ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Sunday, April 5, 2009
காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியை வீட்டுக்கு அனுப்புங்கள்:பழ. நெடுமாறன்
மக்களவைத் தேர்தலில் தமிழர் கடமை என்ற கலந்தாய்வில் இவ்வாறான தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன.
"இலங்கை அரசுக்குத் தேவையான ஆயுத, நிதியுதவி, ராணுவத் தொழில்நுட்ப உதவி போன்றவற்றை தொடர்ந்து அளித்து, இந்தப் போரை பின்னின்று நடத்தும் இந்திய அரசும், இதனைத் தடுத்து நிறுத்த தமிழக அரசும் எந்தவிதமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள, காங்கிரஸ்- திமுக கூட்டணியை தோற்கடிப்பதன் மூலமே ஈழத் தமிழர்களின் நலன்கள் மட்டுமல்லாமல், தமிழக மக்களின் நலன்களையும் நம்மால் பாதுகாக்க முடியும் என்பதால் பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
ஈழத் தமிழர் பிரச்னையை தீர்க்க தமிழீழத் தனிநாடு அமைவது ஒன்றே வழி என்பதை ஏற்றல், விடுதலைப்புலிகளின் மேல் உள்ள தடையை நீக்க வலியுறுத்தல், தமிழ் ஈழப் போராட்டத்துக்கு அங்கீகாரம் அளிக்குமாறு இந்திய அரசை வலியுறுத்தல் ஆகிய கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, வெற்றி பெற வைப்பது "
அத்துடன் கருணாநிதி சோனியா மன்மோகன் சிங் ஆகியோர் மீது கண்டனத்தீர்மானமும் நிறைவேறியது.தமிழக முதல்வர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கடிதம் எழுதுகிறார்கள். அவர்கள் கடிதம் எழுத வேண்டியது கருணாநிதிக்கு அல்ல, இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்குத்தான். எத்தனை காலம்தான் நம்மை ஏமாற்றுவார்கள்.
ஆக காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி அதிக பின்னடைவை அடையும் என்று எதிர்பார்க்களாமா?
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அடுத்தவனை கேட்பது இருக்கட்டும்....வீரமணி?.. சொக்கத்தஙம் சோநியாவுக்கும்,தூயவர் பிரனப்புக்கும் காவடி தூக்குவதா?
வீரமணி படித்தது இடாலியிலா?
//ttpian said...
அடுத்தவனை கேட்பது இருக்கட்டும்....வீரமணி?.. சொக்கத்தஙம் சோநியாவுக்கும்,தூயவர் பிரனப்புக்கும் காவடி தூக்குவதா?
வீரமணி படித்தது இடாலியிலா?//
வாருங்கள்...,
எல்லோரும் தம் மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது..
நான் தேர்தலில்..காங்கிரசை வீழ்த்துவது இருக்கட்டும்:வேறு என்ன செய்யலாம்?
நெஞ்சு கொதிக்கிரது
Post a Comment