ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Thursday, October 22, 2009
சொதப்பும் அறிவு ஜீவிகளும் முள்ளாக நெருடும் முத்துவேல் கருணாநிதியும்
இலங்கையில் தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அனைத்திற்கும் இந்தியாவே மூல காரணமாகும். இந்தியாவின் நோய் பீடித்த பிராந்திய வல்லரசுக் கனவே ஈழத்தமிழ் மக்களின் அத்தனை இழப்பிற்கும் அரிச்சுவடியை எழுதி வைத்தது. இந்தியா என்ற மனச்சாட்சியற்ற தேசமும் அதன் முரட்டு அரசியல்வாதிகளும் அல்லாது பிறிதொரு தேசம் இந்தப்பிரச்சினையில் தலையிட்டிருந்தால் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும். இல்லாவிட்டாலும் இத்தனை துர்மரணங்கள் தவிர்க்கப்பட்ட முடிவாகவே அது இருந்திருக்கும். இத்தகைய மனிதப் பேரவலத்தை நாகரீக மனிதர்கள் வெறுத்து ஒதுக்கும் கொலைக்கலாச்சாரத்தை வெளிப்படுத்தியிருக்க முடியாது.அது அவ்வாறு தலையிட்ட நாட்டின் மனச்சாட்சி கலாச்சாரப் பாரம்பரியங்களின் மேன்மையைப் பறைசாற்றுவதாகவே இருந்திருக்கும். 21 ஆம் நூற்றாண்டின் உயர்வான மனிதர்கள் அதைத்தான் செய்வார்கள்.
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் தவிர்க்க முடியாது பல ஆண்டுகளாக படை நடாத்தும் உலக நாடுகள் அவ்வாறே செயல்படுகின்றன. உயர்வான மனித நேயத்திற்கும் மாட்சிக்கும் இவைதான் கண்முன்னால் உள்ள எடுத்துக்காட்டுகள்.
ஆனால் இந்தியா இது எதனையும் பின்பற்றவும் இல்லை..அதனைப்பற்றி கவலைப்படவும் இல்லை..மன்னிப்புக்கேட்கவும் இல்லை.
மாறாக அதை பெருமையுடன் அறிவிக்கின்றார்கள். துளிகூட கவலைப்படாத அறம் அறியாததவர்களாக இருக்கின்றார்கள்.
இந்தியாவைப் பொறுத்தளவில் அத்தகைய பெருந்தன்மையை அது எச்சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இந்திய பாகிஸ்தானிய உதயமாகட்டும், காஸ்மீரைப்படைகளை அனுப்பி வலுக்கட்டாயமாக உடைத்து தன்னுடன் இணைத்துக் கொண்டதாகட்டும் பின்னர் கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேசமாக உருமாற்றியதில் ஆகட்டும் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பி அட்டூழியம் செய்ததிலாகட்டும் இந்தியாவின் கரங்கள் எப்போதும் இரத்தத்தில் தோய்ந்தே சிவந்திருக்கின்றது.
காந்தியின் அகிம்சை தேசம் என்பதை எப்போதும் தவறாகவே அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். காந்தியின் அகிம்சைக்கு மதிப்பளித்தது பிரிட்டிஸ் இந்தியா. அகிம்சையின் உயர்வை மதித்து விட்டு விலகியவர்கள் அவர்களே. இன்றும் அவர்கள் அதே பெருமையுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அண்மைய உதாரணங்கள் அயர்லாந்து பேச்சுவார்த்தை மூலம் அதிகாரத்தை மாற்றிக்கொண்டது மற்றும் நிறவெறி தென்னாபிரிக்காவைப் பகிஷ்கரித்து மண்ணின் மைந்தர்களிடம் ஆட்சியை மாற்றிக்கொடுத்தது.
ஆனால் இந்தியாவோ காந்தியின் அகிம்சையால் அதை உணர்ந்தவர்களிடம் இருந்து நாட்டை மீட்டுக்கொண்டதுடன் அகிம்சையை மறந்துபோய் அரக்கக் குணம் கொண்டுவிட்டது. இல்லாவிட்டால் காந்தியின் அகிம்சைவழியில் போராடிய திலீபனும் அன்னை பூபதியும் எப்படி இறந்துபோயிருக்க முடியும்.
சீனா, பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகள் இலங்கை மீதான ஆதிக்கத்தைக் குறைக்கும் பொருட்டு போர்க்காலத்தில் சிறீலங்காவுக்கு இந்தியா ஆயுதங்களை வழங்கியது உண்மையே. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதுமட்டுமன்றி யுத்த காலத்தில் இந்தியா கப்பல்களையும் மற்றும் புலனாய்வு வசதிகளையும் இலங்கைக்கு வழங்கியதும் உண்மையே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி.
ஜனநாயக விழுமியங்களைப் பேணிக்கொள்ளும் எவரும் இத்தகைய சாட்டுகளை எப்போதும் கூறமாட்டார்கள். இந்தியாவைப் போலவே அமெரிக்கா, ஐரோப்பா,ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் கனவு இருக்கின்றது. தம் நாடுகளின் உற்பத்திகளை விற்பனை செய்யப் பரந்த சந்தைகளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள். தங்கள் சார்பு ஆதிக்கத்தை நிலை நாட்ட இராஜதந்திரத்தைப் பிரயோகிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எவரும் இந்தியா செய்ததைப் போல ஒரு இனத்தை அழித்துப் போட முன்வரவில்லை.
இந்தியாவை விட இந்நாடுகளே ஈழத்தமிழருக்கு அதிக அளவில் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கின்றன. பங்களாதேச அகதிகளின் அபரிமித வருகையே அந்த நாட்டின் மீதான தன் தலையீட்டிற்குக் காரணம் என்று கூறினார் இந்திரா அம்மையார்.அது ஒரு வகையில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும். ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தில் அந்த தார்மீக உரிமையையும் இந்தியா இழக்கின்றது.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அக்கறை செலுத்த வேண்டியதும், விரும்ப வேண்டியதும் அனைவரினதும் பொறுப்பாகவே நான் கருதுகிறேன்.
இந்தியா மட்டும் செய்யக்கூடியதல்ல இதற்கிடையில் இலங்கையின் நீண்டநாள் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவில் மாத்திரம் செய்யக்கூடிய விடயம் என்ற ஒன்றை தனியாக அடையாளப்படுத்த முடியாது உள்ளது.
நிச்சயமாக இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய நோக்கில் சமாதானம் நிலவப் பாடு படவேண்டியது நம் அனைவரின் கடமையுமாகும்.
இத்தகைய உண்மையை உணராத நாகரீகப் பெருக்கற்ற பேட்டை ரவுடியின் போக்கிலேயே இந்தியா செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. மனித நாகரீகமே வெட்கித் தலை குனியும் முன்னுதாரணங்களாக இந்திய உபகண்டம் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த பரந்த உலகில் முன்னைநாள் பிரிட்டிஸ் இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளே பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றன.
பாகிஸ்தான் இந்தியாவில் வந்து குண்டுவைத்தது போர் செய்வது பயங்கரவாதம் என்றால் இந்தியா இலங்கையில் வந்து தமிழகளைக் கொன்று குவித்ததும் பயங்கரவாதமே. ஈழத்தமிழரை இரண்டு முறை கொன்று போயிருக்கின்றது இந்தியா.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கமே அக்கறை செலுத்தி தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அது,தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினரிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எனவும், இதற்கு முன்னர், இலங்கையின் முப்படையிலும், இனரீதியாவும், சமய ரீதியாகாவும் ஒதுக்கப்படாமல், சமூகத்தின் அனைத்து அங்கங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.
ஈழத்தமிழர் விடயத்தில் இந்தியா மட்டும் தலையிடாது இருந்தால் அமெரிக்க மேற்கு நாடுகளின் கூட்டு நாகரீகமாக எடுத்துச் சொல்லி சிங்கள அரசை சரியான திசையில் நெறிப்படுத்தியிருக்கும். எத்தனையோ நாடுகளில் சமாதானத்தை ஏற்படுத்திய நோர்வேயின் வழிகாட்டுதலில் அமெரிக்க ஐரோப்பிய ஆளுமையுடன் இலங்கைக்கும் சரியான தீர்வைக் கொண்டு வந்திருக்கும்.
இவை எதுவுமற்று இன்று ஈழத்தமிழரின் குருதியும் கண்ணீரும் இந்தியாவாலேயே படிப்படியாகக் கட்டியெழுப்பப்பட்ட கபடத்தனமாகும்.இன்று இந்தியாவின் அருகாய் அமைந்த ஒரே காரணத்திற்காக ஈழம் அவதிப்படுவதைப் போலவே இந்தியாவும் ஒரு நாள் இலங்கையின் அருகில் அமைந்த ஒரே காரணத்திற்காக அழுது புலம்பும். ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பும் என்பது வள்ளுவன் வாக்கு.
தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் நடவடிக்கைகள் முத்துவேல் கருணாநிதி போன்ற தமிழக அரசியல் வாதிகள், இலங்கை தமிழர்களை வைத்து, அரசியல் நாடகங்களை அரங்கேகற்றி வருகின்றனர்.
அவர்கள் முகாம்களில் சிக்கயிருக்கின்ற மக்கள் தொடர்பில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அல்லர் தமிழக மக்களின் மத்தியில் ஓர் மாயையை ஏற்படுத்தும் வகையிலேயே, தமிழக நாடாளுமன்ற குழுவை இலங்கைக்கு அனுப்பிவைத்தனர். இதன் அடிப்படையிலேயே இலங்கையின் முகாம்களுக்குள் இந்திய நாடாளுமன்ற குழு அனுமதிக்கப்பட்டனர் என்றார்.
இந்தியா என்ற நாட்டில் இத்தகைய சாக்கடைகள் ஓடுவது என்பது ஒன்றும் ஆச்சரியம் அல்லவே. அதனால் கருத்துகளும் இல்லை.
குறிப்பு: தடித்த எழுத்தில் இருப்பது அனைத்தும் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி அவர்களால் சொல்லப்பட்ட சொதப்பல்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment