
தலைநகர் டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பயங்கரவாதம் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் பற்றி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் விளக்கினார்.
அப்போது அவருக்கு எதிரில் அமர்ந்திருந்த, இந்தி நாளேடு ஒன்றின் செய்தியாளர் ஜர்னய்ல் சிங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு 1984இல் நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர் ஜெகதீஷ் டைட்லர் குற்றமற்றவர் என்று ம.பு.க. கூறியுள்ளது மத்திய அரசு தந்த அழுத்தத்தால்தானே என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த சிதம்பரம், "உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மத்தியப் புலனாய்வுக் கழகம் இல்லை என்பதை முதலில் உங்களுக்கு நான் தெரிவிக்க விரும்புகிறேன். எனக்குத் தெரிந்து ஜெகதீஷ் டைட்லர் வழக்கில் மத்திய அரசு எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்கவில்லை. ம.பு.க. தனது சொந்த முடிவை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையின் மீது நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.
இந்த பதிலால் அதிருப்தியடைந்த ஜர்னய்ல் சிங், திடீரெனத் தனது காலணியை எடுத்து சிதம்பரத்தின் மீது வீசினார். எனினும், சிதம்பரம் ஒதுங்கிக்கொண்டதால் அவர் மீது காலணி விழவில்லை.
இதையடுத்து அதிர்ச்சியடையாத சிதம்பரம் அனைவரும் அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
குறிப்பு: நாங்க அரசியல் வாதிங்க ..எத்தனை செருப்புகளைப் பார்த்திருக்கோம்னு சொல்லாமல் சொல்றாரோ .. அஞ்சா நெஞ்சன் "செருப்பரம்''
குறிப்பு2:சிதம்பரம் மீது ஷூ வீசிய நிருபர் ஜர்னைல் சிங்குக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அகாலி தளம்
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment