ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, April 16, 2009


கருணாநிதி ஒரு கருப்பாடா?


இன்றைய காலத்தில் கலைஞர் கருணாநிதிக்கு இருக்கக் கூடிய மதிப்பு எவ்வாறு இருக்கக்கூடும் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்து தொலைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.

அவர் விடும் அறிக்கைகளும் கடிதங்களும் பலரின் இரத்தக்கொதிப்பை உயர் கொதி நிலைக்கு எடுத்துச் சென்றதன் விளைவு எதிர்வினையாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது। மதித்தவர் மட்டுமல்ல துதித்தவரும் அவரை வெறுத்து ஒதுக்கும் வகையில் இவ்வெதிர்வினைகள் போய்க்கொண்டிருக்கின்றன।

கலைஞர் இதயத்தை இதுவரை காலமும் இனிக்க வைத்த கழககண்மணிகளே வெறுத்து தூற்றி எழுதியதையும் நாம் கண்டுகொண்டிருக்கின்றோம்.


இதயத்தில் வைத்துப் போற்றிய தலைவனை தூக்கி எறிவது என்பது பெரு வலி பொருந்தியது। அதை இன்று ३० , 40 வருடம் தொண்டனாக இருந்தவன் கூட செய்வதை அந்தத் தலைவன் கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது।

திராவிட எழுச்சியாக முகிழ்ந்தெழுந்த தி। மு।க என்பது குறைப்பிரவசமாக அழிந்து போவதை செந்தீரும் வென்னீரும் கொட்டி வளர்த்த தொண்டனால் தாங்க முடியாத செய்திகளே.

அறிந்து செய்தால் அவ்வளவு தானா? என்று கேட்கத்தோன்றுகின்றது। அறியாது செய்தால் அனுதாபப்பட வைக்கின்றது ? இரண்டுக்கும் பதில் அவரிடமே இருக்கின்றது।

அண்மையில் அவர் விட்ட அறிக்கைக்குக் கிடைத்த இரண்டு எதிர் வினைகள் இவை।

"கிள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கும் அள்ளிக் கொடுக்கும் பண்டத்துக்கும் உள்ள வேறுபாட்டை நான் உணருகிறேன்। முழுமையான போர் நிறுத்தம் செய்தால்தான் என்ன முழுகிப் போய்விடும்?ஆதாயம் தேடிட... ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டப் பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்குக்கூட எதிர்க்கட்சிகளை அனுமதிக்கவில்லை। ஆனால் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்குத் தொடர்ந்து நாங்கள் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்பதை தமிழக மக்களும் இலங்கை தமிழர்களும் அறிவார்கள்। உலக நாடுகளும், ஐ।நா.சபையும் கொடுக்கும் அழுத்தத்தையே மதிக்காத அரசாக இருக்கிறது இலங்கை அரசு. " -கருணாநிதி


எதிர்வினை 1 :

தலைவனா நீ.............. ????? கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று, கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு! தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி! சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்! உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும். சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி! பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து, தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே! தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து, ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட தவிக்கின்றான் எங்களவன் இங்கே! இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுதையே - இனி எப்போதும் மறவாது தமிழினம் - உனை எப்போதும் மறவாது தமிழினம்! தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது! தலைவன் நீ என்ன செய்தாய்! தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்


எதிர்வினை2:

கேள்வியின் நாயகன் (அவரது கேள்வி பதில் வடிவ அறிக்கைகளுக்காக) கருணாநிதி அவர்களுக்கு, மத்திய அரசில் உங்களது கட்சியும் ஒரு அங்கம் என்று உங்களது எடுபிடிகள் உங்கள் காதில் ஓதவில்லையா? நாட்டுநடப்பு தெரியாமல் அறிக்கைகள் விட்டு மக்களை ஏமாற்றியது போதும். நாட்டுக்கும், மக்களுக்கும், குறிப்பாக இலங்கை தமிழர்களுக்கும் நீங்கள் ஆற்றிய தொண்டுகள் போதும். இனி சற்று ஓய்வு எடுக்கலாம். இந்த தேர்தலில் மக்கள் ஓய்வு கொடுப்பர்!!!


கருணாநிதி கருப்பாடாகின்றார் என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படியென்றால் தேர்தலில் உங்கள் தீர்ப்பு என்ன?

குறிப்பு: ஓட்டை, தமிழுக்கு போடுங்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil