ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 11, 2009


பிஸ்டல் சூட்டர் - இண்டோ இடாலியன் போய்அப்பா வழியில் சித்தப்பா வழியில் இந்த இண்டோ இடாலியன் போயும் ஒரு கெளபோய் தான். டெல்கி யூனிவசிற்றியோடு இணைந்த சென்ற் ஸ்ரெபன்ற் காலேஜில் துப்பாக்கி சுட்டுப் பழகியது ஒரு வருடம். அப்பா இறந்து போனது அடுத்த வருடம் 1991 இல். படித்து முடித்தது 1994 இல் வெறும் பி.ஏ. 2004 இல் தேர்தல் நேரத்தில் m.phil இன் Development Economics , Trinity College, Cambridge என்றது அம்மாவைப் போலவே சர்ச்சைக்குரியதானது.

அம்மாவின் வாழ்க்கையைப் போலவே மகனின் வாழ்க்கையும் பல மர்மங்களுக்குள் புதைந்திருக்கின்றது. அப்பாவைப் போலவே மகனுக்கும் வெளி நாட்டுப் பெண்களென்றால் அதீத ஆர்வம். ராகுலின் மனதில் "பசக் "என்று உட்கார்ந்து கொண்டது ஸ்பானிய தேசத்து அழகு மங்கை வெரோனிக்கா.


பங்களாதேஷ் பிரிவினையை தன் குடும்பத்தின் சாதனையாகப் படம் போட்டது ராகுலின் அரசியல் பிரச்சினைக்கு வழி வகுத்தது. பாட்டியின் சாதனையில் குளிர் காயும் பேரன்.

2007 இல் உத்தரப்பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தன் தலையில் தானே மண் வாரிப் போட்டுக்கொண்டதும் நடந்தது. காந்தி நேரு குடும்பத்தில் யாராவது ஆட்சியில் இருந்தால் பாபர் மஸ்ஜிட் தகர்ப்பு நிகழ்ந்திருக்காது என்று பாட்டா (பெரோஸ் காந்தி) மீதுள்ள பாசம் + மதமேன்மை குறித்துப் பேசப் போக சொந்தக் கட்சி பிரதமர் நரசிம்ம ராவ் மீது ஆப்பு வைத்தது சோகக் கதை.

அதே நேரம் ராகுலின் பிரியத்துக்குரிய நண்பனின் வாக்கு மூலம் இன்றைய காங்கிரஸினதும் ராகுலினதும் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

'ஐ.ஐ.எம். மாணவரான ரஞ்சன் குமார், கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது முதல் அவர் ராகுல் காந்தியோடு நெருக்கமான நண்பராக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் சில மாதங்களுக்கு முன்பு காங்கிரசை விட்டு விலகினார். "மக்களுக்கு சேவை செய்யவே அரசியலில் நுழைந்தேன். ஆனால், அதற்கு காங்கிரஸ் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. அதனால் காங்கிரஸில் இருந்து விலகிவிட்டேன்.காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு ஒன்றும் பெரிதாக செய்திடவில்லை. அதன் முழுக்கவனமும் அமேதி, ரேபரேலி தொகுதிகள் மீதுதான் இருக்கிறது." என்றார் ரஞ்சன்.

ரஞ்சன் ராகுலின் அத்தியந்த தோழன்.

ர‌ஞ்ச‌னுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் மோகன்லால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட பா.ஜக வாய்ப்பு அளித்திருக்கிறது.

கட்சித் தலைமையை ஏற்பீர்களா?
இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. என்னுடைய வேலை கட்சியில் இளைஞர்களைச் சேர்ப்பது. அநத வேலையை செய்து வருகிறேன்.

அவர் சொல்லாதது. சேர்ந்த இளைஞர்களைத் துரத்துவதும்.

அப்பாவைக் கொன்றாலும் அலட்டாத அரசியல் அவரின் அக்மார்க் முத்திரை.

”இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசு நல்ல நடவடிக்கையை எடுத்து வருகிறது. விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை காங்கிரஸ் கூட்டணியில் சேர்த்ததில் சிறந்த ராஜதந்திரம் உள்ளது.காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது.

விடுதலைப் புலிகள் என்பது பயங்கரவாத அமைப்பு. என்னுடைய தந்தை அந்த அமைப்பினரால் கொல்லப்பட்டார்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது, விடுதலைச் சிறுத்தைகளை கூட்டணியில் சேர்ப்பது என்பது சிறந்த ராஜதந்திரம். அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்வதில் வருத்தம், கவலை எதுவுமில்லை” என்றார் ராகுல்காந்தி."

ஆமாம் .. செத்துப்போன அப்பா பற்றி என்ன கவலை. உயிருடன் இருக்கும் தன்னைப் பற்றி கவலைப்படுவதில் என்ன பிழை? திருமா தான் தெருமா ஆகத் திரியாது தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ராகுலுக்குத் தெரியும் ராஜதந்திரம் திருமாவுக்குத் தெரியாது போகாது என்று நாம் நம்புவோம்.

ஹி இஸ் த சூட்டர். அருச்சுனன் போல குருவி மட்டும் தெரியவில்லை. மற்றதெல்லாம் தெரிகின்றது இந்த இண்டோ இட்டாலியன் போய்க்கு. அது தான் இந்தியர்களின் துரதிர்ஷ்டம்.
No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil