ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 10, 2009


கனிமொழியின் பிக்னிக்கிற்கு கண்ணீரில் மிதக்கும் ஈழ்த்தமிழன்தான் கிடைத்தானா?
கருணாநிதி – தி கிரேட் கோமாளி

திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் அந்தக் கட்சி எம்.பி.க்கள் கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஏ.கே.எஸ்.விஜயன், ஹெலன் டேவிட்சன் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன் ஆகியோரும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் அந்தக் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவனும் சென்னையில் இருந்து இலங்கைக்கு சனிக்கிழமை புறப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்கு விமானம் மூலம் இலங்கை கிளம்பிச் சென்றனர்.

இந்த நிலையில், திமுக அணி எம்.பி.க்களின் இலங்கைப் பயணம் குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கேள்வி எழுப்பினர்.

இந்தக் குழு மத்திய அரசு சார்பில் அனுப்பப்படும் அதிகாரப்பூர்வ குழுவா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பினர். இதனால், பிற கட்சி எம்.பி.க்கள் ஏன் அந்தக் குழுவில் இடம்பெறவில்லை என்ற கேள்வி எழுந்தது.

இதற்குப் பதிலளித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

""நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினை அனுப்ப வேண்டுமென்று காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று, அந்தக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களை இலங்கை சென்று நிலைமைகளை அறிந்து வர மத்திய அரசின் வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.

இது அரசாங்கத்தின் சார்பில், அரசு செலவிலே அனுப்பப்பட்ட குழு அல்ல. அரசு சார்பில் குழு அனுப்பும் போதுதான் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும், துறையின் பிரதிநிதிகளையும் அனுப்ப வேண்டும்.

இப்போது செல்லும் குழுவிலே உள்ள உறுப்பினர்களுக்கான விமானக் கட்டணம் போன்ற செலவுகளைக் கூட அந்தந்த கட்சிகள்தான் ஏற்றுக் கொண்டுள்ளன.

"இந்தக் குழுவினர் அரசின் சார்பில் அனுப்பப்படவில்லை' என்று முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.


குறிப்பு: அப்போ என்ன இழவுக்கடா ..அனுப்பினீங்க?

7 comments:

Anonymous said...

குழுவில் மத்திய அமைச்சர் ராசா இடம் பெறவில்லை. கனிமொழியின் பிக்னிக் என்று சொல்வதை வன்மையாக கனிமொழி சார்பில் கண்டிக்கிறேன்

இட்டாலி வடை said...

அப்போ அரவிந்தம் அம்போ தானா? வாழ்க கருநாயகம்....

Anonymous said...

//அப்போ அரவிந்தம் அம்போ தானா? வாழ்க கருநாயகம்....///

அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது. அது வேறு இது வேறு

இட்டாலி வடை said...

//அது பாட்டுக்கு அது இது பாட்டுக்கு இது. அது வேறு இது வேறு//

அப்பனுக்கு பில்ளை தப்பாம பொறந்திருக்கு...

அப்பன் எட்டடி பாய்ஞ்சா...

நீங்க எங்க பாயுறீங்க... அதுக்கெல்லாம் கொடுப்பின வேண்டும்....

Anonymous said...

கருணாநிதியை நாய் என்று சொல்லி நாயை இழிவு படுத்த நான் விரும்பவில்லை. தமிழகம் இப்படி கேவலமான ஈனப்பிரவியை இதுவரை பார்த்ததில்லை.

Anonymous said...

//தமிழகம் இப்படி கேவலமான ஈனப்பிரவியை இதுவரை பார்த்ததில்//

ஏன் பார்த்ததில்லை.மஞச துண்டைவிட கீழ்த்தரமான மூஞ்சி இருந்தது;அது பெரிய வெள்ளை தாடி ஒட்டப்பட்ட மூஞ்சியாகும்.

Anonymous said...

பொதுவா யாரையும் திட்ட எனக்கு மனசு வராது. ஆனா அந்த குடும்பத்த எவ்ளோ வேணாலும் திட்டலாம்.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil