
பொன்னாடை போர்த்தும் பொறுக்கிகள் கூட்டம்
இலங்கையில் முள்வேலி முகாம்களில் உள்ள தமிழ் மக்களை பார்க்கும்போது வேதனை தாங்க முடியவில்லை. அவர்களை விடுதலை செய்து, சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அங்கேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்படுமேயானால், பருவமழை நேரத்தில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.
இலங்கையில் உள்ள முள்வேலி முகாமில் தமிழர்கள்.
இவைகளையெல்லாம் இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இலங்கை அதிபர் ராஜபட்சயை சந்தித்தபோதும் இந்த நிலைமைகளை அவரிடத்திலே கூறியிருக்கிறோம். இதை மனிதாபிமான உணர்ச்சியோடு அணுகி, ஆவன செய்வதாக அவர் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார். அந்த மனிதாபிமான உணர்ச்சிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறார்கள் என்பதை, முகாம்களில் உள்ள தமிழர்களை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதில்தான் தெரிந்து கொள்ள முடியும்.
யூ டூ திருமா
மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 567 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் "மெனிக் பண்ணை' முகாமில் மட்டும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 56 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பு தெரிவிக்கிறது.
இந்த மக்களை நாங்கள் நேரில் சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு முகாமிலும் எங்களை சூழ்ந்து கொண்டு பல்வேறு குறைகளைச் சொன்னார்கள். "உணவு சரியாக வழங்கப்படவில்லை; தண்ணீர் கிடைக்கவில்லை; குழந்தைகளுக்கு பால் கிடைக்கவில்லை' என தெரிவித்தார்கள். தங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர்கள் கெஞ்சினர்.
பொதுவாக அவர்களில் பல பேர் மாற்று உடை இல்லாமல் ஒரே உடையைப் பல நாட்களாக அணிந்திருப்பது தெரியவந்தது. தண்ணீர் இல்லாமையால் குளிக்கவும், மலம் கழிக்கவும் அவர்கள் சிரமப்படுவதைத் தெரிவித்தனர். ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களுக்கு எதிரே, மிக நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை வழியெங்கும் கண்டோம்.
மேலும் ஓரிரு மாதங்கள் அந்த மக்கள் அங்கே தங்க வைக்கப்பட்டிருந்தால், அவர்கள் மிக மோசமான நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும். சதுப்பு நிலக் காடுகள் என்பதால் பருவமழை தொடங்கிய பின் அவர்கள் நிலைமை மிகவும் கொடுமையாக இருக்கும்.

மீட்சியே இல்லாத ஏதிலிகள்
அமருவதற்கு கூட வசதிகள் இல்லாமல் போய்விடும். தொற்று நோய்த் தாக்குதல் பரவக்கூடிய நிலை ஏற்படும். குழந்தைகள், சிறுவர்கள், வயோதிகர்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உயிரிழக்க நேரிடும்.
3 comments:
They are not porrukies but s-o-b
தமிழனும் அவனோட பழக்க வழக்கமும்.... கருமம், கருமம்!
நாம தீவாளி கொண்டாடுவோம் சார் ... நமக்கு என்னா ...?
கழுதை எப்போதுமே கழுதைதான் - புலியாக மாற முடியாது!
Post a Comment