ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 31, 2009


ஓரு கவிதையும் ஒரு கதையும்



"குற்றவாளிகள்" என்ற கவிதை கல்பற்றா நாராயணன் எழுதியது .
செய்தவர்களின்
குற்றத்தை நிரூபிப்பது
பெரிய வேலையொன்றுமல்ல
அவர்கள் போகும் தூரத்திற்கு
எல்லையுண்டு

மறைத்து வைத்தவைக்கு
அருகிலிருந்து அவர்கள் விலகுவதில்லை
சிறு வேறுபாடுகள் இருந்தாலும்
அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்பது
உறுதி
ஒன்றுமில்லாவிட்டாலும்
அவர்களுக்கு எல்லாம் தெரியுமல்லவா?

செய்யாதவர்களால்தான்
சிக்கலே
அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை
அவர்கள் பதுங்கி நிற்குமிடத்தில் தோண்டிப்பார்த்தால்
ஒன்றும் கிடைப்பதில்லை
ஒருவகையில்லும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை

நிரபாரதிகளைப் போல
கல்மனசுக்காரர்கள் வேறில்லை



கவிதையை வாசித்த போது என் மக்கள் அவலமும் துயரமும் தான் நினைவில் வந்தது. அது துயரத்தையோ அவலத்தையோ நேரிடையாகச் சொல்லும் கவிதையுமல்ல.. அனாலும் குற்றவாளிகளின் மனங்களைப் படம் பிடிக்கும் கவிதை. படுகொலையின் பின்னால் சிங்கள அரசும் அதன் அமைச்சர்களும் ஆடும் அவலத்தை அது படம் பிடிக்கின்றது.

ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவோ என்ன ஆதாரத்தை வைத்திருக்கின்றதோ இல்லையோ ஆனால் சிங்கள அரசு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பதில் கூறத் தொடங்கியிருக்கின்றது. அரண்டு மிரண்டு அதிரடி ஆட்டத்தில் புகுந்துள்ளது. ஏனென்றால் படுகொலையின் சரித்திரத்தை ஆதியோடந்தமாக அறிந்தது அதுவொன்று தானே.

அதுவா? இதுவா? என்று அது சந்தேகித்துச் சந்தேகித்தே தன்னை வெளிப்படுத்தி விடும்.சிங்கள ஜனாதிபதி ராஜபக்ஷேயும் பிரதமர் இரட்ணநாயக்கேயும் பாவங்களைத் தொலைக்க கோயில் கோயிலாக படையெடுக்கின்றார்கள். அவர்கள் செய்த பாவங்களையும் அதற்குண்டான சம்பளத்தையும் அறிந்தவர்கள் அவர்கள் தானே..

அதைப் போலவே நம் மக்கள். ஒன்றும் அறியாதவர்கள். ஏன் கொல்லப்படுகின்றோம் என்று அறியாமலேயே கொல்லப்பட்டவர்கள். ஏன் தண்டிக்கப்படுகின்றோம் என்று அறியாமலேயே தண்டிக்கப்பட்டவர்கள்.

என்ன குற்றம் என்று அறியாமலேயே முட்கம்பி வேலிக்குள் திணித்து விடப்பட்டவர்கள். அவர்களின் பெருமூச்சு கொலையாளிகளைச் சித்தம் கலங்க வைத்து பைத்தியமாக்கிவிடும். ஹிட்லரும் முசோலினியும் நல்ல சாவைக் கண்டவர்கள் அல்ல.அவர்களால் கொல்லப்பட்டவர்களின் ஆத்மாக்களால் குதறப்பட்டவர்கள். அதுவே இன்று சிங்கள அரசிற்கும் அதற்கு முட்டுக் கொடுத்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.(தமிழினத் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் 87 வயதுக் கிழம் ஒன்றுக்கும் இத்தகைய அவலச் சாவே காத்திருக்கும்) சாவைக்கண்டு பயந்து திரிதலே சாவை மிஞ்சிய சுமையாகிவிடும்.

இந்த அப்பாவி மக்களின் அவலங்களை எண்ணி வாய் திறவாது வாழாவிருக்கும் மூடர்களைப் பார்த்து கே.ஜி சங்கரப் பிள்ளையின் வார்த்தைகளிலேயே கேட்கின்றேன்.

"சகோதரரே, ஒரு நாய் கூட அச்சத்திலும் வாய் திறந்து கத்தாமல் (தான் கண்டதை,நினைத்ததை சொல்லாமல்) விடுவதில்லை..அப்படியிருக்க மேலான மானுடராகிய நாம் அச்சத்தின் காரணமாக, அலட்சியத்தின் காரணமாக, அடிமைத்தனத்தின் காரணமாக, இன்னும் எத்தனை காலத்திற்குத் தான்,

"நொண்டிச்சாக்குகளின் சிதையின் மீது நம் வாழ்நாள் நீளும் எரிந்தடங்கலைச்.."
செய்து கொண்டிருக்கப் போகின்றோம்.

Friday, October 30, 2009


வச்சுட்டான்யா ஆப்பு


சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்: திவயின தகவல்

சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான புலிகளின் பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அரவிகன்,
அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன் பாலசிங்கம்,
உலக ஈழ இளைஞர் அமைப்பின் அண்டுவேல்மன்,
கனடாவைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி,
பிரித்தானியாவைச் சேர்ந்த இளங்கோ,
கனடாவைச் சேர்ந்த இளங்கபிள்ளை, அர்ஜூன எதிர்வீரசிங்கம், வினிபரா எனப்படும் ரஞ்சித் பெர்னாண்டோ,
சுவீடனைச் சேர்ந்த ஜெகன் மோகன்,
நோர்வேயைச் சேர்ந்த ஜெயசந்திரன், தெதியவன்,
மலேசியாவைச் சேர்ந்த நாகலிங்கம்,
லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கருணாகரன்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சதியன் குமரன்,
கனடாவைச் சோந்த லுக்காஸ் பாலசிங்கம் (நடேசனின் சகோதரர்),
பரிசின் மணிவண்ணன்,
பிரான்ஸைச் சேர்ந்த நடராஜா மதிதரன்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலந்திரன்,
கனடாவின் டேவிட் பூபாலபிள்ளை,
அமெரிக்காவைச் சேர்ந்த ராஜ் ராஜரட்னம்

உள்ளிட்டோரின் பெயர்களை அவர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி அதிகாரி, முன்னாள் சட்ட மா அதிபர் ஆகியோரும் இந்த புலிகள் வலையமைப்பில் அங்கம் வகித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டல், புலிகளின் இணைய தளங்களை செயற்படுத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமரன் பத்மநாதனின் இந்த அம்பலப்படுத்தலுடன் சில புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக திவயின செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:
http://www.tamilwin.com/view.php?2e20QHRcb33h9Eg04dcuWnZdb0eD7G024d4kYp7200bBnLWSde22E2hP3cc4Vj06ae

Wednesday, October 28, 2009


சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது!




தமிழீழ மக்கள் மீதான இன அழிப்புப் போரை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்த ராஜபக்ஷக்களுக்கு சனி பார்வை பெரும் அச்சத்தைக் கொடுத்து வருகின்றது. இந்திய ஆதரவு என்ற பொங்கு சனி பார்வையில் அனைத்தையும் விருப்பம்போல் நிறைவேற்றிய ராஜபக்ஷக்களுக்கு இப்போது போதாத காலம்தான்.

மேற்குலகிலிருந்து வெளிவரும் அறிக்கைகளும், அறிவுறுத்தல்களும், கண்டனங்களும் ஒரு பக்கம் கலக்கத்தைக் கொடுத்தாலும், இருப்புக்கே ஆபத்தாக சரத் பொன்சேகா வயிற்றில் புளி கரைத்து வருகின்றார். வளர்த்த கடா மார்பில் பாய்வதற்குத் தயாராகி வருவதான செய்திகள் ராஜபக்ஷக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.

சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை சிங்கள கடும்போக்கு அரசியல் கட்சிகளான ஜே.வி.பி.யும், சிஹல உறுமயவும் வரவேற்றுள்ளன. ஈழத் தமிழர்கள் மீதான போர் வெற்றியின் மொத்த சொந்தக்காரராகத் தம்மைக் காட்டி அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்துவரும் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்று ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது இடத்தை சரத் பொன்சேகாவுக்கு வழங்க முடிவு செய்துவிட்டார். சரத் பொன்சேகாவும் இதற்கு இணங்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

பராக் ஒபாமாவே போட்டியிட்டாலும் இன்னமும் 30 வருடங்களுக்கு மகிந்தவே ஜனாதிபதியாக இருப்பார் என்ற அரச தரப்பு எச்சரிக்கைகளும், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபட முடியாது. அத்துடன் அவர்களை இணைத்து யாரும் செய்திகள் வெளியிட முடியாது என்ற அறிவித்தல்களும் ஆளும் கட்சி மிரண்டு போயுள்ளதையே உணர்த்துகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான போட்டியாளராக சரத் பொன்சேகா சிங்கள தேசத்தில் நோக்கப்படுகின்றார்.

சிங்களத்தின் யுத்த கள வெற்றியை பங்கு போடும் வேட்பாளராகவும், சிங்கள கடும் போக்காளர்களின் ஆதரவுக்குரியவருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டால் நிச்சயம் அவர் வெற்றி பொறுவார் என்பதே சிங்கள தேசத்தின் கணக்காக உள்ளது. இதனால், உத்தியோகபூர்வமாக ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஆளும் அரசில் அமைச்சர்களாக உள்ள பலரும் கட்சி மாறுவதற்கும் ஆயத்தமாக உள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அணி மாறுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயதசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். குடும்ப அரசியலைக் கோலாகலமாக நடாத்திய மகிந்த ராஜபக்ஷவுக்கு அருகிலிருந்தே பலர் குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.

சிங்கள தேசத்தில் அரசியல் களம் கூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்கள் எவரும் இது குறித்துக் கவலை கொள்ளப் போவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு தடவை திருமதி சந்திரிகாவின் பேச்சுக்களை நம்பி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களித்ததைத் தவிர, வேறு எந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழின அழிப்பைக் கொடூரமாக நடாத்தி முடித்ததுடன் அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதும், வன்னி மக்களை வதை முகாம்களில் அடைத்ததுவும் தமிழர்களால் மறக்கப்படக்கூடிய, மன்னிக்கக்கூடிய விடையங்களாக இல்லை. சிங்கள தேசிய இனவாதிகளில் யாரையும் வெற்றிபெற வைக்க வேண்டிய தேவையும் தமிழீழ மக்களுக்குக் கிடையாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழைப்பை ஏற்று, அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, இந்தத் தேர்தலும் அவர்களால் புறக்கணிக்கப்படும் என்பதே யதார்த்தமாக உள்ளது. அதனை அவர்கள் யாழ். மாநகரசபைத் தேர்தலிலும் உணர்த்தியுள்ளார்கள்.

வேண்டப்படாத அரசியல்வாதியான மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக அரியணை ஏறுவதை மேற்குலகு விரும்பப் போவதில்லை. ஐக்கியதேசியக் கட்சி சார்பாக ரணில் போட்டியிட்டு வெல்வதையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு சார்பாக, இனவாத சிந்தனையூட்டப்பட்ட சிங்கள இனத்தைத் திருப்ப முடியாது என்ற யதார்த்தத்தையும் மேற்குலகு புரிந்து கொள்ளும். இந்தியாவுக்கு களம் அமைத்துக் கொடுத்து, சீனாவுடன் சீட்டட்டம் நடாத்தி வந்த மேற்குலகு சீனா பக்கம் முற்றாகச் சாயக்கூடிய சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவதை விரும்பாது. இந்த நிலையில் மேற்குலகு கடும் நிலையை எடுக்க முற்பட்டால் இலங்கைத் தீவு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.



ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோற்றுப்போவதை இந்தியா விரும்பப் போவதில்லை. தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை நின்றதுடன், அதன் பின்னரான மேற்குலகினதும், ஐ.நா.வினதும் அழுத்தங்களிலிருந்து இன்றுவரை மகிந்தவைப் பாதுகாத்து வரும் இந்தியா மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதன் மூலமாகத் தனது நலன்களைப் பாதுகாக்கவே முன்வரும். அதற்காக, இலங்கைத் தீவின் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்கவும், மகிந்தவை வெல்ல வைப்பதற்கான பொருளாதார பலத்தை வழங்கவும் முன்வரும்.

தமிழர்கள் மீதான யுத்த வெற்றியை சொந்தம் கொண்டாடும் இரு சிங்கங்களும் உறுமல்களோடு தேர்தல் களத்தை சூடாக்க ஆரம்பித்துள்ளன. போகப் போக இந்தக் கர்ச்சிப்புக்கள் அதிகமாகி, அதன் மூலம் பல யுத்தகள உண்மைகளும் வெளிவரக் கூடும். எந்தப் படுபாதகத்திற்கும் அஞ்சாத மகிந்த ராஜபக்ஷ தனது எதிர்காலத்திற்கு சவாலாக உருவெடுக்கும் சரத் பொன்சேகாவை அழித்து விடவும் முயற்சிக்கக் கூடும். அதற்கும் இருக்கவே இருக்கிறது 'விடுதலைப் புலிகள்' என்ற பிரம்மாஸ்திரம். ராஜபக்ஷக்களின் திட்டங்கள் எதுவானாலும் நிறைவேற்றக் காத்திருக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அவர் வசம் உள்ளன. மாறாக, சரத் பொன்சேகாவும் அவருக்குச் சளைத்தவரல்ல. இராணுவ தளபதியாக இருந்த அவர் பின்னால் அணி வகுக்கக்கூடிய ஆயுத படையினர் இருக்கவே செய்வார்கள். இராணுவத்தின் வெற்றியை, தனது குடும்ப வெற்றியாக்க மகிந்த முயற்சி செய்கிறார் என்ற பிரச்சாரத்துடன் வெற்றியைத் தனதாக்க முடியாமல் போனால், ஒரு இராணுவப் புரட்சி மூலம் சாதிக்க முயற்சிக்கமாட்டார் என்றும் உறுதியாக நம்ப முடியாது.

ஆக மொத்தத்தில், சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.

நன்றி - பாரிஸ் ஈழநாடு

Tuesday, October 27, 2009


வீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்


ஜகன்மோகினியில் கவர்ச்சியையும் தாண்டி நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. ஜனன்மோகினி பாராட்டு மழையில் நனைந்திருக்கும் நமீதா நம்மிடம் பேசுகையில்,

சினிமாவில் கவர்ச்சி அவசியம். அது அளவோடு இருக்கணும். முகம் சுளிக்க வைக்ககூடாது அதே போல பதிவுகளில் தடாலடிகள் வேண்டும். நீயொரு முட்டாள் என்பதைக்கண்டு பிடிக்க முடியாது செய்யும் சாமர்த்தியம் வேண்டும். பிரபலபதிவராய் இருந்தாலும் அனானியாக குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்கலாம். அப்போது தான் அடுத்த பதிவிற்கு "கரு" கிடைக்கும்.

கும்மாளம் போடும் பதிவுகளில் மூக்கை நுழைத்துப் பார்க்கலாம். மூக்குப் போனாலும் விடாத முயற்சி வேண்டும். மூக்குடைத்தவரை முடிந்த வரை விடாது கருப்பு போன்ற பதிவுகளைப் போட்டு காய்ச்சி எடுக்கலாம். அதுவும் முடியாத போது முக்குச்சந்திக்குக் கூட்டிச் சென்று மூக்கையுடைக்கலாம்.

பதிவுகளில் தனி அரசியல் முன் பின் நவீனத்துவம் கட்டுடைப்பு என்று பீற்றிக்கொள்பவர்களே நடை முறையில் வெற்று வேட்டுக்களே. எழுதும் போது மறைவாய் உதவும் புத்தகங்கள் நிஜத்தில் உதவாது . நாயர் டீ ஸ்டாலிலோ நடு ரோட்டிலோ கண்டு உங்களை நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தில் சந்தேகம் கேட்கும் போது ங்கே என்று விழிக்கும் சாதாரணர்களே. அவர் அது பற்றி எழுதியதயே அறியாத அஞ்ஞானிகள்.

எனது திறமையை இயக்குனர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அதைப்போலத்தான் உங்கள் திறமைகளையும் அனானிகளாக ஊடுருவிச் சிறப்பாக நீங்கள் காட்டவில்லையென்பது எனது எண்ணம். பிரபல பதிவர்களாய் இருந்தாலும் அனானியாக மாறிவிட்டால் முடிந்த வரை உங்கள் அரிப்பைச் சொரிந்து தீர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை உங்களுக்குப்பிடிக்காத பதிவரை அல்லது உங்களால் முந்த முடியாத பதிவரைப் பற்றி முடிச்சுகள் போட்டு அவரைக் களத்தில் இருந்து வெளியேற்றும் காரியத்தில் ஈடுபடலாம்.

முதலாவது நபர் வெளியேற்றப்பட்டால் இரண்டாவது இருக்கும் நீங்கள் தானே முதலாவது. நூறாவதாக இருக்கிறேன் என்று கவலைப்படுகின்றீர்களா? சளைக்காது 99 பேரையும் வெளியேற்றி விடுங்கள். என்ன ஏது என்று அறியாது கும்மியடிக்கும் கூட்டம் உங்களுக்கு தங்களையறியாமலே உதவி செய்வார்கள். அபி அப்பாவைக் கும்மியடித்து வெளியேற்றவில்லையா? அதுபோல. இப்போது முதலாவது ஆவது பற்றிய இரகசியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் என் நிலமை வேறு. நான் என்ன என்னவெல்லாம் அடித்திருக்கின்றேன் என்று உங்களுக்கு சொல்ல முடியாது. அது தொழில் இரகசியம்.

சினிமா என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயம். வியாபாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிலவற்றை ஏற்கத்தான் வேண்டி உள்ளது. சம்பளம் தருபவர்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கேட்கும்போது மறுக்க முடியவில்லை. அவர்கள் தரும் ஆடையைத்தான் அணிய வேண்டி உள்ளது.

உங்களுக்கு அந்த கவலையே இல்லை. அனானி என்ற முகமூடியே உங்களைக் காத்து விடும். அனானி வசதியை மறுப்பவர்களைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அராஜக வாதிகள். இவர்கள் சினிமாவிலும் உண்டு.அரசியலிலும் உண்டு. என் ஆடை குறைப்பைப் பற்றி அதிகம் பேசியவர்கள் இவர்கள். பின்னர் தனிமையில் இருக்கும் போது இருக்கும் ஆடையையும் தேவையில்லை என்று குறை கூறியவர்கள் இவர்கள்.

பின்னர் வெள்ளையும் மஞ்சள் துண்டுமாக தத்துவம்ஸ் பேசும் போது நான் வாயால் மட்டும் சிரிப்பதில்லை.

சில நடிகைகள் இந்திக்கு போகிறார்களே அவர்களை போல் நீங்களும் போவீர்களா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட மாட்டேன். இந்திக்கு போனால் மற்ற நடிகைகளுக்கு பின்னால்தான் இருக்க வேண்டும். இங்கேயே நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இந்திக்கு போக மாட்டேன். என் பின்னால் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்

அதே போல நீங்களும் தமிழ்ப் பதிவுலகத்திலேயே மொக்கைகளைப் போட்டு குப்பை கொட்டுங்கள். பெரும் பத்திரிகைகள் சிற்றேடுகள் என்று பறக்க ஆசைப்படாதீர்கள். உங்களை விட பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கக் கூடும். உங்களை விடப் பல புத்தகங்களைக் காப்பியடித்தவர்களுடன் மோத முடியாது . என் பின்னால் தமிழக ஒப்புச்சப்பாணி இளைஞர்கள் இருப்பதைப்போல உங்கள் பின்னாலும் அறிவு சூனிய கும்மியடிப்போர் இருக்கின்றார்கள். மீ த பஸ்ட் , மீ த செகண்ட் என்று உங்கள் பின்னூட்டங்களைப் போட்டு அனுமார் வாலாக நீட்டி விடுவார்கள்.

இல்லாவிட்டாலும் வேறு வேறு பெயர்களிலேயே நீங்களே உங்களை விமர்சிக்கவோ வழிமொழியவோ செய்யலாம். தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் அதைக் கண்டு பிடிக்கும் அறிவாளிகள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படியே கண்டு பிடித்தாலும் கடையில் கலகலப்பு இருக்க வேண்டுமென்று கண்டும் காணாது விட்டு விடுவார்கள்.

வழியும் தசைகளை இறுக்கிக் கட்டி தள்ள வேண்டிய இடத்தில் தள்ள விட்டு தமிழக இளைஞர்களை நான் ஜொள்ள விடவில்லையா? அதே போலவே அவர்களும் உங்களை ஜொள்ள விடுவார்கள்.

சொல்லி விட்டு காரில் ஏறிப் பறந்தே விட்டார்.

குறிப்பு: நமீதாவிடம் மட்டும் கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் மட்டும் இங்கு கேட்கவும்.

மீண்டும் அடிமைப்பட்டுப்போன இந்தியா



"வீணாய்ப்போன அனானிக்கு" தொடரின் தொடர்பாய் எழுதுவது இது,

இந்தியா என்பது ஒரு நாடல்ல. நாடுகளின் கூட்டு என்பதே உண்மை. வரலாற்றை நமக்கு வாகாக வளைத்துக்கொள்ள முற்பட்டாலும் உண்மை என்பது எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.

1947 இல் பிரிட்டிஸ்ஹ் இந்தியாவை பாகிஸ்தான், இந்தியா என்று பிரித்து 1971இல் பங்களாதேஷ் என்று மூன்றாக்கி மீண்டும் இந்தியா என்ற பகுதியை 60 வருடங்களுக்குள்ளாகவே இத்தாலியிடம் பறிகொடுத்ததே இந்தியர்களின் வரலாறு. இவர்களுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானும் பங்களாதேசமும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

அவர்கள் நாடு மண்ணின் மைந்தர்களாலேயே இன்னும் ஆளப்படுகின்றது. வெள்ளையர் இந்திய வளங்களைக் கொள்ளையடித்து போனது போல இன்று குவாத்திரோட்சிகள் சுதந்திரமாக கொள்ளையடித்துச் செல்கின்றார்கள்.

இந்தியா என்பது நாடுகளின் கூட்டாக இருப்பதில் இது ஒரு அசெளகரியம். ஒரு சிலருக்கு ரோஷமும் தம் மானமும் இல்லாததால் அனைவரும் பழியைச் சுமக்க வேண்டியுள்ளது.

இல்லையெனில் வெள்ளையனை எதிர்த்து இறுதிவரை போரிட்ட கட்டபொம்மனும் மேவார் ரணாக்களும் வீர சிவாஜியும் வம்சமற்று மலடர்களாகவா இறந்தார்கள்.

இதோ இந்தியாவிற்குள் இருக்கும் சுதந்திர நாடுகளின் பட்டியல்.ஆதாரம் விக்கிபீடியா :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம் இந்திய துணைகண்டத்தின் வாடா மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது. இந்தியாவின் முழு வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிகம் 2600-1900 கி.மு. வரை நீடித்திருந்தது. வெண்கலக் காலம் கி.மு 2000 ஆண்டின் துவக்கம் வரை மேலோங்கி இருந்தது, பின்னர் அதனை தொடர்ந்த இரும்புக் காலமும், வேதக் காலமும் இந்தியாவின் கங்கைக்கரை சமவெளிகளில் இருந்த மக்களின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தியதன் மூலம் [[மகாஜனபதாஸ் |மகாஜனபதாஸ்]] போன்ற பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கின. இது போன்று இருந்த எதோ ஒரு ராஜ்ஜியத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில், பிறந்த மகதா, மகாவீரர், கவுத்தாம புத்தர் தங்களது ஸ்ரமன் தத்துவங்களை மக்களிடையே பரப்பினர்.


பின்னர் வந்த சாம்ரஜ்ஜியங்களும் ராஜ்ஜியங்களும் இந்த பகுதியை ஆண்டதன் மூலம் இந்த பகுதியின் பண்பாடு மேலும் மேருகைப் பெற்றது.கி.மு 543 அகேமேனிதின் பெர்சிய சாம்ராஜ்ஜியம் [1]முதல் கி.மு. 326 அலேக்சாண்டேர் தி கிரேட்[2]வரை நம் கருத்தில் நாம் நிறுத்தி பார்க்கலாம். மச்ற்றியாவைக் சார்ந்த டெமெத்ரியஸால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தோ-கிரேக்க ராஜ்ஜியம் கந்தாரா, பஞ்சாப் போன்ற இடங்களை தன்னுள் கொண்டிருந்தது. கி.மு 184 ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மேனண்டேர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில், பண்பாட்டிலும், வாணிகத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைத்தது.


கி.மு, 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இந்திய துணை கண்டம் ஒன்றுபட்டது. நாளடைவில் இதே கண்டம், சிறிய பகுதிகளாக உடைந்து, இடைப்பட்ட ராஜ்ஜியங்களால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யபடப் பட்டது.கி.மு. ௪ ஆம் நூற்றந்தில் துணைகண்டத்தின் மேற்கு பகுதிகள் ஒன்று படுத்தப்பட்டன. இது குப்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலத்திற்கு ஒன்று பட்டே இருந்தது.இந்து மதத்தின் எழுச்சி தீவிரமாக வெளிப்பட்ட இந்த காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று அழைப்பர்.இதே கால கட்டங்களில், பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய பகுதி சாலுக்கியர்கள், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது.வளமைப்பெற்ற இந்திய நாகரிகம், ஆட்சி முறைகள்,பண்பாடு, ஆசியாவில் பல பகுதிகளில் பரவிய இந்து மதம் மற்றும் புத்த மதம் இருந்த இந்த காலத்தை தென்னிந்தியாவும் பொற்காலமாகவே கருதியது.


கி.பி. 77 ல் கேரளா ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிக பிணைப்புகள் கொண்டிருந்தது.கி.பி. 712 ல் ,அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்த துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தற்கு பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினார்[3]. இந்துவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரை இந்திய துணை கண்டம் சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது.இவற்றுள் கச்னவீத், கோரித், டில்லி சுல்தான்கள்,முகலாய சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்றவை.துணை கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது.முகலாய அரசர்கள் இந்தியாவுக்குள் மத்திய கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர்.முகலாயர்களுடன் விஜயநகர ராஜ்ஜியம், மராத்தா ராஜ்ஜியம்,ரஜபுத ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும் மேற்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம் 18 ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள் வாடா மேற்கு துனைகன்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[4]


௧௮ ஆம் நூற்றாண்டு பதியிஇருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வது.இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி முதல் இந்திய சுதந்திர போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியயையும் (இன்பிரா ஸ்ட்ரக்சுர்) பொருளாதாரத்தின் குலைவையும் கண்டறிந்தது.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டு தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்த துணை கண்டம் ௧௯௪௭ ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.

வீணாய்ப்போன அனானிக்கு




காஸ்மீரிகளுக்கான தனி விஸா தொடங்கியிருப்பது சீனா

"இந்தியா பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றது" என்ற ஒரு கட்டுரையை நான் எழுதியபோது வீணாய்ப்போன அனானி ஒன்று இந்திய இராணுவம் செய்த தவறுகளை ஆதாரபூர்வமாக விளக்கவேண்டுமென்று கேட்டிருந்தது.

உலக ஞானமும் வாசிக்கும் பழக்கமுமற்ற இத்தகைய முட்டாள்களை நம்பியே "ஒரே இந்தியா" என்ற கோஷத்தை அரசியல்வியாதிகள் முன்னெடுக்கின்றார்கள் என்பது எனது நம்பிக்கை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டென்று நம்பும் முட்டாள்கள் இவர்கள்.

இலங்கையில் இந்தியா நடந்து கொண்டதை அறியாத வினய பாவத்துடன் தன் சொந்த மண்ணிலேயே மக்கள் கொல்லப்படும் துயரம் அறியாத அயோக்கியர்கள் இவர்கள். மனித நேயத்தை விஞ்சிய பெருமை எதில் கிடைத்து விடும் என்பதை இவர்கள் தான் கூற வேண்டும்.

வெறுமனே கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டிராது வரலாற்றைப் படிக்கவும் முற்படவேண்டுமென்று இத்தகைய வீணாய்ப்போனவருக்கு நான் சிபாரிசு செய்கின்றேன். அ.மார்க்ஸ்,சாருநிவேதிதா இந்த இரண்டு எழுத்து வியாபாரிகளும் இந்திய தமிழ் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அல்லது மறுதலிக்கப்பட்டவர்கள். அது எதுவாய் இருந்தாலும் சிந்திக்கும் மனங்களில் சில சலனங்களையேனும் ஏற்படுத்தியவர்கள்.

இத்தகைய முட்டாள் தனமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றே முதலில் நினைத்திருந்தேன். என்ன செய்வது? முட்டாள்களும் நிறைந்தது தானே இந்த உலகம். ஆகவே இந்த பதில். ஈழத்தில் இந்திய வெறியாட்டம் பற்றிப்பல தகவல்கள் இணைய வெளியெங்கும் பரந்திருக்கின்றது. தேடிப்படிக்கவும்.

ஒரு கட்டுரையை படிக்கவோ விளங்கிக்கொள்ளவோ தர்க்கிக்கவோ இத்தகைய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் துணை செய்யும் என்பத்தை இந்த முட்டாள் தெரிந்து கொள்ளவேண்டும். இதையெல்லாம் அறியாதிருக்கும் நீயா? நானா? வீணாய்ப்போனவன்.

ஒரு "பிரபல புளொக்கர்" தான் இந்த வீணாய்ப்போன அனானி என்பதை நான் அறிவேன்.

சாருநிவேதிதா எழுதியது


போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு எதிராகக் கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், ”காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தால், ஒரு பெண் என்ற முறையில் மத அடிப்படைவாதிகளால் உன்னுடைய சுதந்திரத்துக்குப் பிரச்சினை வராதா?” என்று.

அதற்கு அவள் சொன்னாள்:”இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது; இந்திய ராணுவத்தால் வன்கலவி செய்யப்படும் சுதந்திரமா?”

அருந்ததி ராய்

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் என்று அழைக்கப் படும் நிலப் பகுதி இந்திய ராணுவத்தின் பிடியில் இருந்து வருகிறது. இது பற்றி அருந்ததி ராய், ராம் புனியானி, குஷ்வந்த் சிங் போன்ற சிலரைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை.

தேசப் பற்று என்ற கற்பிதமான நம்பிக்கையை வைத்துக் கொண்டு இந்தியப் பத்திரிகையாளர்கள் பலரும் காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்பதாகவே எழுதிக் கொண்டு வருகிறார்கள். இதே கருத்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்திரிகைகளின் வாயிலாகப் பரப்பப்பட்டு வருவதால் இந்தியப் பொது ஜனமும் காஷ்மீரை இந்தியாவின் பகுதி என்றே நம்பத் தலைப்பட்டு விட்டது.

காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு நாம் சற்றே பின்னோக்கிச் சென்று காஷ்மீரின் வரலாற்றைப் பார்க்க வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காஷ்மீரின் ஆட்சி இஸ்லாமிய மன்னர்களிடமிருந்து சீக்கியர்களின் கைகளுக்கு வந்தது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது குறுநில அரசுகள் பலவும் இந்தியாவுடன் இணைந்து கொண்ட போது, ஜுனாகட் மற்றும் ஹைதராபாத் அரசுகள் மட்டும் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள விரும்பின. காரணம், இந்த இரண்டு அரசர்களும் முஸ்லீம்களாக இருந்தனர். இந்த மாகாணங்கள் இந்திய நிலப் பகுதியின் மத்தியில் இருந்ததாலும், இங்கே இந்துக்கள் பெரும்பான்மையினராக வசித்ததாலும் அந்த முஸ்லீம் மன்னர்களின் விருப்பம் நிறைவேறாமல் போயிற்று. இந்திய அரசு தனது ராணுவத்தை அனுப்பி இந்த மாகாணங்களைத் தன்னுடன் சுலபமாக இணைத்துக் கொண்டது.

ஆனால் காஷ்மீரைப் பற்றியும் இந்தியா இதேபோல் நினைத்து விட்டது என்பதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

நமக்குச் சொந்தமில்லாத ஒரு நிலப்பகுதியை ராணுவ பலத்தால் ஆக்ரமித்துக் கொண்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து ‘அந்த நிலம் எங்களுடையது’ என்று சொல்வதற்கும் காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லலாம். எப்படி என்று பார்ப்போம்.

அப்போது காஷ்மீரின் மன்னராக இருந்தவர் ஹரி சிங் என்ற இந்து டோக்ரா இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஓரளவுக்கு சீர்திருத்த எண்ணம் கொண்டவராக இருந்தார். காஷ்மீர் மாநிலத்தில் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கினார். தாழ்த்தப் பட்டவர்களும் கோவில்களில் பிரவேசிக்கலாம் என்று சட்டம் இயற்றினார். குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தார். ஷேக் அப்துல்லாவுக்கும், நேருவுக்கும் இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக காங்கிரஸையும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்று பிரிவினைவாதம் பேசியதால் முஸ்லீம் லீகையும் எதிர்த்தார்.

காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேராமல் தனி நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஹரி சிங். காஷ்மீரிகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால் அவர்களுடைய விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால், இந்தியாவுடன் இணைய விரும்பாத ஜுனாகட் மற்றும் ஹைதராபாத் மாகாணங்களைச் சுற்றி இந்திய நிலப்பகுதியே இருந்தது. ஆனால் காஷ்மீர் இந்தியாவுடன் மட்டும் அல்லாமல் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், திபெத் என்ற நாடுகளுடனும் தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டது. மேலும், காஷ்மீரின் பெரும்பான்மை ஜனத்தொகை முஸ்லீம்களாக இருந்ததால் அதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசம் ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த முகம்மது அலி ஜின்னா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசித்த காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துக் கொண்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜம்முவை இந்தியாவுக்குக் கொடுத்து விட விரும்பினார். அப்படிச் செய்திருந்தால் கூட இந்தியாவின் அமைதி இன்று இத்தனை தூரம் பாதிக்கப் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்த, காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த நேரு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இந்த நிலையில் ஜின்னா காஷ்மீரின் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். அதோடு மட்டுமல்லாமல், வடக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பழங்குடியினருக்கு ராணுவப் பயிற்சி அளித்து அவர்களை காஷ்மீருக்கு அனுப்பினார். பட்டானியர்களின் அந்த ராணுவம் தாம் சென்ற ஊர்களையெல்லாம் முஸ்லீம், இந்து என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா வீடுகளையும் கொள்ளை அடித்தது. அப்போதுதான் வேறு வழியில்லாமல் 26.10.1947 அன்று ராஜா ஹரி சிங் நேருவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அந்த ஒப்பந்தப் படி காஷ்மீரின் பாதுகாப்பு, ராணுவம், நாணயம், தபால் துறை போன்றவற்றை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும். மற்ற உள்நாட்டு நிர்வாகம் அனைத்தும் காஷ்மீர் அரசின் கீழ் இருக்கும். எனவே காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றது அல்ல

ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மறுதினமே இந்திய ராணுவம் காஷ்மீரைச் சென்று அடைந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நீண்ட காலப் போர் அதுதான். அக்டோபர் 1947 முதல் நவம்பர் 1948 வரை நடந்தது அந்தப் போர். இந்தப் போரில் இந்தியா ஆரம்ப கட்டத்தில் தோல்வியடைந்து பின்னரே மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தாங்கள் இழந்த இடங்களை மீட்க முடிந்தது. அப்படியும் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி நிலம் பாகிஸ்தான் வசம் போய் விட்டது. ஆனால், பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மனிதர்கள் வாழ அவ்வளவு தகுதியில்லாத இடம் என்பதால் அங்கே ஜனத்தொகை மிகவும் குறைவு.

அந்தப் போர் முடிந்த அன்றே இந்தியா காஷ்மீர் மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தது. அதன்படி காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படும். அதன்படி, காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா, இந்தியாவுடன் இணைய வேண்டுமா அல்லது சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா என்பதை காஷ்மீர் மக்களே தீர்மானிப்பர்.

ஆரம்ப காலத்தில் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த ஷேக் அப்துல்லா, பின்னர் நேரு வாக்களித்த படி பொது ஜன வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி வற்புறுத்த ஆரம்பிக்கவே அவரைத் தூக்கி 18 ஆண்டுகள் சிறையில் போட்டார் நேரு.

இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ஷேக் அப்துல்லா பாகிஸ்தானை மிகவும் வெறுத்தவர். பாகிஸ்தானை காட்டுமிராண்டி நாடு என்றும், அவர்களின் அரசை மதவாத அரசு என்றும், முஸ்லீம் லீக் மக்கள் நலனுக்கு எதிரான கட்சி என்றும் கூறியிருக்கிறார் ஷேக் அப்துல்லா. அதே சமயம் அவர் ஒரு பிரிவினைவாதியும் அல்லர். ஒரு முறை தில்லியில் அவரிடம் ஒரு பத்திரிகையாளர் “காஷ்மீரின் சுதந்திரம்தான் உங்களின் தீர்வா?’ என்று கேட்ட போது, “தனிநாடாக வாழும் அளவுக்கு காஷ்மீர் பெரிய நாடு அல்ல; மேலும், இவ்வளவு ஏழ்மையான நாடு சுதந்திரமாக வாழ முடியாது. அப்படிச் செய்தால் பாகிஸ்தான் எங்களை விழுங்கி விடும். ஒருமுறை அவர்கள் அதற்கு முயன்றார்கள்; மேலும் முயற்சி செய்வார்கள்” என்று குறிப்பிட்டார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி மட்டுமே போதும் என்பதே காஷ்மீருக்கான அவரது தீர்வாக இருந்தது.

ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்தபோது ஒரு உண்மையான சோஷலிஸ்டாக விளங்கினார். பல நிலச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார்.

ராஜா ஹரிசிங்கின் ஆட்சியில் விவசாய நிலம் முழுவதும் மிகச் சில பணக்காரர்களிடமே இருந்தது. விவசாயிகள் அனைவரும் கூலியாட்களாகச் சிதறிக் கிடந்தார்கள். அந்த நிலமற்ற விவசாயிகளுக்கு 40,000 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தார் ஷேக் அப்துல்லா. அதற்கு முன்னால் ஒரு விவசாயக் கூலிக்கு அவன் விளைவிக்கும் தானியத்தில் 25% மட்டுமே கூலியாகத் தரப்பட்டது. அதை அவர் 75% ஆக மாற்றினார்.

இத்தகைய ஒரு தலைவரை பொது ஜன வாக்கெடுப்பு நடத்தச் சொன்ன ஒரே காரணத்திற்காக தேசத் துரோகி என்று கூறி சிறையில் தள்ளியதன் மூலம் இன்றைய காஷ்மீர் பிரச்சினைக்கும், இந்தியாவில் தீவிரவாதம் பெருகியதற்குமான முதல் விதையை இட்டவர் நேரு.

அதற்குப் பிறகு காஷ்மீரில் ஆட்சி நிர்வாகத்தை ஏற்ற அரசுகளெல்லாம் வெளிப்பார்வைக்கு மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவையாக இருந்தன. மற்றபடி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே நடந்து கொண்டிருப்பது ராணுவ ஆட்சிதான். காஷ்மீருக்கு அளிக்கப் பட்டிருந்த விசேஷ அந்தஸ்தும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு அதுவும் மற்ற இந்திய மாநிலங்களைப் போல் ஆயிற்று. நிர்வாகம் முழுவதும் ராணுவத்தின் கீழ் வந்தது. காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கை 5 லட்சம். (மொத்த ஜனத்தொகை 1 கோடி).

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளில் உள்ள சர்வாதிகாரிகளைப் பற்றியும், அவர்களது ஆட்சியில் காணாமல் போன ஆயிரக் கணக்கானவர்களைப் பற்றியும் நம்முடைய பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் இங்கே காஷ்மீரில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய ராணுவத்தால் காணாமல் அடிக்கப் பட்டோர் எத்தனை பேர்? சித்ரவதைக் கொட்டடிகளில் வதை செய்யப்பட்டோர் எத்தனை பேர்? தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லப் பட்டோர் எத்தனை பேர்?

எதற்குமே கணக்கில்லை.

ஆனால் உலகில் எந்த இடத்திலுமே வெறும் ராணுவ பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் சுதந்திர வேட்கையை அடக்கி ஆள முடியாது என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் இருக்கின்றன. அதேதான் காஷ்மீரிலும் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் இறுதியிலிருந்து.

காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டம் இப்படியாக ஆரம்பித்தது. காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது அரசு. பிறிதொரு சமயமாக இருந்தால் இந்தச் செய்தி பொருட்படுத்தப் படாமலே போயிருக்கும். ஏனென்றால் அந்த இடத்தில் வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பத்து அடி உயரத்துக்கு உறை பனி விழுந்து கிடக்கும். அந்த அளவுக்கு யாருக்குமே பயன்படாத ஒரு இடம் அது. அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் டெண்ட் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது அரசாங்கம். இந்த ஆண்டு அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக யாத்ரீகர்களுக்கு இந்த வசதி அளிக்கப் பட்டு வருகிறது. அப்படியானால், இந்த ஆண்டு மட்டும் என்ன ஆயிற்று? காஷ்மீரிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முட்டாள்தனமான அரசாங்கம் இந்த விஷயத்தை அவர்களிடம் விளக்கிச் சொல்லவில்லை. மக்களைப் பற்றிய எந்த சுரணையுணர்வும் இல்லாமல், இதுவரை பழக்கத்தில் இருந்து வந்த நடைமுறைதான் என்பதையும் அறிவிக்காமல் அந்த 100 ஏக்கர் நிலத்தையும் அமர்நாத் கோவிலுக்கு எழுதிக் கொடுத்தது அரசு. கடந்த பல ஆண்டுகளாக நேரடியாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீரிகளுக்கு இது ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. தங்கள் வீட்டுக் குழந்தைகள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்ட போது கூட சத்தம் வெளியே தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள் காஷ்மீரிகள். (ஒருமுறை இரவில் சிறுநீர் கழிப்பதற்காகத் தன் வீட்டிலிருந்து வெளியே வந்த பத்து வயதுச் சிறுவன் ஒரு சிப்பாயால் கொல்லப்பட்டு, இந்தியா முழுவதும் அந்தச் சம்பவம் பத்திரிகைச் செய்தி ஆனது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்). அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் பூமியே தங்களிடமிருந்து பறிக்கப் படுகிறது என்ற சந்தேகம் வந்த போது தங்கள் வாழ்வின் ஆதாரமே பறி போய் விட்டதாக நினைத்து விட்டார்கள். கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்குக் காரணம் இதுதான்.

அரசாங்கத்தின் சுரணையற்ற தன்மைக்கு ஒரு உதாரணம், ’முஸாராபாத் சலோ’ (முஸாராபாதை நோக்கிச் செல்வோம்) என்ற போராட்டத்தில் 80,000 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால், ஜம்முவில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டில் ‘வெறும் 8,000 பேர் கலந்து கொண்ட சாதாரண போராட்டம் அது’ என்று வர்ணித்தார். தில்லியில் பல இடங்களில் குண்டு வெடித்து பல நூறு பேர் செத்த போது ஒரே நாளில் நான்கைந்து முறை தன் ஆடை அலங்காரத்தை மாற்றி ஃபேஷன் ஷோ நடத்திக் காண்பித்தவர் இந்த மந்திரி.

காஷ்மீரிகளின் இப்போதைய கிளர்ச்சிக்கு மற்றொரு காரணம், 1989 வரை அமர்நாத்துக்கு வந்து கொண்டிருந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 20000 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக மாறி விட்டது. இதற்குக் காரணம் இந்துத்துவ எழுச்சி என்று சந்தேகிக்கிறார்கள் காஷ்மீரிகள். தங்களுடைய தேசத்தில் இந்தியாவிலிருந்து வரும் இந்துக்கள் குடியேறி தங்கள் பூமி பறி போய் விடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது அவர்களுக்கு. அதனால்தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியால் அடக்கி வைக்கப் பட்டிருந்த காஷ்மீரிகளின் கனத்த மௌனம் இன்று ஒரு மக்கள் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆனால், காஷ்மீரிகளின் கருத்தைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளாகவே இதை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீரிகளின் உள்ளார்ந்த துயரத்தை ‘அமைதி’ என்று நினைத்து விட்டது.

ஷேக் அப்துல்லாவின் காலத்தில் இருந்த நடுநிலையான காஷ்மீரிகளை இன்று அங்கே பார்க்க முடியவில்லை. ஸ்ரீநகரின் வீதிகள் எங்கும் பாகிஸ்தான் கொடிகளோடு அலைகிறார்கள் இளைஞர்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வரும் வன்முறையினூடே பிறந்து வளர்ந்தவர்கள். துப்பாக்கி ஏந்திய இந்தியச் சிப்பாய்களை கற்களால் அடித்து “எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்; நாங்கள் தியாகிகளாவோம்” என்கிறார்கள். முன்பு இந்த வாசகத்தைத் தீவிரவாதிகள் மட்டுமே சொன்னார்கள். இப்போது ஆயுதம் ஏந்தாத மாணவர்கள் சொல்கிறார்கள்.

மண்ணாசையின் காரணமாக நேருவும், ஜின்னாவும் ஏற்படுத்தி விட்ட இந்த மாபெரும் பிரச்சினையைத் துப்பாக்கியால் தீர்த்து வைப்பது கடினம். இதற்காக இந்திய மக்களும், காஷ்மீரிகளும் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை அதி பயங்கரமானது. எனவே, இலங்கை அரசுக்கு புத்திமதி சொல்லும் இந்திய அரசு முதலில் செய்ய வேண்டிய காரியம் துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு காஷ்மீரிகளுடன் உரையாடலைத் துவக்குவதாகத்தான் இருக்கும்.

பின் குறிப்பு:

’காஷ்மீரைக் கொடுத்து விட்டால் பிறகு ஒவ்வொரு மாநிலமும் தனிநாடு கேட்கும்’ என்ற ஒரு வாதம் பலராலும் முன் வைக்கப் படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு காஷ்மீரை ஒப்பிட முடியாது. காஷ்மீரின் நிலைமை வேறு. மேலும், நம்முடைய உடம்பில் ஒரு விரல் அழுகிப் போய் விட்டால் அதை வெட்டி எறிந்து விடுவதுதான் புத்திசாலித்தனம். அப்படி இல்லாமல் அழுகின உறுப்பை வெட்டாமல் விட்டால் பிறகு ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எறிய வேண்டி வரும். காஷ்மீரைத் தங்களோடு வைத்துக் கொண்டு அதற்காக இந்தியர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். ஒவ்வொரு நகரிலும் குண்டு வெடித்து நூற்றுக் கணக்கான பேர் உடல் வெடித்துச் சாகிறார்கள். அதை விட இன்னும் பயங்கரம், மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் பீதியும் பயமும்.

மேலும், தேசம் என்பதே ஒரு கற்பிதம்.

உதாரணமாக, மொகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு இப்போது இருப்பதை விடவும் மிகப் பெரியதாக இருந்தது. இன்றைய ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் என்ற இத்தனை நாடுகளும் சேர்ந்ததுதான் அப்போதய மொகலாய இந்தியா. இதையே பாரத வர்ஷம் என்றும், அகண்ட பாரதம் என்றும் கூறி இந்த 21-ஆம் நூற்றாண்டிலிருந்து மத்திய கால கட்டத்துக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

அதன் பின்னர், ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் இந்தியா என்ற நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டது. அதுவே 1947க்கு பிறகு, பாகிஸ்தான் என்ற பகுதியையும் இழந்து இப்போதைய இந்தியாவாக மாறியது. அத்வானி போன்ற இந்துத்துவவாதிகள் பிறந்த ஊரே இன்று பாகிஸ்தானில் இருக்கிறது.

இதற்கெல்லாம் பல நூற்றாண்டுகள் பின்னால் சென்றால், இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் பகுதியே சேரன், சோழன், பாண்டியன் என்றும், இன்னும் பலப்பல குறுநில அரசுகளாகவும் இருந்தவைதான். இப்படி இருக்கும் போது தேசம் என்றால் என்ன? வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனது பூகோள எல்லையை மாற்றிக் கொண்டே போகும் ஒரு நிலப்பரப்பை நிரந்தரமான ஒன்று என நம்புவது எத்தகைய பேதமை?

***

இரண்டு முறை நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறேன். பார்ப்பதற்கு ஸ்விட்ஸர்லாந்தைப் போல் தோற்றமளித்த அந்த பூமியில் ஒரு இடத்திலும் மக்கள் நடமாட்டமே காணாததால் ஏதோ ஒரு மயான பூமிக்கு வந்து விட்டது போல் இருந்தது. ஆனால் ஒரு ஆண்டில் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்த தேசம் அது.//



அ.மார்க்ஸ் எழுதியது இது

"ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?"

Monday, October 26, 2009


வாஸந்திக்கு வாய்க்கொழுப்பு..?


26/10/2009 உயிரோசை வார இதழை வாசித்து ஆச்சரியப்பட்டுப்போனேன்.எங்கே செல்லும் இந்தப் பாதைகள் - என்ற தலைப்பில் வாஸந்தி கருணாநிதியின் வாழ்க்கையையும் ஆட்சியையும் கிழி கிழியென்று கிழித்து எழுதியிருக்கின்றார். தமிழக தமிழ்ப்பத்திரிகைகளை மட்டுமல்ல ஆங்க்கிலப்பத்திரிகைகளையும் தான். சாட்டையடி.. அது கருணாநிதிக்கு தேவையானது தான். இருக்காதா பின்னே பூனைக்கு மணிகட்டுவது யார்? என்று ஏங்கிக்கொண்டிருந்தவர்களில் நீங்களும் இருந்தால் ..இதோ ..பூனைக்கு முதல் மணி கட்டப்பட்டிருக்கின்றது. அதுவும் ஒரு பெண்ணால் ஊரறிந்த உலகறிந்த எழுத்தாளினி.

எப்படி அவருக்குப் பயமில்லாது போய்விட்டது. ஒரு வேளை அவர் பெங்களூரில் குடியிருப்பதாலோ என்னவோ? இங்கும் இருக்கின்றார்களே பத்தி எழுத்தாளர்கள் இணைய எழுத்தாளர்கள் என்று. முதுகிற்கும் நோகாது குச்சிக்கும் நோகாது முதுகு சொறிய வல்லவர்கள். எழுதுகின்றார்கள் ...எழுதிக் கிழிக்கின்றார்கள். அவர்கள் எழுதுவது அவர்களுக்கே புரியுமோ என்னவோ?

சேறும் சகதியும் நிறைந்த இடத்தில் நின்று கொண்டு அத்தரும் 'சென்'ரும் பூசி வாசனையில் மிதப்பவர்கள். நிற்கும் இடத்தைச் சுத்தம் செய்ய வேண்டுமென்ற சமூகப் பொறுப்பு அற்றவர்கள். எழுதி எதைத்தான் சாதிக்கப்போகின்றார்கள். இவர்களின் கலை இலக்கிய இரசனை சில பின்னூட்டத்திற்குள்ளும் 'வாவ்' என்ற அமோதிப்பிற்குள்ளும் அடங்கிப் போக சம்மதமென்றால் ஆழ் கடலின் ஆரவாரிப்பு எதற்கு? தேங்கி நிற்கும் குட்டைநீரின் அமைதி போதுமே.

இதோ ஒரு முன்மாதிரி. யாரோ ஒருவர் ஆரம்பித்து வைக்கவேண்டுமே. அது இவராக இருக்கட்டும்.

இனி அவர் வார்த்தைகளில் ... (அதை வெளியிட்ட உயிரோசைக்கு நன்றி)


"தமிழ் நாட்டில் ஆங்கிலப் பத்திரிகைகள் கூட அரசின் செயல்பாடுகளைக் காட்டமாக விமர்சனம் செய்வதில்லை. ஊரக வளர்ச்சித்துறையின் ஊழலையோ, சாலைகளின் மோசமான இருப்பையோ தினமும் விமர்சிப்பதில்லை. முகத்தில் அடிப்பது போல புகைப்படத்தை தினமும் பிரசுரிப்பதில்லை. தமிழ் பத்திரிகைகளைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். வம்புக்கே போகாது. விமர்சனம் செய்யாத, செய்யத் துணியாத பிராந்திய மொழி பத்திரிகை உலகம் இருக்கவேண்டியது சௌகரியம் மட்டுமில்லை, அவசியமும்கூட என்று அரசு நம்புகிறது. பத்திரிகையாளர்கள் முதுகெலும்பு ஒடிந்தவர்கள்/ ஒடிக்கப் பட்டவர்கள். என்னென்னவோ நடக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன. எல்லாம் பெரிய இடத்து சம்பந்தம் என்கிற பேச்சு அக்கம்பக்கம் பார்த்து ரகசியமாகச் சொல்லப் படுகிறது. ஆனால் அதையெல்லாம் புலன் விசாரணை செய்யவோ விவரங்கள் சேகரித்து அம்பலப் படுத்தும் ஆர்வமோ எந்தப் பத்திரிகைக்கும் இல்லை. வெகுஜன பத்திரிகைகள் எல்லாம் சினிமாப் பத்திரிகைகள் ஆகிவிட்டன. கிளுகிளுப்பூட்டும் சினிமா வம்புகளை கற்பனை கலந்து வெளியிடும் அடாவடித்தனம் மட்டும்தான் இப்போது மிச்சம் என்பது கேவலத்திலும் கேவலம். ஆனால் அதிலும் ஆபத்து உண்டு. நிர்வாகத்துக்கு இருக்கும் அசாத்திய அதிகாரம் எங்கெல்லாம் பரவி இருக்கிறது என்று மறந்தால் அதற்கும் [நியாயமாக] வம்பில்தான் மாட்டிக்கொள்ளவேணும். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாக விற்பனை எண்ணிக்கையை நினைத்து செயல்பட்டு பிறகு வேலையிழக்க நேரிடும். அதோடு சிறை வாசமும் கிடைக்கலாம். சக பத்திரிகையாளரிடமிருந்து முழுமையான ஆதரவை எதிர்பார்க்கமுடியாது. கைதுசெய்ததை எதிர்க்கலாம், அடாவடித்தன செய்தி அறிக்கையை எப்படி ஆதரிப்பது? பெண்களை- அவர்கள் என்ன தொழில் செய்தால் என்ன, மிகக் கேவலமாக, மான பங்கப்படுத்துவதற்கு இணையாக செய்தி வெளியிட்டால் யார்தான் ஆதரிப்பார்கள்? பதில் சொல்லவேண்டிய கடமை பத்திரிகைத் துறைக்காவது இருக்கவேண்டும். பெண்களின் கண்ணியம் காப்பாற்றப்படவேண்டும் என்கிற கடமை தனக்கிருப்பதாக அரசு காண்பித்துக்கொள்வதற்குப் பின்னணி வேறு. அது என்ன என்பது ஆராயப்படவேண்டிய ஒன்று.

நான் சொல்லவந்தது வேறு. சாலைகளைப் பற்றி ஆரம்பித்தேன். பழுதானால் அதைச் செப்பனிடுவது வருடாந்தர செலவாக [அல்லது உபரி வருமானமாக] இருக்கும் என்பதால் நிர்வாகத்துக்குப் பிரச்சினையில்லை. பதவியில் இருப்பவர்களுக்கு, அரசியல் வாழ்வில் அனுபவம் மிக்கவர்களுக்கு இந்தப் பணிகள் எல்லாம் மாமூலானவை. பணிகள் நின்று போனாலும் பிரச்சினையில்லை. அவர்களது நீண்டகாலத் திட்டங்கள் வேறு. சொந்த வளர்ச்சிக்கான பாதை வகுக்கும் திட்டங்கள். அதற்கான பாதையை நல்ல சிமெண்டுப் பாதையாக எந்த சுனாமி வந்தாலும் உடைந்து விரிந்து போகாத பாதையாகத் தமது கட்சிக்கும் வாரிசுகளுக்கும் போடுவதில்தான் அர்த்தம் இருக்கமுடியும் . இந்தப் பணியில் தமிழக முதல்வரைவிட அதி மேதாவியை எந்தக் காலத்திலும் பார்த்திருக்கமுடியாது. அவர் வாழும் காலத்தில் நாம் வாழ்வதால் நம்மில் அநேகருக்குக் கிட்டப் பார்வைதான் இருக்கிறது. தொலை நோக்கு என்பது அந்தத் தொண்ணூறை நெறுங்கும் முதியவருக்கு இருப்பதாலேயே தமிழகத்து அதிகார மையம் கோபாலபுரத்திலும் ஆழ்வார்பேட்டையிலும் குடிகொண்டிருக்கிறது. தமிழ் நாட்டின் எல்லாத் துறையையுமே மண்டியிட வைத்திருக்கிறது. தமிழகத்தில் தேனும் பாலும் ஓடுவதான பிரமையை ஏற்படுத்தியிருக்கிறது. விமர்சனம் செய்யவே முடியாத அளவிற்குப் பத்திரிகைத்துறை ஒடுக்கப்பட்டிருப்பது இருக்கட்டும். சினிமாத்துறையிலிருந்து கல்வித்துறை , அரசுப் பணியாளர், அரசு சாராப் பணியாளர், விவசாயிகள், மீனவர், சிறுபான்மை சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் , ஆசிரியர்கள், தமிழறிஞர்கள் என்று எல்லாத் துறைகளையும் , அதில் பங்குபெறுவோர் அனைவரையும் தன் வசம் முதலமைச்சர் கருணாநிதி வளைத்துக்கொண்டுவிட்டார்.

கருணாநிதியின் அளப்பரிய சாமர்த்தியத்தை நினைக்க நினைக்க வியக்காமல் இருக்கமுடியவில்லை. இதைப் போன்ற ஜன மயக்கு அரசு என்றும் தமிழ் நாட்டில் இருந்ததில்லை.இதற்கு முன்பு பதவியில் இருந்த காலத்தில் இதே கருணாநிதி இப்படி வாரி வழங்கியதில்லை. எல்லா தரப்பினரையும் அரவணைத்துக்கொள்ளும் ஆர்வம் காட்டியதில்லை. அவரது பழுத்த அனுபவம் அவரை மாற்றியிருக்கவேண்டும். பணத்தைப்போல அரசியலுக்கு உதவுவது உடன்பிறப்புகள் கூடச் செய்ய முடியாதது என்று உணர்ந்து கொண்டவர் அவர். பணம் அம்பானிகளைப் பிரிக்கும். ஆனால் பணத்தைக் கொட்டவல்ல அரசியல் பதவியும் அந்தஸ்தும் வாரிசுகளை இணைக்கும். தனித்துச் செயல்பட்ட குடும்பங்களை கைநீட்டி சமரசம் செய்யவைக்கும். இவையெல்லாம் சுயநலத் திட்டங்கள் என்று உடன்பிறப்புகள் தயவு செய்து நினைக்கவேண்டாம். இவையெல்லாம் கட்சியை பலப் படுத்த. வீட்டுக்குள் ஒற்றுமை இருந்தால்தான் கட்சிக்கு பலம்.

வாக்கு வங்கியை பலப்படுத்துவது அதேபோல முக்கியம். மைனாரிட்டி திமுக அரசு என்று தினமும் எள்ளிக் கொக்கரிக்கும் எதிரணித் தலைவி இனித் தலையே எடுக்கமுடியாதபடி செய்தாகவேண்டும். 2004 பாராளுமன்றத் தேர்தலிலேயே அதற்கான வெள்ளோட்டம் பார்த்தாகிவிட்டது. முதல் முறையாக தமிழகம் மற்றும் புதுவைக்கான 40 சீட்களையும் அவரது கட்சிக் கூட்டணி பலத்துடன் வென்று மத்தியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் ஒரு வலுவான செல்வாக்கு மிக்க கூட்டாளி என்ற அந்தஸ்தைப் பெற்று அதன் வலிமையை உணர்ந்தவுடன் கருணாநிதியின் வியூகங்கள் சடசடவென்று மாறின. ஆட்சியை மாநிலத்தில் பிடித்தாகவேண்டும். பணத்தை கண்சொடுக்காமல் வாரி இறைத்தால்தான் எங்கும் பலன் இருக்கும். பணமும் பதவியும் இரட்டைப் பிறவிகள். ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. இருந்தாலும் மதிப்பில்லை. இதுவே கட்சியைப் பலப்படுத்துவது. பெரும்பான்மை எதிர்பார்த்தபடி கிடைக்காவிட்டால் என்ன? கிடைத்ததுபோல ஆட்சி செய்யலாம். சாமர்த்தியமாகக் கூட்டணிக்கட்சியினரை ஒதுக்கி வைக்கலாம். சரியான வியூகம் கொண்டு வானத்தை வில்லாக வளைக்கலாம் இலங்கைத் தமிழர் பிரச்சினை என்று இடையில் பூகம்பம் வெடித்தாலும்.. மக்கள் சுலபமாக வளைந்து கொடுப்பார்கள். இலவசங்களை வாரி வழங்கினால், டாஸ்மாக் கடைகளில் ஆண்கள் படுத்திருந்தாலும் எல்லா பெண்களும் பலதலைமுறைகளுக்கு வாக்கு அளிப்பார்கள். தமிழகத்துப் பெண் வாக்காளர்கள் எம்ஜிஆரை கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். திமுகவில் அவரைவிட வள்ளல் பெருமக்கள் இன்று இருக்கிறார்கள். அதனாலேயே அதிக வசீகரத்துடன் இன்று தெரிகிறார்கள். கொடுப்பவருக்கே ஓட்டு. எல்லா பெருமையும் கலைஞருக்கே. வரலாற்றுச் சுவட்டில் இருக்கும் பாரி காரி, ஓரி என்ற கொடைவள்ளல்களா?- தயவு செய்து ஓரம் போங்கள். தமிழகத்தின் வரலாற்றை வேறு ஒரு மாமனிதர் எழுதி வருகிறார். அரசியல் சாதுர்யம், கொடை, தமிழ் உணர்வு- ஆகியவற்றில் எதில் நீங்கள் அவரை மிஞ்சமுடியும்?

கருணாநிதி இப்போது யாரைப் பற்றியும் கவலைப் படவேண்டியது இல்லை. உலகத் தமிழ் செம்மொழி மாநாடுக்கு ஏற்பாடுசெய்தாகிவிட்டது. யார் வந்தாலும் வராவிட்டாலும் அவர் பெயரைச் சொல்லி அது நடக்கும். அவரைப் புகழ் பாட முன்னாள் இன்னாள் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரிசையாக நிற்கிறார்கள். அவர் பெற்ற விருதுகளை வரிசைப் படுத்தி எழுத ஒரு கரும்பலகை போதாது. புத்தகம் போட வேண்டும். போடுவார்கள். நோபல் பரிசுக்குக் கூட இங்கிருந்து சிபாரிசு போகும். ஏன் கூடாது? நேற்று முளைத்த ஒபாமாவுக்குக் கிடைக்கலாம், பல களம் கண்டு ஜெயித்த, பன்முகத்தன்மை கொண்ட ஆற்றல் படைத்த சாணக்கியர் கருணாநிதிக்கு ஏன் கிடைக்கக் கூடாது?

தமிழர்களான நமக்கு எத்தனை பெருமையாக இருக்கும்? தான் தமிழர் என்றுகூட சொல்லாத வெங்கிக்கும் அம்பிக்கும் கொடுத்து என்ன உபயோகம்?"

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2142

மகிந்த ராஜபக்ஷவும் 'அரசியல் கோமாளி' கருணாநிதியும்!




பாரீஸில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் வந்த கட்டுரை:

மகிந்த ராஜபக்ஷவால் 'அரசியல் கோமாளி' என்று வர்ணிக்கப்பட்ட கருணாநிதி அவர்கள் அனுப்பிவைத்த பத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைத் தீவுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பியுள்ளனர். சிங்கள அரசால் வழங்கப்பட்ட தடல் புடல் மரியாதைகளினால் உள்ளம் குளிர்ந்துபோன இவர்கள் தாம் சென்ற இடங்களில் எல்லாம் அல்லல்படும் தமிழர்களின் அவலங்கள் குறித்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கிச் சென்ற டி.ஆர். பாலுவின் நடத்தையால் தமிழ் ஊடகமொன்று அவருக்கு 'சனீஸ்வரன்' என்ற பட்டத்தை வழங்கியது. வவுனியா அரச அதிபருடன் நடந்து கொண்ட விதமும் அவர்மேல் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

வவுனியா முகாம்களுக்குச் சென்ற இந்த நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகித்த காங்கிரஸ் உறுப்பினர் ஜே.எம்.ஆரோன் 'இந்திய ஊடகங்களில் தெரிவிப்பதனைப் போன்று இடம்பெயர் மக்கள் அவலங்களை எதிர்நோக்கவில்லை' என சிங்களக் கொடுமைகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். தமிழகம் திரும்பிய பின்னர் காங்கிரஸ் உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் 'நாங்கள் சென்ற முகாம்கள் எல்லாம் சர்வதேச தரத்தில் சிறப்பாகவே உள்ளது' என்று தமிழீழ மக்களின் உணர்வுகளைச் சிதறடித்தார். ஆக மொத்தத்தில், இலங்கைக்குச் சென்று, அங்குள்ள தமிழர்களை அவமானப்படுத்தித் திரும்பியுள்ளார்கள்.

ஐந்து நாள் பயணத்தை மேற்கொண்டு தமிழகம் திரும்பிய இந்த நாடாளுமன்றக் குழுவினரை சக்கர நாற்காலியில் பவனிவரும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றுள்ளார். நாடு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடிய கலைஞர் கருணாநிதி விமான நிலையத்தில் வைத்தே, 'வவுனியா தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இரண்டரை லட்சம் மக்களில் 58 ஆயிரம் மக்களை அடுத்த 15 நாட்களுக்குள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உறுதியளித்துள்ளார்' என்று அறிவித்தார்.

கருணாநிதி அவர்களது இந்த அறிவித்தல் மறுநாள் இது குறித்து தமக்கு ஒன்றும் தெரியாது என்று ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான அனுர பிரியதர்சன யாப்பா இந்தச் செய்தியை மறுதலித்திருந்தார். அத்துடன், 'தமிழகத்து இந்தக் குழுவின் வருகை, இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் குறைவதற்கு வழிவகுத்துள்ளது' என்று சிங்கள அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் நான்கு மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடாத்திய கலைஞர், தற்போது தனது மகள் கனிமொழியையும் இணைத்துக்கொண்டு ஒரு பயண நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் பயணம் குறித்து ஈழத் தமிழர்கள் பெரிதும் அலட்டிக்கொள்ளாத போதும், தமிழகத்தில் இது குறித்துப் பாரிய பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியைப் பாராட்டித் தமிழகம் எங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 'இலங்கைத் தமிழருக்கு நான்கே நாட்களில் விடுதலை பெற்றுத் தந்த கலைஞருக்குப் பாராட்டு, வாழ்க தலைவர் கலைஞர்!' என்ற வாசகங்களோடு கூடிய இந்த பாரிய சுவரொட்டிகள், கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்களின் அவலங்களைத் தனது சுயநல அரசியலுக்குப் பயன்படுத்துவது உறுதியாகியுள்ளது. கலைஞரின் இந்த சுவரொட்டிப் பிரச்சாரம் தமிழுணர்வாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதம் குறித்தும், அதன் பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்டதாக சிங்கள அரசால் கூறப்பட்ட வன்னி மக்கள் மூன்று இலட்சம் பேர் முட்கம்பி முகாம்களுக்குள் சிறை வைக்கப்பட்டு பல்வேறு சித்திரவதைகளை அனுபவித்து வரும் கொடுமைகள் பற்றியும், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின்பேரில் பல்லாயிரக்கணக்கான இளம்வயதினர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சிறிலங்கா அரசால் தெரிவிக்கப்பட்டிருப்பினும், அவர்களைப் பார்வையிடுவதற்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் குறித்தும் மேற்குலக நாடுகள் அக்கறை செலுத்திவரும் நிலையில் முத்துவேல் கருணாநிதி அவர்கள் அதிலும் தன் அரசியலை நடாத்த முற்படுவது அருவருக்கத் தக்க விடயமாகவே உள்ளது.

இலங்கைத் தீவில் சுதந்திரத்திற்குப் பின்னரான காலப் பகுதிகளில் சிங்கள அரசுகளால் தொடர்ந்தும் இழைக்கப்பட்டு வந்த அநீதிகள், இன ஒதுக்கல்கள், இன வன்முறைகள் காரணமாகவே 1977 இல் தமிழீழத் தனியரசு கோரி தந்தை செல்வா அவர்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனநாயக முறைமையுடன் தமிழீழ மக்கள் மேற்கொண்ட அரசியல் உரிமைப் போராட்டங்கள் அனைத்தும் சிங்கள அரசுகளின் ஆயுத ஒடுக்குமுறையால் தோல்வியைத் தழுவிய நிலையிலேயே தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் உருவானது. இந்தியாவால் ஆயுதங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, இந்திய மண்ணில் உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புக்களும் 'தமிழீழம்' என்ற சொற்பதத்தைத் தங்களது அமைப்புக்களின் பெயர்களில் இணைத்துக்கொண்டன. ஆனாலும், தற்போது கருணாநிதி அவர்களால் 'தமிழீழம்' என்ற சொல் மறுதலிக்கப்பட்டு 'இலங்கைத் தமிழர்' என்ற சிங்கள விருப்பங்களாலேயே ஈழத் தமிழர்கள் குறிப்பிடப்பட்டு வருகின்றார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழுணர்வு கலைஞர் கருணாநி அவர்களால் காசாக்கப்பட்டு, குடும்பச் சொத்தாக்கப்படுகின்றது. இந்தப் பேராசை பிடித்த மனிதரால் தமிழீழ விடுதலையும், தமிழீழ மக்களும் விலை கூறி விற்கப்பட்டுள்ளார்கள். சினிமாவுக்குள் அமிழ்ந்து போயிருந்த தமிழக மக்களின் சுய சிந்தனைகள், கலைஞரது சின்னத் திரைக்குள் சிறைபட்டுப் போயுள்ளது. அவர்களது அரசியல் விருப்பங்களும் விலை நிர்ணயிக்கப்பட்டு வாங்கப்பட்டு விட்டது.

சிங்கள தேசத்தை சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீட்பதற்கான இந்திய நிகழ்ச்சி நிரலில் இணைந்துகொண்டு தமிழக முதல்வர் நடாத்தி முடித்த நாடகத்தினால் தமிழகம் மீதான ஈழத் தமிழர்களின் இறுதி நம்பிக்கையும் தகர்க்கப்பட்டுவிட்டது.

பயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுமதி செய்கின்றது..?


பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு இந்தியா என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகின்றது. இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என்று அரசாங்கங்களிற்கு எதிராகவோ அந்நாட்டின் மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டி அதற்கான பண ஆயுத, இராணுவ ஆலோசனை என்பவற்றை வழங்குவதுடன் பயிற்சிகளையும் இந்தியா வழங்குகின்றது.

ஈழப்போரில் கூட அதன் ஆரம்பகாலத்தில் ஆயுதக்குழுக்களுக்கு பயிற்சி முதல் பண ஆயுத உதவிகள் வரை செய்து இறுதியில் சிங்கள அரசாங்கத்திற்கு தடைசெய்யப்பட்ட இரசாயன , உயிரியல் ஆயுதங்கள் வரை வழங்கி 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததை நீங்கள் அறிவீர்கள்.

நேபாளத்திலும் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் நேபாள அரச ஆட்சியாளர்களுக்கு ஆயுத பண உதவிகள் அளித்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததையும் நீங்கள் அறிவீர்கள்.

இன்று உள்நாட்டிலேயே காஸ்மீர்,மிஷோரம்,அருணாசலப் பிரதேசம் என்று உள்நாட்டிலேயே அரசபயங்கரவாதத்தை ஏவி படுகொலைகளைச் செய்து கொண்டிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இப்போது பாகிஸ்தானில் தலிபான்களுக்கு பண உதவி ஆயுதங்களை வழங்குவதான பலத்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் எழுப்பியுள்ளார்.
சர்வதேச சமூகத்தால் ஒழிக்கப்பட முயற்சிக்கப்படும் பயங்கரவாதம் இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்படுவது உலக நாடுகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியா மீதான தம் கருத்தை மறுபரிசீலனை செய்யும் எண்ணத்தையும் அவை இப்போது கொண்டுள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் பேட்டி வெறுமனே விலக்கி வைக்கக் கூடியதல்ல. ஜனநாயகப் போர்வையில் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வைக்கப்படும் குர்றச்சாட்டுகள் தீவிரமாக ஆராயப்படவேண்டியன.

இனி அவரின் குற்றச்சாட்டு மற்றும் சவால். இதற்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கப்போகின்றது ?


//தாலிபான்களுக்கு நிதியுதவி அளித்து பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது இந்தியாதான் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் மீண்டும் குற்றம் சாற்றியுள்ளார்.

இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இக் குற்றச்சாற்றைக் கூறியுள்ள மாலிக்,பாகிஸ்தானில் குழப்பத்தையும்,ஸ்திரமற்றம் நிலையையும் ஏற்படுத்துவதற்காக தாலிபான்களுக்கு பின்னணியிலிருந்து ஆதரவளித்து வரும் சில தீய சக்திகளில் இந்தியாவும் ஒன்று தெரிவித்துள்ளார்.

தாலிபான்களுக்கு யார் ஆதரவளித்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

" பாகிஸ்தான் ஸ்திரத்தன்மையுடன் இருக்கக்கூடாது என்று எண்ணுகிற சில தீய சக்திகள் இருக்கின்றன.அந்த சக்திகள்தான் தாலிபான்களுக்கு ஆதரவளித்து வருகின்றன " என்று கூறிய மாலிக்கிடம், அந்த தீய சக்திகளில் இந்தியாவும் ஒன்றா எனக்கேட்டபோது, " ஆமாம், நிச்சயமாக.அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.நான் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறேன்.இது தொடர்பாக முழு விவரங்களும் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சரோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த வேறு யாராகிலுமோ நேருக்கு நேர் வாதம் செய்ய விரும்பினால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.ஏனெனில் நான் என்ன சொல்கிறேன் என்பதை நான் அறிந்துள்ளேன் " என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.

பலுச்சிஸ்தானில் இந்தியா குழப்பத்தையும்,கலரவத்தையும் தூண்டிவிட்டு வருவதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும்,இதனை எந்த ஒரு இந்திய தலைவர்களிடமோ அல்லது பிரதிநிதிகளிடமோ அளிக்க தயாராக உள்ளதாகவும் கடந்த வாரம் மாலிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. //


http://tamil.webdunia.com/newsworld/news/international/0910/26/1091026078_1.htm

புலிகளை உயிர்ப்பிக்கும் இந்தியா


ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்தின் சிறிலங்காவின் போர்க்குற்றங்களைத் தீர விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை சிங்களப் பாசிச அரசை கிலி கொள்ளச்செய்துள்ளது. காஸாவில் நடைபெற்ற விசாரணைகள் போன்ற திறந்த சுதந்திரமான விசாரணைகள் சர்வதேச நெறிகளுக்கு முரணான அப்பாவி மக்கள் மீதான கொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருமென நம்பப்படுகின்றது.

அப்பாவி மக்கள் மீதான சிங்கள இராணுவ அதிகாரிகளின் மிலேச்சத்தனமான படுகொலைகளும் அங்கு பாவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய விபரங்களும் வெளிவருவதையிட்டு சிறிலங்கா மட்டுமல்ல பல நாடுகள் கவலைகொள்ளத்தொடங்கியிருக்கின்றன. சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசு பதற்றங்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. இவ்வகை ஆயுதங்களின் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் இந்தியாவின் அகிம்சாவாத ஜனநாயக முகமூடி கிழிக்கப்படுவதுடன் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடென இந்தியா உலக அரங்கிலிருந்து ஒதுக்கப்படும்.

இப்பதற்றங்களின் முதற்படியாக சரணடைந்து கொல்லப்பட்ட புலித் தலைவர்களின் விவகாரத்தில் சிறிலங்கா இப்போது முன்னுக்குப் பின்னாக உளறத்தொடங்கியுள்ளது. முன்னர் பிரபாகரன் யுத்தத்திலேயே கொல்லப்பட்டார் என்று கூறியிருந்த போதிலும் பின்னர் இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி மே 17 ஆந்திகதி காலையில் பிரபாகரன் சரணடைந்தபோதும் பலத்த சித்திரவதைகளின் பின் மே 18 ஆந்திகதி மாலையில் கொல்லப்பட்டாரென செய்திகள் கசிந்திருந்தன.

இலங்கை இராணுவம் வெளியிட்ட இணையத்தளப் படங்களும் அவ்வகையான செய்திக்கு உரம் சேர்ப்பதாகவே விளங்கின. மிக அருகில் இருந்து மண்டை பிளக்கப்பட்ட அகோர நிலையிலேயே அவர் படங்கள் காணப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை பல சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் இரகசிய பேட்டிகளை முன்வைத்து இதை ஊர்ஜிதம் செய்திருந்தது. அடைக்கலமடைந்த புலிகளைக்கொல்வது சர்வதேச போர்சட்டங்களுக்கு எதிரானது. இதனால் சங்கடப்பட்ட சிறிலங்கா பாசிச அரசு அதனை உடனேயும் மறுத்திருந்தது. போரிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் இறந்து விட்டதாகக் காட்டப்பட்ட மற்றைய புலித்தளபதிகள் மீது காணப்படாத சித்திரவதை அடையாளங்கள் பிரபாகரனின் உடலில் எப்படி வந்தது என்பதை விளக்கத் தவறி விட்டது.

அத்துடன் சர்வதேச விதிகளை மீறியிருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சுதந்திரமான விசாரணையை நடாத்த சிறிலங்கா அரசு ஏன் தயங்க வேண்டுமெனவும் கேள்வி எழுந்துள்ளது.

இதே வகையான பொறியில் இப்போது இந்தியாவும் வகையாக மாட்டிக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் இடம் பெற்ற படுகொலைகளின் தடங்களை எத்தனை தூரம் அழித்தாலும் அமெரிக்க செய்மதிகளால் எடுக்கப்பட்ட நேரடிப் படுகொலைகளின் புகைப்படங்களை வைத்து அமெரிக்கா மிரட்டி வருகின்றது.

அதனால் புலிகளை முற்றாக அழியவிடாது இந்தியா உயிர்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. புலிகளின் மீது அதி தீவிரவாத பயங்கர வாத முலாம் பூசுவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ளது. அண்மையில் இந்திய மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் கணபதி புலிகள் பற்றி கருத்துக்கூறி வெளியிட்ட அறிக்கையை பிடித்துக் கொண்டுள்ளது.

புலிகளின் மூன்று குழுக்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய புலனாய்வுத் துறை இப்போது 'கதை' விடத்தொடங்கியுள்ளது. புலிகள் மீதான சிங்கள ஆக்கிரமிப்பாளரின் படை நடவடிக்கையின் போது பலத்த காவலை இந்தியக் கரையோரங்களில் மேற்கொண்டு அப்பாவி மக்கள் கூட தப்பி வரமுடியாது கொலை செய்தது இந்தியா என்பதை அனைவரும் அறிவோம்.

இப்போதோ புலிகளின் படையணிகள் 'ஊடுருவும்" கதைகளை அவிழ்த்து விட்டுள்ளது. மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளிற்கு புலிகள் பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கினார்கள் என்று புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவர் கணபதியோ புலிகளுக்கு எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை வழங்குவோம் என்று பேட்டியில் கூறியிருக்கின்றார்.

இப்பொழுது ஊடுருவிய குழுக்களைப்போலவே இன்னும் பல குழுக்கள் "ஊடுருவும்" கதைகள் அவிழ்த்து விடப்படும். இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத்து இளைஞர்களைக் கொண்டு இப்புதிய புலிகளின் குழுக்கள் உயிர்ப்பிக்கப்படும். மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் ஈழத்தமிழர்கள் இத்தகைய குழுக்களின் "மாஸ்டர் மைண்ட்" மற்றும் "நிதி வழங்குனர்" பாகங்களை ஏற்கும் கதைகளும் சோடிக்கப்படும். இந்தியா செல்லும் ஈழத்தமிழர்களே ஜாக்கிரதை.

இதற்குள் இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பின் கெடுபிடி பற்றியும் புலிகளின் ஆயுதக்கப்பல்களை வழி மறித்து அழித்த வீரதீர சாகசங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருந்தோம். சிங்களை பாசிச ஆட்சியாளர்களும் தங்கள் நன்றிகளை எப்போதும் சோனியாவிற்கு பகிரங்கமாகவே கூறியிருந்தார்கள்.

இதையெல்லாம் மீறியா..? ம்..ஹிம் சான்ஸே இல்லை ..இந்தியா வல்லரசாக. சீன போரியல் ஆலோசகர் கூரியதைப் போலவே இந்தியா 20, 30 நாடுகளாகப்பிரிந்து விடுமா? என்ச்ஜோய் சைனா...

இது கதைக்குள் ஒரு கதை . சும்மா ஜாலிக்காக:

இந்தக்கதைகளைக் கேட்கும் போது 'பசி'தம்பரம் அண்மையில் கூறியதைப்போன்று பாகிஸ்தான் தீவிர வாதிகள் தமிழர்களாகி தமிழ் நாட்டிற்குள் ஊடுருவத் தொடங்கி விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்படி அவர்கள் ஊடுருவியிருந்தால் அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகம் அராஜகப் பூங்காவாக மாறிவிடும். புலி சிறுத்தையாக கர்ஜிக்கும் வைகோ திருமா அனைவரும் எலிகளாக மாறி வளைகளுக்குள் ஒழிந்து விடுவார்கள். பணயக் கைதியாக கருப்புக்கண்ணாடியைப் பிடித்து வைத்தால்.."ஐயோ அம்மா கொல்லுரானே.." என்னும் அலித்தனமான வசனங்களைக் கேட்கலாம்.. சந்தர்ப்பம் வருமா?

சிரிப்பு வரல்லியா?

Sunday, October 25, 2009


கண்ணி வெடிக் கதை


ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச, பொது மக்கள் வசித்த பகுதிகளிலும், அவர்கள் தொழில் செய்துவந்த இடங்களிலும் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகளை அகற்றியப் பிறகே மீள் குடியமர்த்தம் சாத்தியமாகும் என்றும், அதற்கு உரிய கால அவகாசம் தேவை என்றும் கூறியுள்ளார்.

சிறிலங்க அரச தலைவரின் இந்தப் பேச்சை படிக்கும் எவரும், அவர் கூறுவது அனைத்தும் உண்மைதானோ என்று நம்பிவிடக்கூடும். போரினால் இடம் பெயர்ந்த 3 இலட்சம் தமிழ் மக்களை முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்து, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே உணவு தந்து, ஒருவருக்கு ஒரு நாளைக்கு 5 லிட்டர் குடி நீர் மட்டுமே கொடுத்து, போதுமான கழிப்பறை வசதி கூட செய்துத் தராமல், அதற்குக் கூட அவர்கள் வரிசையில் நிற்க வைத்து கடந்த 5 மாதங்களாக வதைத்துவரும் ஒரு அரச தலைவரின் பேச்சு இது என்பதைப் புரிந்துகொண்டால் இவர் கூறுவது உண்மையா பொய்யா என்பதில் எந்தச் சந்தேகமும் எழாது.

இந்தக் கண்ணி வெடிக் கதையை போர் முடிந்துவிட்டதாக சிறிலங்க இராணுவம் அறிவித்த நாள் முதல் அதிபர் ராஜபக்ச பன்னாட்டுச் சமூகத்திற்குக் கூறி வருகிறார். “தமிழர்களும் எம்மக்கள் அல்லவா? அவர்களின் உயிருக்கு நான்தானே பொறுப்பேற்கவேண்டும்” என்று மிகுந்த கரிசனத்துடன் முழங்கி, அவர்கள் வாழ்ந்த வந்த பகுதிகளில் மீண்டும் அவர்களை குடியேற்றுவது இல்லை என்ற இரகசிய திட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவருடைய கண்ணி வெடிக் கதையை மறுப்பவர்கள் எழுப்பும் கேள்விகள் இதுதான்:

1. போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்த, தொழில் செய்த பூமியெங்கும் கண்ணி வெடிகள் புதைக்கப்ட்டுள்ளன என்று அதிபர் ராஜபக்ச கூறுவது உண்மையானால், அந்தப் பகுதிகளையெல்லாம் கடந்து சென்றுதானே அந்த மக்கள் புலிகளுடன் சென்று கடைசியாக தஞ்சமடைந்த முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் வரை சென்றீர்கள்? அப்பொழுதெல்லாம் அந்தக் கண்ணி வெடிகள் ஏன் வெடிக்கவில்லை?

2. இறுதிக் கட்டமாக போர் நடந்த போது பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை நடக்க வைத்துத்தானே இந்த முகாம்களுக்கு கூட்டி வந்தீர்கள் அப்போதும் கண்ணி வெடிகள் வெடிக்கவில்லையா? பாதுகாப்பு வளையப் பகுதியில் இருந்து முகாம்களுக்கு அழைத்துவரும் வரை கண்ணி வெடி வெடித்து உயிரிழந்தார்கள் என்று எந்தச் செய்தியையும் சிறிலங்கத் தரப்பு கூறவில்லையே? அப்பொழுதெல்லாம் வெடிக்காத கண்ணி வெடிகள் இதற்கு மேல் வெடிக்குமா?

பன்னாட்டுச் சமூகமும், மனித உரிமை அமைப்புகளும் எழுப்பும் இந்தக் கேள்விகளுக்கு இதுவரை சிறிலங்க அரசு பதில் சொல்லவில்லை. கண்ணி வெடிகளை அகற்ற தாங்கள் உதவிடத் தயார் என்று மேற்கத்திய நாடுகள் முன்வந்ததையும் சிறிலங்க அரசு ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறிலங்க அரசு சொல்லும் இந்தக் கண்ணி வெடிக் கதையை ஏற்றுக் கொண்டு ஆமாம் போடும் ஒரே நாடு இந்தியா மட்டுமே!உலகின் மற்ற நாடுகள் எதுவும் இந்தக் கதையை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த மாத துவக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகளுக்கான துணைக் குழுவிற்கு வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை குறித்து அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்த பன்னாட்டுச் சிக்கல் ஆய்வுக் குழுவின் இயக்குனர் ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக், முகாம்களில் உள்ள மக்களை மீள் குடியமர்த்துவதற்கு கண்ணி வெடிகள் இருப்பதே காரணம் என்று சிறிலங்க அரசு கூறியதை ‘நான் சென்ஸ்’ என்று வர்ணித்துள்ளார்

இலங்கையில் தமிழர்கள் வாழந்த, வாழும் பகுதிகள் ஏராளமாக உள்ளன. அங்கெல்லாம் முகாமில் உள்ள மக்களுக்கு உறவினர்களாக உள்ளவர்கள் வசித்து வருகின்றனர். போர் நடந்த பகுதியில் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதை ஒரு வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், தமிழர்கள் வாழும் மற்ற நகரங்களில் வாழும் அவர்களின் உறவினர்களிடம் அவர்களை அனுப்பி வைக்கலாமே? என்று ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக் கேள்வி எழுப்பியுள்ளார். இப்படிப்பட்ட கேள்விக்களுக்கு இதுவரை சிறிலங்க அரசு பதிலளிக்கவில்லை என்பதலிருந்தே அது பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது என்ற உண்மை புலனாகிறது.

சிங்களக் குடியேற்றமே ராஜபக்ச அரசின் நோக்கம்!

எனவே தமிழர்களின் உயிரோ அல்லது அவர்களை மறுகுடியமர்த்தம் செய்வதோ அல்லது அவர்களை கெளரவமாக நடத்தக்கூடிய ஒரு அரசியல் தீர்வோ ராஜபக்ச அரசின் நோக்கமல்ல. முகாமில் அடைப்பட்டுள்ள மக்கள் வாழ்ந்த அவர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களர்களைக் குடியேற்றி, அதன் மூலம் ஈழத் தமிழர்களின் தாயகம் என்ற ஒன்று இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே - ராஜபக்ச மட்டுமல்ல - சிங்களப் பெளத்தப் பேரினவாத அரசின், சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தினுடைய வேறுபாடற்ற நோக்கமாகும். இதனை ஆதரிக்கிறது இந்தியா.

ஈழத் தமிழர்கள் வாழ்ந்து வரும் பாரம்பரிய பூமியில் அவர்களை ஒரு தனித்த மொழியினமாக வாழ அனுமதிப்பது தனி ஈழ நாட்டின் அமைவை நோக்கியே கொண்டு செல்லும், அப்பகுதியின் தமிழின தனித்துவத்தை மாற்றிவிட்டால் அவர்களின் ஈழ விடுதலைக் கனவை சிதைத்துவிடலாம் என்பது இவர்களின் திட்டம்.

இதனை நாம் கற்பனையிலிருந்து சொல்லவில்லை. தமிழர்களின் பாரம்பரிய பூமியில் சிங்களர்கள் குடியேறுவதில் (குடியேற்றுவதில்) எந்தத் தவறும் இல்லை என்று போர் முடிந்த உடனேயே அதிபர் ராஜபக்சவின் ஆலோசகரும் அவருடைய சகோதருமான பசில் ராஜபக்ச கூறினார். இப்பொழுதும் அதை வலியுறுத்தி வருகிறார்.

தமிழர்கள் வாழ்ந்து வந்த மணலாறு பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை செய்யும் முனைப்பில் சிறிலங்க அரசு நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அப்பகுதியின் பேரை மாற்றவும் முடிவெடுத்துள்ளது. இந்த மணலாற்றுப் பகுதியில்தான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்தப் போரை வலிந்து துவக்கியது சிறிலங்க அரசு என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் இயங்கிவந்த கிளிநொச்சியிலும், முல்லைத் தீவுப் பகுதியிலும் சிறிலங்க இராணுவத்தின் உயர் பாதுகாப்பு மண்டலங்களை (High Security Zone) ஏற்படுத்தி, சிறிலங்க இராணுவப் படைகளை நிரந்தரமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான முயற்சிகளில் சிறிலங்க அரசு ஈடுபட்டுள்ளது, இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புடன்.

எப்படி யாழ்ப்பாண தீபகற்பத்தில் உயர் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கி பல்லாயிரக்கனக்கான இராணுவத்தினரை நிரந்தரமாக நிலை நிறுத்தியுள்ளதோ அதேபோன்று தமிழர்களின் பூர்வீக பூமி முழுமையிலும் இராணுவத்தை நிலைநிறுத்தி தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்த ராஜபக்ச அரசு முயன்று வருகிறது. அதற்காகத்தான் இராணுவ பலத்தை பெருக்க வேண்டும் என்கிறார்!

இதற்கான கட்டமைப்புப் பணிகளை பன்னாட்டுச் சமூகம் கண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அங்கெல்லாம் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் ராஜபக்ச அரசு பொய்யுரைத்துக் கொண்டிருக்கிறது.

வன்னி முகாமில் உள்ள இரண்டரை லட்சம் மக்களை அது விடுவிக்கப் போகிறதா என்ற கேள்விக்கு பதில்: வன்னி முகாம்களில் இருந்து வெளியேற்றப்பட்டு மற்ற இடங்களில் உள்ள முகாம்களில் கொண்டு சென்று அடைப்பார்கள் என்பதே. அதுதான் நேற்று விடுவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 2,200 (2,400 பேர் என்று நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு கூறினார்) பேரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள இடைத் தங்கல் முகாமில் வைத்துள்ளனர். இவர்கள் வாழ்ந்த இடத்தை அரசு முகவர் கண்டுபிடித்தப் பிறகு (!) அவர்கள் அங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்று சிறிலங்க அரசின் மறுவாழ்வு அமைச்சகத்தின் செயலர் யூ.எல்.எம். ஹால்தீன் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்களுக்கு தாங்கள் வாழ்ந்த இடம் எதுவென்றோ அல்லது தங்கள் வீடு எங்குள்ளது என்றோ தெரியாதா?

இதுதான் இனியும் நடக்கப்போகிறது. உலக நாடுகளும், ஐ.நா. விழத்தெழுந்து அம்மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் சென்று குடியேற சிறிலங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று அழுத்தம் தர வேண்டும். அவ்வாறு நடக்காவிட்டால், ஆண்ட்ரூ ஸ்ட்ரோலிக் பரிந்துரைத்ததுபோல, சிறிலங்க அரசிற்கு அளிக்க ஒப்புக் கொண்டுள்ள ஐ.எம்.எஃப் கடனின் அடுத்த தவணையை நிறுத்தி வைக்க வேண்டும்.

நன்றி:
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0910/16/1091016104_1.htm

புலிகள் பயங்கரவாத அமைப்பு? -யாழ் உதயன்


சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் "ராவய'' பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது என்றாலும் அதை வெளியிட்ட 'யாழ் உதயன்" அதை உள்ளபடியே ஆமோதிக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

"விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை ஆயுதமேந்திய யுத்தமொன்றுக்கு தள்ளிச் சென்றது பல தசாப்த காலமாகத் தீர்த்து வைக்கப்படாதிருந்த அரசியல் பிரச்சினை யொன்றுக்குள் சிக்குண்டிருந்த தமிழ் மக்களேயென்பதை நாம் மறந்துவிட இயலாது. "

http://www.uthayan.com/Welcome/afull.php?id=136&L=T&1256494899

விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பென்பதையும் அவர்களை யுத்தத்தில் தள்ளிய தமிழ் மக்கள் பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போவதுமான ஒரு மாயையை வலிந்து உருவாக்குவதுமான பார்வையை இக்கட்டுரை உருவாக்குகின்றது. அது எப்படியென்றால் விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் விடுதலைப்போராளிகள் என்ற தமிழ் மக்கள் கருத்தை உடைக்கும் முயற்சியாகவே சிங்களப்பாசிச வாதிகளால் முன்வைக்கப்படும் புலிப்பயங்கரவாதம் என்ற கருதுகோளைக் காண முடியும்.

சிங்களப்பாசிச வாதிகளின் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் எண்ணத்திற்கு பக்கபலமாக வந்து சேர்ந்தது தான் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர். 9/11 இற்கு முன்னரே வீறுகொண்டெழுந்த 30 வருட கால இனவிடுதலைப் போராட்டம் அன்று எவ்வித பயங்கரவாத முகத்துடனும் பார்க்கப்படவில்லை என்பதையும் நாம் நினைவிருத்திக்கொள்ள வேண்டும்.

உண்மையான இனவிடுதலைப் போராட்டமும் மலினப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்குள் உள்ளடக்கப்பட்டது சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்க கபடத்தனத்தினாலேயே அன்றி உண்மை வேறுபட்டேயிருக்கின்றது.

ஈழத்தமிழர் போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கும் எதிர்ச்சக்திகள் எவ்வளவு தான் உரக்கக் கத்தி இவ்வின விடுதலைப் போரை பயங்கரவாத முலாம் பூச முற்பட்டாலும் அது என்றும் பயங்கரவாதமாகி விடாது.

இந்த கத்தி நுனியின் மீது நடக்கின்ற சாகசத்தை தமிழ் அறிவு ஜீவிகள் போராளிகள் ஊடகத்துறையினர் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். உங்கள் தனிப்பட்ட இலாபங்களிற்காக எதிர்ச்சக்திகளின் கருத்துகளுக்குத் துணை போகும் உங்கள் செயற்பாடுகள் எங்கள் இன விடுதலைப்போரை கொச்சைப்படுத்த முயலும் சக்திகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்து விடும்.

அந்த வகையிலேயே தமிழ் கூட்டமைப்பின் இந்திய சார்புக்கருத்துகளும் இந்தியாவை அடிவருடி நிற்பதையும் பார்க்கின்றோம். இந்த நூற்றாண்டின் அதி கேவலமான இனப்படுகொலையை நடாத்தி முடித்ததும் மனித இனமே வெட்கித்தலை குனியும் வகையில் அப்பாவி மக்களைக்கொன்று குவித்ததுமான அதி காட்டுமிராண்டிச் செயலை செய்ததும் இராணுவ, ஆயுத, ஆலோசனைகளைக் கொடுத்து உதவியதும் இந்தியாவே.

இதைச் சர்வதேசம் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று மேலெழுந்திருக்கின்ற சர்வதேசத்தின் ஈழத்தமிழர் மீதான ஆதரவுக்குரல் பாசிச சிங்கள அரசை மட்டுமன்றி அதற்கு ஆதரவு கொடுத்த அனைத்துச் சக்திகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மனித நேயத்தின் பெயரால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத சங்கடத்தால் வன்னித் தமிழ் மக்களின் துயரங்களைக் குறைத்து வெளிக்காட்ட சோனியாவின் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றது.

அந்த முயற்சிகளில் ஒன்று தான் எட்டப்பன் கருணாநிதியின் உதவியுடன் தமிழக எம் பிக்களின் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆடிய நாடகம். பாசிச ராஜபக்ஷேயின் அராஜகத்தை மூடி மறைக்கும் சோனியா காங்கிரஸின் அபிலாஷையைப் பூர்த்தி செய்ய முற்பட்டமை தமிழர் மீதான கருணாநிதியின் மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறாகும்.

இன்று இந்தியாவின் பிடி சிங்களவர் மட்டுமென்றல்லாது தமிழர் மீதும் இருந்து நழுவிவிட்டதோடல்லாமல் ஈழத்தமிழரின் பரமவைரி என்ற இடத்தையும் இந்தியா இலகுவாகப் பெற்று விட்டது.

இன்று ஈழத்தமிழரின் அனைத்து நலன்களையும் விரும்பும் சக்திகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக் கரத்தினை பற்றிப் பிடிக்க வேண்டும். சிறிலங்கா அமைச்சர் முத்து சிவலிங்கம் குறிப்பிட்டதைப் போல இந்தியாவையும் விட பெரிய அண்ணனான சீனாவை சிங்களம் எவ்வாறு பற்றிப்பிடித்திருக்கின்றதோ அதே போல அதையும் விட பெரிய அண்ணனான சர்வதேசசமூகத்தைப் பற்றிப்பிடிக்க வேண்டியது ஈழத்தமிழர்களின் யதார்த்தமாகும்.

புலம் பெயர் தமிழர்களின் இத்தகைய முயற்சிகளை சிங்கள, இந்திய அடிவருடிகளின் செயற்பாடுகள் தாமதப்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதையே சிங்கள பாசிசமும் சோனியாவின் காங்கிரசும் விரும்புகின்றன.

இக்கபடத்தனமான சூழ்ச்சிகளுக்கு யாழ் உதயன், தமிழ்க்கூட்டமைப்பு என்பன துணை போகக்கூடாது என்பதே ஈழத்தமிழினத்தின் வேண்டுகோளாகும். இன்று முன்னெடுக்கப்படும் சர்வதேசத்தின் வேண்டு கோள்களான தடைகள் அற்ற முழுவிசாரணை வன்னியில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் யுத்த குற்றவாளிகளான சிறிலங்கா பாசிச அரசும் அதற்குத் துணையாக அரசு சார் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்த இந்தியா ,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் முகமூடி கிழிக்கப்படவும் வேண்டும்.

சிறிலங்காவின் அரசபயங்கரவாதத்தினையும் அப்பாவி மக்களின் மனித நேயத்திற்கு எதிரான படுகொலைகளையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் சிறிலங்காவிற்கு நிதியுதவி வழங்குவதையும் தடை செய்ய சர்வதேச சமூகம் முன் வந்திருக்கும் வேளையில் சர்வதேச சமூகம் அளிக்க மறுக்கும் நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று சோனியா காங்கிரஸ் அறிவித்திருப்பது இந்தியாவின் பயங்கரவாதத்தின் மீதான விருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

சர்வதேச சமுதாயத்தால் நியாயமற்றது என்று மறுக்கப்படும் ஒரு காரியத்தை முன்னெடுக்கும் துணிவு சோனியா காங்கிரஸிற்கு எப்படி வந்தது? இலட்சோபலட்சம் ஏழைகளின் தாயகமான இந்தியா மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு பயங்கரவாத அரசொன்றிற்கு வாரியிறைப்பதை இந்தியாவின் எந்தவொரு அரசியல்வாதியோ அறிவிஜீவியோ மக்களோ கூட ஆட்சேபிக்கவில்லை என்பதே இந்திய மக்களின் தார்மீக மனச்சாட்சி பற்றி கேள்வியெழுப்புகின்றது.

சீழ் வடியும் சோனியா காங்கிரசின் முகத்தைப்பாதுகாக்க அ.மார்க்ஸ் போன்றவர்கள் சப்பைக் கட்டு கட்டுவதை ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தோம். அதே நேரம் சர்வதேசத்தின் மனு தர்மங்கள் எதற்கும் கட்டுப்படாத ஆணவப் போக்கில் இந்தியா செயற்படுவதையும் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி அவர்கள் வெளிவிட்டிருக்கின்றார்.

இப்படிப்பட்ட இந்தியாவுடன் இசைந்து போதல் தமிழினத்தை மீண்டும் மீண்டும் புதைகுழியில் ஆழ்த்தி விடும் என்பதை தமிழ் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். புலிகளின் வேண்டுதலால் மக்களின் வாக்குகளைப் பெற்று அரியணை ஏறியிருக்கும் நீங்கள் மீண்டும் தெரிவு செய்யப்படுவது உங்கள் நேர்மையான போக்கிலேயே தங்கியுள்ளது. கொடுந்துயரத்தில் வாடியிருக்கும் தமிழ் மக்கள் உங்களின் ஒழுங்கீனங்களை இனியும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் குரல் கொடுப்பதைப் போன்று திறந்த நீதி விசாரணை வேண்டியும் முள்ளிவாய்க்கால் படு கொலைகளின் குரூரங்களை வெளிக்கொணர்வதும் சர்வதேச அரசியலிலேயெ பல மாற்றங்களைக் கொண்டு வரும். தமிழ் மக்கள் மீதான சர்வதேசத்தின் அனுதாபமே ஈழ மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தத் துரிதப்படுத்தும்.

Saturday, October 24, 2009


சீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே

கறுப்புக் கண்ணாடி போடாத கருணாநிதி


இலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது என்று இலங்கை தோட்ட கட்டமைப்புப் பிரதி அமைச்சர்முத்து சிவலிங்கம் கூறினார்.

அட நம்ம சிவலிங்கம் அண்ணாச்சி... இவங்க பிரிட்டிஸ் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய 'கூலி'களின் வாரிசு. அட இரண்டு தலைமுறை காலத்திலேயே அப்பன் பாட்டன் பிறந்து வளர்ந்த இந்தியா கசந்திடுத்து.

ஆனா ஈழத்தமிழன்.. தொப்பூள்கொடியுறவு அதுவிதுவென்று ..ஆளைப்படுத்துறாங்கையா? தாய்த் தமிழகம்.. மண்ணாங்கட்டியென்று ஆயுசையும் தொலைத்து விட்டு நிற்கின்றார்கள்.

ஊரைத் தெரிந்து உலகத்தைப் புரிந்து எப்போதான் தேறப்போறாங்களோ..

வடக்கு கிழக்கிலே வாழும் தமிழன் எத்தனை நூர்றாண்டுகளுக்கு முன்னர் சென்றவர்களோ அல்லது அங்கேயே தோன்றியவர்களோ.. யாரறிவார். (ஈழத்தில் வாழ்ந்த தெமட அல்லது தெமள குலத்திலிருந்து தோன்றியவர்கள் தமிழர்கள் என்று படித்துத் தொலைத்ததால் வந்த மயக்கம்)


இலங்கையில் வந்து குடியேறிய தமிழர்கள் வேறு. மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது. இதனாலேயே தனி நாடு கோரிக்கைக்கு அங்கு ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை.இலங்கையிலுள்ள சிங்களர்களே விஜயன் காலத்தில் அங்கு வந்து குடியேறியவர்கள்தான் என்றும் இலங்கை வரலாற்றில் கூறப்படுகிறது.- நம்ம அண்ணாச்சி சிவலிங்கம் தான்.


வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள் இன்னும் எம்பிக்களாகவே இருக்க நம்ம முத்து சிவலிங்கம் அண்ணாச்சி அமைச்சராகிவிட்டார்.

பிழைக்கத்தெரிந்தவர்... தமிழக அரசியல்வாதிகள் புலி என்றால் குட்டி பதினாறு அடி பாய்ந்து நிற்கின்றது.


இந்திய அரசு பிரதிநிதிகள்... இந்தியாவிலிருந்து இலங்கை வந்த எம்.பி.க்கள் குழுவினர், இந்திய அரசின் பிரதிநிதிகளாகவே வந்திருந்தனர். இவர்கள் தங்களது ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளனர். அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இந்திய-இலங்கை அரசுகள் கூடிப் பேசி இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். - அண்ணாச்சி

அட நம்ம மு.க அவர்கள் அரசுப்பிரதி நிதிகள் கிடையாது என்று பம்மியிருந்தாரே.. அறிக்கையில் பரிந்துரை கூட செய்திருக்கின்றார்களா? கதை வசனம் டைரக்ஷன் வழமை போல கருணாநிதியா? அல்லது புது டைரக்டர் ராஜபக்ஸே ஆ...

இலங்கை பிரச்னையில் இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும். வன்னிப் பகுதியில்தான் அதிக அளவில் பிரச்னைகள் உள்ளன. போரில் ஈடுபட்ட இருசாராரும் ஆங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.- அண்ணாச்சி

அப்படியா? முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைந்து கிடப்பவர்கள் எதை விட்டுக்கொடுப்பது..? உயிர் ஒன்று தான் அவர்களிடம் இருக்கின்றது..

போகிற போக்கில் ஒரு கண்ணிவெடி கருணாநிதிக்கும் வைத்துப்போகின்றார்,

கோவை மாநாட்டில் பங்கேற்பில்லை: கோவையில் நடைபெறுவது உலகத் தமிழ் மாநாடல்ல, தமிழக அரசு தானாக நடத்தும் தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றார் முத்து சிவலிங்கம்.

அட பங்காளிகள்...

கறுப்புக் கண்ணாடியும் கறுத்துப்போன இதயமும்


'கலைஞர் திரை இசைப்பாடல்கள்' என்று ஒரு புத்தகம் கிடைத்தது.அதைத் தொகுத்திருந்தவர் நம்ம சிலோன் விஜயேந்திரன். கலைஞர் என்று தூக்கி வைத்து போற்றிய ஒரு இனத்தை இன்று நயவஞ்சக நாடகமாடி கலைஞர் கொன்று போட்டதை எண்ணி இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

ஒரு தமிழகத்தமிழன் செய்ய எண்ணாததை ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கின்றான் என்றால் அவர்கள் எத்தனை தூரம் இந்த கறுப்புக் கண்ணாடி கலைஞரை ஏற்றிப்போற்றி நம்பியிருப்பார்கள். அத்தனை இதயத்தையும் துடிக்கத் துடிக்க கொன்று போட்ட பாவத்தை எத்தனை பிறப்புக்கள் எடுத்துக் கழுவ முடியும்.

இன்று கலைஞர் ஆட்சியில் துன்பப்படும் தமிழக மக்களையே, கலைஞர் 1988 இல் 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில் எழுதிய பாடல் எகத்தாளமாகக் கேட்கின்றது.

அந்தப் பாடல்,

"ஆற அமரக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு-நீ
அடுத்து வரும் தலைமுறையைச் சிந்தித்துப்பாரு
ஏற இறங்கப் பார்த்து எடைகளைப் போடு - நீ
எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகளைப் போடு "

என்ன போடலாமா மக்களே! உங்களைப் புழுவைப் போல மிதித்து ஏளனம் செய்பவர்களுக்கு தடை போடலாமா?

அதே பாடலில்,

ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு
உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா
தேர்தல் களத்திலே நிற்பவன் யாரு
தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும்
உலுத்தர்களை நம்பாதப்பா

நாட்டுக்கு உயிர்கொடுக்கும்
நல்லவரைத் தள்ளாதப்பா
வஞ்சகப் பேய்களை விரட்டணுமே - ஏழை
துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே

என்னங்க நம்ம கறுப்புக் கண்ணாடி் சொல்லியிருக்கார் நாம யோசிக்க வேண்டாமா?

கலைஞருக்கு மூணோ நான்கு பொண்டாட்டிங்கன்னு சொல்றாங்கோ
எப்பிடிப்பா நம்பமுடியும்.. எத்தனை பொண்டாட்டிங்க..எத்தனை வை......

1963 ஆம் ஆண்டு வெளிவந்த 'பூம்புகார்'படத்திலே இப்படிச் சொல்லியிருக்காரே..

"ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அக்தும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று -எனும்
திருக்குறளை மறவாதே திசை மாறிப்போகாதே "

திசைமாறிப் போவாரா கலைஞர்..

இல்லற வாழ்க்கையிலேயே இத்தனை(?) ஒழுக்கம் காட்டும் கலைஞர் பொது வாழ்க்கையில் எப்படி இருக்கின்றார் என்று பார்ப்போமா? ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டாரா? என்ன? கருப்பு கண்ணாடி கன்ணைத் தான் மூடி் இருக்கணும் இதயத்தை அல்ல....

1950 இல் வந்த 'மந்திரி குமாரி ' படத்தில்,

"நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசி விட்டு
வேண செல்வம் வாரியே போவாரடி
நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் பாடு படும்
ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகின்றான்

- எருமைக்கண்ணுக் குட்டி

ஏச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே

- எருமை கண்ணுக் குட்டி

கலைஞர் அப்படியா செய்திருக்கார்..எத்தனை கெளரவமா வாழ்ந்துகிட்டிருக்கார்...புரளி கெளப்புறாங்க .. பொய் சொல்லுறாங்கையா நம்பாதீங்க..

ஈழத்தமிழர்கள் இன்று கலைஞர் கபடக்காரனாயிற்றே என்று அழுது புலம்புகின்றார்களே இப்படி,

1966 இல் 'மறக்க முடியுமா?' என்ற படத்தில்,

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றித்
தேரையும் ஓட்டித் தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை


என்னையா ..எங்கள் இனிய தமிழர் தானா இப்படி அழுகின்றார்..நம்ம கலைஞர் ஆளுகையிலே...

1982 இல் 'தூக்கு மேடை' யில் கலைஞர் சொல்லியிருக்காரே ..

குத்துக்கல் சிம்மாசனம்
குப்பைத் தொட்டி ராஜாங்கம்
செத்துப் பிழைக்கும் மக்களிற்குச்
செகத்தை அழிக்கும் சக்தியுண்டு

என்று பாடிய கலைஞர் தப்புச் செய்வாரா? என்ன?

1953 இல் "நாம்" படத்தில்,

பெருமை பேசும் மனிதரெல்லாம்
எதற்கெடுத்தாலும் எருமை போல
தலையசைப்பதை உரிமைக்காக
எதிர்த்து நிற்கும்

அண்ணா வாழ்ந்த தமிழ் நாட்டில் இப்படித் தீமைகள் பெருகிடுச்சின்னா நம்ப நாம என்ன கேணையங்களா..?

ஈழத்தமிழங்க புரியாமப் பேசுறாங்கப்பா...

புழுவாகத் துடிக்கின்ற ஏழை
கழுகாகப் பறக்கின்ற சீமான் இந்தப்
பொல்லாத பேதங்கள் எல்லாம்
இல்லாத பொன்னாடாய்ச் செய்தார் அந்த

அண்ணா வாழ்ந்த தமிழ்நாட்டைக் குறை சொல்ல முடியுமா? எதிர்க்கட்சிகளின் சதி என்று எளிதாக மறந்து விடுங்கையா...


ஈழத்தமிழர்களே உங்களுக்கும் 1953 இலேயே கலைஞர் ஆறுதல் சொல்லியிருக்கார்,

தேனெனும் வாழ்வே தேளாய் மாறும்
போர்முனைச் சாவே பொது வாழ்வில் இன்பம்
ஆணவம் சீறலாம், ராணுவம் பாயலாம்
சீற்றத்தைக் கண்டு சிதறாதே -உளம் சிதறாதே
தூற்றலைக் கேட்டு துவளாதே - பகை

அழுவாதீங்கப்பா.. உங்களுக்குத் தான் 'தம்பி' இருக்கானே,

அதையும் "வீரன் வேலுத்தம்பி'யில் 1988 இல் பாடியிருக்காரே கலைஞர்,

சுருளு மீசைக்காரனடி வேலுத் தம்பி
சூராதி சூரனடி வேலுத்தம்பி
சூரியனில் நெருப்பெடுப்பான்
சூழ்ச்சிகளை கொளுத்திடுவான்

எரிமலையில் அடுப்பெரிப்பான்
ஏழையர்க்கு உண வளிப்பான்
எங்கள் குல தெய்வ மாவான்
தங்க குண சிங்கமாவான்

பூகம்ப மேடையிலே
புரட்சி கீதம் பாடிடுவான்
பொல்லாதோர் பகையெல்லாம்
பொடிப் பொடியாய் ஆக்கிடுவான்

அப்புறம் என்ன? உங்க 'தலை'யை நம்புங்க ..வேறு எந்த கருநாவையும் அல்ல..

1963 இல் 'காஞ்சித் தலைவன்" இல்

மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள்
சென்று வா வென்று வா

மண்ணின் மீது எதிரியின் கால்கள் மட்டுமல்ல கபடம் நிறைந்த கறுத்த இதயமுள்ளவர்களின் துரோகமும்...

பயங்கரவாத நாடுகள் இந்தியா?பாகிஸ்தான்? சீனா?


ஒரு இனத்தின் இருப்பின் முதுகெலும்பை உடைத்த யுத்தத்தில் அந்த இனத்தையும் தன் குடிமக்களாகக் கொண்ட அரசு கனரக ஆயுதங்கைப் பாவித்து சர்வதேச மனித உரிமைகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் மீறிச்செயற்பட்டமையைக் கண்டித்து இப்பொழுது சர்வதேசமெங்கும் குரல் எழுந்துள்ளது.

இது ஒரு வகையில் தத்தமது தன்னாதிக்கத்தை இச்சிறுதீவில் விரிப்பதற்கு ஏகாதிபத்திய அரசுகள் விரிக்கும் கபட வலை என்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருக்க நடந்தேறிய மனித அவலங்களின் சிறுகூறுதன்னிலும் வெளிப்படக் கிடைத்த சந்தர்ப்பம் என்பதையும் புறந்தள்ளிவிட முடியாது.

அந்த வகையில் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் இலங்கை தொடர்பான கருத்துக்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான சபையும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இப்போது எடுத்துவரும் முயற்சிகளையும் வரவேற்கலாம்.

27 வருடகால ஈழத் தமிழினத்திற்கு எதிரான இன அழிப்பின் இறுதித்தருணங்களில் சிங்கள பாசிச அரசு கையாண்ட மனித நாகரீகமே வெட்கித் தலை குனியும் உத்திகளும் நிராதரவாய்த் தவித்த அப்பாவி மக்களின் வகை தொகையற்ற கொலைகளும் விசாரிக்கப்படவேண்டுமெனபதுவும் இக்கொலைகளின் பின்னால் இரத்தம் தோய்ந்தகரங்களுடன் இருக்கும் அனைத்து அரச, இராணுவ, ஆலோசக நபர்களையும் நீதியின் முன்னால் நிறுத்த வேண்டிய கடப்பாடு அனைத்து மக்களின் முன்னாலும் இருக்கின்றது.

காஸாவில் நடத்தப்பட்டது போன்ற சுதந்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பொழுது இவ்வின அழிப்பின் முழு அவலமும் வெளிக்கொணரப்படுவதுடன் இவ்வின அழிப்பில் ஈடுபட்ட காட்டுமிராண்டிகளையும் நீதியின் முன் கொண்டு வரலாம்.

சர்வதேச சமூகத்தின் அக்கறை சிறிலங்கா பாசிச அரசில் இருந்து இயங்கிய போரியல் குற்றவாளிகளான அரசியல் இராணுவ அரக்கர்களைத் தண்டிப்பதுடன் மட்டும் திருப்திப்பட விழைக்கின்றது.

நாகரீக சமூகத்தின் பிரதிநிதிகளாக சர்வதேச சமூகம் தன்னை மனச்சாட்சியுடன் வெளிப்படுத்துவதாக இருந்தால் அது இவ்வாறான மாமூல் நடவடிக்கைகளையும் தாண்டி இந்த இன அழிப்பை விரும்பித் தூண்டியவர்களும் கொலைப்படையான பாசிச சிறிலங்கா அரசிற்கு இராணுவ தளபாட ஆலோசனை கொடுத்துதவிய அனைத்து நாடுகளையும் அரசுகளையும் தண்டிக்க முன் வரவேண்டும்.

சிறிலங்கா பாசிச அரசின் ஒரு இன அழிப்புக்கான முனைவுகளைப் பூரணமாக அறிந்து கொண்டும் பாரிய உயிர் அழிவை ஏற்படுத்தக்கூடிய தடைசெய்யப்பட்ட உயிரியல் இரசாயன ஆயுதங்களைக் கொடுத்துதவிய இந்தியா,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் மனிதர்களின் வாழ்வு அதற்கான பிறப்புரிமை மனிதாபிமானம் போன்றவற்றையும் ஐக்கிய நாடுகள் சாசனத்தில் வரையறுக்கப்பட்ட இன, மொழி, தேசியக்குழுக்களுக்கான வாழ்வுறுதிக்கான விழுமியங்களையும் மதியாத பயங்கரவாததை ஏற்றுமதி செய்யும் நாடுகளாகத் திகழ்கின்றன.

இன்றைய நூற்றாண்டின் மனித நாகரீகத்தின் மேன்மையைச் சிறிதும் மதியாது பயங்கரவாதப்பண்புகளைப் பேணிக்காக்கும் நடைமுறைப்படுத்தும் இந்நாடுகளை சர்வதேச அரங்கில் இருந்தே விலத்திவைப்பதே வாழ்வு பற்றிய நம்பிக்கையை மனிதர்களிடம் உயிர்ப்பிக்கும்.

இதைச்சர்வதேச நாடுகள் சரியான முறையில் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்துவதே உலகில் இருந்து பயங்கரவாதத்தை முடிவிற்கு கொண்டுவரும். செய்வார்களா?

Friday, October 23, 2009


உலகை ஏமாற்றும் தந்திரமும் உடன் துணை போகும்திருட்டு கருணாநிதியும்


இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியேற்றுவோம் என்று அளித்த உறுதி மொழியை காப்பாற்றாமல், அவர்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்க அரசு என்று மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 2,72,000 பேரில், அக்டோபர் 9ஆம் தேதிவரை 27,000 பேரை மட்டுமே விடுவித்துள்ளது சிறிலங்க அரசு என்றும், இன்னமும் 2,45,000 தமிழர்கள் அடிப்படை வசதிகளற்ற அந்த முகாம்களில்தான் அவதியுற்று வருகின்றனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியக் கிளையின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.


“உறுதிகள் அளித்தது போதும், இதற்கு மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பதை ஏற்க மாட்டோம். உடனடியாக முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்குமாறு சிறிலங்க அரசின் சர்வதேச நண்பர்கள் அந்நாட்டிற்கு எடுத்துரைக்க வேண்டும்” என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.
போரின் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தல் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த வாக்குறுதிகளை பிராட் ஆடம்ஸ் பட்டியலிட்டுள்ளார்:

1. இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள 80 விழுக்காடு மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள்குடியமர்த்துவோம் என்று மே 7ஆம் தேதி சிறிலங்க அரசு அளித்து உறுதிமொழி அதன் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.

2. போர் முடிந்ததும் இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனிடம், ஆறு மாத காலத்திற்குள் இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்துவோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார்.

3. ஜூலை 16ஆம் தேதி பன்னாட்டு நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் கடன் பெறும்போது, இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 முதல் 80 வீதம் இடம் பெயர்ந்தோரை முகாம்களில் இருந்து விடுவித்து விடுவோம் என்று சிறிலங்க அரசு உறுதியளித்தது.

4. ஆனால், அக்டோபர் 6ஆம் தேதி துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 1,00,000 பேரை மீள் குடியமர்த்தம் செய்வோம் என்று சிறிலங்க அமைச்சர் சரத் அம்முனுகாமா கூறினார்.

5. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு இலட்சம் பேரை மீள் குடியமர்த்தம் செய்வோம் என்று அதற்கான அமைச்சர் ரிஷார்த் பத்தியுதீன் கூறினார்.

எனவே ஒப்புக் கொண்டபடி அனைவரையும் முகாம்களில் இருந்து விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யாமல் 37 வீத மக்களை மட்டுமே விடுவிக்க முடியும் என்று இப்போது கூறுகிறது சிறிலங்க அரசு.

இதுமட்டுமின்றி, செப்டம்பர் இறுதிவரை 40,000 பேர் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று அது கூறுவது பொய்யானத் தகவலாகும்.

ஐ.நா. அக்டோபர் 9ஆம் தேதி அளித்துள்ள புள்ளி விவரப்படி, இதுநாள்வரை 13,502 பேர் மட்டுமே அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13,336 பேர் அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் சென்று தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் இந்தியாவில் இருந்த முகாம்களை பார்வையிட வந்த நாடாளுமன்றக் குழுவினரிடம் இரண்டு வாரங்களில் 58,000 பேரை மீள் குடியமர்த்தம் செய்யப்போவதாக சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

“போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்க அரசு. தமிழ் மக்களின் நியாயமானக் குறைகளைத் தீர்த்துவைக்காவிடில் அது அந்நாட்டிற்கு பேரழிவாக முடியும்” என்று பிராட் ஆடம்ஸ் எச்சரித்துள்ளார்.

குறிப்பு:- திருமாவளவன் ஈழம் சென்று திரும்பியபின் அளித்த பேட்டியில். மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக்கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள். குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.


இதோதிருட்டுக் கருனாநிதியின் நாடாளுமன்றக் குழுவைப் பாராட்டி சிறிலங்க ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா கூறியதைப் படியுங்கள் புரியும்:

“இதுவரை சர்வதேச நாடுகளையும், அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இலங்கைக்கு பயணம் செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டுள்ளனர். மதிப்பீடுகளை மேற்கொணடப் பின்னர் தங்கள் நாடுகளுக்குச் சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள் குடியேற்றம் குறித்து அழுத்தங்களை அளித்தனர். சிலர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இடம் பெயர்ந்த மக்களின் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகிய தமிழக எம்.பி.க்கள், அகதிகளுக்கு சிறிலங்க அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு திருப்தி வெளியிட்டனர். சிறந்த செய்தியொன்றை சர்வதேச சமூகத்திற்கு விடுத்துள்ளனர். இதுவரை சிறிலங்க வந்தவர்களிலேயே தமிழக எம்.பி.க்கள் சிறிப்பான அணுகுமுறையை மேற்கொண்டனர். அவர்கள் எந்த விடயம் குறித்தும் பெரிய அழுத்தத்தை வெளியிடவில்லை. நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். சிறிலங்காவிற்கான இந்தியாவின் உதவிகள் அதிகரிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்”

இதன் பிறகு இந்தியா மேலும் ரூ.500 கோடியை சிறிலங்காவிற்கு தருவது என அறிவித்தது.

இதுதான் தி.மு.க திருடர்களுக்கு சர்வதேச தரத்தில் காணப்பட்ட முகாம்

இந்த மக்களின் நெஞ்சில் மிதித்தபடி கருணாநிதி செய்யும் அரசியலை இன்னும் எத்தனை காலம் சகித்துக்கொள்ளப் போகின்றீர்கள் ..தன்மானத் தமிழ்ச் சிங்கங்களே..
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil