ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 25, 2009


அம்மாவுக்கு வேர்த்திடிச்சு


"ஈழத்தமிழர்னு யாருங்கிடையாது.. இலங்கைத்தமிழர்னுதான் சொல்லவேண்டும் " என்று சில வாரங்களுக்கு முன் குதியோகுதின்னு குதிச்சவங்க இப்போ அந்தர் பல்டி அடிச்சு "தனி ஈழம் தான் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வுன்னு " ஆவேசப்படுறாங்கன்னா... மக்களை இவங்க படுமோசமான மந்தைகளா நெனைக்கிராங்கன்னுதானே அர்த்தம். அதுவும் மறதி மிகுந்த எல்லாத்துக்கும் தலையை ஆட்டும் செம்மறியாட்டு மந்தைன்னுதானே நெனைக்கிராங்க...

//இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டு வந்திருக்கிறார் ’வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்.

அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.

தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு.

அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்று சொல்லிவந்தேன்.

ஆனால், இப்போது ஆணித்தரமாக சொல்கிறேன் தனி ஈழம்தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு’’ என்று ஆவேசமாக பேசினார்.//-ஜெயலலிதா


இது அம்மா விட்ட அஸ்திரம் . முனை மழுங்கியது ...... துருப்பிடித்தது ... எல்லாச் சங்கதிகளும் விளங்கியே இருக்கின்றது.ஆனாலும் என்ன செய்வது?

இப்போ ஈழத்தமிழர் பிரச்சினையில அம்மாவுக்கு சப்போட் ஐயாவுக்கு ஆப்பு என்பதல்ல நிலமை... இது காங்கிரஸுக்கு வைக்கிற வேட்டு என்பதுதான் உண்மை.

காங்கிரஸோடு கூட்டு வைத்ததால் ஐயாவுக்கும் அட்டமத்து சனி பிடித்திருக்கின்றது என்பதுவும் ... ஐயாவுக்கு அட்டமத்து சனி நன்றாகப் பிடிக்க வேண்டும் என்றால் அம்மா வெல்லவேண்டுமென்பது இரு கட்சி கூட்டணிக்குள் தத்தளிக்கும் தமிழகத்தின் தலை விதி.

தமிழக அரசியல் நெலமையால் உண்மையான தமிழ் ஆதரவுக்கட்சிகளே பிளவு பட்டிருக்கின்றன. தமிழ் ஆதரவு கட்சிகள் வெல்லவேண்டும் என்பதற்கும் முன்னால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது முதல் உண்மை.


காங்கிரஸ்+தி.மு.க கூட்டணி தோற்கடிக்கப்பட்டால் அ.தி.மு.க கூட்டணி இயல்பாகவே வெற்றி பெறும். நெலமை இப்படியிருக்க அந்தர் பல்டி அடித்து
அம்மா இத்தனை தூரம் தரம் தாழ்ந்து போகத் தேவையில்லை என்பதை யாராவது அவருக்குச் சொல்லுங்களேன்.

இல்லை உண்மையாகவே மனம் மாறி விட்டேன் என்று அவர் உறுதியா நின்றால் இன்னும் இரண்டு வருடங்களில் தமிழகத்தில் அம்மா ஆட்சிதான்.

அட...அம்மாவுக்கு ஆட்சிக்களை ...மூக்கில வேர்த்திடிச்சு

குறிப்பு : இப்போதெல்லாம் விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதை நாங்க படிப்பதில்லை.


8 comments:

பதி said...

//இப்போதெல்லாம் விக்கிரமாதித்தனும் வேதாளமும் கதை நாங்க படிப்பதில்லை.//

தேவையுமில்லை....

ஏனெனில், இபோழுது இருக்கும் நிலையை விட பாதிக்கப்பட்ட மக்கள் மோசமான நிலைக்கு போக முடியாது..

ஏனெனில், கொலைகார காங்கிரஸ் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பது அவர்கள் இப்பொழுது ஈழத்தில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அயோக்கியத்தனத்திற்குத் தான்...

ஆகையால், இன்றைய தேவை

//தமிழ் ஆதரவு கட்சிகள் வெல்லவேண்டும் என்பதற்கும் முன்னால் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட வேண்டுமென்பது முதல் உண்மை.//

அவ்வளவே !!!!!!!

இட்டாலி வடை said...

வாருங்கள் பதி!

காங்கிரஸைத் தோற்கடிப்பதில் இரண்டு விடயங்கள் இருக்கின்றது.
1) தொடர்ந்தும் சிங்கள அரசிற்கு வழங்கப்படும் இராணுவ உதவிகளைத் துண்டிக்க உதவக்கூடும்.
2)மாற்று அரசு உருவாவதன் மூலம் ஈழதமிழர் தொடர்பான அனுகூலமான கொள்கைகள் உருவாகக் கூடும்.

விரிசல் விட்ட இந்திய ஈழத்தமிழர் உறவை நேர் செய்யக்கூடும் என்ற நப்பாசைதான்.

ரங்குடு said...

அடப் போங்கய்யா.. இங்கே தமிழ் நாட்டுத் தமிழன் பொழைப்பே கழகங்களின் கையில் சிக்கி நாறுது.

தமிழர்களின் வாழ்க்கை நிலையில் இலங்கையும், இந்தியாவும் ஒன்றுதான். வித்தியாசம் என்ன என்றால் இங்கே புலிகள் போன்ற தீவிர வாதிகள் இல்லை. இராணுவம் மக்களுக்கு எதிராக இல்லை.

மற்றபடி ரெண்டும் ஒண்ணு தான்.

பாலகிருஷ்ணா said...

ரங்குடு தாங்களின் கருத்து மிகச் சரியானதே....

மணி said...

கண்டிக்கிறேன்...

ஆனால் இந்தப் பிரச்சாரம் தீர்வல்ல•.பசி இளங்கோவன் தங்கபாலு போன்றோர் தோற்றால் ஈழத்திற்கு நல்லதும் இல்லை கெட்டதும் இல்லை... உணர்ச்சிவசப்பட்டு ஒரு லட்சத்தில் இரண்டு லட்சத்தில் தோற்க வைப்பதால் எந்த பயனும் இல்லை..

காங்கிரசாவது ஏமாத்துறான்... அதிமுக மே 16 க்கு அப்புறம் வேற மாதிர் பேசும்.


எனவே உயிர்வாழும் ஜனநாய உரிமைக்காகப் போராடும் ஈழ மக்களுக்கு ஆதரவாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை தமிழகம் புறக்கணிக்க வேண்டும். 0% ஓட்டுதான் பதிவாக வேண்டும்.

இதுக்க்உத்தான் ஒரு இஷ்யூ ஆகும் வலிமை உள்ளது

இட்டாலி வடை said...

வாங்க ரங்குடு!
//இராணுவம் மக்களுக்கு எதிராக இல்லை.//

ஒரு விதத்தில் நீங்கள் மேல் தான். உயிர் பயம் கிடையாது.

கழகங்களை விட்டால் வாழ்க்கையே இல்லையா?மாத்தி யோசிக்கணும் ...

இட்டாலி வடை said...

//ரங்குடு தாங்களின் கருத்து மிகச் சரியானதே... வாங்க பாலகிருஷ்ணன்!

உங்களுக்கும் மேலுள்ளதே ..கழகங்களுக்கு முதல் ஒரு காலம் இருந்ததைப்போல ..கழகங்களுக்குப்பின்னும் அரசியலும் தமிழ்நாடும் இருக்கும்...

இட்டாலி வடை said...

வாங்க தளபதி !

அ.தி.மு.க விற்கும் காங்கிரஸுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கின்றது. காங்கிரஷால் ஈழத்திற்கு இராணுவத்தை அனுப்பமுடியும். அ.தி.மு.க வால் முடியாது.

அதனால் தான் காங்கிரஸ் வேண்டாமென்கின்றேன்... அ.தி.மு.க எப்போதும் இப்படி இருக்காது..இருக்க வேண்டியதில்லை. ஸோ..ஒரு நம்பிக்கை இருக்கு ..பார்க்கலாம்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil