ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 6, 2009


அன்றைய சிங்களவனும் இன்றைய காட்டுமிராண்டிகளும் (படங்கள் கோரமானவை)

எல்லாளன் சமாதி
சமாதி அமைந்துள்ள பகுதி
எல்லாளன் தமிழ் மன்னன்
நெஞ்சம் வலிக்கவே இதனை எழுத வேண்டியிருக்கின்றது. யாராலும் ஆற்ற முடியாத சோகம் மனதினைப் பிழிந்து கொண்டிருக்கின்றது. காட்டிக்கொடுப்புகளும் துரோகங்களும் வாழ்வினை ஊமையாக்கிப்போகின்றது. இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருவரை ஒருவர் சந்தேகத்துடனேயே பார்த்தவாறு எதிரிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது தான் வரலாறு.

எல்லாள-கெமுனு யுத்தம் தமிழர்கள் மீதான முதல் வெற்றி வரலாறாக சிங்களவர்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றது. பண்டை ஈழத்துத் தமிழ் அரசர்களுக்கு தமிழ அரசர்களுடன் குடும்ப உறவுகள் கொடுக்கல் வாங்கல்கள் இருந்தும் கூட இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையாகப் போனதேன் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.தன்னிடம் தோற்றுப்போன எல்லாளனுக்கு நினவிடம் கட்டி எல்லோரும் வாகனத்தில் இருந்து இறங்கி கால்நடையாக அவ்விடத்தைக்கடந்து சென்று மரியாதை செய்ய வேண்டுமென்று உத்தரவிட்ட அந்தச் சிங்களவன் மனிதனாயிருந்தான்.

அன்றைய எல்லாளனை வெற்றி கொண்ட சிங்கள கெமுனு அரசன் காட்டிய குறைந்த பட்ச அரசியல் நாகரீகத்தையும் 21 ஆம் நூற்றாண்டில் வாழும் காட்டுமிராண்டிகள் காட்டவில்லை.தமிழர்களின் தலைவனாக யார் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் 30 வருடங்களாக இருந்த கரிகாலனுக்குச் செய்த அவமானங்கள் மிகக் கொடுமையானது. இத்தனைக்குப் பிறகும் தமிழர்கள் சிங்களவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று எண்ணினால் அவர்கள் கனவுலகத்தில் வாழ்பவர்களாகவே இருப்பார்கள்.

உலகின் எந்தப்பகுதியிலும் இல்லாத காட்டுமிராண்டிகள் இலங்கையில் வாழும் சிங்களவனே என்பதற்கு இதை விட சாட்சியம் என்ன வேண்டும்..?

1 comment:

வெத்து வேட்டு said...

could it be because Ellalan fought like a man and died like a man..and praba was hiding behind women and kids and when the defeat was inevitable..he surrendered??????
could it be because Ellalan didn't use human sheild.. :)

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil