
ஈழத்தமிழ் மக்களின் படுகொலையைப் பகிரங்கமாகக் கண்டித்து வெளிக்கொணருவதில் பெரும் பங்காற்றி வருபவர் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான தலைவர் திருமதி நவநீதம் பிள்ளை.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை ஒன்றை நடத்துவதற்கு சிறிலங்கா அரசு இணங்காதமை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
"சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப் போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தொடர்ந்து விடுத்த கோரிக்கைகள் பலவற்றுக்கு சிறிலங்கா அரசு பதிலளிக்கவே இல்லை" என ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான தலைவர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து அனைத்துலக விசாரணை வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் கூட சிறிலங்கா அரச தலைவரிடம் கோரிக்கை விடுத்தார் என நவநீதம்பிள்ளை பிறசல்சில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்தார்.
"இந்த விடயம் குறித்துத் தான் பொறுப்புடன் நடந்துகொள்வார் என சிறிலங்கா அரச தலைவர் ஐ.நா. பொதுச் செயலாளருக்கு உறுதி அளித்திருந்தார். அதனை அவர் நிறைவேற்றுகிறாரா என்பது குறித்து அறிவதற்கு பொதுச் செயலாளருடன் நாங்கள் நெருங்கிச் செயற்படுகின்றோம்.
உறுதியளித்தபடி சிறிலங்கா அரச தலைவர் இந்த விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்பதை நாங்கள் அறியவேண்டும்" என்றார் நவநீதம்பிள்ளை.
அனைத்துலக பட்டினிக்கு எதிரான நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் கிழக்குப் போரின்போது கொல்லப்பட்டமை குறித்து சிறிலங்கா நடத்திய விசாரணைகளைச் சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை, அந்தக் கொலைகள் மிக மோசமானவையாக இருந்தபோதும் அது குறித்து தேசிய அளவில் நடத்தப்பட்ட விசாரணைகள் கைவிடப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டு கூறினார்.
"மிக முக்கியமான குற்றங்கள் குறித்து அவர்கள் நடத்திய விசாரணைகள் குறித்து இதுவரை நல்ல பதிவுகள் எவையும் இல்லை. தற்போது எந்த வகையிலான விசாரணை முறைகள் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும் என்பது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளருடன் நான் ஆராய்ந்து வருகின்றேன். ஆனாலும் இவற்றை சிறிலங்கா அரசு நிராகரிக்கின்றது என்பதுதான் நான் இறுதியாகச் சொல்லக்கூடியது" என நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து அறிந்துவரும் பொருட்டு அந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு நவநீதம்பிள்ளை திட்டமிட்டுள்ளாரா என ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்குப் பதிலளித்த அவர், தான் சிறிலங்கா சென்றால் தன்னை அனுமதிக்கப் போவதில்லை என்று ஐ.நா. பொதுச் செயலாளரிடமும் பொது அரங்குகளிலும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது என்றார்.
தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் கவிஞர் தாமரை

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பவர் நீங்கள்.. போருக்குப் பின்னும் மீள்குடியேற்றம் கனவாக, முகாம்களில் ஈழமக்கள் துயருற்று இருக்கிறார்கள். அவர்கள் வாழ்நிலை சீராவதற்கு ஏற்படும் தாமதம் பற்றிய உங்கள் கருத்து என்ன?
உலகம் முழுதும் இலங்கை அரசைக் கண்டனம் செய்து கொண்டிருக்கிறாங்க. இந்தியாவோ மற்ற நாடுகளோ சொல்லி இலங்கை கேட்பதில்லை. போருக்குப் பின் இலங்கை அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பது எல்லா மத்திய, மாநில, உலக அரசுகளுக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் முன்பே தெரிந்த விசயம் தான். அதை இன்று தான் தெரிந்துகொண்டது போல அரசுகள் நாடகம் ஆடுகின்றன. இந்தியாவே இலங்கை அரசைப் பாதுகாப்பது போல் இருப்பதனால் தான் உலகநாடுகள் தயங்குகின்றன .. போர்குற்றங்களுக்காக ஹிட்லரைச் சேர்ந்தவர்கள் பிற்காலத்தில் ராணுவ நீதிமன்றத்தால் தண்டனை பெற்றது போல இன்று உடந்தையாக இருப்பவர்கள் அனைவரும் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்.
நேற்று (11.10.09)காலை என் கணவரும் முன்னின்று நடத்திய தமிழினப் பாதுகாப்பு மாநாடு நாள் முழுதும் நடந்தது. காலை பேரணியில் மூவாயிரம் பேர் கலந்துகொண்டாங்க..மாலை பொதுக்கூட்டம் இருந்தது . கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுத்தோம். அதில் நானும் ஒரு தீர்மானம் வாசித்தேன். இலங்கையை நாம் வற்புறுத்த வேண்டுமெனில் பொருளியல் தடை விதிக்கலாம். தனிமைப்படுத்தலாம். தமிழ்த் திரைப்படத்துறை சேர்ந்தவர்கள் படப்பிடிப்புக்கு இலங்கை போகாமல் இருக்கவேண்டும்.
இந்தக் கூட்டத்தில் ஒன்றும்..?

No comments:
Post a Comment