
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் அக்காள் மகள் ஸ்ரீதளாதேவி. இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன். இவர் சென்னை ரிசர்வ் வங்கியில் வேலை செய்தார். இவர்கள் மைலாப்பூரில் வசித்து வந்தனர்.
ரிசர்வ் வங்கியில் வேலையில் சேரும் முன்னர், "பாஸ்கர் அண்ட் கோ' என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினார் பாஸ்கரன்.
சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மைலாப்பூர் மற்றும் கொட்டிவாக்கத்தில் உள்ள வீடு, வங்கி லாக்கர்களில் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது 50 கிலோ வெளிநாட்டு தங்க நாணயம், 80 தங்கக்கட்டிகள், ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் கைப்பற்றப்பட்டன.
1988-முதல் 1997 வரையிலான காலத்தில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சுயலாபம் அடையும் வகையில் ரூ.1.69 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகவும், ஸ்ரீதளாதேவி பெயரில் உள்ள சொத்துக்கான வருவாய் ஆதாரங்களை காட்ட வில்லை.பாஸ்கரன், ஸ்ரீதளாதேவி மீதான வழக்கில் 7 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
இவர்கள் பெயரில் மைலாப்பூரில் புதிதாக கட்டப்பட்ட 12 அடுக்குமாடி வீடுகள் உள்பட 10 அசையா சொத்துக்களும், கார்கள், நகைகள் உள்பட 35 அசையும் சொத்துக்களும் உள்ளன.
வருமான இனங்கள் பட்டியலில் சசிகலாவிடம் இருந்து கடன் வாங்கியதாகவும் கூறியுள்ளனர். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 80 தங்கக்கட்டிகள் (வெளிநாட்டு முத்திரையுடன்) அரசாங்கப் பொருளாக பறிமுதல் செய்யப்படுகிறதுஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 9 மாதங்கள் சிறை தண்டனை அளிக்கப்படும்
கணவர் உள்ளே; மனைவி வெளியே சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஸ்ரீதளாதேவி தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி உடனடியாக மனு செய்தார்.ரூ.10 லட்சம்) 2-வது குற்றவாளி (ஸ்ரீதளாதேவி) கட்டி ஜாமீனில் விடுதலையானார்.
செய்தி : (தி.மு.க)அரசு சொத்தானது 80 தங்கக்கட்டிகள் .
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment