ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 4, 2009


விமானத்தில் ஜெ. ஸ்கூட்டரில் மு.க


தமிழகத்தில் வாக்குப்பதிவு மே 13ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

வழக்கமாக செல்வது போல வேனில் செல்லாமல் இந்த முறை அவர் விமானத்தில்(அந்தளவிற்கு ஜால்ராக்களின் கூட்டம் அதிகரித்திருப்பதுவும் ஒரு காரணம் என்று அறியப்படுகின்றது) சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு காரணம் கருதியும், விரைவாக பிரச்சாரத்தில் ஈடுபடவும் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


அதே நேரம் மாறுதலுக்காக கலைஞர் மு.க ஸ்கூட்டரில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அவரது முதுமையைக் காரணம் காட்டி குடும்பத்தில் எழுகின்ற
சொத்துப்பிரச்சினையை சமாளிக்கவும் விலகிச் செல்லும் கழகக் கண்மணிகளுடன் கைகோர்த்துக் கொள்ளவும் அவர் இந்த முடிவெடுத்துள்ளதாக அறிவாலயத்துடன் நெருக்கமான வட்டாரங்கள் நமது காதில் கிசுகிசுத்தன.

அவருக்குப் பின்னால் கழகத்திற்கு ஏற்படப்போகும் கதி பற்றி அன்னை சோனியா இப்போதே வீணாகக் கவலைப்படுவதாக தொங்கபாலு அறிவித்ததைத்தொடர்ந்து அடுத்த மாநிலங்களவைத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடி முழு ஆட்சிக்காலமும் ஆட்சிபுரியும் அளவிற்கு தான் இன்னும் சுகதேகியாக இருப்பதை நிரூபிப்பதுவும் நோக்கம் என்று அறியப்படுகின்றது.

இருவரும் புறப்பட்டு விட்டார்கள். இனிப் பதுங்கப் போவது மக்கள் தான்.
No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil