கடந்த சனிக்கிழமை புதுக்குடியிருப்பில் சுற்றி வளைக்கப்பட்ட பொது மக்களின் மீதும் புலிப்போராளிகள் மீதும் விஷவாயு பிரயோகிக்கப்பட்ட இராணுவ மிலேச்சாதிகாரம் இடம் பெற்றுள்ளது. சிங்கள இராணுவத்திற்கு துணையாக வழி காட்டும் இந்திய
ஆவடியிலிருந்து அழிவிற்கு
இராணுவத்தினாலேயே இவ்வகைக்குண்டுகள் ஏவப்பட்டன என்ற பலத்த குற்றச்சாட்டும் இருக்கின்றது.
இந்திய இராணுவம் வீசியதா? இலங்கை இராணுவம் வீசியதா? என்ற குற்றச்சாட்டுகளின் ஆழத்தினுள் செல்வதற்கு முன்னர் இதை யார் செய்திருந்தாலும் கண்டிக்கப்படக் கூடியவர்களே. இத்தகைய உயிர் கொல்லிகளை போரினில் பாவிப்பதில்லை என்ற உடன் பாட்டிற்கு உலக நாடுகள் அனைத்தும் உடன் பட்டிருந்தன. நிலமை அப்படியிருக்கையில் இதைப் பாவித்தவர்கள் யாராயிருந்தாலும் போர்க்குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.
முதலாம் உலக மகாயுத்த காலத்திலேயே இத்தகைய உடன் பாட்டினை ஹிட்லரின் ஜேர்மனியப் படை வீரர்கள் மீறியிருந்தனர்.
போருக்கு சைக்கிளில் சென்ற ஜெர்மன் படை வீரர்களின்
பின்னால் குதிரை வண்டிகளில் விஷப் புகை நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் வரும். எதிரிப்படைகளை நெருங்கியதும், சிலிண்டர்களின் வாய் உடைக்கப்படும். அவற்றிலிருந்து விஷ வாயு வெளியேறும். அதைச் சுவாசிக்கும் எதிரிப் படையினர் மயங்கி விழுந்து மரணம் அடைவார்கள்.
போரில் விஷப்புகையைப் பயன்படுத்தக்கூடாது என்று எல்லா நாடுகளும் ஒப்புக் கொண்டிருந்தன. ஆனாலும் அதை மீறி ஜெர்மனி விஷப் புகையை பயன்படுத்தியது.
இந்த கசப்பானதும் கவலையானதுமான சாகஸமானது பின் வந்த காலத்தில் ரஷ்ய ஜனாதிபதியாகவிருந்த புட்டீனால் மாஸ்கோ நாடக அரங்கில் பயணக் கைதிகளைப்பிடித்து வைத்திருந்த செச்னிய போராளிகள் மீது பிரயோகிக்கப்பட்டது.
இத்தகைய துயரங்களைப் பொறுக்க முடியாத சர்வதேச சமூகம் இப்போது தமிழன் மீது இத்தகைய கொடுமை நிகழும் வேளை ஏன் இந்த மெளனமொழியைப் பேசுகின்றது.
அப்போதெல்லாம் கண்டனங்களை வாரியிறைத்த சர்வதேச சமூகமானது இன்று வாய் மூடி மெளனமாக இருப்பது ஏன்? சிங்கள ஏகாதிபத்தியத்தின் அரச பயங்கரவாதத்தை முண்டு கொடுத்து தட்டிக்கொடுப்பது தானா உலக ஜனநாயகம். ஒரே மூச்சில் 420 உயிர்களைப் பலிகொண்ட இதே வகை விஷ எரிவாயுத் தாக்குதலை கண்டு கொள்ளாது இருப்பதன் காரணம் என்ன?
இவ்வகைத்தாக்குதலில் இந்தியாவிற்கு எவ்வகைப் பங்களிப்பும் இல்லையென்றால் தார்மீக ரீதியிலேனும் கண்டனம் செய்யும் கடமைப்பாட்டிலிருந்து எவ்வாறு விலகி இருக்கின்றது. இந்தியாவின் இவ்வகைக் கள்ள மெளனம் அதன் மேல் வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக இருக்கின்றது.
தமிழ் நாட்டினூடாக ரயில் வண்டிகளில் இராணுவத்தளபாடங்கள் அனுப்பப்பட்டமையும் சிங்கள இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கியமையும் அம்பலப் படுத்தப்பட்டு எதிர்ப்புப் போராட்டங்களும் கிளம்பியிருந்தன.
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆவடி இராணுவ உற்பத்தி ச்சாலையில் உருவாக்கப்பட்ட 'அர்ஜூன்"ரக இராணுவத்தாங்கிகள் இத்தாக்குதலில் பயன் படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகின்றது. அர்ஜூன் ரக ராங்கிகளின் தொழிற்பாட்டுப் பாங்கு அச்சந்தேகத்திற்கு ஏதுவாகின்றது.
போர்க்களத்தில் இந்திய ராணுவத்தின் முதன்மை போர் ஊர்தியான அர்ஜூன் ரக தாங்கிகள் எளிதில் நகரும் தன்மை கொண்டது. 58 டன் எடை உள்ளது. கரடு முரடான பாதையில் மணிக்கு 40 கி.மீ. வேகத்திலும், சமதளத்தில் 70 கி.மீ. வேகத்திலும் விரைவாக ஓடும் திறன்படைத்தது. பாலைவனத்திலும் செல்லும். தண்ணீரில் சென்றும் எதிரிகளை தாக்கும். 2.4 மீட்டர் ஆழம் வரை தண்ணீரில் இது நீந்திச் செல்லும்.
இதில் இருந்து வெளியேறும் குண்டுகள் மின்னல் வேகத்தில் நீண்டதூரம் சென்று தாக்கும் சக்தி படைத்தவையாகும். மற்ற பீரங்கி வண்டிகளில் முதல் மற்றும் 2_வது குண்டுகள் சரியாக வெடிக்காது. 3_வது குண்டு தான் திறமையாக வெடிக்கும். ஆனால் அர்ஜூன் ரக தாங்கி அப்படி அல்ல. முதல் குண்டே இலக்கை குறி வைத்து வெற்றிகரமாக தாக்கும் திறன் படைத்தது. இந்த தாங்கியை எளிதில் தாக்க முடியாது. மிகுந்த பாதுகாப்புக்கு உகந்தது.
இந்த தாங்கிக்குள் போர் வீரர்கள் வசதியாக அமர்ந்து கொள்ள தாராள இடவசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற தாங்கிகளில் தூசு படிந்தால் போதும். அது செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் அர்ஜூன் தாங்கி இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. புழுதிப்புயலிலும் சீறிப்பாயும் ஆற்றல் படைத்தது. தூசியும் இதனுள் உள்ளே புகமுடியாது. எந்த கோணத்திலும் இது சுட வல்லது. இது வெப்ப வலய மணல் பிரதேசமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளில் திறமையுடன் செயலாற்றக் கூடியது.
நகரும் போதும் சுடும் தன்மை கொண்டது. எதிரில் வரும் எதிரிகளின் தாங்கிகளை தகர்த்து பொடிப் பொடியாக்கும் ஆற்றல் படைத்தது. இரவும் பகலும் செயல்படும். கம்ப்யூட்டர் மூலம் ஒருங்கிணைத்து தாக்குதல் நடத்துவதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரவு, பகல் எந்நேரமும் எந்தவொரு சீதோஷண நிலையிலும் அர்ஜூன் தாங்கி திறமையாக செயல்படும். மிகவும் பள்ளத்தாக்கான பகுதியில் இருந்தாலும் இதில் பொருத்தப்பட்டுள்ள தகவல் தொடர்பு கருவிகள் மிகவும் நுட்பமாக கேட்கும் திறன் படைத்தவையாகும்.
இதில் பொருத்தப்பட்டுள்ள பீரங்கி உலகிலேயே மிகச் சிறந்தது. இது உயர்திறன் தாக்குதல் நடத்தும் திறன் படைத்தது. வெளிப்புற வெப்பம், வாகனத்தில் வெப்பம் எதுவானாலும் கவச வாகனத்துக்குள் வெப்பம் உயராது. வாகனம் முழுமையும் கம்ப்யூட்டரில் இயங்கும் வசதி கொண்டது.
ஒருங்கிணைந்து சுடப்படுவதை கண்டுபிடித்தல், எதிரிகளின் தாக்குதலை முறியடித்தல், அணு ஆயுத தாக்குதல், விஷ வாயு தாக்குதல் மற்றும் ரசாயன குண்டுகள் தாக்குதலையும் தடுத்து நிறுத்தும் வசதிகளும் இதில் உள்ளன. அதே நேரம் விஷ வாயு இரசாயனத் தாக்குதலின் தாக்கத்திலிருந்தும் உள்ளிருப்பவர்களைப் பாதுகாக்கும் திறனும் கொண்டது.
சனிக்கிழமை இடம் பெற்ற யுத்தத்தில் புலிகளின் ஆவேசத்தாக்குதலில் சிங்கள இராணுவத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை ஈடு செய்ய அவசர அவசரமாக இந்திய இராணுவ உயர் அதிகாரிகளால் இந்த விஷ எரி வாயுத் தாக்குதல் முடிவு எடுக்கப்பட்டது என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதனால் முன்னணியில் போராடிக்கொண்டிருந்த சிங்கள இந்தியப் படை வீரர்களும் விலகிச் செல்லும் அவகாசம் இல்லாது இறந்து வீழ்ந்ததாக அச் செய்திகள் அம்பலப்படுத்தின.
பிரயோகிக்கப்பட்ட வாயுக்களில், அமெரிக்காவால் 1960களில் உருவாக்கப்பட்ட 48 மணித்தியாலம் ஸ்தம்பிதமடைய செய்யக்கூடிய இரசாயன நஞ்சான 3 BZ உள்ளடங்கியிருக்கலாம். இன்னொரு வகை சாத்தியப்பாடான உடன் தாக்கத்தைக் கொடுக்கக் கூடிய சரீன்(Sarin) வகைப்பட்ட வாயுவாகவும் இருக்கலாம்.. இரண்டுவகையும் சர்வதேச உடன்படிக்கைகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களாகும். அல்லது வேறு வகைப்பட்ட எரிவாயுவாகவும் இருக்கலாம்.
இத்தனை நாட்களாகியும் உலக நாடுகளின் பாராமுகம் அங்கு சுற்றி வளைக்கப்பட்டிருக்கும் மக்களின் நிச்சயமற்ற எதிர்காலம் பற்றிய அச்சத்தினை உருவாக்குகின்றது. அவ்வாறான அங்கு சுற்றி வளைக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும் ஒரு துயரம் நிகழ்வதற்கிடையில் உலகில் வாழும் மனிதாபிமானமுள்ள மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு உலக நாடுகளின் கவனத்தைத் தட்டியெழுப்ப வேண்டும்.
இச்செயற்பாட்டில் தமிழக புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடு அளப்பரியது. இச்சந்தர்ப்பத்தை தவறவிடும் அனைவரும் வரலாற்றினால் குற்றஞ் சுமத்தப்படும் ஈனர்களாயாவோம்.
ஒன்று படுவோம். நம் உறவுகளைக் காப்போம்.
No comments:
Post a Comment