ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 5, 2009


நடிகர் விஜய்க்கு ஆலோசனை ?


பிரச்சார பீரங்கி ?

தி.மு.க.,வில் நடிகர்கள் நெப்போலியன், தியாகு, சந்திரசேகர் என்று பலர் இருந்தாலும், இவர்களை விட இன்னும் அதிகமாக மக்களை கவரும் வகையிலான நடிகரை பிரசாரத்தில் ஈடுபடுத்த தி.மு.க., திட்டமிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்கு தெரிந்தவர் என்ற வரிசையில் நடிகர் விஜய் முன்னணியில் உள்ளார். அவரையே தி.மு.க.,வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தலாம் என்ற நினைப்பில், தி.மு.க., சார்பில் நடிகர் விஜயை அணுகியுள்ளனர். ஆனால், அப்போது விஜய் அவர்களிடம் எவ்விதமான உறுதியான ஒப்புதலையும் தரவில்லை. மாறாக யோசித்துச் சொல்கிறேன் என்று மட்டும் தன்னை நாடி வந்த தி.மு.க., பிரமுகர்களிடம் கூறியுள்ளார். ஆனால், தி.மு.க., தரப்பில் இருந்து நடிகர் விஜயை எப்படியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சென்னை வடபழனியில் உள்ள விஜய்க்கு சொந்தமான ஜெ.எஸ்., திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு ரசிகர் மன்ற மாவட்டத்தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில், ஆலோசனை செய்து தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதா? வேண்டாமா? என்ற முடிவை நடிகர் விஜய் எடுக்கவுள்ளார் என்று ரசிகர் மன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. - இது செய்தி


இனி நம்ம கதைக்கு வருவோம். சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் விட்ட "சவுண்டு" பத்திரிகைகள் நம்ம பதிவுலகம்னு ஏக அமர்க்களப்பட்டது. விஜய் படத்தால் நடித்து பெற்ற புகழை விட "சவுண்டால்" பெற்ற புகழ் ..அதிகம்.

இந்தச் செய்திக்கு வந்திருந்த ஒரு கருத்துத்தான் என்னைச் சிந்திக்கத் தூண்டியது.
விஜய்க்கும் அரசியலில் குதித்து பெரிய ஆளாகும் கனவு இருக்கலாம். அண்மையில் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்ததும் ரசிகர் மன்றக் கொடி வெளியிட்டதும் நீங்கள் அறிந்து கொண்டது தான்.

அரசியலில் இறங்க இன்னும் காலம் இருக்கின்றது என்பது "இட்டாலி வடை"யோட தனிப்பட்ட கருத்து. சொல்லியடிக்கிற கில்லி விளையாட்டுக்கணக்கா விஜய் அரசியலை நினைத்துக்கொண்டிருக்கின்றார்.
"சிம்மமாய்"உறுமிய விஜயகாந்தே புலிவாலைப்பிடிச்ச கணக்காய் தேய்ந்து துரும்பாகிக்கொண்டிருக்கின்றார்.

விஜய்க்கு உங்களால் முடிந்த ஆலோசனைகளை (காமடி கீமடி ஒண்ணும் பண்ணேல்லேங்க..) சொல்லுங்கள். எப்பாடு பட்டாவது அவர் கிட்ட சேர்த்துப்புடுவோம்.

2 comments:

senthil said...

சைலன்ஸ் ........செய்வோம்லா,,,,,,,,,,
எவ்வளவு பண்ணறாம் ,,,,,,,,,, இதை பண்ணமாட்டேமா????வணக்கமுண்ணா........... உங்க பேசி கா ...... அப்புச்சி கிட்ட பேசிக்கிறேன்.

SILENCE said...

BE CAREFUL...என்ன சொன்னே

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil