ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, October 2, 2009


50 கோடி இந்தியரை அழிக்க பாகிஸ்தான் கங்கணம் ?இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிட்சர் விருது பெற்றவரும், பிரபல வரலாற்றாரியருமான டெய்லர் பிராஞ்ச் இந்த நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் கார்கில் போர் காலத்தில் நிலவிய நிலவரம் குறித்து அப்போதைய அதிபர் கிளிண்டனிடம் இந்தியத் தலைவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் டெய்லர்.

இந்த நூலின் எட்டாவது அத்தியாயத்திற்கு பாக்தாத்தில் எட்டு ஏவுகணைகள் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதில்தான் இந்தியா - பாக் அணு ஆயுதங்கள் குறித்து எழுதியுள்ளார்
டெய்லர்.அதில், அமெரிக்க அதிபர் கிளிண்டனை நான் சந்தித்தபோது என்னிடம் அவர் கூறுகையில், பாகிஸ்தான் இந்தியாவின் மீது அணுகுண்டு வீசினால் பதிலடி தர இந்தியா தயாராக இருப்பதாக இந்தியத் தலைவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

ஒரு வேளை அப்படி நடந்தால் இந்தியா நிச்சயம் பாகிஸ்தானை ஒட்டுமொத்தமாக அழித்து விடும். அவர்களிடம் அந்த சக்தி உள்ளது.

அதேசமயம், இந்தியாவிலும் 50 கோடி பேர் வரை மாண்டு போவார்கள் என்று கிளிண்டன் கூறியதாக டெய்லர் தெரிவித்துள்ளார்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil