ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 5, 2009


"துக்ளக்" கில் தொடர் எழுதினால் முதல்வராகலாம்துக்ளக்கிற்கு ஒரு சிறப்பு உண்டு.( நீங்க கட்டாயம் நம்பித் தான் ஆகணும்) துக்ளக்கில் தொடர் எழுதுபவர்கள் தமிழக
முதல்வராக (?) பொறுப்பேற்றுவிடுவார்கள். அப்படி ஒரு ராசி அந்த பத்திரிக்கைக்கு உண்டு.
துக்ளக்கில் தொடர் எழுதி அதற்குப் பிறகு தமிழக முதல்வரானவர்கள் இருவர்: ஒருவர் எம்.ஜி.ஆர், மற்றொருவர் ஜெயலலிதா. சூப்பர் ஸ்டார் விஷயத்தில் இந்த செண்டிமெண்ட் கொஞ்......ச........ம் தாமதமாகிறது.

சூப்பர் ஸ்டார் தொடர் எழுதிய கதையைச் சொல்லி விடுகின்றேன்.

ஒரு முறை சோவை அவரது அலுவலக ஊழியர்கள் “நீங்கள் என் ரஜினியிடம் உங்கள் நட்பை பயன்படுத்தி நம் இதழுக்கு கட்டுரை எழுதித்தருமாறு கேட்கக்கூடாது?” என்று நெருக்க ஆரம்பித்தனர். ஆனால் சோவோ, “எனக்கு அவரிடம் உள்ள நட்பை இப்படி சுயநலத்துக்காக ( அப்படின்னா என்னாங்க?...) பயன்படுத்த நான் விரும்பவில்லை. அவராக கேட்கட்டும் பார்க்கலாம்,” என்று கூறி சமாளித்துவந்தார்.
சோவிடம் ரஜினி கேட்ட வாய்ப்பு
இதற்கிடையே ரஜினியாகவே சோவிடம் ஒரு நாள், “என்னிடம் கட்டுரை எழுதித்தருமாறு கேட்கவே மாட்டீர்களா?” என்று கேட்டுவிட்டார் சூப்பர் ஸ்டார்.

சோவும் ஓ.கே சொல்ல 1996 ஆம் ஆண்டு துவக்கத்தில் - துக்ளக் இதழில் - “அந்த ஐந்து விழாக்கள்” என்னும் தலைப்பில் ரஜினி ஒரு தொடர்கட்டுரை எழுதினார்.இந்த தொடரை சூப்பர் ஸ்டார் தாமாகவே மனமுவந்து எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம் முதல்வராகும் ஆசை அல்ல. சோ மீது அவர் கொண்ட பிரியம். (சத்தியமா தாங்க... நம்புங்கள்)

சூப்பர் ஸ்டார் இப்படி சோவிடம் கேட்கும் சமயத்தில் அவருக்கு இந்த துக்ளக் செண்டிமெண்ட் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. (குறித்து வைத்துக் கொள்ளுங்கள்)

13 வருடமாக சூப்பர் ஸ்டார் காத்திருக்கின்றார்.

குறிப்பு 1: அதற்காக நீங்கள் அந்த வாய்ப்பை விட்டு விடாதீர்கள். "துக்ளக்"கில் தொடர் எழுத விண்ணப்பம் போட்டு வையுங்கள். எதிர்கால முதல்வர் என்னா சும்மாவா? குறிப்பு2: விஜயகாந்த், கார்த்திக், திருமா, விஜய ராஜேந்தர் போன்றவர்களுக்கு "இட்டாலி வடை" யாலான தேர்தல் ஆலோசனை...

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

இட்டலி வடைக்கும், உங்களுக்கும் என்ன தொடர்பு

ரவுசு said...

வாங்க ஞானசேகரன்..
அவரு ஆசியாக் கண்டம் நாமா ஐரோப்பாக் கண்டமாக்கும்...என்ன தொடர்பிருக்கும்.. ஊகிச்சுக்கொள்ளுங்க..

லோகு said...

அப்படினா ராமசாமி எப்ப முதல்வர் ஆவார்?

ரவுசு said...

//லோகு said...

அப்படினா ராமசாமி எப்ப முதல்வர் ஆவார்?//

என்னா சார் தமிழ்நாட்டில் தானா நீங்க இருக்கீங்க... அ.தி.மு.க ஆட்சியில் அவர் தானே "நிழல்" முதல்வராய் இருந்தார்...

நிழலாயிருந்தால் என்ன? நிஜமாய் இருந்தால் என்ன?

முதல்வர் ..முதல்வர் தானே..

இன்னுமொரு முறை "நிழலாய்" வர முயல்கின்றார்.

நம்மாள் தான் வாயே திரக்க மாட்டேன்கிறார்.

"சூப்பர்..சூப்பர்.." என்கிறீங்களா?

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil