
மனம் பாதிக்கப்பட்டவர்கள்
ஈழ விடுதலைப் போரினை ஒடுக்குவதில் சீனாவும் இந்தியாவும் நான் நீ என்று போட்டியிட்டு சம அளவில் உதவியதை அனைவரும் அறிவோம். சிங்களம் கேட்டதையும் விட கூடுதலாகவே அவை வழங்கின. அதற்கு கை மாறாக சீனாவிற்கு திருகோணமலை அம்பாறை உள்ளிட்ட பிரதேசங்களில் துறைமுகம் அமைக்கும் விரிவாக்கும் உரிமையையும் இந்தியாவிற்கு மன்னார் குடா கடலில் எண்ணெய் அகழும் உரிமையையும் தாரை வார்த்துக் கொடுத்தது.மேலதிகமாக கிளிநொச்சியையும் அதனைச் சூழந்த பிரதேசத்தையும் பயிர்ச்செய்கை மற்றும் ஆராட்சிகளை மேற்கொள்ளவும் வீடு வாசல் குடியிருப்புக்களை இழந்த தமிழ் அகதிகளை நவீன கொத்தடிமைகளாக்கி நடாத்தவும் உரிமையை அளித்துள்ளது.
இனி தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் என்பது இவ்வாறான உரிமைகளைப் பெற்ற சீன இந்திய அரசுகளின் வழிப்படுத்துதலிலேயே இடம் பெறும்.நவீன அடிமைகளாகக் குறைந்த விலைக் கூலிகளாக தமிழ் மக்களை முடக்கிப் போடுவதே அவர்கள் நோக்கம். அதை அடைவதற்கான முன்னேற்பாடுகளுடனேயே ஈழப்போரின் இறுதி யுத்தம் நடாத்தப்பட்டு சனத்தொகை குறைப்பு நடைபெற்றது.
இது இந்தியா, சீனா போன்ற நாடுகளினால் மட்டுமல்ல உலகின் அனைத்து வல்லரசு நாடுகளினதும் செயற்பாடாக இருந்து கொண்டிருக்கின்றது. வளங்களை உறிஞ்சுதல் மற்றும் குறைந்த கூலித் தொழிலாளர்களை ஆயுளுக்கும் உருவாக்கல் என்பதுவே அவர்களின் வளர்முக நாடுகளின் மீதான கரிசனையாக இருக்கின்றது. அவ்வகையிலேயே உள்நாட்டுக் கலவரங்கள் தூண்டப்பட்டு போர் வலிந்து திணிக்கப்படுகின்றது.
ஒரு பேச்சுக்கு அவர்கள் கூறுவதைப் போலவே அபிவிருத்தித்திட்டங்கள் என்றே வைத்துக் கொண்டாலும் சிங்களப்பகுதிகள் ஏற்கனவே அபிவிருத்தியடைந்து செல்வத்தின் உச்சத்தில் இருக்கின்றனவா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆகவே யுத்தத்தின் பின்னான இத்தகைய தாரைவார்ப்புக்களை நாம் எதிர்பார்த்தே இருக்க வேண்டும்.இதில் ஆச்சரியம் என்னவென்றால் சீனாவின் ஆதிக்கத்தை வெறுத்து இந்தியாவின் ஆதிக்கத்தை விரும்பி வரவேற்கத் துடிக்கும் தமிழ் பேசும் கூட்டமைப்பு எம்.பிக்கள் தான். சீனாவைப் போலவே இந்தியாவும் இலங்கையைப் பொறுத்தளவில் அன்னிய சக்திதான்.
அவர்கள் இருவரும் கூட்டாகவே கொலை செய்தது நம்மக்களைத்தான். இதிலென்ன பக்க சார்பு வாதம். சீனாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்த இந்தியா இலங்கைக்கு அதிகம் உதவ வேண்டுமென்ற கோரிக்கையை துர்முகன் கருணாநிதியின் அடிப்பொடிகளிடம் வைத்துள்ளனர் இவர்கள்.
ஈழத்தமிழரைப் பொறுத்த அளவில் இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன? என்ற நிலமைதான். இங்கு இராவணனும் நல்லவனல்ல.. இராமனும் நல்லவனல்ல என்ற நிலமைதான். பிறகு ஏன் இவர்கள் இந்தியாவிற்கு காவடி தூக்குகின்றார்கள்?
அவர்களின் சுய இலாபம் தவிர வேறு ஒன்றும் இதிலில்லை. இன்னும் பழைய பாணி இரத்தத்தில் பொட்டு வைக்கும் அரசியலை நம்பிக்கொண்டிருந்தார்கள் என்றால் ஏமாறப் போவது இவர்கள்தான்.
தமிழகத் தமிழனைப்போல் ஈழத்தமிழன் செய்நன்றி கொன்றவரை இலகுவில் மறந்து விடுபவனல்ல. நக்கிப் பிழைக்கும் ஈனர்களுக்கு கற்பூரம் காட்டும் ஈனப்பிறவியும் அவனல்ல.
இதைத் தெரிந்து கொண்டே இந்தியாவிற்கு ஜால்ரா அடிக்கும் கூட்டம் நொந்து போவார்கள்.

சைக்கோ கோமாளிகள்
இனி செய்தி:
சீன ஆதிக்கத்தை தவிர்க்க இலங்கைக்கு உதவுங்கள் : தமிழக எம்.பி.,க்களிடம் வலியுறுத்தல்
சீன அரசு, திரிகோணமலையில் துறைமுகம் அமைப்பது இந்தியாவுக்கு ஆபத்து என, தமிழ்பேசும் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழக எம்.பி.,க்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்த இலங்கை அரசுக்கு சீன அரசு ஆயுதம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்தது. அதற்கு கைமாறாக இலங்கை அரசு சீனாவுக்கு துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சீன அரசு திரிகோணமலையில் பிரம்மாண்ட துறைமுகம் அமைத்து வருகிறது. இந்த துறைமுகம் அமைப்பதற்கு, 5,000 கோடி ரூபாய் இருந்தாலே போதும். அப்படி இருக்கும்போது சீனா ஏன் தேவையில்லாமல் இவ்வளவு செலவு செய்கிறது என சர்ச்சை கிளம்பியுள்ளது.
தற்போது வியாபாரம் செய்ய பண உதவி, சினிமா துறையில் முதலீடு, ராணுவ அதிகாரிகளுக்கு விருந்து என சீன அரசு பெரியளவில் செய்து வருகிறது. ராணுவ அதிகாரிகள் இந்தியாவைப்போல் அல்லாமல் எல்லோரிடம் நெருங்கி பழகும் தன்மை உடையவர்களாக உள்ளனர்.இதை சீன அரசு பயன்படுத்தி அடிக்கடி இலங்கை ராணுவத்திற்கு விருந்து கொடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு பிரதமர் சென்று வந்ததை சீன அரசு கண்டித்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், சீனாவுக்கும் உரசல் நீடித்து வருகிறது.தற்போது தமிழர்களின் ஆதரவு இயக்கமான விடுதலைப்புலிகள் வீழ்ச்சியைத் தொடர்ந்து சீனா விரைவில் ஆதிக்கம் செலுத்தும் என இலங்கையில் உள்ள தமிழீழ அமைப்புத் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, சீன அரசு எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்துவற்கு முன், இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகள் செய்தால் தான், சீன அரசை நிராகரிக்க வாய்ப்பு ஏற்படும். இதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை மத்திய அரசிடம் எடுத்துக் கூறுமாறு தமிழ்பேசும் கூட்டமைப்பு தலைவர்கள் தமிழக எம்.பி., க்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment