றங்களை உருவாக்க முயலும் ஊக்குவினைகளாக வளம் பெறும்.
எத்தனையோ தீமைகளைத் திறந்த பொருளாதாரம் வழங்கியிருந்தாலும் அது கொடுத்த நன்மைகளில் இதுவும் ஒன்றுதான். அதே நேரத்தில் தேடல் மிக்க வாசகர்கள் இணைய வசதி காரணமாக சிறு பத்திரிகை எழுத்தாளர்களின் அடிக்கோடிட்ட மேற்குலக ஆச்சரியங்களை நேரிடையாகவே அறிந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இதனாலேயே எழுத்தாளர்களிடையே இருக்கும் "நான்"கள் தொழிலிழந்து போகின்றன. அது அவ்வாறு நிகழுமாயின் இவர்களிடமிருந்து எடுத்துக் கொள்ள இந்தச் சமூகத்திற்கு எத்தனயோ விடயங்கள் இருக்கக் கூடும்.
(மீள் பதிவு)
சிதம்பரத்தின் கடைசிச் சொட்டு இரத்தம்
ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் ஆதரவுப் பேச்சு பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. நாம் முன்னரே குறிப்பிட்டதைப் போல் இது காங்கிரஸின் ஈழத் தமிழர் பற்றிய பார்வையில் விழுந்த சவுக்கடி என்பதை இச்சலசலப்புக்கள் வெளிப்படுத்துகின்றன.
"இது ஒரு இந்திய இறையாண்மைக்கு எதிரான பொறுப்பற்ற வேண்டு
கோள் " என்று ராஜ்யங்களுக்கான அமைச்சர் கபில் சிபால் கண்டனம் தெரிவித்திருக்கின்றார்.
ஈழத்தமிழர்களுக்கான தீர்வு தமிழீழமே என்பது எவ்வாறு இந்திய இறைமையில் தீங்கு பயக்கும் என்பதை இந்த அரசியல் மேதைகளே விளக்கவேண்டும். இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலம் அல்ல. இலங்கையில் கேட்கப்படும் தமிழீழக் கோரிக்கையானது இலங்கையின் ஒற்றையாட்சிக்கு மாறானது என்று மட்டுமே கொள்ளலாம். இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாகப் பார்க்கும் அறிவிலித் தனத்தில் இருந்து எப்போது இவர்கள் வெளியேறுவார்கள்?
ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் சார்பான அறிக்கையைத் தொடர்ந்து கபில் சிபாலைத் தொடர்ந்து ப.சிதம்பரம் சம்மட்டியுடன் களமிறங்கியுள்ளார்.
"பயங்கரவாதிகளோ இந்தியாவிற்கு எதிரான பேச்சுக்களோ செயல்களோ இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகச் செயற்படுவதை எனது கடைசி சொட்டு இரத்தம் உள்ள வரையில் அனுமதிக்க மாட்டேன்" என்று சவால் விட்டுள்ளார்.
அவருடைய கருத்துக்கள் இந்திய உள்துறை அமைச்சரின் கருத்துக்களாகக் கொள்ளப்பட்டாலும் இப்போது வெளியிடப்பட வேண்டிய அவசரம் என்ன வந்தது என்ற கேள்வி எழுகின்றது. ஜெயலலிதாவின் பேச்சுக்கு எதிரான சோனியாவின் எதிர்ப்பாகத்தான் அவரது பேச்சு அரசியல் அவதானிகளால் பார்க்கப்படுகின்றது.
மே 18 இல் தமிழக வாக்குப்பதிவுகள் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் மீதான வெறுப்பை இத்தகைய அதிரடி ஸ்டேட்மெண்டுகள் இன்னும் வளர்த்து விடவே துணை புரியும்.
காங்கிரஸ் தலைமையின் தமிழக தேர்தல் பிரசார தேதிகள் இப்போது வெளிவிடப்பட்டிருக்கின்றது. காங்கிரஸ் தலைமையை தமிழக மண்ணில் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதில்லை என்ற திரைப்பட மற்றும் வக்கீல்கள் சங்கம் மாணவர்களின் போராட்டத்தை இது மேலும் அனல்படுத்தப்போதுமானதாகும்.
அண்ணா தி.மு.க வின் ஈழத்தமிழர் நேரடி ஆதரவுப் பிரவேசம் ஈழத்தமிழர் ஆதரவுவாதிகளின் கரம் உயர வழிவைத்திருக்கின்றது. ஏற்கனவே நெடுமாறன் ஐயா பா.ம.கட்சி ராமதாஸ் ம.தி.மு.க அண்ணன் வை கோ ஆகியோர் அ.தி.மு.க தலைமையின் கருத்தை ஆதரித்துச் செய்திகள் வெளியிட்டுள்ளனர்.
இதே நேரம் இது வரை காலமும் தமிழின ஆதரவின் பேரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் சீமான் குளத்தூர் மணி நாஞ்சில் சம்பத் போன்றவர்களை விடுதலை செய்ய வேண்டி உரத்த குரல் எழுப்ப வேண்டும்.
தமிழின உணர்வென்பது இந்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கை அல்ல என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது.
பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட உண்மையிலேயே ப.சிதம்பரம் விரும்பினால் கார்கிலிலோ அல்லது எல்லை தாண்டி வரும் பாகிஸ்தானிய தீவிர வாதிகளுடனோ போராடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.
அவ்வாறு அவர் விரும்பினால் தமிழின உணர்வாளர்களே மாலை மரியாதைகளுடன் தமிழ் வீரணாக அவரை எல்லைப் புறத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.
அ.தி.மு.க கூட்டணி வெல்லுவதன் அவசியம்
அ.தி.மு.க கூட்டணி வெல்லுவதன் அவசியம் என்பதை விட காங்கிரஸ் தி.மு.க கூட்டணியின் தோல்வி என்பது தான் இன்றைய இறுக்கத்தைப் பல வழிகளில் தவிர்க்கக் கூடியது.
இன்று சிங்கள அரசின் பின்னணியில் நின்று வினையாற்றுவது காங்கிரஸ் அரசு என்பது சந்தேகமின்றி நிரூபணமாகிவிட்டது. காங்கிரசின் போர் முனைப்பிற்கான காரணங்கள் அனைவரும் அறிந்தது தான். இன்றைய காங்கிரஸின் போர்நிறுத்த வேண்டுகோள் சுயமான விருப்பம் அல்ல என்பதுவும் சர்வதேச மற்றும் தமிழக தேர்தல் கள நிலையும் அவ்வாறான ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் தான் உண்மை. இந்நிலையை காங்கிரஸ் தலைமையால் நிச்சயமாக இரசிக்கமுடியாதுதான்.
விரைவில் புலிகளுடனான போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கே காங்கிரஸ் விரும்புகின்றது. அதுவும் நூறு வீத வெற்றியுடன். பிரபாகரன் இல்லாத ஒரு இலங்கைச் சூழலையே காங்கிரஸ் கனவு காண்கின்றது.
ஆனால் புலம்பெயர்தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களும் அது கொடுக்கும் நெருக்கடிகளும் மேற்கு நாட்டு அரசுகளால் காங்கிரஸ் தேடும் கால அவகாசத்தைக் கொடுக்கும் நிலையில் வைத்திருக்கவில்லை. இது குறித்த அக்கறைதான் அண்மைய நம்பியார்களினதும் நம்பூதிரிகளினதும் திடீர் விஜயம் கொழும்பை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.
அவர்கள் விருப்பத்தைப்போல களநிலை விரைவில் வெற்றி கொள்ளப்படும் நிலையில் இல்லை என்பதை இராணுவம் அறிந்து வைத்திருக்கின்றது. அரசியல் அழுத்தம் காரணமாக பொதுமக்களைக் கேடயமாக வைத்தும் இராணுவம் நகரமுற்பட்டது. அது எதிர்பார்த்த நலனை விட பாதகமான விளைவையே உண்டு பண்ணியது. அதைத் தொடர்ந்தே அமெரிக்க , ஐரோப்பிய ஒன்றியம் ,ஜி 8 நாடுகள் போன்றவற்றின் போர்நிறுத்த வேண்டுகோள் அச்சுறுத்தும் தொனியில் விடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஆதரவு எவ்வளவு தூரம் இருந்தாலும் சர்வதேசத்தின் வேண்டு கோளுக்கு செவிசாய்க்க வேண்fடிய இக்கட்டில் சிறிலங்கா இப்போதிருக்கின்றது.
ஐ.நாடுகளின் உதவியும் கட்டற்ற பத்திரிகையாளர்களின் பார்வையும் வன்னியை சென்றடையும் போது சிங்கள இராணு்வத்தால் இத்தனை சுயாதீனமாக செயற்படமுடியாது.
புலிகளின் வலிந்த தாக்குதல் நிறுத்த அறிக்கையானது சிங்கள இராணுவத்தையும் அவ்வாறான ஒரு முடிவை எடுக்க துரி்தப்படுத்தியிருக்கின்றது. சிங்கள அரசின் நடவடிக்கைகள் இனி சர்வதேசத்தின் விருப்பத்தின் படி நகர்வதைத் தடுக்க முடியாது.
ஈழச் சூழலில் போர் முடிவிற்குக் கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் அரசியல் அதிகாரக் களத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இன்றியமையாதது. எதிர்காலத்தில் இயல்பாகவே காங்கிரஸினால் ஏற்படுத்தப்படக் கூடிய முட்டுக்கட்டைகளை காங்கிரஸின் வெளியேற்றத்தினால் தடை செய்யும்.
பிரதியீடு செய்யப்படும் மாற்று அரசு ஈழம் சார்ந்த கொள்கையை மறுபரிசீலினை செய்யும் வாய்ப்பும் ஏற்படும். எக்காலத்திலும் இந்தியா ஈழம் தொடர்பில்லாத அரசியல் இராணுவக் களம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்க முடியாது.
இந்தியாவின் இராணுவ மேலாண்மையும் ஒரு தீர்வாகவும் இருக்க முடியாது.
ஈழத்தை எதிர்ப்பது அடக்குவது என்பது தெற்கிலும் ஒரு ஸ்திரமற்ற நிலையை இந்தியா வலிந்து உருவாக்குகின்றது என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில் ஈழத்தமிழர்கள் சிங்கள ஆட்சியின் கீழ் எப்போதும் அடங்கியிருக்கப் போவதில்லை. இது தான் அரசியல் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்ளும் சக்தியின் மேலாண்மை தான் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக முடியும்.
காங்கிரஸ் அரசியல் அதிகார களத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கும் போது தி.மு.க வெளியேற்றப்படுவதற்கு ஒரேயொரு காரணமேயுண்டு. அது காங்கிரஸுடன் சேர்ந்து தேர்தலை முகம் கொடுப்பது. அதற்கு கலைஞர் கொடுத்த,கொடுக்கப்போகும் விலை அதிகம். பாவம் கலைஞர் கடைசிக்காலத்தில் மிகப்பெரும் சறுக்கல்.
இதே நேரத்தில் அ.தி.மு.க வின் புதிய முகமும் இவ்வரசியல் நிலைமைகளைக் கருத்தில் எடுத்ததாகவே கொள்ள வேண்டும். அ.தி.மு.க வின் புதிய நிலைப்பாடானது - தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கானதீர்வு - மத்தியிலிருக்கும் காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு பெருத்த பின்னடைவாகும். ஈழத்தமிழினத்தின் ஆதரவு நிலைப்பாட்டை தி.மு.க விற்கு அடியோடு மறுதலிப்பதாகும்.
இந்தியாவிற்கு வெளியிலும் அது தாக்கத்தை உருவாக்கக் கூடியது.
1) புலிகளின் தனித் தமிழீழத்திற்கு இலங்கையின் வெளியிலிருந்து கிடைக்கும் ஆதரவாகப் பார்க்கப்படும். தமிழ் மக்களின் போராட்டத்தில் கொள்கையளவில் ஆதரவு தந்து கொண்டிருக்கும் தென் ஆபிரிக்கா மலேசியா போன்ற இன்னோரன்ன நாடுகளை வெளிப்படையாக குரல் கொடுக்கத் தூண்டும்.
2) மேற்கு நாடுகளின் ஈழம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் எதிர்காலத்தில் தமிழகத்தின் கருத்தையும் அறியத் தூண்டும். (தற்காலிகமாகவேனும்)
3) ஈழத்தமிழர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்ற தன்முனைப்பில் சிங்கள அரசால் நடாத்தப்படும் காட்டுமிராண்டித் தனங்கள் கட்டுப்படும்.
இது வரை சிங்கள அரசு ஜெயின் கருத்துகளுக்கு தன் விமர்சனங்களை முன் வைக்கவில்லை என்பதும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்ற ரீதியில் சலசலப்புகள் இந்தியாவிலும் எழவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
" தனித்தமிழீழத்தை நாங்களே போராடி வென்று கொடுப்போம்" என்பது இலங்கையின் இறைமையினுள் தலையிடுவது போன்று மோசமானது . இந்திய மத்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கையை எதிர்ப்பது.
அ.தி.மு.க தலைமையின் திடீர் பல்டி என்றே எடுத்துக் கொண்டாலும் இது இப்போது நமக்குச் சாதகமாகவே இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு அதை பயன் படுத்த முயல்வோம்.
இதுவே இன்று அ.தி.மு.க கூட்டணி வெல்லவேண்டியதன் அவசியமாகும்.
பிந்திய செய்தி : வந்துட்டாங்கையா,
New Delhi, April 26 (Inditop) The Congress party Sunday termed AIADMK chief J. Jayalalitha’s demand for a separate ‘Eelam’ homeland for Sri Lankan Tamils as “anti-national and irresponsible”.
“I see this demand as anti-national and irresponsible,” union Minister Kapil Sibal told IANS reacting to the statement of the former Tamil Nadu chief minister who Saturday supported a separate Tamil Eelam in Sri Lanka as the only solution to the decades-old ethnic strife in the island nation.
“We have been asking for a ceasefire. It is not enough. Sri Lankan Tamils should get justice and lead a normal life. They should get all rights that are available to the Sinhalese. For this, a separate Eelam is the only way,” Jayalalitha said.
“I will definitely do it. To form a separate Eelam, vote for the AIADMK-led alliance,” she said at an election meeting in Salem.
Saturday, April 25, 2009
ராகுல் காந்தி - சுப்பிரமணியன் சுவாமி போட்டுடைக்கும் உண்மைகள்
http://karsewak.blogspot.com/2006/12/rahul-gandhi-is-mentally-slow-retarded.html
நிஜத்திலும் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்
நிழலில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜொலிப்பது தான் அழகு. அந்த அற்புதம் கலைஞர்களுக்குத் தான் கைகூடி வருகின்றது. ஈழத்தில் இறந்து படும் மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் அரசியல்வாதிகளை விட்டுவிட்டால் மாணவர்கள் வக்கீல்கள் பெண்கள் அடுத்த படி திரையுலகினர்.
நிஜமாகவே நட்சத்திரங்கள் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று தமிழ் திரையுலகம் பொங்கி நிற்கின்றது.
தமிழனாக இல்லாவிட்டாலும் சக மனிதனாய்ப் பார்க்கும் பண்புக்கு ஹற்ஸ்
ஓfவ் . ஈழத் தமிழர் நிதியுதவி என்றவுடன் ஐந்து இலட்சத்தை அள்ளிக்கொடுத்த நயன் தாரா. தமிழன் சாவது பற்றி அந்த மலையாளப் பெண்ணுக்கு என்ன போயிற்று. கிராமத்துத் தெருக்களில் பாடம் படித்து வந்த பாரதிராஜா, பாலசந்தர்,
சசிகுமார், வி.சி.குகநாதன், முருகதாஸ், அமீர், வசந்த், மனோஜ்குமார், ஹரி, ஜீவன், வசந்தபாலன், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ஆதி, சிவா, பாலுமகேந்திரா, வி.சேகர், வெற்றிமாறன், கே.எஸ்.அதியமான், எழில், கதிர். தங்கர்பச்சான், கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், சோழா பொன்னுரங்கம், புலவர் புலமைபித்தன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, சேரன், மணிவண்ணன், கஞ்சா கருப்பு, கவிஞர்கள் மேத்தா, சினேகன், வசனகர்த்தா பிரபாகர், நடிகைகள் ரோகினி, புவனேஸ்வரி.
அடடா எத்தனை கொலிக்கும் நட்சத்திரங்கள். துன்பப்படும்போது இடுக்கண் களையும் நட்புப்போல துயரம் துடைப்பது பெரிய வரம். அதை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. அதுவும் ஈழத்தமிழ் மக்கள் நன்றியுடன் நினைவு வைத்திருக்க வேண்டும்.
"எந் நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டு - உய்வில்லை
செய் நன்றி கொன்ற மவற்கு "
நாங்கள் தீர்மானிக்க வேண்டும் இவர்கள் படங்களைத் தான் இனி எப்போதும் பார்க்க வேண்டுமென்று. இது தான் நாங்கள் செய்யும் நன்றி .
இன்னும் நட்சத்திரங்கள் திரைக்கு அப்பாலிருந்தும்...இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் கருப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழருவி மணியன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம்..
அனைவரும் சேர்ந்து போட்ட தீர்மானங்கள் :
தீர்மானம் 1 :
மத்தியில் உள்ள ஆளும் கட்சியினர் இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னர், தமிழகத்தில் வந்து வாக்கு கேட்பது தான் நியாயமானது.எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது.
அதையும் மீறிவந்தால் எங்களது முழு எதிர்ப்பை காட்டுவோம்.அப்போது, அவர்களது நிழல் கூட துணையாக நிற்காது விலகி விடும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.எனவே, எங்களது உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும்.
தீர்மானம் 2 :
மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் தமிழகத் தலைவர் தங்கபாலு போட்டியிடும் சேலம் தொகுதியிலும், உயர் பதவியில் போதுமான அதிகாரத்தில் இருந்தும் எதுவும் செய்யாமல் மவுனம் காத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியிலும், தமிழனப் படுகொலையை நியாயப்படுத்தி வரும் மற்றொரு மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் ஈரோடு தொகுதியிலும் உள்ள பொதுமக்கள், தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த தொகுதிகளில் தமிழ் திரையுலகின் இன உணர்வுள்ள அத்தனை கலைஞர்களும் தங்கள் சொந்த பொறுப்பில் மக்களை சந்தித்து, இந்த 3 பேருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வார்கள்.
மீண்டும் ஒரு முறை ஹற்ஸ் ஓfவ்....
அம்மாவுக்கு வேர்த்திடிச்சு
"ஈழத்தமிழர்னு யாருங்கிடையாது.. இலங்கைத்தமிழர்னுதான் சொல்லவேண்டும் " என்று சில வாரங்களுக்கு முன் குதியோகுதின்னு குதிச்சவங்க இப்போ அந்தர் பல்டி அடிச்சு "தனி ஈழம் தான் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுன்னு " ஆவேசப்படுறாங்கன்னா... மக்களை இவங்க படுமோசமான மந்தைகளா நெனைக்கிராங்கன்னுதானே அர்த்தம். அதுவும் மறதி மிகுந்த எல்லாத்துக்கும் தலையை ஆட்டும் செம்மறியாட்டு மந்தைன்னுதானே நெனைக்கிராங்க...
//இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டு வந்திருக்கிறார் ’வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்.
அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.
தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு.
அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்று சொல்லிவந்தேன்.
ஆனால், இப்போது ஆணித்தரமாக சொல்கிறேன் தனி ஈழம்தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு’’ என்று ஆவேசமாக பேசினார்.//-ஜெயலலிதா
இது அம்மா விட்ட அஸ்திரம் . முனை மழுங்கியது ...... துருப்பிடித்தது ... எல்லாச் சங்கதிகளும் விளங்கியே இருக்கின்றது.ஆனாலும் என்ன செய்வது?
இப்போ ஈழத்தமிழர் பிரச்சினையில அம்மாவுக்கு சப்போட் ஐயாவுக்கு ஆப்பு என்பதல்ல நிலமை... இது காங்கிரஸுக்கு வைக்கிற வேட்டு என்பதுதான் உண்மை.
காங்கிரஸோடு கூட்டு வைத்ததால் ஐயாவுக்கும் அட்டமத்து சனி பிடித்திருக்கின்றது என்பதுவும் ... ஐயாவுக்கு அட்டமத்து சனி நன்றாகப் பிடிக்க வேண்டும் என்றால் அம்மா வெல்லவேண்டுமென்பது இரு கட்சி கூட்டணிக்குள் தத்தளிக்கும் தமிழகத்தின் தலை விதி.
தமிழக அரசியல் நெலமையால் உண்மையான தமிழ் ஆதரவுக்கட்சிகளே பிளவு பட்டிருக்கின்றன. தமிழ் ஆதரவு கட்சிகள் வெல்லவேண்டும் என்பதற்கும் முன்னால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது முதல் உண்மை.
காங்கிரஸ்+தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி இயல்பாகவே வெற்றி பெறும். நெலமை இப்படியிருக்க அந்தர் பல்டி அடித்து
அம்மா இத்தனை தூரம் தரம் தாழ்ந்து போகத் தேவையில்லை என்பதை யாராவது அவருக்குச் சொல்லுங்களேன்.
இல்லை உண்மையாகவே மனம் மாறி விட்டேன் என்று அவர் உறுதியா நின்றால் இன்னும் இரண்டு வருடங்களில் தமிழகத்தில் அம்மா ஆட்சிதான்.
அட...அம்மாவுக்கு ஆட்சிக்களை ...மூக்கில வேர்த்திடிச்சு
குறிப்பு : இப்போதெல்லாம் விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதை நாங்க படிப்பதில்லை.
’
பிரபாகரனை இழக்க முடியுமா?
வன்னிப்போர் உக்கிரம் கொண்டுள்ளது. தமிழ் மக்களின் இழப்பும் அளவு கணக்கில்லாது பெருகிச் செல்கின்றது. பெருந்தொகையான மக்கள் தெரிந்தே விட்டில்பூச்சிகளாக இராணுவ வலையில் வந்து விழுகின்றார்கள். இறப்பதற்கு முன் சர்வதேசத்தின் கருணை தங்களைக்காத்து விடாதா? என்ற இறுதி இறுதியான நம்பிக்கையுடன் சுட்டெரிக்கும் பீரங்கிகளையும் வெடித்துச் சிதறும் குண்டுகளையும் தாண்டி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற சிங்களபிசாசுகளின் முகமூடியையும் இந்திய வல்லரக்கரின் மாயத் திரைகளையும் கிழித்துக்கொண்டு உண்மை வெளிவந்திருக்கின்றது. இலங்கைத் தீவிலே இடம் பெற்றுக் கொண்டிருக்கும் அப்பட்டமான இனப்படுகொலையை உலகமே உணர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகளால் நவீன காட்டுமிராண்டித்தனத்தை மூடிவைக்கமுடியவில்லை. அகிம்சை போதித்த தேசம் இன்று இம்சைதேசமாக இனங்காணப்பட்டுவிட்டது.
சிறிலங்காவின் உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிட முடியாது என்றவர்களே இன்று கொழும்பிற்கும் டெல்கிக்கும் பறந்து பறந்து போர் நிறுத்தம் வேண்டிக்கொண்டிருக்கின்றார்கள். இத்தனையையும் புலம்பெயர் தமிழ் மக்கள் தமிழகத் தொப்பூழ் உறவுகள் உலகத் தமிழ் மக்கள் அனைவரின் வெந்நீரும் செந்நீரும் சிந்திய உழைப்பின் வெற்றிகள். ஒற்றுமைக்கு கிடைத்த பரிசு.
ஐ.நாடுகள் நீண்ட மெளனம் கலைந்து எழுந்திருக்கின்றது. பிரான்ஸ் ,பிரித்தானியா, அமெரிக்கா ஈழப் பிரச்சினையின் தீவிரத்தையும் எதிர்காலச் சிக்கலையும் நன்கு உணர்ந்து செயற்படமுனைந்திருக்கின்றன. இந்தியாவின் தெற்கு கோடியில் பரந்திருக்கும் தமிழினத்தை ஒதுக்கி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வரமுடியாது என்பதை காலங்கடந்தாவது ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
//" இலங்கையில் இருதரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முயன்றால் அது இலங்கையின் ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புப் பணிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைப் பிரச்னை குறித்து அமெரிக்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழல் இரு தரப்பினரிடையேயும் பகைமையை வளர்க்கவே உதவும் என்றும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும் சந்திக்க அனுமதிக்குமாறும், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.//
புலிகளைத் தோற்கடிக்க பிரபாகரனைக் கொல்ல இந்தியா அவகாசம் தேடிக்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ராஜபக்ஸேயும் மாதம் வாரம் நாட்கள் என்று இந்திய எஜமானர்களுக்கு தவணை சொல்லி முட்டி மோதிக்கொண்டிருக்கின்றார். ஐ.நாடுகளின் நேரடிக் கண்காணிப்பை தமிழர் பிரதேசங்களில் துரிதப்படுத்தவேண்டும். இல்லாவிட்டால் சிங்களப் பேயரசின் கைகளில் இன்னும் இன்னும் தமிழர் அழிந்து போவதைத் தடுக்க முடியாது .ஏற்கனவே அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு கடந்த 4 நாட்களில் சென்ற 26 ஆயிரத்து 184 பேர் காணாமல் போயுள்ளனர் அல்லது இராணுவத்தினரால் கொல்லப்பட்டு கணக்கில் சேர்க்கப்படவில்லை என சாட்சியமற்ற போர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
புலிகளுடனான பேடித்தனமான போரில் இம்மக்கள் கூட்டத்தை முன்னகர்த்தி ராஜபக்ஸேயின் பேடிப்படை நகர்கின்றது. இருபத்தியோராம் நூற்றாண்டின் காட்டுமிராண்டித்தனம் எங்கள் மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவையெல்லாவற்றையும் பார்த்து நாம் சும்மா இருப்பதா? கவனயீர்ப்புப் போராட்டத்தை அதியுச்ச நிலைக்கு முடுக்கிவிடவேண்டும். தமிழகத்தில் அரசியல் ஆதாயங்களுக்காக திசை திருப்பப்படும் போராட்டத்தை கவனமாகத் தவிர்த்து உண்மையான தமிழ் ஆதரவாளர்களான அண்ணன் வை.கோ ஐயா நெடுமாறன் பின்னால் அணிதிரளவேண்டும்.
புலம்பெயர் தமிழர்கள் புலி ஆதரவு எதிர்ப்பு என்பதை விடுத்து தமிழாதரவு என்ற ஒரே குடையில் அணி திரள வேண்டும். இன்றைய நிலையில் பின்னடவு நிகழ்ந்து விட்டால் நாம் என்றுமே எழுந்திருக்க முடியாது போய் விடும். யார் எதை வேண்டுமாலும் சொல்லலாம். தமிழரைப் பொறுத்தளவில் பிரபாகரன் ஒரு புரட்சியாளர். பிரபாகரனை நாம் இழக்க முடியாது. நெல்சன் மண்டேலாவும் காந்தியும் கூட வெள்ளையருக்கு எதிரான புரட்சியாளர்கள்தான். இன்று தேசத்தின் தந்தைகள். எங்கள் தேசத்தின் தந்தையைக் காப்பாற்ற நாமல்லாமல் வேறு யார் முயல்வார்கள்?
அப்பன் எட்டடி புள்ளை...
பொட்டைக்கண்ணினாய் வா..வா
ஊழல் நிறைந்த பாரதத்தினாய் வா..வா
இலங்கையில் போரின் அகோரமும் புலம்பெயர் தமிழரின் எழுச்சிப் போராட்டமும் தமிழக மக்களின் உள்ளக் குமுறல்களும் கல்லுப்போல அசையாது இருந்த உலக நாடுகளின் மனங்களையும் அசைய வைத்திருக்கின்றது. போரினால் இடம் பெயர்ந்த மக்களின் அவசரத்தேவைகளை நிறைவேற்ற ஐ.நாடுகள் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது.
துபாயிலிருந்து கூடாரங்களையும் அவசரத்தேவைப்பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. கூடவே ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்கின்றார்.
போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாகவே கொழும்புப் பயணத்தின் போது அவர் முக்கிய கவனத்தைச் செலுத்துவார் என ஐ.நா.வின் பேச்சாளர் மரி ஒக்காபே தெரிவித்தார்.
"போர்ப் பகுதிக்கு மனிதாபிமானக் குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுதல், இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி மற்றும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்களின் விடுதலை உட்பட முக்கியமான பல விடயங்களையிட்டும் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்துவார்.
அதேவேளை பிரான்ஸ் பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறித்தியுள்ளன.
அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அதைத் தெளிபு படுத்தியுள்ளது.
"பாதுகாப்பு வலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்துலக உதவி நிறுவனங்களைத் தடுப்பதையும், ஊடகங்கள் அங்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவுசெய்து வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அனைத்துலக உதவி நிறுனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களுக்கு உதவும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றது.
அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு உட்பட்ட கடமைப்பாடுகளின்படி நடந்துகொள்ளுமாறு இரண்டு தரப்பையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். இவை மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம்.
இவ்வாறு சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு இருக்கின்றது. இது அத்தனையும் கொழுந்து விட்டெரியும் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்களின் போராட்டத்தினால் உருவானது என்பதை பிரித்தானியப் பிரதிநிதி மில்லிபாண்ட் அண்மையில் ஒத்துக்கொண்டிருந்தார்.
அதிகளவில் ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இதுவொரு கவனிக்கப்படவேண்டிய பிரச்சினை என்பதை இந்நாடுகள் உணர்ந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் 70 இலங்கை தமிழர்கள் படுகொலை ஆவதாக ஐ.நா.,வின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.கடந்த மூன்று மாதங்களுக்குள் 6,432 பேர் பலியாகியிருக்கின்றனர். 13 ஆயிரத்து 946 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வாரத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா., தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அங்கு பணியாற்றும் டாக்டர்கள் அளித்த தகவல்களின் படி ஐ.நா., இந்த புள்ளிவிபரத்தை தொகுத்துள்ளது.
இப்பிரச்சினைக்கான சர்வதேசத்தின் உதவியையும் அனுதாபத்தையும் அத்தியாவசிய உதவிகளுடன் மட்டும் மட்டுறுத்தி விட்டு விடாமல் தொடரும் இன்வொடுக்குமுறைக்கு நீதியான நேர்மையான தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொள்ள சர்வதேசத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் அத்தியாவசியக் கடமையாகும்.
எம்மக்களின் போராட்டத்தில் தலையிட்டு பின் தள்ளிய சர்வதேசநாடுகள் காத்திரமான தீர்வைப்பெற்றுத் தராது பின்வாங்கி விடமுடியாது. சர்வதேசத்தின் பெயரால் சட்டங்களின் பெயரால் எம் போராட்டத்தை முறியடித்த இந்நாடுகள் எமக்கான நேர்மையான தீர்வை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பில் உள்ளன.
எமதுபோராட்டத்தை பலவழிகளிலும் தடை செய்து முறியடித்த இவர்கள் மீண்டும் எம்மை "கற்காலத்தில்" விட்டு விட முடியாது. இதனைக்கருத்தில் கொண்டு புலம்பெயர் நாடுகளில் எமது போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டவகையில் ஒரு இனம் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சகல தகுதிகளையும் தமிழர் நாம் கொண்டுள்ளோம். ந்ம்பிரச்சினையில் தலையிட்டுள்ள ஐ.நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அந்தப் பொறுப்புள்ளதை எடுத்துக்காட்டி நாம் தீவிரமாகத் தொடர்ந்தும் போராட வேண்டும்.
இதே வேளை டால் ஹால்ஸா அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கன்வர் பால் சிங் இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.
"ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அனைத்துலக சமூகம் ஈடுபடாத அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கம் இந்தப் படுகொலைகளைச் செய்துவருகின்றது" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது ஐ.நா.வின் கோட்பாடுககளையும், மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களையும் மீறும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்த சிங், சிறிலங்கா இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கொண்டுவருவதற்கு பாதகமானதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சர்வதேசசிறுபான்மை பெரும்பான்மை இனங்களைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களின் ஆதரவை எம்போராட்டத்தின் பால் திருப்ப வேண்டியதும் எம் முன்னால் உள்ள தேவையாகும். இன்று எம்போராட்டம் முறியடிக்கப்பட்டதற்கு இத்தகைய இன சமூக விடுதலைக்கான அமைப்புகள் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளத் தவறியதும் முக்கிய காரணமாகும்.
இத்தகைய பேரழிவை நாம் சந்தித்திருக்கின்றபோதும் எமக்கான ஆதரவுக்குரல் சர்வதேச அளவில் நலிந்தே ஒலிக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடரும் எதிர்காலப் போராட்டத்தில் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள நாம் முயலவேண்டும்.
இவ்வளவும் நடந்து இன்றுசர்வதேசப் பிரச்சினையாகக் கவனம் பெற்றுள்ள ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இண்டோ இட்டாலியன் கெளபோய்,
"இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். "
‘’விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும். அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தீவிரவாத இயக்கமாகும். "
என்று கருத்துக் கூறியிருக்கின்றார். "அப்பாக்களை கொல்லும் இயக்கம் "என்று அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஐம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிப்போன ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்த அறிவுமில்லாது மூக்கை நுழைத்த அப்பன் எட்டடி பாய்ந்தால் ....
எப்படி இவர்களால் எல்லாம் இப்படி கூமுட்டைகளாக இருக்க முடிகின்றது. இவர்கள் கையில் தான் எதிர்கால ஒளிரும் இந்தியாவின் தலைவிதி..
பிந்திக்கிடைத்த அமெரிக்க அறிக்கை: இலங்கையில் இருதரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முயன்றால் அது இலங்கையின் ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புப் பணிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.
பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைப் பிரச்னை குறித்து அமெரிக்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழல் இரு தரப்பினரிடையேயும் பகைமையை வளர்க்கவே உதவும் என்றும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.
தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும் சந்திக்க அனுமதிக்குமாறும், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.
Friday, April 24, 2009
கொலைஞர் கவிதை
உணர்ச்சியற்ற டமிலரெல்லாம் ஒன்று கூடினோம்!
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றே நாடகமாடினோம்!
அண்ணா காலம் முதல் பார்ப்பனர் ஆதிக்கம் வீழ்த்தவென்று ஆட்சி ஏறினோம்!
மாஞ்சோலை பூஞ்சோலை மாளிகையென்று சொத்து சேர்த்து கூத்தாடினோம்!
ஈழ போருக்கு இந்திரா காந்தியும் ஈழதமிழர் அழிவிற்கு ராஜீவும் வழியைக் காட்டினர்.
இந்தியாவில் மலைமுகடு, வனாந்தரங்களில் சுடாத துப்பாக்கியும் சுடப்
பயிற்சியும் தந்து விடுதலைப் போராளிகளாக்கினர்-அந்த
விடுதலை தளகர்த்தர்க்கிடையே ராவும் சி.பி.ஐயும் வேறுபட்டு நின்று
ஆளுக்கொரு ஆயுதம் கொடுத்து அவர்களை அழித்துக் கொன்றனர்-
பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற
ஹிந்திய வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
சிங்கத் தமிழகத்தின் ஒற்றுமை!
அதனாலேயே அங்கும் முடியாத யுத்தம்-
அவர்களை ஆதரிக்கும் இங்கும் அந்தோ; அதே ஈன யுத்தம்!
இருதரப்பிலும் இக்குற்றம் சுமத்தி
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இனத்தால் தமிழர் புல் பூண்டும் அறவே செதுக்கப்படாமல் காப்பதற்கே
இன்றோர் வேலை செய்யாது சும்மா இருக்க அனைவரையும் அழைத்தோம்.
இழிந்த தேசிய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்த தீர்மானமுடன்-
சோனியாஅரசியின் கால் நக்கும் அமைச்சர்கள் கூடி அதே கருத்தை
அறிவித்தமை கண்டோம்.
இன்னும் இன்னும் வேகமாக நம் ஊழலை உயர்த்தி நடுவணரசை
சிக்கலில் தள்ளி முடிப்போம் இலங்கை போரை நட்டாற்றில் விட்டு விடுவோம்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணன் எனக்குப்போட்டியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? இந்தத்
துரோகிகளின் சேட்டையினால் இழிகுணம் கொண்ட
என் குடும்பம் தோற்றகலாமா?
கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா? அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு அழிந்த டமிலரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! ஊழல் செய்தே தீருவோம்.
இவ்வாறு கருணாநிதி கவிதையில் கூறியுள்ளா
கவிதையின் மூலம் பார்க்க:http://www.vikatan.com/vccms/vcunicode.asp?artid=945
ஒருசீட்டுக்கு 10 தலை
ஓரத்த நாட்டில் கன்னி மொழி பொழிஞ்சிருக்காக. தேர்தலுக்குப்பின் மதவாதிகளுடன் கை கோர்ப்பாராம் ஜெ என்று. என்ன ஒரு சூப்பர் ஆரூடம். சொல்லுங்கம்மா.. ஈழத்தமிழன் பற்றியும் ஆரூடம் சொல்லுங்க.
மதவாதிகள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்லவே. உங்களுக்கு மதம் பிடிக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு "மதம்" பிடித்திருக்கின்றது.
ஆனால் உங்க அப்புச்சி வெறி பிடித்த பயங்கரவாதிகளுடன் அல்லவா கூட்டுச் சேர்ந்திருக்கார். காங்கிரஸ் +ராஜபக்ஸ பயங்கரவாதிகளைப் பற்றித் தான் சொல்கின்றேன். உலகமே அறிந்து வைத்திருக்கின்றது. இலங்கையில் இன்று நடந்து கொண்டிருக்கும் படுகொலைகளின் பின்னணியில் 1991 இல் இறந்து போன இராஜீவ்வின் ஆவியும் அதை நேசித்த சோனியாவும் அலைகின்றார்கள் என்று.
இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுத்தது ஒரு சாதனையா ? உங்க அப்பச்சிக்கு. ஒரு தொகுதி வெற்றிக்கு 10 தலை வீதம் பலி கொடுத்து விட்டாரே உங்க அப்பச்சி.
கடந்த ஜனவரியிலிருந்து கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் 6432 பேர். காயம் பட்டவர்கள் 13946 பேர். மொத்தம் 19378 பேர். கிட்டத்தட்ட இருபதினாயிரம் பேர். (ஐ.நாடு சொல்லியிருக்குங்க)
விவசாயக் கடன் 7000 கோடி உங்க அப்புச்சி தள்ளுபடி செய்தது பற்றி சொல்லியிருக்கின்றீர்களே. இந்த 20000 உம் உங்கள் கணக்குப்படி தள்ளுபடி தானா? 23 தொகுதியில தி.மு.க கேட்கின்றது .தொகுதிக்கு எத்தனை தலை?
பழைய ஜனம்(பராசக்தி ஜனம்) தான் ஞாபக மறதியில் எதேதோ புலம்புகின்றது. இளைய தலைமுறை நீங்களுமா? சிங்கப்பூர் தமிழனுக்கும் சிலோன் தமிழனுக்கும் என்னங்க வித்தியாசம். சிங்கப்பூர் தமிழனைக் கட்டிக்கிடலாம். சிலோன் தமிழனை காலில் போட்டு நசுக்கிடலாமா?
“untold suffering” and said that “the entire world is very disappointed”. கிளாரி கிளிண்டன் சொல்லியிருக்காருங்க.
அரசியலும் எதிர்காலமும் ஆதிபராசக்தி வசனமில்லீங்க.
அப்பிடி இப்பிடி சுத்திப் பாருங்க.. ஏதாவது புரியும். இவங்களையும் தான்.
இவங்களுக்கு "பந்த்" தேவையில்லீங்க.
உங்க பந்தம் பங்களிப்பு..
நீங்க பெரிய அரசியல்வாதி உங்களுக்குப் புரியாதா? என்ன?
பிரபாகரன் -எங்கள் நண்பர்
தமிழினம் மீதான ஒரு அழிவுப்போராட்டத்தை உலகமே முன்னெடுத்திருக்கின்றது.
ஈழத்தமிழர்களை முகர்ந்து தூக்கியெறியும் கறிவேப்பிலையாக இராணுவ பொருளாதார வல்லரசு நாடுகள் எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே அவற்றின் நடவடிக்கைகள் தமிழர் தேசியத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்தியா தொப்பூழ்கொடி உறவுள்ள நாடு ,தாய் நாடு என்ற மாயைகள் உடைத்துப் போடப்பட்டிருக்கின்றது. எதிரியின் வேகத்தை விட மூர்க்கத்துடன் தமிழின அழிப்பை இந்தியா செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
உலக நாடுகளின் நலன் பேண வேண்டிய ஐ.நாடுகள் சபையோ இறந்து படும் தமிழர் எண்ணிக்கையை காகிதங்களில் அறிக்கை விட்டு அழுது கொண்டிருக்கின்றது.தாக்குதல் செய்து அவலங்களை ஏற்படுத்தும் சிங்களப்பேரின வாதிகளை தட்டிக்கொடுத்து அல்லல் படும் இனத்தை ஆயுதத்தைக் கீழே போடு என்று இரட்டை நாடகம் போடுகின்றது.
ஐ,நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் "பயங்கரவாதத்தை ஒழித்து ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையுங்கள் " என்று கூவித்திரிகின்றன வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள். நண்பனாய் இருக்க வேண்டிய இந்தியாவோ நடு முதுகில் குத்தி விட்டது.
இத்தனைக்கும் காரணம் இலங்கையின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல், தங்கு தடையற்ற நுகர்வோர் சந்தையை உருவாக்குதல் ,இராணுவ மேலாதிக்க படைக்கலன் நகர்வுக்கான பாதையாக தளமாக இலங்கையைப்பாவித்தல் என்ற மூன்று நோக்கங்களின் அடிப்படையில் இவை இயங்குகின்றன.
இதில் அடிபட்டுப்போகும் சிறுபான்மை தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றி யாருக்கும் கவலையில்லை. உலகப்பந்தை உள்ளங்கையில் வைக்கும் முயற்சியில் நசுங்கிப்போகும் தமிழர் தலையைப்பற்றி யாரும் துயரப்படவில்லை. அப்பாவிகள் வாழ்வில் கொடுமைகள் செய்வது பற்றி எவரின் மனச்சாட்சியும் துடிக்கவில்லை.
புலிகள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் போராளிகள். யார் எப்படிச் சொன்னாலும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் இன்றும் என்றும் விடுதலைப் போராளிகளே. மக்கள் மனதில் அவர்களுக்கு என்றுமே உயரிய இடம் உண்டு. எங்கள் இனத்தை நசுக்க வந்தவர்களை எதிர்த்தது கொன்றது ஒன்றும் பயங்கரவாதம் அல்ல. ஒரு பகத் சிங்கைப்போல் ஒரு சுபாஸ் சந்திர போஸைப் போல போற்ற வேண்டிய தேசபக்தி.
எதிரிகளைக் கொல்வது போரில் நடக்கக் கூடியது தான். இராஜீவின் கொலையும் அதைப்போன்றதே . இராஜீவ் தமிழ் மக்களைக் கொன்றதனால் கொல்லப்பட்டார். அவ்வளவு தான். தமிழர்களை எதிரிகளைப்போல் கொன்றது இன்னும் கொன்று கொண்டிரு்ப்பது இந்தியாதான்.
இந்தியா இப்போது தமிழர்களின் எதிரிதான். எப்போதும் ..இனி அது தான் வரலாறு.
இப்போது தமிழ் மக்கள் போரில் தோற்றுப்போய் விடலாம் . ஆனால் அதுவே முடிவாகி விடாது. தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போல் பல வீரர்கள் தோன்றினார்கள் இன்னும் தோன்றுவார்கள்.
தமிழர்களை மந்தைகளைப்போல் ஆட்சிசெய்யலாம் என்ற கனவு எப்போதும் பலிக்காது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அத்தனையும் வெகு சீக்கிரத்தில் அதனைப் புரிந்து கொள்ளும். மனச்சாட்சி நேர்மை நீதி என்ற எங்கள் பாஷைகள் உங்களுக்குப் புரியவில்லை. இனி உங்கள் பாஷையில் நாங்களும் பேசுவோம்.
எதிரிகளிடம் உங்கள் பண்டங்களை விற்கமுடியாது. பண்டம் விற்கும் சுரண்டல் கனவுகளுடன் இருக்கும் உங்கள் கனவுகள் தகர்ந்து போகப் போகின்றது.
இந்தியா தமிழர்களின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. இது இனி தெளிவான வரலாறாகும். தமிழர்களுள் ஒரு சிலர் செய்த வஞ்சகமே எம்மை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. என்றும் அதை ஒரு பாடமாகக் கொள்வோம். பிரபாகரன் உங்களுக்கு நண்பனாக இல்லாதிருக்கலாம். ஆனால் அவர் தமிழர்களின் நண்பன். சுதந்திர தமிழ் ஈழத்தில் அவர் உங்களையெல்லாம் விட மேலானவரே.
Thursday, April 23, 2009
தமிழர் - கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள்
இலங்கைத் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக நான்தான் துணையாக இருக்கிறேன். பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கின்றேன், அதிகப்படியான தீர்மானங்களை என் கைப்பட இலங்கைத் தமிழர்களுக்காக எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாளேடுகளில் எழுதி வருகிறார். எந்த வார்த்தைகளிலும் நிலையான தன்மை இல்லை. அவர் சொல்வதில் எதிலும் உண்மையில்லை.
எந்த சமுதாய மக்களின் தலைவர் என்று தன்னைத்தானே மகுடம் சூட்டிக்கொள்கிறாரோ அந்த சமுதாய மக்கள் சிங்கள அரசால் இன்று வெடிகுண்டுகளாலும், துப்பாக்கி தோட்டாக்களாலும் கொத்து கொத்தாக சிறுவர் முதல் இளைஞர், பெண்கள், முதியவர்கள் என்று பாரபட்சமின்றி கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தமிழின படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்.
தமிழர்களுக்கு உயிர்ப் பிச்சை தாருங்கள் என்று தமிழகமே மன்றாடி பதவியில் இருக்கின்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியை கெஞ்சி கேட்டபோதும் தந்தி அடிப்போம் போர் நின்றுவிடும். கடையடைப்பு நடத்துவோம் போர் நிறுத்தம் வந்துவிடும் என்றெல்லாம் வீரவசனம் பேசி காலத்தை வீணாக கழித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த காலக்கட்டங்கள் கழிகின்ற நேரத்தில் இலங்கை தமிழினமே புல், பூண்டு இல்லாமல் ராஜபக்சேயின் கொடூர ஆட்சி அழித்து தமிழர்கள் இனமே இல்லாமல் முடித்துவிடும் ஆகையால் கருணாநிதி தேர்தலை மனதில்கொண்டு கடையடைப்பு, கண்துடைப்பு, தமிழ் தலைவன், மனம் வாடுகிறேன், வருந்துகிறேன், துயரமடைகிறேன் என்றெல்லாம் பராசக்தி கதை வசனங்களை மக்களுக்கு மீண்டும் மீண்டும் எழுதி காட்டாமல் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியவர் இப்போது தந்தி அடித்துக் கொண்டிருக்கின்றார்.
தேவை ஏற்படும் பொழுது "தம்பி தமிழ்ச்செல்வா" என்று கவிதை எழுதுவார். "ஆஹா இவரல்லவோ தலைவர் " என்று புளகாங்கிதம் அடைந்து நிற்கையில் "சகோதர யுத்தம் செய்த பாவிகள்" என்பார். "என்ன இது ?"என்று ஏங்கி நிற்கையில்
"பிரபாகரன் என் நண்பர்" என்பார். "அடடா" என்று திரும்புகையில் 'அப்படிச் சொல்லவில்லையே?" என்று கரணமடித்து நிற்பார். காங்கிரஸின் "கை" உயர்கையில் கலைஞரின் தமிழும் அழுகின்றது. ஏனென்றால் பொய் சொல்லத் தமிழுக்குத் தெரியாது. ஆனால் கலைஞருக்குத் தெரியுமே.அதனால்த்தான் தமிழும் அழுகின்றது.
குமரியில் வாழ்ந்த தமிழர் கடல் வஞ்சித்ததில் அழிந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த தமிழர் கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள். கலைஞருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு. அது கலைஞரைக் கொலைஞராய்க் காட்டும் அப்போது.
Wednesday, April 22, 2009
ஈழப்போர் - உண்மை முகம்
ஈழப்போர் இன்று ஒரு அவலமான காலகட்டத்தை அடைந்திருக்கின்றது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஆதிக்கப் போரில் தமிழ் மக்களின் இரத்தம் அபிஷேகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இத்தனை ஆயிரம் மக்களின் இறப்பிற்குப் பின்னாலும் சர்வதேச சமூகம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கின்றது. அது மிகவும் தவறானது. சர்வதேசத்தின் ஆதிக்கம் சார்ந்த நகர்வுகளே இன்று ஈழத்தமிழ் மக்களின் இரத்தம் சொரியும் நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்பதே உண்மையாகும்.
சர்வதேச சமூகம் என்பது உலகிலுள்ள அனைத்து நாடுகளையும் என்றும் குறித்து நிற்பதல்ல. அது இராணுவ பொருளாதார பலம் வாய்ந்த சில பத்துக்கணக்கான நாடுகளை மட்டுமே குறிப்பதாகும். அவற்றின் இராணுவ பொருளாதார நலன்களுக்கு அமைவாகவே உலகத்தின் தலைவிதி அடித்து அழித்து எழுதப்படும் முயற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
அந்த முயற்சியில் நசுக்கப்பட்டு ஒடுக்கப்படும் நிலையில்த் தான் தமிழ்த் தேசியமும் ஈழப்போரும் இருக்கின்றன. ஆனால் இதுவே முடிவான விதியல்ல என்பதே நமக்கு நம்பிக்கை ஊட்டுவது. இன்றைய முயற்சியில் இலங்கையைக் கூறு போடுவது அல்லது வளைத்துக் கொள்வது என்ற முனைப்பில் பல சக்திகள் இலங்கையில் காலூன்றி நிற்கின்றன. அவற்றின் பலப் பரீட்சை இன்று புலிகளின் கிளர்ச்சிகளை ஒடுக்குவது அல்லது அடக்குவது என்ற சிறிலங்கா சிங்கள அரசின் எண்ணத்திற்கு முட்டுக்கொடுப்பதில் ஒருங்கிணைந்து நிற்கின்றது. அதன் மூலம் சிறிலங்காவில் காலூண்டும் தனிப்பெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு அன்னிய சக்தியும் சிறிலங்காவின் சிங்கள அரசிற்கு அளவில்லா உதவிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இதில் முரண் நகை என்னவென்றால் இயல்பிலேயே எதிர் நிலைகளில் இருக்கும் சக்திகளும் ஒரே விதமாகச் செயல்படுவதுதான். சிங்கள அரச ஆதரவின் மூலம் சிறிலங்காவில் காலூண்டுவது என்பது முதல் படி நிலைதான். இந்த நிலை எவ்வளவு தூரம் போகும் என்பதற்கு இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவு முடிவாக்கப்பட்டு சிங்களம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் வரை. இரண்டு சிங்களத்தால் அன்னிய சக்திகளுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு அல்லது அவ்வாறாகப் புறக்கணிக்கப்படுவதாக ஏதாவதொரு அன்னிய சக்தி உணர்ந்து அடுத்த நிலையைப் பற்றி யோசிக்கும் வரை.
தமிழர்கள் இப்போது செய்ய வேண்டியதெல்லாம் முதல் நிலையை சிங்களத்தால் அடைய விடாது செய்வதும் இரண்டாவது நிலையை உருவாக்க துரிதமாகச் செயல் படுவதும் தான். முதலாவது நிலை போராளிகளாலும் இரண்டாவது நிலை புலத்திலிருக்கும் மக்களாலும் உருவாக்கப்படவேண்டும்.
சிங்கள அரசு சார்பான அதீதமான உதவிகள் எதிர் எதிர்சக்திகளால் வழங்கப்பட்டபோதும் அவற்றிற்கிடையான புகைச்சல் வெடிக்கும் கொதி நிலையிலேயே இருக்கின்றன. அது வெடிக்கும் போது இயல்பான எதிர்நிலைக்கு இலங்கை விவகாரத்திலும் போவது தவிர்க்க முடியாதது.
எதிர்நிலைக்குப் போகக்கூடிய சக்திகள் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகள், ரஷ்ய சார்பு நாடுகள் , மூன்றாவது அணியாக சீனா . இதுவே இன்று உலகம் பூராவும் ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொண்டிருக்கும் சக்திகள். இதில் இந்தியா எங்கே என்ற கேள்வி எழுகின்றது?
இவற்றுடன் ஒப்பிடும்போதும் இலங்கை விவகாரத்திலும் இந்தியா இப்போது இரண்டாந்தர சக்திதான். அதுவும் எவ்வளவு காலத்திற்கு என்பதை இந்தியாவின் எதிர்கால அரசியல் முடிவுகள் பொருளாதார பலம் என்பவைதான் தீர்மானிக்கக் கூடியவை. இன்று இந்தியா இரண்டி நிலைகளில் இணைந்து கொள்ளலாம். ஒன்று வழமையைப்போல ரஷ்ய சார்பு நிலையை எடுப்பது. அல்லது புதிய உத்தியாக அமெரிக்க சார்பு நிலையை எடுப்பது.
அமெரிக்க சார்பு நிலை இந்தியாவைப் பொறுத்தளவில் பல சிக்கல்களை முன் வைத்திருக்கின்றது. அதை விவரிக்கப் போனால் அதுவே நீண்ட கட்டுரையாகி விடும். ஆனால் புதிய கள நிலைகள் அமெரிக்க சார்பு நிலையை எடுக்கவே இந்தியாவைத் தூண்டும். அதற்கான தேவைகள் இந்தியாவிற்கு இருப்பதைப் போலவே அமெரிக்காவிற்கும் இந்திய சார்பான தேவைகள் தற்போதைக்கு இருப்பது இந்தியாவிற்கு சாதகமானதே.
இந்த மூன்று சக்திகளிலும் சிங்கள அரசிற்கு எதிராக வெளிவரப்போகும் அன்னிய சக்தி யார்? என்ற மில்லியன் டொலர் கேள்வி எங்கள் முன்னால் இருக்கின்றது. அவ்வாறு நிகழ்வதற்கு உலக அரங்கில் பல இரசாயன பெளதீக மாற்றங்கள் இராணுவ பொருளாதார நிலைகளில் உருவாக வேண்டும். அது எவ்வாறு எப்படி நிகழும் என்பதை வல்லரசுகளின் தன் முனைப்புகளே தீர்மானிக்கும்.
இதே நேரத்தில் சிறிலங்காவில் ஈழம் என்ற அதிகார மையம் உருவாகுவதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அரசியலை தீர்மானிக்கப்போவதும் தவிர்க்க முடியாததாக அமையப் போகின்றது. அவ்வகையான ஒரு தேவை அன்னிய சக்திகளுக்கு என்றும் இருந்து கொண்டே இருக்கின்றது.
ஈழத்தைப் போலவே இன்றைய ஆப்கானிஸ்தானும் ஈராக்கும் எதிர்கால காஸ்மீரும் வடகொரியாவும் தைவானும் இப்பிராந்திய அரசியலில் மையமிடப்போகும் புயலின் மையப்புள்ளிகளாகும். இரண்டாம் உலகப்போரின் பின்னைய காலகட்டங்களில் ஐரோப்பாவில் மையம் கொண்டிருந்த வல்லாதிக்கப் போட்டி இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கு மாற்றப்பட்டது இயல்பாகவே முதலாளித்துவத்தின் நுகர்வுச் சந்தையை மையப்படுத்தியதாக இருந்த போதிலும் அது ஈழப்போரையும் வெகுவாகவே பின் தள்ளிவிட்டது.
இதுவே விதி என்னும் போது இதனூடாகவே தீர்வை அடைவதே தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிர்ப்பந்தமாகும்.
விதியா? சதியா? என்ற ஆராட்சிகளைப் புறந்தள்ளி வேண்டிய இராஜதந்திர அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தமிழ் மக்களின் அவசரக் கடமையாகும். சிங்களப் பேயரசிற்கு முண்டு கொடுக்கும் இனவாதச் சக்திகளிற்கிடையே முரண்பாடுகளைக் கண்டறிதல் அதை தமிழ்த் தேசியம் சார்பாக வளைத்தெடுத்தல் என்பன தமிழ் மக்கள் முன்னாலுள்ள அதியுச்ச பணிகளாகும்.
ஐ. நாடுகள் ஊடான பாதுகாப்புச் சபை கூட்டத்தொடரில் சிறிலங்கா மனித உரிமைகள், இராணுவத்தினரின், அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்கள் என்பவை தொடர்பான சிறிலங்கா மனித உரிமை மீறல்களை சில நாடுகள் கொண்டுவர முற்பட்ட சம்பவமானது ஒரு மைல் கல்லாகும்.
இதில் ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையில் அதியுச்ச "வீட்டோ" அதிகாரம் கொண்ட நாடுகள் களமிறங்கியிருப்பது சிறிலங்கா விவகாரத்தில் அவற்றுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலை வெளிப்படப் போவதற்கான அறிகுறியாகும். அமெரிக்கா, பிரித்தானியா,பிரான்ஸ் இவ்விவகாரத்தை ஐ.நாடுகள் சபையில் எடுத்து வருவதை ஆதரிக்கின்ற போது சீனாவும் ரஷ்யாவும் எதிர் நிலையை எடுத்திருக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது.
இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியாவின் கோரிக்கையை ஆதரிப்பதாக அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி அலெஜான்றோ வூல்வ் தெரிவித்திருக்கிறார்.இலங்கை பற்றிய அறிக்கையை பிரான்சே அந்தரங்க கூட்டத்தில் முதலில் கோரியுள்ளது.
இலங்கை சூழ்நிலையை ஒரு விசேட சூழ்நிலையாகக் கருதி பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புப் பேரவையின் தலைவர் குளோட் ஹெலர் தெரிவித்துள்ளார்.
இவை அனைத்தும் ஈழத்தமிழ் மக்களின் மேலுள்ள 100% அக்கறையினால் என்பதாக அல்லாவிட்டாலும் சிறிலங்கா மீது ஆதிக்கம் செலுத்த விளையும் சக்திகளுள் முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கி விட்டன என்பதையே காட்டுகின்றன. அல்லது தமது மேலாதிக்கத்தை சிறிலங்கா அரசின் மீது இறுக்கத்தொடங்கி விட்டன என்றவாறும் எடுத்துக் கொள்ளலாம். இதிலிருந்து சிறிலங்காவில் அக்கறைப்படும் ஒன்றோ பலவோ சக்திகள் வெளியேற்றப்படப் போகின்றன. இவ்வாறு வெளியேற்றப்படும் சக்திகள் தமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள வழி தேடுவது இயற்கையானது.
அவ்வாறான சக்திகளுக்கு சிறிலங்காவில் சிங்கள அரசிற்கு மாற்றுச் சக்தியாக இருக்கின்ற தமிழ்த் தேசியத்துடன் இணங்கி வருவது தவிர்க்க முடியாதததாக அமைந்து விடும். இதன் மூலமே சரியான காய் நகர்த்தல்கள் தமிழ்த் தேசியத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத இனமாக்கப்போகின்றது. கடந்த காலத் தவறுகளில் இருந்து பாடங் கற்றுக் கொள்ளப் போவதும் எதிர்காலத்தை விவேகத்துடன் எதிர்கொள்ளுவதும் தமிழ் மக்கள் முன்னாலுள்ள பணிகளாகும்.
இந்நிலையில் புலம் பெயர்தமிழ் மக்களின் ஆதரவுப் போராட்டங்கள் எவ்வாறு பயனளிக்கும் என்ற கேள்வியும் எழுகின்றது. அது நேரடியாக இல்லாதபோதும் மேற்கு நாடுகளின் அரசியல் நகர்வுக்கு தார்மீகப் பலனை அளிக்கும். அல்லது அவ்விதம் கற்பிதம் செய்து அவர்கள் தங்கள் அரசியல் நலனை முன்னெடுக்க ஊக்குவிக்கும். ஆகவே மனஞ்சலியாது எல்லாவகையான போராட்டத்தையும் முடுக்கி விடுவதே இப்போது எம்மால் செய்யக் கூடியது.