ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, October 2, 2009


புலிகளும் கப்பலும் ஆகாய விமானமும் புருடாவும்
புலிகளின் தலைவர் இறந்ததாகச் சொல்லப்பட்டதில்.... ஒரு பழியிலிருந்து தப்பித்தார். இல்லையெனில் 'பசி' தம்பரம் சென்னையில் இருந்து கோயம்புத்தூரிற்குப் பறந்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறிற்கு ஒரு 'வீரப்புலி' காரணமாக்கப்பட்டிருக்கலாம். இந்தியாவின் ஈழத்தமிழ் மக்கள் மீதான கொலைகாரவேடத்திற்கு முண்டுகொடுக்க இந்த நூலும் திரிக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டு தூணாக்கப்பட்டிருக்கும்.

கூடங்குளம் கடல் பகுதியில் நின்ற மர்மக்கப்பலும் புலிகளின் சொந்தக் கப்பலாக்கப்பட்டு இந்தியாவின் இராஜதந்திரம் இந்து மாகடலையே திரை போட்டு மூடிவிட்டிருக்கும். புலிகள் தொலைந்ததால் உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஊமைக்கோட்டான்கள் தவிக்கின்றன.

இந்தியாவின் அரசியல் கொள்ளையர்களும் திராவிட மொள்ளைமாறிகளும் இனியாவது உண்மை பேசத்தலைப்படுவார்கள் என்று நம்புவோம்.

சோனியாவிற்கும் அவரின் அடிமுட்டாள் மகன் ராகுலிற்கும் புலிகளால் இன்னும் ஆபத்து இருப்பதாக புலனாய்வு செய்து கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு சின்னத் திருத்தம். இந்தியக் குண்டுகளால் நாசமாகிப் போன ஈழக்குடும்பங்களில் மிஞ்சியிருக்கும் ஒரு சின்னக் குழந்தையும் முதல் எதிரிகளாகப் பார்ப்பதென்னவோ இவர்களைத் தான். இந்தக் கொடியவர்கள் அல்லது இந்தக் குழந்தைகள் சாகும் வரைதன்னும் இந்தக் குரோதம் இருந்து கொண்டுதான் இருக்கப் போகின்றது.

தேர்தல் காலத்தில் தமிழீழம் கிடைக்கப் "பாடுபட்ட" ஜெயலலிதா இப்போது தன் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளவே பாடுபடவேண்டியிருக்கின்றது. அரசியல் வசீகரம் எல்லாம் இழந்து வெறும் 'சொத்தை'யாக கொடநாடு போய் குடைசாய்ந்து விட்டது அந்த வண்டி.

அந்த இடத்தை நிரப்ப 'கப்டன்'பிரமாண்டம் எடுத்து டில்லி சென்றிருக்கின்றார். டில்லி சென்றும் அவரின் 'ஸ்டண்ட்' புத்தி என்னவோ மாறவில்லை. டில்லி இலங்கைத் தூதரகத்துள் பூந்து விளையாடியிருக்கின்றார். டில்லி தமிழகம் இல்லையென்று யாராவது நினைவு படுத்துங்கள் இல்லையெனில் ஹரியானா சிறையில் 'களி'சாப்பிட வேண்டி வரும்.

ஹரியானா என்றதும் இன்னுமொரு செய்தி ஞாபகம் வருகின்றது. ஹரியானா மாநிலம் கர்னால் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சமூக சேவகர் ஆனந்த் பிரகாஷ் சர்மா என்பவர், ஆணுறையை தனது தேர்தல் சின்னமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.எயிட்ஸ் விழிப்புணர்வு பற்றி பிச்சாரம் செய்யும் சமூக சேவகர் இவர்.

இவ்வாறு சமூகப்பிரக்ஞை உள்ள மக்கள் இருக்கும் இடத்தில் தான் மூடச் செயல்கள் செய்யும் முட்டாள்களும் இருக்கின்றார்கள். காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு குடங்குடமாகப் பாலை ஊற்றும் மூடர்கள் இருப்பது என்னவோ தமிழ் நாட்டில் தான். ஒரு வாய்ப் பாலுக்கு அழும் குழந்தைகளின் சாபம் இவர்களைச் சும்மா விடப்போவதில்லை.

சீனாவின் 60 ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்தைப் பார்த்து இந்தியா அலேட் ஆகியதோ இல்லையோ அதையே வைத்து காசு பார்க்க ஒரு புரோக்கர் தயாராகி விட்டான். சீனாவை சமாளிக்க கூடுதலாக 50 சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானங்கள் தேவை என இந்திய விமானப்படை மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தாகி விட்டது.சீனாவுக்கு எதிரான ஆயுதங்களாக இந்தியா, சுகோய்-30 போர் விமானம் மற்றும் 3,500 கிமீ தூரம் அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-3 ரக ஏவுகணைகளை ஆகியவற்றையே அதிகம் நம்பியுள்ளது.

சீனாவிடம் இருக்கும் ஆயுதங்களை வைத்துப் பார்க்கும் போது இந்தியா இன்னும் 'கற்காகாலத்தை' விட்டு வெளியேறவே முயற்சிக்கவில்லை என்றே தோன்றுகின்றது. அரசியல் வாதிகளுக்கு அழவேண்டியதை எல்லாம் அழுது திட்டம் போடுவதற்குள்ளேயே உண்டு இல்லையென்றாகிப் போகின்றது.

பேசாது இந்தியா ஈழம் பாகிஸ்தான் காஸ்மீர் போன்ற நாடுகளுடன் கோலி விளையாடிக்கொண்டிருக்கத் தான் இலாயக்கு. வல்லரசுக் கனவெல்லாம் வம்படிதான் போலும்.

1 comment:

Anonymous said...

///காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி சிலைக்கு குடங்குடமாகப் பாலை ஊற்றும் மூடர்கள் இருப்பது என்னவோ தமிழ் நாட்டில் தான். ஒரு வாய்ப் பாலுக்கு அழும் குழந்தைகளின் சாபம் இவர்களைச் சும்மா விடப்போவதில்லை.///
Sure..........

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil