ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, October 2, 2009


சூடு சொரணை போயேபோச்..- கருணாநிதி


ஈழத்தமிழர்களின் படுகொலையின் போது உலகமே அழுது நிற்க எந்தக் கவலையுமில்லாது காங்கிரஸுடன் கைகோர்த்து நின்ற கருணாநிதியைப் பார்த்து காறித் துப்பாதவர்களே கிடையாது. எத்தனை ஏச்சு..? எத்தனை வசை...? எல்லாவற்றையும் பார்த்தும் கேட்டும் எப்படி ஒரு மானமுள்ள மனிதனால் சும்மா இருக்க முடிகின்றது... மக்கள் முன்னால் "மனித"னாக நடமாட முடிகின்றது என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது.

அதற்கும் இப்போது விடை கிடைத்திருக்கின்றது.

"இனி எனக்கு இருக்கிற வயதுக்கு நான் இன்னும் எவ்வளவு காலம் வாழ போகிறேன். என்னை பொறுத்தவரை யாருக்கும் பதிலுக்கு பதில், விமர்சனத்திற்கு விமர்சனம், கண்டனத்திற்கு கண்டனம் என சொல்லிக்கொண்டிருக்க போவதில்லை. என்மீது தாக்குதல் நடந்தாலும், எத்தனையோ கணைகள் ஏவப்பட்டாலும் என் வழியில் நான் போய்க்கொண்டிருப்பேன். வந்த கணைகள் தேயலாம். என் உள்ளம் தேயாது. அம்புகளின் கூர் மழுங்கலாம், என்னுடைய கூர்மை மழுங்காது. இந்த உறுதியோடு என்னுடைய பயணத்தை தொடர்ந்து நடத்துவேன்."

இனி திருந்துவதற்கு வாய்ப்பே இல்லையென்று தன் வாயாலேயே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். கருப்புக்கண்ணாடி கழட்டார்க கருணாநிதி. இவரையே நம்பி தன் ஆயுளுக்கும் உழைத்த உடன்பிறப்புகள் தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் மயக்கக் கண்ணாடியைக் கழட்டி..தன் குடும்பத்திற்காக எப்போது உழைக்கப்போகின்றார்களோ?


இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் உள்ள சிறிலங்காவின் தூதரகம் மீது தாக்ககுதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. கும்பலாக வந்த சுமார் 15 பேரைக்கொண்ட குழு ஒன்றே இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 3:30 நிமிடமளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கும்பலாக வந்தவர்கள் தூதரகக் கட்டடத்தின் மீது கற்களை வீசித் தாக்குதலை நடத்தியதில் தூதரகக் கட்டத்துக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது


விஜய காந்த் தலைமையில் டில்லியில் உண்ணாவிரதமிருக்கின்றபோது இத் தகவலும் வருகின்றது. அண்ணன் படங்களில் நடிப்பதைப் போலவே இடையிடையே "கப்டன்" ஆக மாறிவிடுகிறாரோ..?

ஈழத்தமிழர்கள் யாரும் புளகாங்கிதம் அடைந்து விட வேண்டாம். இது இந்திய அரசியல். தமிழக மீனவர்கள் கொலை தடுப்பு வைப்பிற்காக கப்டன் கோட்டில் கிடைத்த தீர்ப்பு.

ஈழத்தமிழர் படுகொலையை அரங்கேற்றிய காங்கிரஸுடன் அண்ணன் கூடிக்குலவும் நாள் அதிக தூரம் இல்லை. கப்டனின் ஈழத்தமிழ் இரசிகர்கள் தான் ஏமாறப்போகின்றார்கள். "கப்டன்" சரியான "எம்டன்" என்பதை விளங்கிக் கொண்டு.

காஸ்மீர் தனி இராட்சியமாகப் பிரியப் போகின்றது. இந்தியா விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது நடக்கப்போவதை வெளிச்சக்திகள் விரும்புகின்றன. அதன் முதற்படி காஸ்மீர் மக்களுக்கான தனி விசாத் திட்டத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

இதே வேளை தொடரும் நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு காஸ்மீரையும் சுதந்திர நாடுகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவது போல தனிப்பிரதி நிதியால் அடையாளப் படுத்தியுள்ளது.

சீனாவின் அறுபதாவது ஆண்டுக் கொண்டாட்டங்களின் பிரமாண்டத்தைப் பார்த்து உலகமே மூக்கில் விரலை வைத்துள்ளது.இனி உலகின்.... இல்லையென்றாலும் இந்துசமுத்திர தூரகிழக்கு ஆசிய நாடுகளின் பெரியண்ணன் சீனாதான்.

இந்தியாவிலிருந்து அருணாசலப் பிரதேசத்தை சீனா எடுத்துக் கொள்ளும் போது காஸ்மீரையும் பிரித்து விடும் என்று நம்பலாம். முரண்டு பிடித்தால் இந்தியாவிற்கு முட்டிக்கால் தேயப்போவது தான் மிச்சமாகும்.

1 comment:

மணிஜி said...

பின்னல்...நீ என்னைப்போல் ஒருவன்

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil