ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Sunday, April 12, 2009
போட்டியே இல்லாமல் ஜெயிப்பார் கலைஞர்
என்னைச் சிறை வைத்து விட்டார் கலைஞர்
போற போக்கைப் பார்த்தால் அப்படித்தான் நடக்கும் போலிருக்கின்றது. தப்பித் தவறியும் யாரும் ஈழத்தமிழர் பற்றியோ புலிகள் பற்றியோ கருத்துச் சொல்ல முடியாது
போலிருக்கின்றது.
தேர்தல் மேடையைச் சுற்றி ஒலிப்பதிவுக் கருவியுடன் போலிசார் நிற்கின்றார்கள். பேச்சாளர்களின் பேச்சுக்கள் இரண்டு பிரிவாக பகுக்கப் படுகின்றது.
இந்திய இறையாண்மைக்கு எதிரானதா? புலிகளுக்கு ஆதரவானதா? இரண்டில் ஒன்றில் எப்படியும் மாட்டி விட்டு விடுவார்கள். இன்று அந்தக் கத்தி அரசியலில் எந்தத் தாக்கத்தையும் உருவாக்க முடியாத விஜய.டி.ராஜேந்தர் மன்சூரலிகான் வகையறாக்களையும் விட்டு வைக்க வில்லை.
சீமான் , கொளத்தூர் மணி , வைகோ என்று தொடரும் கைதுகள் இப்போது இவர்களையும் விட்டு வைக்கவில்லை. இது இப்படியே தொடருமானால் கலைஞரை எதிர்க்க ஆள் இல்லாது போய் விடும்.
ஆட்களேயில்லாது விட்டால் போட்டியாவது ஒன்றாவது?
குறிப்பு: கலைஞர் நன்றாகப் பயந்து போயிருப்பது தெரிகின்றது. அவரைப் பொறுத்தளவில் போகுங் காலத்தில் பதவியில்லாது போவது மிகப்பெரிய கொடுமை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment