ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, April 24, 2009


ஒருசீட்டுக்கு 10 தலை


ஓரத்த நாட்டில் கன்னி மொழி பொழிஞ்சிருக்காக. தேர்தலுக்குப்பின் மதவாதிகளுடன் கை கோர்ப்பாராம் ஜெ என்று. என்ன ஒரு சூப்பர் ஆரூடம். சொல்லுங்கம்மா.. ஈழத்தமிழன் பற்றியும் ஆரூடம் சொல்லுங்க.

மதவாதிகள் ஒன்றும் தீண்டத்தகாதவர்கள் அல்லவே. உங்களுக்கு மதம் பிடிக்காமல் இருக்கலாம். அவர்களுக்கு "மதம்" பிடித்திருக்கின்றது.

ஆனால் உங்க அப்புச்சி வெறி பிடித்த பயங்கரவாதிகளுடன் அல்லவா கூட்டுச் சேர்ந்திருக்கார். காங்கிரஸ் +ராஜபக்ஸ பயங்கரவாதிகளைப் பற்றித் தான் சொல்கின்றேன். உலகமே அறிந்து வைத்திருக்கின்றது. இலங்கையில் இன்று நடந்து கொண்டிருக்கும் படுகொலைகளின் பின்னணியில் 1991 இல் இறந்து போன இராஜீவ்வின் ஆவியும் அதை நேசித்த சோனியாவும் அலைகின்றார்கள் என்று.

இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி கொடுத்தது ஒரு சாதனையா ? உங்க அப்பச்சிக்கு. ஒரு தொகுதி வெற்றிக்கு 10 தலை வீதம் பலி கொடுத்து விட்டாரே உங்க அப்பச்சி.

கடந்த ஜனவரியிலிருந்து கொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் 6432 பேர். காயம் பட்டவர்கள் 13946 பேர். மொத்தம் 19378 பேர். கிட்டத்தட்ட இருபதினாயிரம் பேர். (ஐ.நாடு சொல்லியிருக்குங்க)
விவசாயக் கடன் 7000 கோடி உங்க அப்புச்சி தள்ளுபடி செய்தது பற்றி சொல்லியிருக்கின்றீர்களே. இந்த 20000 உம் உங்கள் கணக்குப்படி தள்ளுபடி தானா? 23 தொகுதியில தி.மு.க கேட்கின்றது .தொகுதிக்கு எத்தனை தலை?

பழைய ஜனம்(பராசக்தி ஜனம்) தான் ஞாபக மறதியில் எதேதோ புலம்புகின்றது. இளைய தலைமுறை நீங்களுமா? சிங்க
ப்பூர் தமிழனுக்கும் சிலோன் தமிழனுக்கும் என்னங்க வித்தியாசம். சிங்கப்பூர் தமிழனைக் கட்டிக்கிடலாம். சிலோன் தமிழனை காலில் போட்டு நசுக்கிடலாமா?

“untold suffering” and said that “the entire world is very disappointed”. கிளாரி கிளிண்டன் சொல்லியிருக்காருங்க.

அரசியலும் எதிர்காலமும் ஆதிபராசக்தி வசனமில்லீங்க.


அப்பிடி இப்பிடி சுத்திப் பாருங்க.. ஏதாவது புரியும். இவங்களையும் தான்.

இவங்களுக்கு "பந்த்" தேவையில்லீங்க.
உங்க பந்தம் பங்களிப்பு..

நீங்க பெரிய அரசியல்வாதி உங்களுக்குப் புரியாதா? என்ன?


No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil