ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, October 21, 2009


தலைவர் நமக்கு கற்பித்த ஒன்று 'தலை' இன்றி போராடுவது எப்படி


ஒரு மண்ணும் புரியவில்லை. அல்லது புரியாதது போன்ற நடிப்பில் கிடைத்ததைச் சுருட்டி ஏப்பமிடும் முனைப்பிலா இவர்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றார்கள்? நாடு கடந்த அரசு நட்டுவாங்கம் என்று ஒரு கோஷ்டி பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கின்றது. ஒண்ணரை லட்சம் வருகை கிடைத்தது என்று 'நாம் தமிழர் 'என்று ஒரு சீமான கோஷ்டி அலட்டிக்கொண்டிருக்கின்றது. லட்டு ஜிலேபி சாக்கடையில் கொட்டியிருந்தாலும் ஆயிரம் எறும்பு மொய்க்கத்தான் செய்யும். அதற்காக அங்கேயே குடித்தனம் நடத்தத்தான் முடியுமா? என்ன?

ஈழத்தமிழனைச் சாகடித்து நடு முதுகில் ஏறி மிதிக்க நாய் நரிக்கூட்டம் எல்லாம் கருணை வேஷம் கட்டிக்கொண்டுதான் இருக்கின்றன.

தமிழனை வெல்லமுடியாத வேக்காட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அரை வேக்காடுகளாக அலையும் சிங்களவன் ஒருபுறம் இந்திய மாகடலில் குதிரை முட்டை விற்க முயலும் இந்தியா ஒரு புறம் சீனா சூனா பெரியண்ணன் அமேரிக்கா அல்லக்கை அன்னக்காவடி என்று வரிசை கட்டி வரும் இவர்கள் ஒருபுறம் இருக்க சொந்தமக்களின் நாடித்துடிப்பே தெரியாது பேட்டை ரவுடியாகத் திரிந்தவர்களும் செத்துத் தொலைந்து போயும் இன்னும் இவர்களுக்கு புத்தியே வரவில்லை என்பது தான் உலக மகா சோகம்.

ஐந்து நாடுகள் ஆதரவு தந்தது என்று கறுப்புக்கோட்டுக் களவாணிகள் நாடு கடந்த அரசு நட்டுவாங்கம் என்று கதை விட்டுத் திரிகின்றார்கள். யார் அந்த ஐந்து நாடுகள்? முள்ளிவாய்க்காலில் முடங்கிப் போய் அழுது அரற்றி அனியாயயமாய் இறந்து போன அத்தனை மக்களையும் கண்டும் காணாது கண்ணை மூடிக்கொண்ட பெட்டைக்கோழிகள் தானே இவர்கள்.

இவர்களை நம்பி மீண்டும் இறங்குவது எத்தனை மடைமைத்தனம். இன்னுமொரு பொழுதில் இவர்கள் கைவிட மாட்டார்கள் என்பதில் கருப்புக்கோடு உருத்திரகுமாருக்கு என்ன உத்தரவாதம் தந்திருக்கின்றார்கள்?

இன்னும் எத்தனை காலம் உன் சோற்றுக்கும் சுகத்திற்கும் இந்த மக்களை ஏமாற்றுவதாக உத்தேசம்?

தலைவராவது வன்னிக்காட்டில் நின்று கடைசிவரை போராடினார்? நீ எந்த லோகத்தில் நின்று போராடப்போகின்றாய்? முயல் பிடிக்கிற நாயை மூங்சிய பார்த்தா தெரியும்னு நம்ம அப்பத்தா அட்டிக்கடி சொல்லுவா. முப்பதினாயிரம் மக்களும் மூச்சுத்திணறி நின்றபோது உங்கள் சாமர்த்தியமும் சங்கு வித்தைகளும் எங்கே போயிருந்தன.

விட்டுவிடுங்கள். தங்களை மீட்க நம் மக்கள் தங்களுக்குள்ளேயே ஒரு தலைவனை உருவாக்கிக்கொள்வார்கள். காந்தி கந்தையுடன் திரிந்தது இந்தியத் தெருக்களில் தானே தவிர..ஆபிரிக்காவின் அரக்கு மாளிகைகளிலல்ல.

பத்மநாதன் தொடக்கிவைத்தார். அதுவே அவரின் ஆப்பானது. இன்னும் எத்தனை பேருக்கு களி தின்ன்னும் பாக்கியமோ. இன்னும் போராடும் குணமிருந்தால் அந்த மண்ணில் இருந்து போராடவேண்டும். அந்த மக்களின் குரலில் பேச வேண்டும். வேண்டாத விளம்பரங்கள் தொல்லையைத்தான் தரும்.

மண்ணிலிருந்து போராடிய அறிவு ஜீவிகளையும் அரசியலாளர்களையும் வேட்டு வைத்துத் தீர்த்தபோது இந்த உணர்வு இருந்திருக்க வேண்டும்.இன்னும் இதை விரிவாகச் சொல்ல வேண்டிய அளவு "மூளை'இல்லாதவர்களா நீங்கள்?

புலம் பெயர்ந்த புலிவீரர்கள் மட்டுமல்ல எலி வீரர்கள் ஏதிலி வீரர்கள் தலித் வீரர்கள் பெண்நிலைவாதிகள் பேய் விசரனுகள் ..எல்லோருக்கும் இது சமர்ப்பணம்.

1 comment:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil