ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 22, 2009


ஒரு அறியாத சுவர்ப்பல்லியின் " கிச்சுக்..கீச்சு"


கவிஞர் தாமரையின் அண்மைய கவிதை "கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!" பல மட்டங்களில் கேள்வியை எழுப்பியிருக்கின்றது. சாம்பாலாய் எரித்துக் குவிந்த மண்ணிலிருந்து எழும் கோபம் இத்தனை காட்டமில்லையென்றால் தான் ஆச்சரியம் கூடு கட்டும். வாழ்க்கையின் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு சாம்பல் மேடாக நுரை தள்ளிப்போயிருக்கும் ஒரு இனத்தின் தொலைதூரத்தில் இருந்து பதறித் தவிக்கும் கோபத்தில் இத்தனை மட்டுமல்ல இதற்கும் மேலான காங்கைகள் இருக்க வேண்டும். மனிதர்களை மட்டுமல்ல மனிதத்தையே குழி தோண்டிப்புதைத்தவர்களை விலங்குகளாய் விழுந்து பிராண்டுவதில் என்ன தவறிருக்கமுடியும். மிருகங்களுடன் மிருகங்களின் பாசையில் பேசுவது, அப்படியாவது அவர்களுக்கு விளங்காதா என்ற ஆதங்கத்தால்தானே ஒழிய விலங்குப்பாசை எம் பாசை என்பதால் அல்ல.

மனிதர்களாய் இருந்ததால் தானே விலங்குகளால் எங்களைக் குதறிப்போட முடிந்திருக்கின்றது, குரல் வளையை கடித்து குருதியைக் குடிக்க முடிந்திருக்கின்றது. மனிதத்தைத் தொலைக்காததால்த் தானே இன்னும் விண்ணப்பங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றோம்.

கசாப்புக்கடையின் சுவற்றில் அப்பியிருக்கும் அப்பாவி முருகு என்ற பல்லி நச்சு நச்சு என்று கீச்சிட்டிருக்கின்றது. நானிருக்கும் வீட்டைப்பற்றி சொல்லப்போவதா? என்று அறுந்த வாலைப்பிடித்து ஆட்டி ஆட்டிப்பார்க்கின்றது.

கசாப்புக்கடையில் குடியிருப்பதும் இரத்தம் தெறித்த வடுக்களிடையே திளைத்து நழுவித் திரிவதும் குற்றமில்லையாம்.. கழுத்தறுக்கும் உயிர் குடிக்கும் கீழ்மைத்தொழில் செய்யும் இடமென்று சொல்வது சுட்டிக்காட்டுவது பிழையாம்.

சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு போர் மற்றும் அரசியல் காரணங்களைக் காட்டி அமெரிக்கா, ஐரோப்பிய சமூகம் மற்றும் பிரித்தானிய நாடுகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றன.

அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்தியா இன்னும் இன்னும் ஈழத்தமிழ் மக்களின் சாம்பலை எடுத்துப் பூசி ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. அதன் கோர முகத்தில் சீழ் வடிந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இனி கங்கையிலும் காவிரியிலும் உழைப்பாளர்களின் வியர்வை மட்டுமன்றி ஈழத்தவனின் கண்ணீரும் குருதியும் கலந்து சுவை கூட்டும்.

அப்படி சாபம்விட்டது எங்கள் தியாகத்தாய் மதிவதனியாக இருந்தால் கண்கள் கலங்க நெற்றி தரையில் பட கவிழ்ந்தே கிடந்திருப்போம். தனக்கு தெரிந்ததை, தனது தொழிலை மட்டும் கொண்டு, எழுத்தாலும், பேச்சாலும் மட்டும் ஆதரவை தெரிவித்துவிட்டு, இன்று தாமரை சாபமிடுவது சிறுபிள்ளைத் தன்மாகவே உள்ளது.


இது தான் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். செய்வதையும் செய்து விட்டு கொன்றவனுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு கொல்லப்பட்டவனுக்காகவும் அழும் ஓநாய்க் கண்ணீர்.

அப்பாவி வேடத்தில் இருக்கும் பாசிசவாதி. கோபம் இருந்தால் நெஞ்சுரம் இருந்தால்...அட நான் மட்டுமா கொலைகாரன் என்னோடு இன்னும் நான்கு பேர் இருக்கின்றார்களே..அவர்கள் பேரையும் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே.. அப்படியென்று புலம்பினால் நீங்கள் செய்த குற்றம், பிழை, கோழைத்தனம், அராஜகம், அத்துமீறல், அடாத்து எல்லாம் இல்லையென்று போய் விடுமா?

இரசாயனக் குண்டை உன் வீட்டில் போட்டு உன் குழந்தைகள் வெந்து கருகிப் போவதைப் பார்த்தால் தான் உனக்கு மனிதாபிமானம் என்ற ஊற்றுப்பிறக்குமென்றால் அது உனக்கு வேண்டாம்.

கோபம் இருந்தால், அதை முறையாக வெளிப்படுத்தும் நெஞ்சுரம் இருந்திருந்தால் கவிஞர் தாமரை, ஈழக்கொடுமைக்கான காரண, காரியகர்த்தாக்களின் பெயரைச் சொல்லி சாபமிட்டிருக்க வேண்டும். அது இலங்கையில் இருக்கும் இனப்புல்லுருவிகளில் ஆரம்பித்து பல ஆசிய ஐரோப்பிய நாடுகளைத் தொட்டு வெளிவந்திருக்கும்.


ஆனால், தாமரை சொல்லிச் சபித்திருப்பதோ என் நாட்டின் பேரைச் சொல்லி! அட காருண்ய தேசம் ..அகிம்சாநாடு..அன்பு விளையும் பூமி.. எப்படிச் சபிக்கலாம்... உன் நாடு அப்படியொரு நாடாக இருந்தால் யார் சபிக்கப்போகின்றார்கள்... நாங்கள் என்ன வேலையற்ற வெட்டிப்பயல்களா?

ஒரேயொரு கேள்வி கேட்கின்றேன்... பதில் தெரிந்து..சொல்லிவிட்டு வா? மீண்டும் பேசுவோம்.

இந்தியாவிற்கு ஈழத்து மண்ணில் என்ன வேலை?

தனிப்பகையோ, ராசதந்திரமோ குற்றம் புரிந்தது நான்கு பெரும் தலைகள் மட்டுமே..புண்ணாக்கு ..நான்கு தலைகளும் உன் நாட்டின் பேரைச் சொல்லித்தான் எல்லாம் செய்கின்றார்கள். உன் நாடு என்று ஒன்று இல்லையென்றால் இவர்கள் எல்லாம்..எங்கள் காலில் மிதிபட்ட கழிவுகள். அவர்களுடைய அதிகாரம் என்ற பல் கழட்டப்பட்ட ஒரு காலம் வரும். அப்போது அவர்கள் எங்களிடம் பாடம் கற்றுக்கொள்வார்கள்..


இத்தனை பேசுகின்ற நீ ..இதுவரை..ஏதாவது ஒரு கேள்வி உன்நாட்டைப் பார்த்து உன் மனிதரைப் பார்த்து கேட்டாயா?

ஏன் இப்படி கொலைவெறியாடினாய்? ஒரு இனத்தைக் கொன்று போட்டாய்..? அவர்கள் கனவைக் கலைத்துப் போட்டாய் என்று...

இராஜீவால் ஒரு தனுவைத் தான் உற்பத்தியாக்க முடிந்தது. இப்போது ஓர் இனத்தையே "தனு"வாக உனக்கெதிராக உற்பத்தியாக்கியிருக்கின்றாயே...

உறவுகளைத் தொலைக்காமல் இருக்கவேண்டும் கவிஞர் தாமரை,
என்பதே இந்த அப்பாவியின் ஆசை.
முத்தாய்ப்பாக பயமுறுத்தியிருக்கின்றது முட்டாள் பல்லி. இது தான் காருண்ய தேசத்தின் கடைசி சீக்கு....


குறிப்பு: மனிதத்தோடு இன்னும் பயணிப்பதால் கவிஞர் தாமரைக்கு எங்கள் ஆதரவை அள்ளிச் சொரிகின்றோம்.

2 comments:

அப்பாவி முரு said...

வாழ்த்துகள் இட்டாலி வடை

இட்டாலி வடை said...

வாருங்கள் அப்பாவி முருகு!
வாழ்த்துக்கள் இங்கு தேவையில்லை வாழ வழிவிடுங்கள் என்றுதான் கேட்கின்றோம்...தவறை உணர்ந்த பாங்கை காணவில்லை..

இந்தியா என்பது அங்கு வாழும் மக்கள் தான்.."அந்த நாலு பேர் அல்ல.."

"தாமரைச்செல்வியும் நீங்களும் கூட ..இந்தியா தான்... தான் பிறந்த நாட்டையே நேசிக்க முடியாது ..வெறுத்துப்போகும் மக்கள் பெருகுவது ஆரோக்கியம் அல்ல....
அது ஆட்சியில் பிழை இருக்கின்றது என்பதைத்தான் காட்டுகின்றது... மாற்றவேண்டியவர்கள் மக்கள்..

"மக்களால்...மக்களுக்காக மக்கள் ஆட்சி செய்வது தான் ஜனநாயகம்...."

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil