எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.
குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.
எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!
இப்படிக்கு சாவின் விளிம்பில் உள்ள உங்கள் தொப்புள்கொடி உறவுகள்
போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று கூசாமல் பொய் சொன்ன வாய்களில் புற்றுவைக்கட்டும்! வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்! எங்கள் எலும்புக் கூடுகள் மீது ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே... உங்கள் சிம்மாசனம் வெடித்துத் தூள்தூளாகட்டும்! உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......-கவிஞர் தாமரை
பயாஸ்கோப் பாலிடிக்ஸ்
ஒரு இலக்கியப் படைப்பானது ஒரு படைப்பாளியினது அனுபவமும் அனுபவங் குறித்த படைப்பாளியினது பார்வையும் படைப்புத்திறனினதும் கூட்டு உருவாக்கமேயாகும். படைப்பு உருவான பிறகு அது ஒரு பருண்மைத்தன்மை பெற்று அதற்கென்று ஒரு தனித்துவத்தை நிறுவிக் கொள்கிறது.
காட்டூன் கார்னர்
Mr.பொதுஜனம்
Mr.பொதுஜனம்:
கஷ்ட காலத்தில் சிரிக்க என்ன செய்யலாம்?
தி.மு.க உடன் சிரிப்புகள்:
கலைஞர் கருணாநிதி பிறக்கும்போது வானத்திலிருந்து ஒரு சிட்டுக்குருவி கிளம்பிவந்து கலைஞர் கருணாநிதி பிறப்பதை முன்கூட்டியே அறிவித்தது. தெற்கில் ஒரு நட்சத்திரம் உதித்தது. சிட்டுக்குருவி சொன்னதும் கீழே இருந்த கூவம் இரண்டாக பிளந்தது. அங்கிருந்து மாபெரும் அற்புதமாய் இரண்டு வானவில்கள் ஒரே நேரத்தில் கிளம்பி சூரியன் போட்டிருந்த கருப்பு கண்ணாடியைப் பிடுங்கி வந்து குழந்தை கலைஞரின் கண்களில் பொருத்தி அழகு பார்த்தன. உலகமே பூத்து குலுங்கியது. பிரபஞ்சமே கலைஞர் கருணாநிதியின் வருகைக்காக சிலிர்த்து புல்லரித்து மஞ்சள் துண்டொன்று நெய்து கொடுத்தது.
இதுவே அதிகாரப்பூர்வமான கலைஞர் கருணாநிதியின் வரலாறாக பள்ளிக்கூட பாடங்களில் சொல்லித்தர வேண்டும் என்று அரசாணை இருந்தால் என்ன செய்வீர்கள்?
எல்லோரும் சிரிப்போம்...எப்படி?எங்கு?எதால்?..
உங்கள் கற்பனைக்கு..
2 comments:
அடுத்தவனை கேட்பது இருக்கட்டும்....வீரமணி?.. சொக்கத்தஙம் சோநியாவுக்கும்,தூயவர் பிரனப்புக்கும் காவடி தூக்குவதா?
வீரமணி படித்தது இடாலியிலா?
எமது அன்பான தமிழக உறவுகள் மற்றும் தலைவர்களே! வாழ்வா சாவா என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நாம் இப்போது எங்களைக் காப்பாற்றுவதற்கான இறுதி ஆயுதமாக உங்கள் உதவியை நாடி நிற்கிறோம்.
குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டிருக்கும் எமக்கு எதிராக தரைவழியிலிருந்து ஐந்து முனைகளில் இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும், மக்கள் வாழ்கின்ற கடலோரப் பகுதிக்கு அண்மையில் இருந்து இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் கூட்டுச் சேர்ந்து செய்து வருகிற தொடர் தாக்குதல்களால் பெருமளவான மக்கள் செத்துக் கொண்டும் காயமடைந்து கொண்டும் இருக்கிறார்கள்.
எஞ்சியிருக்கிற உயிர்களைக் காப்பபாற்ற நடவடிக்கை எடுக்குமாறு எமது தொப்புள்கொடி உறவுகளிடமும் மற்றும் தலைவர்களிடமும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இப்போராட்டமானது தமிழ்நாட்டையும் இந்தியாவையும் உலுக்கும் வகையிலும் அவசரப் போர்நிறுத்தம் ஏற்படும் வகையிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள், இந்திய மத்திய அரச திணைக்களங்களை முற்றுகையிடும் வகையிலும் தமிழ் நாட்டு இளைஞர்களை தட்டி எழுப்பும் வகையிலும் உடனடி பேரணிகள் கதவடைப்பு அல்லது ஒன்றுகூடல்கள் ஏற்பாடு செய்து எம்மைக் காப்பாற்ற அழுத்தம் கொடுக்குமாறு பேரன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் எங்களில் பலரை நாம் இழந்துவிடுவோம். தயவு செய்து தாமதிக்காமல் எமக்காக வீதிக்கு வாருங்கள்.
எங்கள் உயிர் உங்கள் கைகளில் உறவுகளே!
இப்படிக்கு
சாவின் விளிம்பில் உள்ள
உங்கள் தொப்புள்கொடி உறவுகள்
Post a Comment