ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, October 23, 2009


அட தெண்டிகளே..


இப்படித்தான் கூப்பிடத் தோன்றுகின்றது. இன்றைய இணைய இடுக்கு எழுத்தர்களைப் பார்க்குந்தோறெல்லாம் இவ்வாறே கூப்பிடத் தோன்றுகின்றது.எழுதுவது பற்றிய பிரக்ஞையும் ஏன் எழுதுகின்றோம் என்ற தெளிவும் கொண்டுதானா எழுதுகின்றார்கள்.

'உங்கள் வரிகளில்
எந்த விபரீதமும் நிகழ்வதில்லை
உலகப் பாறாங்கல்லில் நசுங்கியவன் முனகலின்
தொலை தூர எதிரொலி கூடக் கேட்கவில்லை" என்ற கவிஞன் ஆத்மாநாமின் கவிதை வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகின்றன.

உலகை புரட்டிப்போடும் நெம்புகொல்களை முதுகு சொரியவென்றே பாவிக்கும் வேலையற்றவர்களா நீங்கள்.

மூக்கில் ஒரு குத்து வாங்கிய /விட்ட சுந்தரும் ரோசாவும் தொடர்சீரியல்களைத் தோற்கடிக்கும் நீளத்தில் கதை விட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இடுப்புப்பட்டியின் கீழ் அடிக்க ஆசைப்பட்ட சுந்தரும் தான் விரும்பும் அரசியல் செய்யும் ரோசாவும் மூக்கில் குத்து விடாது இருக்கும் மனிதாபிமானம் கற்கவில்லை.

"காத்திருக்கும் வரை நமது பெயர் காற்றென்றே இருக்கட்டும்
புறப்பட்டு விட்டால் புரிய வைப்போம் புயலென்று" என்று எழுச்சி கொண்டு மு.மேத்தா பாடிய இளைஞர்கள் இன்று புரியவைக்கின்றார்கள்.. தங்கள் எழுத்தில் சமுதாய அக்கிரமங்களை எதிர்த்து விடுவதெல்லாம் வெறும் ஏர்ர் (Air வடிவேலு பாணியில்). மற்றும்படி சமூக அக்கறை சிறிதுமற்ற தான் தோன்றித்தனம். மொக்கைகளைப் போட்டே முழுக்களத்தையும் ஆக்கிரமிக்கும் அயோக்கியத்தனம்.


சமூகத்தில் சரிப்படுத்த வேண்டியது எத்தனை இல்லை.எழுத்து எப்போதும் சமூகப்பிரக்ஞையுடன் இருக்க வேண்டும் அப்படியில்லாது ஒரு எழுத்தே இருக்க முடியாது. இருந்தாலும் அதனால் எந்த சுகமும் இல்லை.

பெரீய்ய அறிவு ஜீவிகளாகக் காட்டிக்கொள்ள நினைப்பவர்கள் தான் பெரும் முட்டாள்களாகக் காணப்படுகின்றார்கள். அப்படியொரு நடை முறை உதாரணம் அ.மார்க்ஸ்.

இந்திய அரசு இலங்கையில் நடைபெற்ற சமீபத்திய போரில் தலையிடாததற்கான காரணங்கள் பல.அவற்றைப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமன்று

http://www.shobasakthi.com/shobasakthi/?p=529 என்று இந்தக் கட்டுரையில் எழுதிச் செல்கின்றார். அதற்குப் பதிலை இவ்வாறு தருகின்றேன்.

சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகள் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டு போர்க்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி.

மார்க்ஸிஸம் படித்த அளவு மனிதாபிமானம் படிக்காத முட்டாள்கள் இவர்கள். இவ்வாறு திரிபுகளை மனமறிந்து செய்யும் இவர்களிடம் சமூகம் எதை எதிர்பார்க்க முடியும்.

இதே மனிதரின் கோமாளி நண்பன் இன்னுமொரு வக்கிரம். அதனை இராயாகரனின் வார்த்தைகளில்

"அரசியல் கோமாளிகள், இயல்பில் அலுகோசுகளாகவும் பவனிவருவர். அண்மையில் சுவிஸ் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், கோமாளி சுகன் தான் ஒரு அலுக்கோசு என்பதை இங்கு மீண்டும் வெளிப்படுத்தினான்.

இனவொடுக்குமுறையால் இன்று தமிழ்மக்கள் எண்ணிக்கை குறைந்து, அவர்கள் மிகச் சிறுபான்மை இனமாக மாறி வருவதை சுனந்த தேசப்பிரிய சுட்டிக் காட்டினார். இதன் போது, சுகன் மகிழ்ச்சி பொங்க கைதட்டி ஆர்ப்பரித்தான். தமிழ் மக்களை கொன்றும், அவர்களை நாட்டை விட்ட துரத்தியும் அழித்த அந்த அரசியலுக்காகத்தான், இந்த மகிழ்ச்சி. அலுக்கோசுகள் மட்டும் தான், கோமாளித்தனத்துடன் தங்களை இப்படி வெளிப்படுத்த முடியும்.


தமிழ் மக்களின் அவலத்தில், சுகனுக்கு இப்படி மட்டற்ற மகிழ்ச்சி. இக் கைங்கரியங்களை செய்தவர்களை போற்றியும் பாராட்டியும் நிற்கும் கோமாளி அரசியல். இந்த கோமாளி அரசியல் என்பது, தன்னை எல்லோரும் கதைக்க வேண்டும் என்ற, சுயநலத்தின் வக்கிரமாகும்."


இதே கோமாளி முன்னொரு பொழுதில் சிங்களத்தில் தேசீயகீதம் பாடி தான் ஒரு பபூன் என்று நிரூபித்திருந்தது வேறு கதை.

இவர்கள் யார்? எல்லோரும் இணைய எழுத்தாளர்கள் என்ன சொல்ல அல்லது காட்ட விரும்புகின்றார்கள். உன் அயலில் இருப்பவன் துன்பப்படுதல் கண்டும் எனக்கென்ன என்று போதல் உங்கள் வாழ்க்கையையே வெறும் குப்பைக் கழிவாய் தொலைப்பது போலத்தானே.

இதற்கு எதற்கொரு பேனாவும் எழுதும் தாளும்.

வியற்நாமை எதற்காகப் போற்றினோம். போற்றுகின்றோம்.. வல்லரசுக்கெதிராக போராடிய வீரஞ்செறிந்த போராட்டத்தினால் தானே. ஆனால் இன்று என்ன நடக்கின்றது?

பல ஆண்டுகளாக நீடித்து வந்த பயங்கரவாதத்தை இல்லாதொழித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, உலக நாடுகளுக்கு ஓர் முன்னுதாரணமாக திகழ்வதாக வியட்நாம் ஜனாதபிதி குயான் டிரிடி தெரிவித்துள்ளார்.

வியற்நாமியர்கள் போராடியது விடுதலைக்கு ..ஈழத்தமிழர்கள் போராடியது பயங்கரவாதிகளாகவா..?

என்ன ஒரு குரூரம். இவர்களின் கம்யூனிஸமும் மார்க்ஸியமும் இந்த இரட்டை நாடகத்தைத் தான் போதிக்கின்றதா? கயூனிஸ சீனா சிறிலங்காவிற்கு அள்ளிக்கொடுத்த ஆயுதங்கள் எதற்காகப் பயன்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களை மீட்கவா? அல்லது இன்னும் ஒடுக்கவா?


இடம்பெயர்ந்த மக்கள் விவகாரத்தை சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் சென்று, இலங்கை அரசாங்கத்தின் மீது அவர்களின் துரித மீள் குடியேற்றம் தொடர்பில் அழுத்தம் கொடுக்க இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கமியூனிச கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய கமியூனிச கட்சியின் தேசிய செயலாளர் டீ ராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.


30 ஆயிரம் மக்களும் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது இந்த ராஜா எங்கே போயிருந்தார். இவரென்ன நாடாளுவது ஆறுமாதாம் காடாளுவது ஆறுமாதம் என்றா அரசியல் செய்கின்றார்.

இதையெல்லாம் தட்டிக்கேட்க மாட்டீர்களா? இல்லை வெறும் தெண்டம் தான் என்றால் என்ன செய்ய முடியும்.

குறிப்பு: இணைய எழுத்தாளர்கள் தான் இப்படியென்றால் திரட்டிகள் ..அதை விடத் தெண்டம்..

தமிழ்மணமாவது ஒரு கடிதம் போட்டு தன்னிலையை விளக்கமளித்தது.

தமிழிஸ் இல் அந்த ஜனநாயகமும் இல்லை. கேட்டுக்கேள்வியில்லாமலே என் பதிப்புகளைத் திரட்டாது விட்டு விட்டது. தொடை நடுங்கிகளுக்கு எதற்கு பொது சேவை...

1 comment:

siruthai said...

மக்கள் போராட்டம்:(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)

தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள்.இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..அவர் அறிமுகபடுத்தியது தான் அகி’இம்சை’வழி என அதை பின்பற்றுதலை நிறுத்தி கொள்ள் வேண்டும். எங்கோ ஒரு சீக்கிய சாமியார் கொலை செய்யபட்டதால் மொத்த பஞ்சாப்பும் தீப்பற்றி கொண்டதே ஏன்? எவனோ செய்த கொலைக்கு பிரதமர் வரை மன்னிப்பு கேட்டரே? 50.000 மேற்பட்ட மக்கள் இந்தியா ஆசியுடன் கொன்றொழிக்கபட்டதிற்கு மன்னிப்பு கேட்பாரா?
மாற்றத்திற்கான வழி:

மக்கள் போராட்டம் என்பது இந்த இம்சை பாதையை விட்டு வெளியில் வரவேண்டும் டெல்லி வாலாக்கள் செவுளில் நாலு அறைந்தாற்போன்று இருக்கவேண்டும். தமிழக மக்கள் தங்கள் போராட்ட பாதையை மாற்ற வேண்டும்!

இந்தி அரசியல் வியாதிகள்
(கவலையளிக்கிறது-வருத்தமளிக்கிறது- நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்)

இந்த மேற்கூறிய வாசகங்களை படித்தாலே முழு அரசியல்வியாதிகள் ஆகிவிடலாம்.உண்மையில் இந்த இந்திகாரன்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்சனைக்கோ அல்லது தங்களது சமூகத்தவர்களுக்கு வெளி நாடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ இந்த சொல்லை உபயோகிப்பது இல்லை.


http://siruthai.wordpress.com/2009/06/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil