
"நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன" என்று வம்படியாகஅறிவித்துள்ளார் கார்த்திக்। என்ன உண்மைகள்?
அது தான் வம்பாகப் போய் விட்டது। ஏற்கனவே அவர் என்ன செய்கின்றார்? எதற்காக அரசியல் என்பதெல்லாம் புரியாமல் மக்கள் குழம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.
//இலங்கைப் பிரச்சினை பற்றிய பேசிய தமிழகத் தலைவர் ஒருவர் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடும் என்றார். தமிழகத்தில் ஏன் இரத்த ஆறு ஓட வேண்டும்? அப்படிப் பேசுபவர்களின் குடியுரிமையை ரத்து செய்து அவர்களை இலங்கைக்கே அனுப்பிவிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆளும் கட்சிக்கு தைரியம் இல்லை.
உள்ள அரசியல்வாதிகள் சொத்தில் ஒரு பங்கை எடுத்தாலே இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்திவிடலாம். முக்குலத்தோர் இனத்தின் ஓட்டுக்களை பெறும் கட்சிகள் அந்த இனத்திற்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை. இப்போது உள்ள அரசியல்வாதிகளில் நான் மட்டுமே உண்மையை பேசுகின்றேன்.//
அவர் பேசிய "உண்மைகள்" (?) இவைதான் .
ஈழக் காச்சலில் குளிர் காய்வதை விட்டு விட்டு... இவரென்ன அரசியல் அரிச்சுவடியே தெரியாதா ஆளா இருக்காரு...
குண்டு போடுரவங்க ... தூக்கிக்கொடுக்கிரவங்க ... வழிவிட்டு வாழ்த்தி அனுப்பிரவங்க எல்லாம் பேரணி மாநாடு நடத்துரப்போ .... என்கிறீர்களா? அது தானே...
"நான் எந்தத் தொகுதியில் போட்டியிடுவேன் என்பதை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்பேன்" என அறிவித்துள்ள நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக், என்றும் தெரிவித்துள்ளார்।.
ஏன் என்றும் சொல்லிவிட்டால் தேவல்லே...
இன்னுமொரு உண்மையையும் சொல்லியுள்ளார்.
என்னைக் கூட்டணியில் சேர்க்க பல கட்சிகள் பயப்படுகின்றன। எதிர்வரும் 17ஆம் திகதிக்குப் பின்பு நான் பேசப்போகும் உண்மைகளால் அரசியல் கட்சிகள் கதிகலங்கப் போகின்றன।
அப்படியா சாமி?
குறிப்பு: 17 ஆந் திகதிக்குப் பிறகு வாக்காளர்களே கவனம்।.
1 comment:
ayyo ayyo
tamashu!!!!!!
Post a Comment