ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, October 19, 2009


திருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம்

கருணாநிதியின் உளியின் ஓசை வந்தாலும் வந்தது...மூளியின் தோசை..கூனியின் ஆசை என்று தலைப்புகளைச் சூடி படைப்புலகம் "லக்கியச்சேவை" செய்ய ஆரம்பித்துவிட்டது.

மூன்று மணித்தியாலம் நான்கு மணித்தியாலம் உண்ணாவிரதம் இருந்த கருணாநிதியின் புகழ் பூத்த திருப்பு முனைப் போராட்டங்களில் புரையேறித் தவித்த மக்களைக் காமடிப்பீசுகளால் கொல்லவென்றே தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கு அனுப்பிவைத்தார்கள்.

கனிமொழி டீச்சரம்மா வேலை பார்க்க எல்லோரும் கைகட்டி வாய் பொத்தி மாணவர்களாய். வாய்ப்பந்தலிலே தோரணங்கட்டும் திருமாவிற்கு மகிந்த போட்ட சூட்டில் உள்கோவணம் நனைந்த கதை வேறு. கேட்கும் நிருபர்களிடமெல்லாம் "அது மகிந்தவின் காமடி" என்று அள்ளிவிட்டுக் கொண்டாலும் அரண்டு போயிருப்பதாக அவர் தோஷ்த்துகள் சொல்லிக்கொள்கின்றார்கள். மகிந்தவின் கையில் துப்பாக்கியில்லையோ திருமாவின் தலை தப்பியதோ...

முள்ளுக்கம்பி வேலியும் அடைக்கப்பட்ட மக்களும் வரண்டு போன உலகசமூகத்தின் ஈரச்சுரப்பை சுரக்கவைக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்யும் போது காங்கிரஸ் எம்.பி அழகிரி முள்ளுக்கம்பி வேலி முகாம்கள் சர்வதேச தரத்திற்கு குறையாது இருப்பதாக வெந்த புண்ணில் வேல் பாச்சியிருக்கின்றார்.

திருமா வாய் திறக்க முடியாது "கருணாநிதியே சொல்லுவார்" என்று நழுவியிருக்கின்றார்.
கருணாநிதி என்ன சொல்லப்போகின்றார். அது தான் அவர் கழகக் கண்மணிகள் சொல்லியிருக்கிறார்களே. தி.மு.க என்றால் திருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம் என்பதா பொருள்.திருடவே முடியாத (மூளையுள்ளவர்கள்) கழகம் வெளிவிட்ட போஸ்டர் இதற்குள்தான் அபி அப்பா, லக்கிலுக் அனைவரும் இருக்கின்றார்கள்.

மூளையிருந்தால்தானே திருடுவதற்கு என்று நீங்கள் முணுமுணுப்பது கேட்கின்றது. நான் இந்த ஆட்டத்திற்கு வரவில்லை

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil