ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, April 9, 2009


சுடுகாட்டுக்கு வழி - கலைஞர்


முதுகுவலிக் கவிதை எழுதுவதில் மட்டுமல்ல "கதை" விடுவதிலும் கலைஞருக்கு நிகர் அவரே தான். தான் செய்யும் டக்காலடி தனங்களை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளமாட்டார்கள் என்பதில் தான் எத்தனை அபார நம்பிக்கை. மனோகராவில் எழுதிக்கிழித்த பேனா இன்று மக்கள் மனங்களைக் கிழித்து எறிகின்றது.

கழகக் கண்மணிகளே! கண்மணிகளே ! என்று கண்ணின் மணிகளைத் தோண்டி எடுக்கும் ஒரு குரூர அரசியல். தேனொழுகப் பாலொழுக, நோகாது குருதிக்குளாய்களை உறிஞ்சி விடும் சாணக்கியம்.

" இலங்கையில் இப்போது நிகழும் சூழ்நிலைகளைப் பார்க்கும்போது இரண்டுவிதமான முடிவுகள்தான் எடுக்க முடியும்.

ஒன்று அங்கு போர் நிறுத்தம் செய்வது.

மற்றொன்று போரின் முடிவு நமக்குத் தோல்வியாக இருந்தால் சட்டப்பேரவையில் ஜெயலலிதா தீர்மானம் போட்டதைப்போல (நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் ஜெயலலிதாவிற்காகத் தான் -ஜெயலலிதாவால் தான் இவ்வாறான மனமொப்பாத செயலை செய்ய வேண்டியிருக்கின்றது ) பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து தண்டனை கொடுக்க வேண்டியது. "

இன்று தான் முடிவு எடுக்க கலைஞருக்கு நாளும் கோளும் கூடி வந்திருக்கின்றது.
இது வரை தமிழ் கொதித்துப் போக மனம் குருதி கொட்ட உடல் எரித்து உணர்வு பதைபதைக்க பேரணி சங்கிலி (தமிழகமே ஒன்றிணைந்து) என்று நடந்தது எல்லாம் ஆபிரிக்காக் கண்டத்தின் அடுத்த தெருவில் இருக்கும் யாரோ (தமிழருக்காக இல்லீங்க) எவருக்கோ என்பதை சத்தியமாக நம்புங்கள்.

திசை மாறிப்போகும் தேர்தல் களத்தில் கூட்டணியைக் (ஓட்டைப் படகு என்று தெரிந்தும்) கரைசேர்க்க (சேடம் இழுக்கும் வேளையிலும் காப்பாற்றத் துடிக்கும் டாக்டர்) ஈழ ஆதரவு கோணல்களை ( ஒவ்வொரு திசையில் பிய்த்துக்கொண்டிருக்கும் ஈழ ஆதரவு அமைப்புக்கள்) விசை நீக்க எத்தனை நாடகங்கள்(கட்ட பொம்மன் தோத்தான்.. போங்க..) . காங்கிரஸின் கையை விடாது தமிழர் அனைவரையும் அழித்து முடிக்கும் சபதம் (மனோகரா..) எடுத்திருக்கின்றார்.

இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தி.மு.க வின் ஆஸ்தான(?) பாடல்...

எடுத்த சபதம் முடிப்பேன் ..இது "கை" மேல் ஆணை ..... இரத்தக் "கை" மேல் ஆணை...
வழி சொல்லுங்கள் வழி சொல்லுங்கள் (சுடு காட்டுக்கா.... என்றெல்லாம் குதர்க்கமாகச் சிந்தித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல) என்று ஆணையிட்டிருக்கின்றார்களாம் மக்கள் (அவர் தோளில் இருக்கும் துண்டா அடிக்கடி மாற்றிப் போட்டுக்கொள்ள).

தமிழகத்தில் இருந்து முத்துக்குமார் முதலான தியாகச் செம்மல்களும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழ் மக்களும் நீங்கள் காட்டிய வழியில்(மக்களுக்கு வழி காட்டுவது தானே தலைவர் வேலைஎன்கிறீங்க..புல்லரிக்கிறது போங்கள் ) தானே எரிந்து புதைந்து மண்ணாகிப் போய்க்கொண்டிருக்கின்றார்கள்.

பதவி ஆசை என்ற பல்லாக்கில் (இதற்கும் நாலு கால்) நீங்கள் சுற்றி வர கூட இருக்கும் தோழர்களையும் தோள் கொடுக்கும் கண்மணிகளையும் பாடையில் (இதற்கும் நாலு கால்... என்ன பொருத்தம்) ஏத்தி வழி அனுப்புவதில் வல்லவராயிற்றே . (அதிலே போனால் என்ன? இதிலே போனால் என்ன? நாலு பேர் தானே வேண்டும்...)

(சுரண்டும்) கையை விட மாட்டேன் , காங்கிரஸ் (களவாணி) கையை விடமாட்டேன் என்று புலம்பிப் புலம்பியே உங்களை நம்பி வந்த தமிழ் உலகை நட்டாற்றில் (நாதியில்லா மனிதர்கள் சேருமிடம்) விட்ட பெரும் பண்பாளர் (?)ஆச்சே.

"தோன்றிற்(சாகிலும்) புகழுடன் தோன்றுக (சாகுக) -அக்தில்லால்
தோன்றலில் தோன்றாமை(சாகாமை அல்ல பிறவாமை) நன்று "

யார் நினை விருத்தாவிட்டாலும் நீங்கள் நினைவிருத்த வேண்டியது (வயசு போனால் ஞாபக மறதியும் வந்து தொலைக்கின்றது... அதனாலேயே அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது...) இது.

காட்டிக் கொடுப்பவர்களைத் தமிழுலகம் வாழ்த்திப் பாடுவதில்லை. காரி (வள்ளல் காரியைப்போல தாராளமாக) உமிழ்ந்து காலில்ப் ( பிஞ்ச செருப்புள்ள ) போட்டு மிதித்து விடும்.

திருக்குவளையில் ( ஊர் மானம் காத்தில போகுது.. யார்ர்யா அது )
இத்தகைய (--- நீங்களே போட்டு நிரப்பிக்கொள்ளுங்கள் ) ஒருவர் பிறந்தார் என்று நாளை சரித்திரத்தில் எட்டப்பன் (எங்க முன்னாடி இவனெல்லாம் ஒரு பிஸ்கோத்துப்பய ) பின்னால் உங்கள் பெயரும் (எப்படி.. உங்க கற்பனைக்கு) குறிக்கப் படும். பெரியார் அண்ணா நாமத்தின் பின்னால் தமிழகத்தின் இருண்ட பக்கங்கள் ( பவர் கட் பற்றி பிரஸ்தாபிக்கப் படவில்லை..) என்று குறி ஒன்று இடப்படும். தற்குறி (பிளாக் ஸீப்??) ஒன்று இக்காலத்தில் மனிதம் வதைத்தது என்று சரித்திரம் குறிக்கும்.

பிரபாகரனை கைது (மட்டுமா?) செய்யும் கனவு காணும் (ஸ்வீற் ட்ரீம்) சோனியாவின் மன அரிப்பைச் ( அரிப்பு அங்கெல்லாமா வரும்?) சொறிந்து கொடுக்கும் திராவிடச் செம்மலின் (கவிஜை தோத்தது போங்கள்) தோற்றுப்போன போரஸ் மன்னனாக மதிக்கும் குள்ள நரித்தனம் அங்கு குதறி எறியப்படும் குழந்தைகளும் குமரிகளும் பெண்டிரும் முதியவரும் மனிதர்கள் என்று அறியாதோ? (அதானே?)

உங்களை ஒரு தந்தையாய் கணவனாய் தாத்தாவாய் எண்ணிப்பார்க்கவும் உங்கள் இரத்தங்கள் (பொண்டாட்டி புள்ளீங்க ) படும் வெட்கமும் வேதனையும் அறியாது மஞ்சள் துண்டால் ( மஞ்சள் துண்டு கொடுப்பது என்பது இது தானோ?) முகம் துடைத்து மூடிக்கொள்வது தான் உங்கள் தேர்ந்த ராஜ (ராஜாத்தியம்மாளைச் யைச் சேர்த்த +கூட்டிக் கொண்ட) தந்திரமோ?

ஈழத் தமிழன் போராடுவது (சாவது) உங்களை நம்பியல்ல தங்கள் ஊழ் வினையை நம்பியே ... அது எவ்விதமாயினும் ஆகுக. எரிகின்ற நெருப்பில் எண்ணெய் (அதான் எண்ணெய் விலை ஏறிக்கிட்டே போகுது) ஊற்றும் உங்களைப்போன்றவர் தரும் வேதனை எரிக்கும் நெருப்பை விட க்கொடியது.... துயரமானது.

அது தான் வழி உங்களுக்குத் தெரியுமே, தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் ...

குறிப்பு: சிவப்பில் இருப்பது எல்லாம் எனது கோபத்தைக் குறைத்துக் கொள்ள போட்டது + மக்கள் கோபப்படாது ஆழ்ந்து சிந்திக்கவும்)

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil