ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 13, 2009


குருதி கொப்பளிக்கும் புது வருடம்காலையில் இருந்து செய்திகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும் யாரும் வாயைத் திறக்கக் காணோம். அனைத்து மனித நேயக்க்காவலர்களும் அதிர்ச்சியில் உறைந்திருக்க வேண்டும். அல்லது மிட்டாய் கொடுத்து சமாதானப் படுத்திய குழந்தை மீண்டும் அடம்பிடிக்கத் தொடங்கியதாக சமாதானப் பட்டிருக்கலாம்.

சிறிலங்கா தானே அறிவித்த யுத்த நிறுத்தத்தை மீறிக் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோது எங்களால் தான் என்று மார்தட்டியவர்கள் வாயைத்திறக்கக் காணோம்.

அமெரிக்கா, பிரித்தானியா, இந்தியா, ஐக்கிய நாடுகள் என்று எல்லோரும் கூட்டாக உரிமை கோரிக்கொண்டார்கள். புலிகளின் பகுதியில் ஒதுங்கியிருப்பதாக எண்ணப்படும் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி பிறக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கேற்றாற்போல நார்வே மக்களைக் காபந்து செய்ய களமிறங்குவதாக அறிவித்துக் கொண்டது.

அட..உலகத்தின் கருணை ஈழத்தமிழ் மக்களைக்காக்கப் புறப்பட்டது என்று நிம்மதி ஏற்பட்டது. தி. மு.க வின் பேரணியைப் பார்த்து ராஜபக்ஸ பயந்து விட்டார் என்று தமிழ் நாட்டில் இருந்து மெகா காமடியும் கிளம்பியது.

தேர்தலில் காங்கிரஸை காப்பாற்றிக் கொள்ள கடிதம் எழுதும் கபடமும் நடந்தேறியது. ஏமாந்த தமிழனை மொட்டையடிக்கும் அத்தனை கோமாளிக்கூத்துகளும் நடந்தேறின. அத்தனையையும் பார்த்தும் கருமமே கண்ணாக தமிழன் இருந்தான் தேர்தலில் பதில் சொல்ல.

இப்பொழுது என்ன நடந்தது? நேற்று நள்ளிரவுடன் அமுலுக்கு வர வேண்டிய குண்டு வீச்சு நிற்பாட்டுதல் இன்றி காலையிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பட்டாசு வெடிக்க வேண்டிய இடத்தில் குண்டுகள் வெடித்து 37 உயிர்களைக் குடித்து விட்டிருக்கின்றது. 112 பேர் காயமடைந்திருக்கின்றார்கள். இருந்த
போதும் போர் அரக்கனின் பசி அடங்கவில்லை . தொடர்ந்தும் குண்டுகளுடன் உலா வந்து கொண்டிருக்கின்றான்.

இப்போது சர்வதேசத்தின் வேண்டுகோள்களை மீறிய சிங்கள அரசைக் கண்டனம் செய்வது தானே முறை. ராஜபக்சேயை நிர்ப்பந்தித்து போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டாமா? சிறிலங்கா அரசு மீது தடைகளைப் போட வேண்டாமா?

அப்படித்தான் நானும் நீங்களும் நினைத்துக்கொள்வோம். ஆனால் அரசியல் காமடியர்கள் அதற்கு ஏதாவது காரணம் சொல்லக்கூடும். அட துன்பங்கள் நிறைந்த உலகில் சிரிக்க வைப்பதற்கு யாராவது இருக்க வேண்டாமா?

அது தான் நிறைந்திருக்கின்றார்களே? கரை வேட்டிக்காமடியர்கள்.

"இடுக்கண் வருங்கால் நகுக"-வள்ளுவர்.

அப்போ.. நகுங்கள்.

http://www.maalaimalar.com/2009/04/13144053/CNI0510130409.html

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil