ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 5, 2009


பா.ஜ.க விற்கு வாக்களியுங்கள் - ரஜனி


ரஜனி காவியுடன்?


வரும் தேர்தலில் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க உறுதிமொழி அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க தமிழகத்தில் ரஜனி ரசிகர் மன்றம் முடிவு செய்துள்ளது.
அனைத்து மாவட்ட ரசிகர்களுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை அடிப்படையாக வைத்து அந்தந்த தொகுதிகளில் பிடித்த வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ள வாலாஜா, காவேரிப்பாக்கம், ராணிப்பேட்டை பகுதி ரஜனி ரசிகர் மன்றத்தினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு அளிக்கவும் அங்கு அமைதி ஏற்படவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கும் தேசிய கட்சிக்கும் அத்தோடு கூட்டணி அமைக்கும் மாநிலக் கட்சிக்கும் ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

இன்றை தேர்தல் கூட்டணிக்கட்சியில் தமிழகத்திலும் மத்தியிலும் போட்டியிடும் கட்சி பா.ஜ.க. மத்தியில் ஆட்சியமைக்கும் வல்லமையும் கொண்டது.


"பாஜகவால் மட்டுமே இலங்கைத் தமிழர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களும் நம்புகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகளில் பெரும்பாலும் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை.எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையில் அக்கறை கொண்டவர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்புகிறோம்." - இது பா.ஜ.க இல.கணேசன்.

எல்லாவிதத்திலும் ரஜனி ரசிகர் மன்றத்தினரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வது பா.ஜ.க மட்டுமே.தற்போது ரஜனி வாய் திறந்துள்ளார். தனது ரசிகர் மன்றங்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் யாருக்கு வேண்டுமானலும் வாக்களிக்கலாம். இது உங்கள் உரிமை' என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

அப்போது ரஜனி பா.ஜ.க விற்கு வாக்களிக்கும் படி சொல்லாமல் சொல்லுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil