ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Thursday, April 23, 2009
தமிழர் - கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள்
இலங்கைத் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக நான்தான் துணையாக இருக்கிறேன். பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருக்கின்றேன், அதிகப்படியான தீர்மானங்களை என் கைப்பட இலங்கைத் தமிழர்களுக்காக எழுதியிருக்கிறேன் என்றெல்லாம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நாளேடுகளில் எழுதி வருகிறார். எந்த வார்த்தைகளிலும் நிலையான தன்மை இல்லை. அவர் சொல்வதில் எதிலும் உண்மையில்லை.
எந்த சமுதாய மக்களின் தலைவர் என்று தன்னைத்தானே மகுடம் சூட்டிக்கொள்கிறாரோ அந்த சமுதாய மக்கள் சிங்கள அரசால் இன்று வெடிகுண்டுகளாலும், துப்பாக்கி தோட்டாக்களாலும் கொத்து கொத்தாக சிறுவர் முதல் இளைஞர், பெண்கள், முதியவர்கள் என்று பாரபட்சமின்றி கொன்று குவிக்கப்படுகிறார்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தமிழின படுகொலையை தடுத்து நிறுத்துங்கள்.
தமிழர்களுக்கு உயிர்ப் பிச்சை தாருங்கள் என்று தமிழகமே மன்றாடி பதவியில் இருக்கின்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியை கெஞ்சி கேட்டபோதும் தந்தி அடிப்போம் போர் நின்றுவிடும். கடையடைப்பு நடத்துவோம் போர் நிறுத்தம் வந்துவிடும் என்றெல்லாம் வீரவசனம் பேசி காலத்தை வீணாக கழித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த காலக்கட்டங்கள் கழிகின்ற நேரத்தில் இலங்கை தமிழினமே புல், பூண்டு இல்லாமல் ராஜபக்சேயின் கொடூர ஆட்சி அழித்து தமிழர்கள் இனமே இல்லாமல் முடித்துவிடும் ஆகையால் கருணாநிதி தேர்தலை மனதில்கொண்டு கடையடைப்பு, கண்துடைப்பு, தமிழ் தலைவன், மனம் வாடுகிறேன், வருந்துகிறேன், துயரமடைகிறேன் என்றெல்லாம் பராசக்தி கதை வசனங்களை மக்களுக்கு மீண்டும் மீண்டும் எழுதி காட்டாமல் போர் நிறுத்தத்தை உடனடியாக மத்திய அரசு தலையிட்டு இலங்கையில் வாழும் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டியவர் இப்போது தந்தி அடித்துக் கொண்டிருக்கின்றார்.
தேவை ஏற்படும் பொழுது "தம்பி தமிழ்ச்செல்வா" என்று கவிதை எழுதுவார். "ஆஹா இவரல்லவோ தலைவர் " என்று புளகாங்கிதம் அடைந்து நிற்கையில் "சகோதர யுத்தம் செய்த பாவிகள்" என்பார். "என்ன இது ?"என்று ஏங்கி நிற்கையில்
"பிரபாகரன் என் நண்பர்" என்பார். "அடடா" என்று திரும்புகையில் 'அப்படிச் சொல்லவில்லையே?" என்று கரணமடித்து நிற்பார். காங்கிரஸின் "கை" உயர்கையில் கலைஞரின் தமிழும் அழுகின்றது. ஏனென்றால் பொய் சொல்லத் தமிழுக்குத் தெரியாது. ஆனால் கலைஞருக்குத் தெரியுமே.அதனால்த்தான் தமிழும் அழுகின்றது.
குமரியில் வாழ்ந்த தமிழர் கடல் வஞ்சித்ததில் அழிந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த தமிழர் கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள். கலைஞருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு. அது கலைஞரைக் கொலைஞராய்க் காட்டும் அப்போது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/குமரியில் வாழ்ந்த தமிழர் கடல் வஞ்சித்ததில் அழிந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த தமிழர் கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள். கலைஞருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு. அது கலைஞரைக் கொலைஞராய்க் காட்டும் அப்போது. குமரியில் வாழ்ந்த தமிழர் கடல் வஞ்சித்ததில் அழிந்தார்கள். இலங்கையில் வாழ்ந்த தமிழர் கலைஞர் வஞ்சகத்தில் அழிந்தார்கள். கலைஞருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு. அது கலைஞரைக் கொலைஞராய்க் காட்டும் அப்போது. //
10000% உண்மை!
வாங்க நாமக்கல் சிபி, மைல்கல்லா இருக்க வேண்டிய கலைஞர் சிலுவைக் கல்லா மாறியதுதான் தமிழினத்தின் இந்த சோகம்...
Post a Comment