ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 11, 2009


ஒரு ஜட்டியும் ஒரு கிஸ்ஸும்


" சிங்கம் போல.. அட சிங்கம் போல.."
பறவை முனியம்மா ஸ்டைலில் பாடத்தான் ஆசையாக இருக்கின்றது. கலைஞரைப் பார்த்துப் பார்த்து அப்படித்தான் மனது வியந்து கொண்டிருந்தது. கலைஞரின் பேச்சையும் எழுத்தையும் பார்க்காத படிக்காத வியக்காத தமிழ் மனதும் ஒரு மனதோ என்று ஒரு காலத்தில் வியந்தவர்கள் தான் நாமெல்லோரும்.

எம் .ஜி.ஆர் சிவாஜி இவர்களின் நடிப்பையும் மீறி கலைஞரின் வசனங்களும் கவிஞரின் (கண்ணதாசன்) பாடல்களும் எம் இதயத்தில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தது ஒரு பொற்காலம்.

கவிஞரின் பாடல்களை க்கேட்டு வியந்ததைப் போல கலைஞரின் பேச்சைக்கேட்டு இறுமாந்திருந்தது ஒரு காலம். அது அரசியலில் புயலாகி புது வாழ்வு சரித்திரம் வரும் என்ற நம்பிக்கையில் ..கலைஞரை அரசு இருத்தி கிரீடம் சூடி... அடடா. அற்புதமான காலங்கள். தமிழ் உணர்வுள்ள தலைவனாய் ..உலகத் தமிழரின் ஒப்பற்ற தலைவனாய் ... கழகக் கண்மணிகளின் இதயத் தாமரையில் வீற்றிருந்த காலங்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நம்பியதைப் போல ...கண்ட மாற்றத்தை நம்ப முடியாதும் இருக்கின்றது.

கழகக் கண்மணிகளின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவைத்த தலைவன் இன்று இதயத்தில் செந்நீரை வரவழைக்கும் மாற்றம் நம்ப முடியாதிருக்கின்றது.

உலகத்தமிழரின் தலைவன் தன் கடமையை எப்படி மறந்தான்?

"மயிர் நீப்பின் வாழாக் கவரி மான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்."

சொல்லித் தந்தானே நம் தலைவன். என்னாச்சு இவனுக்கு இன்று.

கழகக் கண்ணின் மணிகள் இன்று "எப்போது செத்துப் போவாய் " என்று கேட்டுப் பதிவு போடும் நிலை எமக்கெல்லாம் அதிர்ச்சியாகத் தான் இருக்கின்றது.

எப்படி தலைவா? உன் கடமையை மறந்தாய்?

காதலை மறுத்த முத்தலீப்புக்கு ஒரு பிங் ஜட்டி...
கடமையை மறந்த நம் தலைவனுக்கு ஒரு கறுப்பு சிவப்பு ஜட்டி?

அத்துடன் ஒரு கிஸ் ... அவன் எழுதிய தமிழுக்கு...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil