ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, April 8, 2009


தமிழகத்தில் இருந்து பிரதமர் -யார்?


ஒருவர் பிரதமராவதற்கு இரண்டு வகையான வாய்ப்புகளும், தகுதிகளும் உள்ளன. முதலாவதாக பிரதமராக ஆசைப்படும் தலைவரின் கட்சி, தேர்தலில் குறிப்பிடத் தக்க தொகுதிகளில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்க வேண்டும்.


இரண்டாவதாக, குறிப்பிட்ட கூட்டணியில் இருந்தால் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வேண்டும். மற்ற கட்சி தலைவர்கள் அவரை பிரதமராக ஏற்றுக் கொள்ள வேண்டும். - ராம் விலாஸ் பாஸ்வான்

இந்தியாவிலுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடை பெற இருக்கின்றது. சேர சோழ பாண்டியரென்ற மும்முடி வேந்தராய் நாடு பலவென்று பாராண்ட அன்றைய தமிழன் வாரிசுகள் இன்று இந்திய நாட்டைதன்னும் ஆளமுடியுமா? வாய்ப்பிருக்கின்றதா?

ராம் விலாஸ் பாஸ்வான் அருளிச் செய்த எளிய விதிமுறையை அப்ளை பண்ணிப்பார்க்கலாம்.

முதலாவது பிரதமராக ஆசைப்படும் தலைவரின் கட்சி குறிப்பிடத் தக்க இடங்களில் வெற்றி பெறுவது,

தி.மு.க 21 இடங்களில் நேரிடையாகப் போட்டியிடுகின்றது. காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லீம் லீக் 1

இதில் போட்டியிடும் காங்கிரஸ் அனைத்திந்தியக் கட்சி பிரதமர் நாற்காலிக்கு ஏற்கனவே ஆள் ரெடி.

தி.மு.க இல் இருந்து பிரதமர் சான்ஸ் மிகக் கம்மி.

இரண்டாவது குறிப்பிட்ட கூட்டணியில் இருந்தால் அந்த கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களால் அவர் ஒருமனதாக தேர்வு
தேர்தல் முடிந்து ஒருவேளை மூன்றாவது அணிக்கு இடம் மாறினாலும் 21உம் வென்றிருந்தாலும் ஒண்ணும் சாதிக்க முடியாது.

அத்துடன் மூன்றாவது அணியில் ஏற்கனவே இருக்கும் "ஜெ" யின் இடத்தில் இருந்து ஜன்மத்து பகை பார்ப்பதால் மு.க விற்கு இந்த ஜன்மத்தில் பிரதமர் வாய்ப்பு இல்லை.

அ.தி.மு.க கூட்டணியில் பா .ம.கவிற்கு 7 மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் 3 இந்திய கயூனிஸ்ட் 2 ம.தி.மு.க 4 கொடுக்கப்பட்டாலும் (ம.தி.மு.க அதற்கு ஒத்துக்கொள்வதாய் வைத்துக்கொண்டு ) மிகுதி 24 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிடும்.

அ.தி.மு.க ஏற்கனவே மூன்றாவது அணியில் பேருக்கென்றாலும் இருக்கின்றது.

ஆனாலும் மூன்றாவது அணியில் ஏற்கனவே பிரதமர் பதவிக்குப்பலத்த போட்டி நடக்கின்றது. மாயாவதி முன்னணியில். கடந்த முறையை விட அதிகம் தொகுதிகளைக் கைப்பற்றக் கூடிய வாய்ப்புகள் அவருக்கு இருப்பதாக கருத்துக் கணிப்பு கூறுகின்றது.

9 கட்சிகள் இணைந்திருக்கும் இம்மாபெரும் அணியில் 13 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமராயிருந்து தூங்கிக் காலம் கடத்திய ஜனதா தள் தலைவர் எச்.டி .தேவகெளடா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஏ.பி. பரதன், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் பொதுச் செயலாளர் சதீஷ் சந்திர மிஸ்ரா என்று பலர் வாய்ப்பை எதிர் பார்த்து காத்திருக்கின்றனர்.

13 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்றாவது அணியில் தெரிவு செய்யப்பட்ட எச்.டி. தேவகெளடாவின் "சாத்வீகம்" தமிழக "ஜெ" இடம் இருந்தால் ....(இருக்கின்றதா?)
பொதுவான தெரிவிற்கு வாய்ப்பு இருந்திருக்கும்.

அதற்கும் வழியில்லை என்னும்போது அ.தி.மு.க வின் வாய்ப்பும் அடி பட்டுப் போகின்றது.

அடுத்து தனித்துப் போட்டியிடும் தே.மு.க கூட்டணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் பா.ம.க ,ம.தி.மு.க இவை தகுதி காணும் அடிப்படையிலேயே தவறி விடுகின்றன.

ஆகவே மீண்டும் கனவுகளுடன் (தமிழன் /பிரதமர் ) 2013 இல் சந்திப்போம்.

குறிப்பு:ஒரு முறை மூப்பனாருக்கு சந்தர்ப்பம் கிடக்கவிருந்தது என்று சொல்லவருபவர்களுக்கு.. அது தான் கிடைக்கவில்லையே ..கல்தோன்றி மண்தோன்றாக்காலத்து பழைய பெருமைகளில் சோம்பேறிகளாய்த் தூங்குவதை உதறி நிகழ் காலத்தில் வாழப்பழகும் போது தான் நம் கனவுகள் ஈடேறும்.

2 comments:

ராஜ நடராஜன் said...

//குறிப்பு:ஒரு முறை மூப்பனாருக்கு சந்தர்ப்பம் கிடக்கவிருந்தது என்று சொல்லவருபவர்களுக்கு.. அது தான் கிடைக்கவில்லையே //

நாங்கள் குறுநில மன்னர்கள்.பேராசைபட மாட்டோம்.
அடைப்பானின் சிவப்பு எழுத்து மாதிரி ஒரு பதிவருக்கு பின்னூட்டம் போட்ட நினைவு.ரிபீட்டே உங்களுக்கு.

காமராஜருக்கு பிரதமராகும் சந்தர்ப்பம் வந்தது.இந்தி,ஆங்கிலம் போன்ற காரணங்களால் அவர் கிங் மேக்கராகி இந்திரா காந்திக்கு பதவியை தாரை வார்த்து விட்டார்.

மூப்பனார் பக்கமும் காற்று வீசியது.அவர் வெத்திலை மென்றே பேசாமல் தவற விட்டு விட்டார்.

ப.சிதம்பரத்துக்கு பிரதமருக்கான தகுதிகள் இருந்தது.ஆனால் அவர் நிதித்துறைக்கே தகுதி பெற்றவர் என்பதை உள்துறை கையாளும் முறைகள் சொல்கின்றன.

(மேலே சொன்ன பின்னூட்டம் சிதம்பரம் மீது செருப்பு வீசப்படுவதற்கு முந்தையது.)

ரவுசு said...

வாங்க ராஜ நடராஜன்.

அப்படி யென்றால் கட்சிகளின் முன்னுள்ள அ.இ என்பதன் கருத்து என்ன? அகில இந்திய என்று தவறாக விளங்கிக்கொண்டேனா..? அ.இ - அடங்கி இருப்பது (தமிழகத்தினுள்) என்பதைத்தானா குறிக்கின்றது?

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil