ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 4, 2009


கலைஞரின் சொத்து விபரம்- கழக முத்துக்களுக்கு


சொன்னதைச்செய்வோம், செய்வதைச்சொல்லோம் என்ற வார்த்தைகளுக்கிணங்க அந்த தேர்தல் அறிக்கையிலே எடுத்து வைத்த வாக்குறுதிகளையெல்லாம் முறையாக நமது குடும்பத்திற்காக நம் சார்பில் நிறைவேற்றிய பெருமையும் நமக்கு உண்டு. -கலைஞர்


இது 2006 இல் பொதுத்தேர்தலின் போது வந்த விபரம்:


திமுக தலைவர் கருணாநிதி தனது சொத்து விவரப் பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.அதில் தனக்கு சொந்தமாக வீடு, கார், நிலம் என எதுவும் இல்லை என்றுதெரிவித்துள்ளார்.


எல்லாம் மனைவிகள் பெயரிலேயே உள்ளதாகக் கூறியுள்ளார்.

சேப்பாக்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த கருணாநிதி, அத்துடன் தனதுசொத்து விவரம் குறித்த பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

அதன் விவரம்:

கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு ரூ. 26.5 கோடியாகும்.

இதில் ரூ. 5 கோடி கோடம்பாக்கம் இந்தியன் வங்கி கிளையில் பிக்சட் டெபாசிட்டாகவைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு வங்கிகளில் ரூ. 15 லட்சம் பணம் முதலீடுசெய்யப்பட்டுள்ளது.

தயாளு அம்மாள் பெயரில் ரூ. 12.5 கோடி கோடம்பாக்கம் இந்தியன் வங்கிகிளையில் பிக்சட் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இந்தியன் வங்கியின் ராஜா அண்ணாமலைபுரம் கிளையில் தயாளு அம்மாள் பெயரில்ரூ. 5 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

வங்கி முதலீடுகள், சேமிப்புக் கணக்குகள் என மொத்தம் ரூ. 25 லட்சம் பணத்தைபல்வேறு வங்கிகளில் தயாளு அம்மாள் போட்டு வைத்துள்ளார்.

தயாளு அம்மாளுக்குச் சொந்தமாக நவீன ஹோண்டா அக்கார்ட் கார், ரூ. 5 லட்சம்நகைகள் ஆகியவையும் உள்ளன.

கோபாலபுரத்தில் உள்ள வீடு கருணாநிதிக்கு சொந்தமானதல்ல என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் இருந்து அனுபவித்துக் கொள்ளும் உரிமைமட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார் கருணாநிதி.

அதேபோல தஞ்சை மாவட்டம் திருநள்ளாறு கிராமத்தில் உள்ள 13.30 ஏக்கர்நிலத்தையும் அவர் ஆண்டனுபவித்துக் கொள்ளலாம், ஆனால் அந்த நிலம் அவரதுபெயரில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டள்ளது.

அஞ்சுகம் பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் கருணாநிதியிடம்உள்ளன. அதேபோல தயாளு அம்மாளுக்கும் 50 சதவீத பங்குகள் உள்ளன.

தயாளு அம்மாள் தனது பெயரிலான அறக்கட்டளைக்குத் தலைவராக உள்ளார். அந்தஅறக்கட்டளைக்கு மதுரை அருகே உள்ள மாடக்குளத்தில் 21 சென்ட் நிலம் உள்ளது.

இன்னொரு மனைவியான ராஜாத்தி அம்மாளுக்கு மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் ரூ.3.02 கோடி மதிப்பிலான வீடு உள்ளது. ஒரு டாடா இண்டிகோ கார், ரூ. 5.08 லட்சம்மதிப்புள்ள நகைகள் உள்ளன.

தமிழ்க்கனி பதிப்பகத்தின் உரிமையாளராக ராஜாத்தி அம்மாள் உள்ளார். அந்தநிறுவனத்துக்கு ரூ. 20.75 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.

இதுதவிர ரூ. 5.41 லட்சம் முதலீட்டுடன் ராயல் பர்னிச்சர் நிறுவனம் ராஜாத்திஅம்மாளுக்கு சொந்தமானதாக உள்ளது.

11வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள கருணாநிதி தன் மீது 9 வழக்குகள்நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் ஐந்து வழக்குகள் அவதூறு வழக்குகள். அரசு ஊழியர் வேலை நிறுத்தத்தைஆதரித்ததற்காக டெஸ்மா சட்டத்தின் கீழ் 2 வழக்குகளும், மத நம்பிக்கையைஇழிவுபடுத்தும் வகையில் பேசியது, எழுதியது தொடர்பாக 2 வழக்குகளும்போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கருணாநிதி.

சென்னை நகரில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல், கரூர் அமராவதி ஆற்றுப் பாலஊழல் தொடர்பான வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளது.


இன்னும் நீதிமன்றங்களுக்கு இந்த வழக்குகள் போகவில்லை என்பதால் அதைகுறிப்பிடவில்லை என்றும் கருணாநிதி தனது பிரமாணப் பத்திரத்தில்தெரிவித்துள்ளார்.

இதுவும் அதே 2006 இல் இன்னுமொரு கணிப்பு:

அதாவது நமது தமிழகத்தில் உள்ள
மிகப்பெரும் கோடிஸ்வரர்களான அம்மாவும், ஐயாவும் எத்தனை சொத்து
சேர்த்திருப்பார்கள் என்பதை கணக்கிடும் ஆசைதான்.

இது சாதாரண மனிதனால் இயலும் காரியமல்ல என்பதால் குத்து மதிப்பாக தான்
கணக்கிடுகிறேன்.

சன்டிவியின் 10% பங்கு பங்குசந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மொத்தம் 68,89,000 பங்குகள்(10%) பங்கு ஒன்றுக்கு 1500
ரூபாய<http://www.thehindubusinessline.com/2006/04/25/stories/20060425037401...>்
என்ற விகிதத்தில் பங்குசந்தையில் விற்கப்பட்டுள்ளது.

கலாநிதிமாறன் வசமுள்ள மீதம் 90% பங்குகளையும்(6200100) பங்கு ஒன்றுக்கு 1500
ரூபாய் என்ற மதிப்பீட்டில் கணக்கிட்டால்

கலாநிதிமாறன் வசமுள்ள சன்டிவி பங்குகளின் மதிப்பு :9300 கோடி ரூபாய்கள்

அரசியலில் சுத்தமாக ஈடுபடாத கலாநிதிமாறன் மட்டும் 9300 கோடி ரூபாய்க்கு சொத்து
சேர்க்க முடிகிறது என்றால் ஐயாவின் சொத்து எத்தனை இருக்கும் என்பதை நம்மால்
யூகிக்க முடியுமா என்ன?

குத்துமதிப்பாக கலாநிதியின் சொத்தை விட மொத்தம் 10 மடங்கு அதிகம் இருக்கும் என
வைத்துகொண்டால் கூட கலைஞர் ஐயாவின் குடும்ப சொத்து மதிப்பு 93,000 கோடி
ரூபாய்கள்.

கலைஞருக்கு சற்றும் சளைக்காதரவான அம்மா மட்டும் சும்மா இருப்பாரா என்ன? அவரும்
இதே அளவிலான சொத்துக்களை சேர்த்திருப்பார் என்பது உறுதி. ஆக அம்மாவின் சொத்து
மதிப்பும் 93,000 கோடி ரூபாய் என வைத்துக்கொண்டால்...

அம்மா மற்றும் ஐயாவின் மொத்த சொத்து மதிப்பு 186,000 கோடி ரூபாய்கள்.

தமிழ்நாட்டின் ஜனத்தொகை 5 கோடி.(குடும்பத்துக்கு 4 பேர் என கணக்கு போட்டால்
மொத்தம் 1.25 கோடி குடும்பங்கள்)

186,000 கோடியை 1.25 கோடியால் வகுத்தால் கிடைப்பது 148,800 ரூபாய்.

அதாவது ஐயாவிடமும், அம்மாவிடமும் உள்ள சொத்துக்களை பிரித்து கொடுத்தால்
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 148,800 ரூபாய் கிடைக்கும்.

இதை வைத்துக்கொண்டு சுயதொழில் செய்தால் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும்
முன்னேறும். தமிழ்நாடும் ஜப்பானுக்கும், அமெரிக்காவுக்கும் போட்டியாக வளர்ந்த
நாடாகி விடும். ஏழ்மை என்பதே தமிழகத்தில் அதன்பின் இருக்காது. வறுமைக்கோடு,
மலமள்ளுபவர்கள் என அனைத்து குடும்பமும் முன்னேற இதுதான் சிறந்த வழி.

செய்வார்களா அம்மாவும், ஐயாவும்?


அப்போ இப்போது கலைஞரின் சொத்து எவ்வளவு தேறும்? கழகக் கண்மணிகளே தனது சொத்து என்று கூறிக்கொள்வது சரியா? தர்மமா?

ஒரு கொசுறுச் செய்தி: 2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாற்பது மிகப் பெரும் பில்லியனர்களின் சொத்து மதிப்பு $106 பில்லியன் டாலர்களில் இருந்து $170 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. அதிலும் முதல் பத்து பணக்காரர்கள் மட்டுமே ஏறக்குறைய $112 பில்லியன் டாலர்கள் வைத்திருக்கிறார்கள். பஞ்சாபில் ஒருவர், புது தில்லியில் ஒன்பது, மும்பையில் பதினாறு, புனேயி மூன்று, பெங்ளூரில் எழுபேர், சென்னையில் ஒரே ஒருவர், கலாநிதி மாறன், பில்லியனர்களாக இருக்கிறார்கள். மிட்டல் ஸ்டீல் தலைவரான லஷ்மி மிட்டல், விப்ரோவின் ஆஸிம் ப்ரேம்ஜி மற்றும் அம்பானி சகோதரர்கள் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடத்தில் இருக்கிறார்கள்.

மேலதிக தகவல்களுக்கு,

http://www.forbes.com/business/2006/11/16/richest-indians-billionaires-biz_06india_cz_nk_1116richindiansintro.html

இப்போது கலாநிதி மாறன் விஷயத்திற்கு வருவோம். ஒரு தமிழர் பில்லியனர் லிஸ்ட்டில் இடம் பெற்றிருப்பது பெருமையா இல்லையா என்பதனை உங்கள் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.ஆனால் அவ்வளவு செல்வத்தை எப்படி அவரால் குறுகிய காலத்தில் சம்பாதிக்க முடிந்தது என்பதுதான் என் கேள்வி. Unethical Business Practices என்று சொல்லப்படுகின்ற சாம, தான, பேத, தண்ட ஆயுதங்களைத் தயங்காமல் போட்டியாளர்களின் மீது பிரோயோகித்ததனால் அல்லவா? தன் தகப்பனாரும், பாட்டனாரும் பின்னனியில் தங்கள் அரசியல் செல்வாக்கினை உபயோகித்து அத்தனை தகிடு தத்தங்களையும் செய்ததினால் அல்லவா இந்த முன்னேற்றம்? மறுப்பாரா கலாநிதி மாறன்? இலவச தொலைக்காட்சிப் பெட்டித் திட்டத்தின் பின்னனிக் காரணங்கள் என்ன? ஜனங்களின் மீதான கரிசனமா? உண்மையான கரிசனம் உள்ளவர்கள் கிராமச் சாலைகளையும், நீராதாரங்களையும் அல்லவா சீர்படுத்துவார்கள்? அதை விட்டுவிட்டு இலவசமாக, வீணாக அரசாங்க வரிப்பணத்தைச் செலவிடுவதின் உண்மைக் காரணம் என்ன?



4 comments:

G.Ragavan said...

ரொம்ப நியாயமாக் கேள்வி கேக்குறீங்களே? தன்னிகரில்லாத் தமிழ்கத்தின் தலைமகன்.... செந்தமிழும் முத்தமிழும் நாவில் முத்துக்குளிக்கும் முதல்மகன் கலைஞர் அவரைப் பற்றி இப்படியெல்லாம் பேசலாமா? இதனால் உண்டாகும் பாவங்கள் என்ன தெரியுமா? நீங்கள் திராவிடத் துரோகியாவீர்கள். மதவெறியவர் ஆகவும் வாய்ப்புள்ளது. இனமான எதிரியாவீர்கள்.

ஜெயலலிதாவை நீங்க எதுக்குறீங்கன்னா.... கருணாநிதியை ஆதரிச்சே தீரனுமாமே... இது தெரியாதா?

இட்டாலி வடை said...

என்னங்க நீங்க இந்தமாதிரி ..ஒண்ணுமே தெரியாத ஆளாருக்கீங்க...மதவெறியரானா பா.ஜ.கவில் சீட் கொடுக்கிராங்க..

அடுத்த மாநிலங்களவை எலக்ஷனில ஜெயாவும் கலைஞரும் தானாம் கூட்டு...இல்லேன்னா உதிரிக்கட்சிக கிட்ட ஆட்சியைக்கொடுக்கணும் ..நெலம அப்ப்படித்தான் ..இருந்து பாருங்க... தலைம மாயாவதியின் கட்சி..

மக்கள் தளபதி/Navanithan/ナパニ said...

//186,000 கோடியை 1.25 கோடியால் வகுத்தால் கிடைப்பது 148,800 ரூபாய்.//

தூள் தலைவா.
என்ன, நீங்க ஒத வாங்கும்போது நான் வேடிக்கைமட்டும்தான் பார்ப்பேன். இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா?

இட்டாலி வடை said...

//தூள் தலைவா.
என்ன, நீங்க ஒத வாங்கும்போது நான் வேடிக்கைமட்டும்தான் பார்ப்பேன். இப்பவே சொல்லிப்புட்டேன் ஆமா?//

வாங்க தல, நீங்க மட்டுமா? நாங்களும் அதைத்தானே செய்யிறோம்..

உங்களுக்கு ஒத விழும்போது... ஹா..ஹா

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil