ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Friday, April 10, 2009
டைனொசாரும் காட்டெருமையும்
டைனொசார் பற்றி அறிந்திருக்கின்றோம். மிகப் பெரிய வஸ்து அது. மூளை மிகச் சின்னதாக இருந்திருக்க வேண்டும். உடலோடு ஒப்பிடும் போது தலை மிகச்சிறியது என்பதால் என் அனுமானம். எது எப்படியோ .. "த லாஸ்ட்வேர்ல்ட்" "டைனொசார்' போன்ற திரைப்படங்களில் அதன் பிரமாண்டத்தைப் பார்த்திருப்பீர்கள்.
230மில்லியன் ஆண்டுகள் முன் தொடங்கி 160 மில்லியன் ஆண்டுகள் பூமியில் வாழ்ந்திருக்கின்றன. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற "பெரும் புழுதியில்" துடைத்தெறியப்பட்டு விட்டன. இன்னும் பெரும் டைனொசார் கள் உலகத்தில் வாழ்கின்றன என்று சொல்கின்றீர்களா?
மனித உருவத்தில் டைனொசார் மட்டுமல்ல பல மிருகங்கள் வாழ்கின்றன.
காட்டெருமை எப்போது தோன்றியது என்பதல்ல இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. டைனொசாரை விட காட்டெருமைதான் எனக்குப் பிடிக்கும். ஏனெனில் டைனொசாரின் இறைச்சியை நான் ருசி பார்த்ததில்லை.
"உயிர்"மை "குருதி" மையாக இரண்டு எழுத்தர்களுக்கிடையில் "போர்" நடக்கப் போகின்றதாம்.
"ஏன்யா இந்தக் கொலை வெறி" என்று வடிவேல் பாணியில் கேட்கத் தோன்றுகின்றது.
குறிப்பு: கொலைக் குறிப்பெழுதுபவர்கள் எல்லாம் எழுத்தர்கள் தான் சித்திர குப்தனைப் போல .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment