
3 லட்சம் தமிழர்களை முகாம்கள் என்ற பெயரில் முடக்கி வைத்துள்ளது. அவர்களுக்கு உரிய அடிப்படை சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருட்கள், மருந்து என எந்த நிவாரணமும் முறையாக தரப்படுவதில்லை.
மிக மிக மோசமான அவல நிலையில் அவர்கள் தவித்து வருவதாக பல்வேறு மனிதாபிமான அமைப்புளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கொழும்பில் நடந்த அழகிப் போட்டி ஒன்றை பார்த்து ரசித்துள்ளார் கருணா. அவருடன், அவருடைய பெண் உதவியாளரும் ஜோடியாக சேர்ந்து சென்றான்.

மேலும், அழகிப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு பெண்ணுடன் போஸும் கொடுத்துள்ளான் கருணா
இலங்கையில் அகதிகள் முகாம்களில் தினமும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயமாகிவிடுகின்றனர். ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் இவர்கள் திரும்பவுதில்லை என ஆசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில் நடந்த இனப்போரில் ராணுவம் அப்பாவி தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. தற்போது போர் முடிந்த நிலையில் இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அடிப்படை வசதிகள் கூட சரிவர கிடைக்கவில்லை. ஒருவர் தங்க கூடிய இடத்தில் 10க்கும் மேற்பேட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமை குறித்து பல்வேறு நாட்டை சேர்ந்த அமைப்புகளும் வருத்தம் தெரிவித்து வருகிறது.
1 comment:
thoroki.
Post a Comment