ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, April 10, 2009


"ஷோ" காட்டலின் சோகம்


சம்பந்தப்பட்ட பிரமுகர் வேறு யாருமல்ல. தி பேமஸ் முகம்மது பின் துக்ளக் புகழ் சாட்சாத் சோ வே தான். அ.தி.மு.க மத்தியிலும் மானிலத்திலும் வெல்லப்போவது உறுதி என்று சொல்லித் திரிகின்றார். அ.தி.மு.க வின் "நிழல்" முதல்வராக பிரசித்தமான இவரின் மனதில் என்ன ஓடுகின்றது என்றே தெரியவில்லை.

தன் காலத்தின் பின் தனக்கு சிலை வைத்தால் (அப்படி வைப்பது தானே திராவிட பாரம்பரியம்) ஏற்படும் பயங்கர விளைவுகள் பற்றி இப்போதே படுத்தியெடுக்க ஆரம்பித்து விட்டாராம். சிலையே வைக்க வேண்டாம் என்று கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் புலம்பித் திரிகிறாராம். சிலர் கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டு நழுவி விட சிலர் என்னவென்று புரியாது பேந்தப்பேந்த முழிக்கிறார்களாம்.(அதே சோ முழி தான்)

உலகிலேயே அதிகம் செருப்பு மாலை போடப்பட்ட சிலை தனது சிலையாகத் தானாம் இருக்கப் போகின்றது என்ற கெட்ட கனவு கண்டதில் இருந்து இந்த வியாதியாம்.

குறிப்பு: தமிழர்களைப் படுத்தியதன் பின் விளைவு வினையாகத் தொடரும் போலும்

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil