
தனிமரம்
இந்திய அரசியலில் வாரிசுகளின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களின் வாரிசுகள் தலையெடுக்க துவங்கி விட்டனர். கட்சியின் தலைமை பதவியில் உள்ளவர்கள் துவங்கி, சாதாரண கிளைச் செயலர் வரை தங்களின் வாரிசுகள் அரசியலில் முக்கியத்துவம் பெற வேண்டும் என நினைப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. வாரிசுகளும் தங்களுக்கு என ஒரு தனியான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி, கட்சியில் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் குடும்ப அரசியல் ஆதிக்கம் பெறத்தொடங்கி விட்டது.
தமிழகத்தில் தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் மாநில அமைச்சராக உள்ளார். முதல்வரின் மகள் கனிமொழி ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். முதல்வரின் மற்றொரு மகன் அழகிரி, வரும் லோக்சபா தேர்தலில் மதுரையில் போட்டியிடப் போகின்றார். பா.ம.க., தலைவர் ராமதாசின் மகன் அன்புமணி மத்திய அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்தவர். ஐ.மு., கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியதை அடுத்து, சில தினங்களுக்கு முன் தான் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் மறைந்த தலைவர் மூப்பனார் மகன் வாசன் தற்போது மத்திய அமைச்சராக உள்ளார்.
இப்படிப்பார்க்கும் போது ஜெயலலிதா தான் உறவுகளே இன்றி "தனி" மரமாக நிற்கின்றார். குடும்பத்துக்காக "அதிகம்" சொத்துச் சேர்க்க விரும்பமாட்டார். இந்தத் தகுதி ஒன்றே போதாதா ? "ஜெ" யைத் தெரிவு செய்ய.
என்னமோ நம்மளால முடிந்தது. "கவனிக்கும்"போது நம்மளையும் கவனித்துக்கொள்ளுங்கள் தாயே...ஹி..ஹி..
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment