ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Saturday, April 4, 2009
இந்தியாவின் ஈழப்போர்-2 உம் சோனியாவும்
இலங்கையில் ஆட்சி மாறுந்தோறும் தமிழர்களுக்கு எதிரான போர் ஒரு முறை உக்கிரம் கொள்ளும். அது தமிழரை வென்ற தானைத் தலைவன் நவீன துட்டஹாமினி போன்ற பட்டங்களைத் தங்களுக்கு சூடிக்கொள்ள சிங்களத்தறுதலைகள் எடுக்கும் முயற்சி. அதுவும் அற்ப ஆயுசில் போக அடுத்த எலக்ஷன் வரை காத்திருப்பு நீளும்.
அதுவே இப்போது இந்திய காங்கிரஸின் வேலைத்திட்டமும் ஆகி விட்டது. அமைதிப்படைக்காலத்தில் அட்டகாசம் செய்து அடி வாங்கி வி.பி சிங்கின் கருணையினால் தப்பிவந்த காலம் முதல் இந்திய காங்கிரஸின் முக்கிய வேலைத்திட்டமாக இது மாறி விட்டது. வி.பி சிங்கின் ஆட்சியைத் தொடர்ந்து வந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சிரீபெரும்புதூரில் ராஜீவைப்போட்டுத்தள்ளியதில் அதனைப் புலிகளும் உணர்ந்திருந்தனர் என்றே விளங்குகின்றது.
அன்று ஜே.ஆர். ஜெயவர்த்தனே சொன்னதைப்போல "இவரது ஆயுளை விட எனது அரசியல் அனுபவம் காலம் கூடியது" என்ற வார்த்தைகளால் பின்னப்பட்ட வலையில் விழுந்தது இராஜீவ் மட்டுமல்ல இந்திய அரசியலும் தான். ஜே ஆரும் இறந்துவிட்டார். இராஜீவும் இறந்து விட்டார். ஆனால் அன்று ஜே .ஆர் போட்ட கணக்கு இன்றும் சரியாக வேலை செய்து கொண்டிருக்கின்றது.
இன்று கணக்குத் தீர்க்கும் காரியத்தைக் கையில் எடுத்துக் கொண்டிருப்பது சோனியா. கணவனைக் கூடையில் சுமந்து கணிகை வீட்டுக்கு எடுத்துச்சென்ற நளாயினியின் மனநிலையில் சோனியா ஊடாடக் கூடும். காலம் கனியக் காத்திருந்து இன்று உம்மணாமூஞ்சி மன்மோகன் சிங்கை முன்னால் விட்டு படையை முடுக்கிக்கொண்டிருக்கின்றார்.
வரும் பழிகளுக்கும் பாவத்திற்கும் இந்திராகாந்தியின் கொலைக்குப் பழியாக இரண்டாம் முறையும் சீக்கியர்களைப் பலியிட சதி செய்கின்றார். இது இந்தியாவிலிருந்து பிரிந்து சென்று காலிஸ்தானை உருவாக்கும் சீக்கியரின் கனவை மீண்டும் தூண்டிக்கொண்டிருக்கின்றது. இந்தியாவின் அகண்ட பாரதக்கனவின் சில கிளைகளை ஒடிக்கும் அமெரிக்க எண்ணத்தில் காஸ்மீரைப்போலவே நாகாலாந்து மணிப்பூர் போல காலிஸ்தானும் இடம் பெற்றிருக்கின்றது. அதனை வாராது வந்திருக்கும் வாய்ப்பினைப்போல பிறப்பால் மனதால் மேற்கின் மன நிலையைப்பிரதிபலிக்கும் சோனியாவின் செல்வாக்கு கொடிகட்டிப்பறக்கும் காலத்தினை சி.ஐ.ஏ பயன் படுத்தத் துடிக்கின்றது.
சோவியத்திற்கு ஆதரவான இந்தியாவின் -இந்திராவின்- உறுதியை நிலை குலைக்க அல்லது மந்தப்படுத்தவே சோனியாவை இராஜீவ்வின் வாழ்க்கையில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார் சேர்த்து வைத்தார் என்ற குற்றச்சாட்டு இன்றும் உண்டு.
அதை நிரூபிப்பது போலவே காங்கிரஸ் அரசின் கடந்த கால அமெரிக்க ஆதரவு அல்லது அமெரிக்காவிற்கான விட்டுக்கொடுப்பு என்று பல சம்பவங்களைக்கூறமுடியும். அமெரிக்காவுடனான அணுசக்தி விட்டுக்கொடுப்பு ஒப்பந்தமும் அதில் ஒன்று. எதிர்க்கட்சிகளும் பல (அணுசக்தி ஆராச்சியில் இணைந்து கொண்டிருந்த) விஞ்ஞானிகளும் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அத்தகைய விட்டுக்கொடுப்பிற்கு செல்ல இந்தியாவிற்கு என்ன தேவை என்ற கேள்வி இன்றுமிருக்கின்றது.
அமெரிக்க சி.ஐ.ஏயின் அஜெண்டாவிற்கு முட்டுக்கொடுக்க இன்று இந்தியாவில் சோனியாவை அடிக்க ஆள் கிடையாது. அதே வேளை இந்துத்தவத்தைக் கையில் எடுத்திருக்கும் மதவாத பா.ஜ்.க அமெரிக்காவிற்கு குறிப்பாக அமெரிக்காவில் இருக்கும் கத்தோலிக்க மதவாதிகளுக்கு உவப்பாயில்லை.
இத்தகைய மேற்கு மன நிலையில் ஊசலாடும் சோனியாவின் மமதை ஈழம் பற்றிய பார்வையையும் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்த்ததன் விளைவு தான் இன்று வன்னி மண்ணில் ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கும் இரத்தம்.
இன்னுமொரு சந்தர்ப்பம் வாய்க்கப்பெறுமோ என்ற ஐயத்தில் ஏற்படுத்தப்பட்ட ஈழ விளையாட்டு இன்று சோனியாவுக்கும் காங்கிரஸிற்கும் வாய்க்கரிசி போடும் நிலைக்குக் கொண்டு வந்திருப்பது சோனியாவே எதிர் பார்க்காதது. கழுவிற நீரில் நழுவுகின்ற மீன்களான தமிழக அரசியல் வாதிகளையும் மீறி இவ்வுணர்வு கொழுந்து விட்டு எரிய தம்மை எரித்துக்கொண்ட முத்துக்குமரன் முதலாகிய தியாகதீபங்களுக்குத்தான் அத்தனை பெருமையும் சேரவேண்டும். ஈழத்தின் வரலாற்றில் எப்போதும் போற்றப்படும் உயர்ந்த இடம் அவர்களுக்கு இருக்கின்றது என்பதை நாளைய சரித்திரம் நிரூபிக்கும்.
ஈழ விளையாட்டைத் தொடங்கி வைத்தபோது சோனியா-பிரணாப்-மேனன் மும்மூர்த்திகளுக்கு ஒரு கனவு இருந்தது.
1. விடுதலைப் புலிகளை இந்தியத் தேர்தலுக்கு முன் அழித் தொழித்தல்.
2. தேவை ஏற்படின் விடுதலைப் புலிகளை அழிக்க ஒரு திரை மறைவு இந்தியப் படை நடவடிக்கையை இலங்கையில் அரங்கேற்றுதல்.
இரண்டு செயற்திட்டங்களைக் கொண்டு களத்தில் இறங்கிய போதும் புலிகளை அழித்தொழிப்பது என்பது நிறைவேறாக் கனவாகவே இருக்கின்றது. சிங்களத்தின் அத்தனை இராணுவ மனிதவலுவும் இந்தியாவின் அதி சக்தி வாய்ந்த ஆயுதங்களும் மூளை வளமும் கொட்டப்பட்டபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் முன் நின்று பிடிக்கவே முடியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
தாக்குதலின் ஆரம்பத்தின் பின்னால் ஏற்பட்ட காட்சி மாற்றம் தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்தபோது சோனியாவின் கூட்டுக்கட்சியான தி.மு.க வெம்பி வெதும்பிப்போய் விட்டது.
அதனாலேயே தானே தொடங்கிவைத்த புலியழிப்பை பின் கதவால் வெளியேற்றி விட்டு "யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி" கலைஞ்ருக்கு கடிதம் வரைந்து கொண்டிருக்கின்றார்.
இதே காங்கிரஸின் மற்றொரு கழுகான பிரணாப் "இன்னுமொரு நாட்டின் இறைமையில் தலையிடும் உரிமை இந்தியாவிற்கு கிடையாது. ஆகவே நாங்கள் யுத்த நிறுத்தம் பற்றி இலங்கையை வற்புறுத்த மாட்டோம்" என்று இந்தியப் பாராளுமன்றத்தில் செப்பிய வசனம் காயு முன்னரே யுத்த நிறுத்தக் கடிதம் எழுத சோனியாவத் தூண்டியிருப்பது ஈழப்போராட்டத்திற்குக் கிடைத்த இராஜதந்திர வெர்றியே.
இருந்தபோதும் இந்தியாவும் சோனியாவும் தங்கள் தோல்விக்குப் பழி வாங்க இன்னும் பல போர் முனைகளை எதிர்காலத்தில் திறக்கக் கூடும். இந்தியாவின் ஈழப்போர் 2 ஐ வெற்றிகரமாக எதிர்கொண்ட ஈழத்தமிழ் மக்கள் எதிர்வரும் போர்களையும் எதிர்கொள்ளத்தயாராகவே இருக்கின்றார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
இந்திரா காந்தியை கொன்றவர்கள் இந்திய நாட்டையே ஆளலாம் என்றால் ,இந்தியாவை நேசிக்கும் இலங்கைத் தமிழர்களை ஏன் ஆதரிக்கக் கூடாது?
Post a Comment