ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 5, 2009


திருமா மீது சீற்றம் - கலைஞர்


மக்களவை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பெயர் நாளை வெளியிடப்படுகிறது. கட்சியின் தேர்தல் அறிக்கையும் நாளை வெளியாகிறது.
.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வரும் மக்களவை தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.

சிதம்பரம் தொகுதியில் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் விழுப்புரம் தொகுதிக் கான வேட்பாளர் பெயரையும், கட்சியின் தேர்தல் அறிக்கையையும் நாளை திருமாவளவன் செய்தியில் வெளியிட இருக்கிறார். இந்த தகவலை கட்சியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.


அது தான் ஜோதியில் கலந்துட்டீங்களே.. அப்புறம் என்னா உங்களுக்கின்னு ..ஒரு இது. கலைஞர் கை காட்டுர திசையில் போய்க்கிட்டே இருக்க வேண்டியது தானே... ஏற்கனவே உங்களையும் டாக்டரையும் கலைஞர் நினைத்தபடியே பிரிச்சிட்டார்..இப்போ தனியாளா வேற நிக்கிறீங்க.. போனாப் போவுதுன்னு ரெண்டு சீட் கொடுத்திருக்கார்..இதுக்கப்புறமும் அரசியல் பக்குவம் வரலியென்னா எப்படி.... திருமா ....அப்புறம் கலைஞர் கோவிச்சுக்கிடப்போறார்.

குறிப்பு:இப்போ மீண்டுமொரு முறை தலைப்பைப் படியுங்கள்... நாளைக்கு செய்தியா வரக்கூடாது பாருங்க அது தான் "இட்டாலி வடை" முந்திக்கொள்கின்றது

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil