ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, October 21, 2009


பூண்டு பொறுக்கப்போன "பாண்டி"கள்


"பாண்டி" என்பது நம்ம தமிழ்நாட்டுத் தமிழருங்களுக்கு மலையாள ஷகீலாக்கள் வைத்த 'பெத்த'பேரு. ரொம்ப அழகான பேரு. இவங்க என்னடான்னா மீனு கொடி வைத்த பாண்டிய மரபில் வந்தவங்கன்னு ஒரு கெத்தப்பில மிதந்து கிட்டிருந்தாங்க.

முள்ளிவாய்க்காலில முப்பதினாயிரம் தமிழங்க சாகடிக்கப்பட்டபோது சதுரங்க காய் நகர்த்தியது இதே கொழல்புட்டு கேரள இந்திய அரசின் சிறப்பு தூதர்களான வெளியுறவுத்துறை அமைச்சக செயலாளர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் .

ஐ.நாடுகள் சபையில் இருந்து நம்பியார் என்ற நச்சுப்பாம்பு. அப்போதெல்லாம் ஈழத்தமிழரின் ஈனக்குரல் இந்தப் "பாண்டி"கள் காதில் விழவேயில்லை. ஒரே இந்தியா..ஒற்றுமையான இந்தியா என்று ஈனக்குரலில் தேசியம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து தமிழ்நாட்டுப் "பாண்டி"களைக் கடிக்கும் அளவில் அவர்களின் பல்லில் இரத்த சுவை ஊறிவிட்டது.

இன்று முல்லைப்பெரியாறு அணைகட்டும் விவகாரம் என்று புயல் கிளப்பி மத்திய அரசின் ஆணையையே தமிழகத்திற்கு எதிராக வளைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வளவு கடந்தும் மத்திய அரசில் ஒட்டுண்ணியாக இருக்கும் திருடமுடியாத மூளையுள்ளவர்கள் (தலைக்குள் ஒரு மண்ணும் இல்லாதவர்கள்) கழக ஆட்சியும் கருப்புக்கண்ணாடி கழட்டாத அதன் தலைமையும் விழித்துக் கொள்ளவே இல்லை.விழித்தும் விழிக்காத ஒரு மப்பில் கமிஷனுக்காக கடமையாற்றும் கருமங்கள் காத்திருக்கின்றன.

இதற்குள் உதார் மன்னன் ராமதாஸ் சவுண்டு கொடுத்திருக்கின்றார். இந்தியாவை ஆள்வது மத்திய அரசா? இல்லை கேரள தேசமா?வென்று. பதில் சொல்லுங்கடா 'பாண்டி'ப்பயலுகளா?
மரம்வெட்டி ராமதாசுக்கு இருக்கும் மனம் 'மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் அன்னார்' பாண்டிகளுக்கு இல்லையே.

தமிழ் மொழி மாநாடு நடத்த வழியத்த போக்கிரி கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்துவது சாவதற்கு முன்னால் மக்களிடம் பிரியாவிடை கேட்பதற்கா என்ற கேள்வி இப்போது மக்கள் மனங்களில் தொக்கி நிற்கின்றது. கட்சித்தலைவர்களுக்கு எழுதிய வரவேற்புக்கடிதங்களுக்குப் பதில் போன வேகத்திலேயே வந்திருக்கின்றது. வரமாட்டோமென்று. சிவப்புச்சட்டைக்காரர்கள் மட்டும் அடுத்த தேர்தலுக்கான கூட்டை இப்போதே கருப்புக்கண்ணாடி கழட்டா கருணாநிதியுடன் ஏர்படுத்தியுள்ளார்கள்.

பாவம் ஏமாறப்போகின்றார்கள். கருப்புக்கண்ணாடி மீதுள்ள மக்கள் வெறுப்பு சிவப்புச்சட்டையையும் கருப்பாக்கப்போகின்றது.

அதுசரி இந்தப்'பாண்டிகள்' எப்போது உணர்வு கொண்டு எழுந்திருக்கப் போகின்றார்கள். கூவம் சாக்கடையில் உழன்றாலும் அத்தரிலும் சந்தணத்திலும் மிதக்கும் வட இந்தியரின் 'நாம் இந்தியர்கள்' கோஷத்தில் கரைந்து விடப்போகின்றார்களா?

'பாண்டிகள்' பூண்டு பொறுக்குவதை விட்டு எப்போது உலகத்தைப் பார்க்கப் போகின்றார்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil