
வருண் காந்தி விவகாரம் தொடர்பாக மாயாவதி மேனகா காந்தி இருவருக்குமிடையே அனல் பறக்கும் விவாதங்கள் அரசியல் களத்தை விட சூடாகத் தெறித்துப் பறக்கின்றன. அதே நேரம் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக எதிர் காலத்தில் வரக்கூடிய கட்சியாக பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் கால் பதித்துள்ளது.
பகுஜன் சமாஜ் இன் பலம் : திராவிடக் கட்சிகளால் ஒதுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர் + பார்ப்பனர் கூட்டணி + மாயாவதியின் கவர்ச்சிகரத் தலைமை +மத்தியில் ஆட்சியமைக்க முயலும் வல்லமை,கனவு.
வருண் காந்தி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதாகியுள்ளது தொடர்பாகத் தன்னை விமர்சித்துப் பேசியதற்காகத் தன்னிடம் மேனகா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி கூறியுள்ளார்.
"மாயாவதி ஒரு தாயாக இருந்தால் அவருக்கு இது புரியும். எப்படி ஆனாலும், இந்தக் கைது நியாயமற்றது, சட்டவிரோதமானது"
அவர் ஒரு மகனின் வேதனையைத்தான் உணர்ந்து இருக்கிறார். நான் கோடிக்கணக்கான மகன்களுக்கு தாயாக இருந்து அந்த வலியை, வேதனையை உணர்கிறேன். அன்பு செலுத்தவும், அரவணைக்கவும் தாயாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நான் ஆயிரக்கணக்கான மக்களுக்கு தாயாக இருந்து அன்பு செலுத்தி வருகிறேன். அன்னை தெரசா ஒரு தாய் அல்ல. ஆனால் உலகம் முழுவதும் உள்ள பல கோடி மக்களுக்கு தாயாக விளங்கியவர்.
அவர் திராவிடக் கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை. தமிழகத்தில் தேர்தல் சூடு பறக்கப்போகின்றது.
திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்காக ஏகப்பட்ட சலுகைகளை காட்டி மக்களை ஏமாற்றி வருகின்றன. இதை மக்கள் நம்பி ஏமாந்து விடக் கூடாது. அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வர உதவியாக அக்கட்சிக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்.
மேல் தட்டு மக்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும் மட்டும்தான் காங்கிரஸும், பாஜகவும் உழைத்து வருகின்றன. அவர்களது பொருளாதார கொள்கைகள் எல்லாம் சாதாரண மக்களுக்கானது அல்ல.
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் பொருளாதாரக் கொள்கைதான் சரியாக இருக்கும்.
அம்மா நெம்பர் 2 ?
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment