ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, October 21, 2009


மக்களின் ஆதரவு இல்லாத புலிகள்- மார்க்ஸிய அறிஞர் சிவசேகரம்


புலி விழுந்தாலும் விழுந்தது. இப்போது புத்தகப் புழுக்களும் புல்லுருவிகளும் கதை விடும் காலமாகிவிட்டது. அறிவுஜீவி அண்ணாத்தைகளும் சமயம் வாய்த்ததென்று இப்போது தமது மூளைகளைத் தூசி தட்டி வேலை கொடுக்கத் துவங்கி விட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் முப்பதினாயிரம் மக்கள் செத்துத் தொலைந்தபோதும் மூச்சுவிடாது பதுங்கியிருந்தவர்கள் புலி சேடம் இழுத்துச் செத்துப் போனபோது புலியின் நலிவு பற்றி ஆராய்ந்து கதை விடுகின்றார்கள்.

"ஆயுத வலிமையை நம்பியதே புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம். ஆரம்பத்தில் மக்களின் பேச்சைக் கொஞ்சம் கேட்டவர்கள் ஆயுத வலிமை வந்த பிறகு மக்களின் பேச்சைக் கேட்பதில்லை. இது புலிகளின் தோல்விக்குக் காரணம்" என்றும்

"எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்திலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் எனப் புலிகள் உத்தரவிட்ட போது அதற்கு மக்கள் சம்மதம் இல்லாமலேயே அமுல்படுத்தினார்கள். தற்போது கிளிநொச்சியிலும் இதேதான் நடந்தது. இப்படி விடுதலைப் போராட்டத்தின் எந்த அம்சத்திலும் மக்களின் பங்களிப்பு இல்லாமலேயே இருந்தது. புலிகள் ஆணையிட்டால் மக்கள் நிதி தர வேண்டும். ஆர்ப்பாட்டங்களுக்கு வர வேண்டும். தேர்தலைப் புறக்கணிப்பதோ பங்கேற்பதோ செய்ய வேண்டும். எந்தப் பிரச்சினையிலும் மக்களின் கருத்து விருப்பம் கேட்டு நடப்பதில்லை. தாங்கள் ஈழத்தைப் பெற்றுத் தரும் சக்தி எனவும், அதற்கு மக்கள் கட்டுப்பட்டவர்கள் என்பதே புலிகளின் செயல்பாடாக இருந்தது. இதனால் மக்களிடமிருந்து போராட்டம் அந்நியப்படத் தொடங்கியது. பிரபாகரன் முடிவெடுத்தால் சரியாக இருக்கும் அவர் என்றைக்குமே தோல்வியடைய மாட்டார் என்பதே புலிகள் மக்களிடம் உருவாக்கிய சிந்தனையாகும்."
என்றும் பொல்லாத புலிகளின் தோல்விக்கான காரணத்தைக் கட்டுடைத்திருக்கின்றார்.\

நான் அவரிடம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்று இருக்கின்றது.

"மக்கள் ஆதரவு இல்லாமல் தானா முப்பதாண்டுகள் பிரபாகரனால் உங்களால் கொட்ட முடியாத குப்பையைக் கொட்ட முடிந்தது?"

அதே போல நாடு கடந்த (அரசு)புலி வியாபாரம் செய்யும் ருத்திர குமாரிடமும் ஒரு கேள்வி.

உங்களுக்கு மக்கள் ஆதரவு இல்லையாமே. நீங்கள் மக்கள் சொல்லைக் கேட்பதில்லையாமே? அப்போ யாருக்காக இந்த பர்கரும் பிசாவும் கலந்த சூவ்லாக்கி?

"புறக்காரணங்களைப் பொறுத்தவரை சீனாவும், இந்தியாவும் ஆயுதங்களை வழங்கியதைக் குறிப்பிடலாம். மேலும் சீனாவின் பெயரைச் சொல்லி இந்தியாவின் பாவத்தைக் கழுவும் போக்கும் இங்கு இருக்கிறது."

ஏ வெண்ணெய்களா! தமிழ்க் கூட்டமைப்பு ..இது உங்களுக்குத்தான். சீன ஆக்கிரமிப்பைத்தடுக்க இந்தியா இலங்கைக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும். உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என இனியும் கூக்குரலிடாதீர்கள். இரண்டு பேரும் களவாணிகள் தான் . மார்க்ஸியப் பேரறிஞர் சிவசேகரம் சொல்லிட்டாரு.

"கருணாவின் துரோகத்தைப் பொறுத்தவரை அதை ஒரு தனி மனித நிகழ்வாகப் பார்க்க இயலாது"

அப்படித்தான் முழுத்தமிழினமும் நினைத்துக்கொண்டிருக்கின்றது. யோவ் கருணா... படித்த 'பெருந்'தலைகள் மார்க்ஸிய முதலைகள் ரஜபக்சேயுடன் நெருங்காது பார்த்துக்கொள்ளும். இல்லேன்னா சந்திரகாந்தனை பிச்சு விட நீர் நினைப்பது போல உம்மையும் பிய்த்து பாசிக்குடாவில் கரைத்து விடுவார்கள்.


"புலிகளைப் பொறுத்தவரை எதிரியைக் குறைத்தும் தமது வலிமையைக் கூட்டியும் மதிப்பிட்டார்கள். கிழக்கு மாகாணம் முற்றிலும் வீழ்ந்த பிறகாவது, அவர்கள் தங்களது நிலையைப் புரிந்து கொண்டு தற்காப்பு நிலைக்குப் பின்வாங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் இந்தத் தோல்வியையும் மக்கள் அழிவையும் தவிர்த்திருக்கலாம். புலிகளின் சுத்த இராணுவவாதக் கண்ணோட்டமே இந்த அழிவைத் தேடிக் கொண்டது."


மூணு பிளேன் வைத்துக் கொண்டு கல்பாக்கம் அணுஆலையை அடிக்க வாறார்கள் என்று பாஸ்டன் பாலா பூச்சாண்டி காட்டியதைப் போல கொசு மருந்தடிக்கும் டாங்கியை வைத்துக் கொண்டு நீங்கள் பீலா விட்டதைத்தான் கண்டு சொல்லியிருக்காக.


"இப்படி அவர்கள் போர் முறையை மாற்றிக் கொள்ளாததற்கு இன்னொரு காரணம், அவர்கள் மேற்கு நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் உள்ள தங்களுடைய ஆதரவாளர்களின் போராட்டம். தேர்தல் காரணமாக ஒரு கௌரவமான பேச்சுவார்த்தை மூலம் போரை நிறுத்த முடியும். அதன் மூலம் புலித்தலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று தவறாக நம்பியதும் ஆகும். அமெரிக்கப் புதிய அதிபர் ஒபாமாவைக் கூட அவர்கள் நம்பினார்கள். இறுதிக்காலத்தில் நோர்வேயையும் அவர்கள் அளவுக்கதிகமாக நம்பினார்கள். இந்தத் தவறான முடிவுகளாலும் அவர்கள் பெரும் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது."


எலே! பயலுவளா, அறிஞர் சொல்லுறாரு ...ஐந்து நாடுகள் சப்போட் பண்ணுகிறார்கள் என்று அகலக் கால் வைக்காதீங்க.. அவங்க முப்பதினாயிரம் நம் மக்கள் சாவும் போதும் இருந்தாங்க இப்போது மூணு இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் காயும் போதும் இருக்காங்க. அவங்க ஒத்தைக்கால் கொக்கு, ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை வாடி நிற்கும் வல்லரசுக் கொக்குங்க...
பார்த்து மக்களுக்குள் மக்கள் ஆதரவுடன் வரவேண்டும் சூரியனைச் சுட்டெரிக்கும் நெருப்பு..பர்கர் சாப்பிடும் நுனிநாக்கு ஆங்கிலிஸ் பேர்வழிகளை நம்பியல்ல.


"இவர்கள் பிரபாகரன் இறந்ததை அறிவிப்பதற்கு ஏன் அஞ்சுகிறார்கள். வெளிநாடுகளில் புலிகள் திரட்டியிருக்கும் கோடிக்கணக்கான டொலர் பணம் இப்போது பிரபாகரன் உயிரோடு உள்ளதாகக் கூறும் பிரிவினரிடம் உள்ளது. பிரபாகரன் இறந்து விட்டார் என்று சொன்னால், இந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என மக்கள் கேட்பார்கள். அதைத் தவிர்க்கவே இவர்கள் பிரபாகரன் இறந்ததை மறுக்கிறார்கள். பிரபாகரன் மீண்டும் வரும் போது போர் செய்வதற்கு இந்தப் பணம் தேவைப்படும் என்று சொல்லலாமல்லவா? "

யோவ்! பதில் சொல்லுங்கையா..இல்லாவிட்டால்

"இதனால் இறந்து போன பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்துவதைக் கூட இவர்கள் தடுக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்."


இந்தக் குற்றச் சாட்டை ஒத்துக் கொள்ளுங்க..No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil