ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, April 24, 2009


பிரபாகரன் -எங்கள் நண்பர்


தமிழினம் மீதான ஒரு அழிவுப்போராட்டத்தை உலகமே முன்னெடுத்திருக்கின்றது.
ஈழத்தமிழர்களை முகர்ந்து தூக்கியெறியும் கறிவேப்பிலையாக இராணுவ பொருளாதார வல்லரசு நாடுகள் எண்ணிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே அவற்றின் நடவடிக்கைகள் தமிழர் தேசியத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்தியா தொப்பூழ்கொடி உறவுள்ள நாடு ,தாய் நாடு என்ற மாயைகள் உடைத்துப் போடப்பட்டிருக்கின்றது. எதிரியின் வேகத்தை விட மூர்க்கத்துடன் தமிழின அழிப்பை இந்தியா செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.

உலக நாடுகளின் நலன் பேண வேண்டிய ஐ.நாடுகள் சபையோ இறந்து படும் தமிழர் எண்ணிக்கையை காகிதங்களில் அறிக்கை விட்டு அழுது கொண்டிருக்கின்றது.தாக்குதல் செய்து அவலங்களை ஏற்படுத்தும் சிங்களப்பேரின வாதிகளை தட்டிக்கொடுத்து அல்லல் படும் இனத்தை ஆயுதத்தைக் கீழே போடு என்று இரட்டை நாடகம் போடுகின்றது.

ஐ,நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் "பயங்கரவாதத்தை ஒழித்து ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையுங்கள் " என்று கூவித்திரிகின்றன வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள். நண்பனாய் இருக்க வேண்டிய இந்தியாவோ நடு முதுகில் குத்தி விட்டது.

இத்தனைக்கும் காரணம் இலங்கையின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்தல், தங்கு தடையற்ற நுகர்வோர் சந்தையை உருவாக்குதல் ,இராணுவ மேலாதிக்க படைக்கலன் நகர்வுக்கான பாதையாக தளமாக இலங்கையைப்பாவித்தல் என்ற மூன்று நோக்கங்களின் அடிப்படையில் இவை இயங்குகின்றன.

இதில் அடிபட்டுப்போகும் சிறுபான்மை தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றி யாருக்கும் கவலையில்லை. உலகப்பந்தை உள்ளங்கையில் வைக்கும் முயற்சியில் நசுங்கிப்போகும் தமிழர் தலையைப்பற்றி யாரும் துயரப்படவில்லை. அப்பாவிகள் வாழ்வில் கொடுமைகள் செய்வது பற்றி எவரின் மனச்சாட்சியும் துடிக்கவில்லை.

புலிகள் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் போராளிகள். யார் எப்படிச் சொன்னாலும் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் இன்றும் என்றும் விடுதலைப் போராளிகளே. மக்கள் மனதில் அவர்களுக்கு என்றுமே உயரிய இடம் உண்டு. எங்கள் இனத்தை நசுக்க வந்தவர்களை எதிர்த்தது கொன்றது ஒன்றும் பயங்கரவாதம் அல்ல. ஒரு பகத் சிங்கைப்போல் ஒரு சுபாஸ் சந்திர போஸைப் போல போற்ற வேண்டிய தேசபக்தி.

எதிரிகளைக் கொல்வது போரில் நடக்கக் கூடியது தான். இராஜீவின் கொலையும் அதைப்போன்றதே . இராஜீவ் தமிழ் மக்களைக் கொன்றதனால் கொல்லப்பட்டார். அவ்வளவு தான். தமிழர்களை எதிரிகளைப்போல் கொன்றது இன்னும் கொன்று கொண்டிரு்ப்பது இந்தியாதான்.

இந்தியா இப்போது தமிழர்களின் எதிரிதான். எப்போதும் ..இனி அது தான் வரலாறு.
இப்போது தமிழ் மக்கள் போரில் தோற்றுப்போய் விடலாம் . ஆனால் அதுவே முடிவாகி விடாது. தமிழர் வரலாற்றில் பிரபாகரனைப் போல் பல வீரர்கள் தோன்றினார்கள் இன்னும் தோன்றுவார்கள்.

தமிழர்களை மந்தைகளைப்போல் ஆட்சிசெய்யலாம் என்ற கனவு எப்போதும் பலிக்காது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அத்தனையும் வெகு சீக்கிரத்தில் அதனைப் புரிந்து கொள்ளும். மனச்சாட்சி நேர்மை நீதி என்ற எங்கள் பாஷைகள் உங்களுக்குப் புரியவில்லை. இனி உங்கள் பாஷையில் நாங்களும் பேசுவோம்.

எதிரிகளிடம் உங்கள் பண்டங்களை விற்கமுடியாது. பண்டம் விற்கும் சுரண்டல் கனவுகளுடன் இருக்கும் உங்கள் கனவுகள் தகர்ந்து போகப் போகின்றது.

இந்தியா தமிழர்களின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. இது இனி தெளிவான வரலாறாகும். தமிழர்களுள் ஒரு சிலர் செய்த வஞ்சகமே எம்மை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கின்றது. என்றும் அதை ஒரு பாடமாகக் கொள்வோம். பிரபாகரன் உங்களுக்கு நண்பனாக இல்லாதிருக்கலாம். ஆனால் அவர் தமிழர்களின் நண்பன். சுதந்திர தமிழ் ஈழத்தில் அவர் உங்களையெல்லாம் விட மேலானவரே.

4 comments:

Kumar said...

I support your thoughts...This is just a comma, not full stop...He will come up & win the singale dogs soon

வெத்து வேட்டு said...

"எதிரிகளைக் கொல்வது போரில் நடக்கக் கூடியது தான். இராஜீவின் கொலையும் அதைப்போன்றதே . இராஜீவ் தமிழ் மக்களைக் கொன்றதனால் கொல்லப்பட்டார். அவ்வளவு தான். தமிழர்களை எதிரிகளைப்போல் கொன்றது இன்னும் கொன்று கொண்டிரு்ப்பது இந்தியாதான்."

then why are you blaming India?

இட்டாலி வடை said...

"தமிழர்களை எதிரிகளைப்போல் கொன்றது இன்னும் கொன்று கொண்டிரு்ப்பது இந்தியாதான்."

then why are you blaming India?

வாங்க வெத்து வேட்டு , ..... இதனால்தான். இதுகூட வெளங்கலியா?

இட்டாலி வடை said...

வாங்க குமார், அதே...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil