ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல
ஈர ஈழம்
Monday, July 13, 2009
கனிமொழி போகின்றார்
ஐயோ பாவம் என்றிருக்கின்றது. சிக்கல் மிகு சிங்கள அரசியல் தெரியாது சிங்கத்தின் குகைக்குள் போகும் புள்ளிமானைப் பார்க்கும் பரிதாபம் தோன்றுகின்றது. ஏதோ சொல்லிவிட வேண்டும் என என் மனதில் தோன்றியதைச் சொல்லி விடுகின்றேன். அப்புறம் அவர் இஸ்டம். அவர் அப்பாவின் அரசியலை எவ்வளவு தூரம் வெறுத்தாலும் இளைய தலைமுறையில் சிறிதளவேனும் நம்பிக்கை கொடுப்பவர் கனி மொழி என்பதில் எனக்கு மரியாதை உண்டு.
ஆனாலும் அதலபாதாளமாக விரிந்து வாய் பிளந்து நிற்கும் அரசியலில் பலிக்கடா ஆக அவர் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றது.
முதல் காரணம் இந்திய மேலாதிக்க வாதிகளின் தீர்மானிக்கப்பட்ட அஜெண்டாவின் படி "அப்பழுக்கில்லாத" சிங்கள அரசு என்ற மாயையைத் தமிழகத் தமிழ் மக்களிடமும் உலக அரங்கிலும் உண்டாக்கவேண்டிய வற்புறுத்தல் அவர் மீது திணிக்கப்படும். பிறப்பால் அவர் தமிழராகவும் "தமிழினத் தலைவர்" என்ற போலி முகமூடிக்குப் பின் ஒழிந்திருக்கும் அரசியல் அழுக்கின் மகள் என்பதும் கனிமொழியின் தெரிவிற்கு இந்தி மேலாதிக்கவாதிகளைத் தூண்டி விட்டுள்ளது.
கருணாநிதியின் சுயநலச் சாக்கடை அரசியலை என்றுமில்லாதவாறு தமிழின அழிப்பிற்குப் பயன்படுத்துவதில் இந்தி மேலாதிக்கவாதிகள் முழு அளவில் வெற்றி கண்டிருப்பதுவும் அதன் விளைவாக அவர் மகளையே பலியிடத் துணிந்திருப்பதுவும் நிகழ்ந்திருக்கின்றது.
கனிமொழியின் இலங்கை விஜயத்தால் சாதிக்க நினைக்கும் விடயங்கள் பல. ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தின் மேலுள்ள பற்றினை உடைத்தெறிவது.( இவர் கொடுக்கப்போகும் ஈழ விஜயத்திற்குப்பின்னான அறிக்கை அவ்வாறே வடிவமைக்கப்படும்)
தமிழீழம், தமிழகம் இடையிலான பகமையை வளர்த்து எக்காலத்திலேனும் எழக்கூடிய தமிழகப் பிரிவினையை முற்றாக ஒடுக்குதல்.(இது இந்தி மேலாதிக்கவாதிகளுக்கு எப்போதுமே இருக்கக் கூடிய மாற்றமுடியாத பயம்)
இதில் ஒழிந்திருக்கும் இன்னுமொரு விடயம் தான் மிகப்பயங்கரமானது. அதில் உண்மையும் இருக்கலாம் அல்லது எனது அதீத கற்பனை என்றும் ஒதுக்கி விடலாம். எல்லாவிற்கும் மேலாக எனது "வரும் முன் காக்கும் எண்ணம்" தான் முக்கியமாகப் படுகின்றது.
இத்தனை நடந்து முடிந்த ஈழத்தமிழர்களுக்கு எதிரான படுபாதகத்தை மூடி மறைக்க சிறிலங்கா அரசும் இந்தியாவும் பகீரதப் பிரயத்தனப்படுவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அதே வேளை புலிகள் என்ற போர்வையில் அப்பாவிப் பொது மக்களையும் சரணடைந்த புலித் தலைவர்களையும் சர்வதேசத்தின் எந்தக்குரலையும் மதிக்காது தான் தோன்றித் தனமாக காட்டுமிராண்டிகளாக கொன்று போட்ட சிறிலங்காவின் கொடூர முகத்தை அறிந்தும் அவர்கள் பாதுகாப்பில் கனிமொழி அங்கு செல்வது சரியாகப்படவில்லை. இந்தியா மீதான எதிர்ப்பை,வெறுப்பை ஜேவிபி மற்றும் புத்த அமைப்புகள் நாளும் காறி உமிழ்கின்றன.
அதே வேளை 3 இலட்சம் தமிழ் மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்திருப்பதற்குக் காரணம் தேடும் நிலையில் சிறிலங்கா முனைப்புக் கொண்டுள்ளது.
அது தொடர்பான அதன் செயற்பாடுகளில் ஒன்றாகவே யாருமே நெருங்க முடியாத முள்வேலிக்குப்பின்னால் நின்ற, உண்பதற்கோ உடுத்துவதற்கோ மாற்று எதுவுமில்லாத 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களே பிரிக்கப்பட்டு பேசமுடியாது ஒதுக்கப்பட்ட முகாம் சுவர்களில் தோன்றிய திடீர் புலி ஆதரவு சுவர் ஒட்டிகள். உயிரோடு வெளியில் வருவோமா என்று அஞ்சி அஞ்சிச் செத்துக் கொண்டிருக்கும் ஒருவனால் புலி ஆதரவு சுவரொட்டி எழுதி ஒட்ட முடியுமா?
சிறிலங்கா இராணுவத்தினதும் ஆதரவு ஒட்டுண்ணிக் குழுவினதும் இந்த முயற்சி ஆரம்பத்திலேயே பிசு பிசுத்துப் போய்விட்டது. அதைத் தொடர்ந்து காடுகளில் ஒழிந்திருக்கும் புலிகளை வேட்டையாடுதல் என்ற இழுபறி, காலத்தைக் கடத்தும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது. அதற்காகவே செயற்கையான மோதல் சோடிக்கப்பட்டு ஒரு சிங்கள வீரனையும் பலிகொடுத்தது. அதைக்காரணம் காட்டி மேலதிக 50 ஆயிரம் படையினரைச் சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சர்வ தேசத்தின் எதிர்ப்பலையில் கரைந்து போனது.
அதைத் தொடர்ந்து தான் இந்திய ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் தமிழருக்கெதிரான நஞ்சினைக் கக்கும் தமிழின விரோதி இந்து ராம் போன்றோரை அழைத்து "அழகிய முகாம்கள்"என்ற நாடகம் ஆடப்பட்டது. இந்து ராம் மேலுள்ள நம்பகத்தன்மை அற்ற நிலையைப் போலவே "அழகிய முகாம்களும்" அடிபட்டுப் போய் விட்டது.
இந்தி மேலாதிக்க வாதிகளின் அடுத்த அஸ்திரம் தான் தமிழினத்தலைவர் என்ற அரசியல் வேடதாரி கலைஞரின் மகள் கனி மொழியின் ஈழ விஜயம். இந்திய இறையாண்மையை தூக்கி நிறுத்த மேசையின் கீழால் கைமாறப்படும் பணமூட்டையின் கனத்தில் தலையாட்டும் கலைஞருக்கு சொல்லப்பட்ட அஜெண்டாவின் கீழான மூடு மந்திரம் ஏதோ இருப்பதாகவே தோன்றுகின்றது. விடயத்தின் தீவிரம் புரியாத பலியாடாகவே கலைஞர் கனிமொழியை அனுப்ப தலையாட்டுகின்றார்.
சிங்கள ஆதிக்க வெறியர்களின் ஆசையாக தமிழின அழிப்பு நிகழ்ந்து முடியும் வரை "புலி.. புலி பற்றிய புருடாக்கள்" உயிர் வாழ வேண்டும். செத்துப் போய் விட்ட புலியை உயிர் பெற்றெழ வைப்பது எப்படி?
"பலி" கொடுத்து புலியை எழுப்ப வைக்கும் எண்ணம் இப்போது கொழுந்து விட்டெரிகின்றது. அது தான் என் பயமும் கூட.
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
EMBA ITTALI VADAI NEENGA ENNA SILON KAARARAA?
நல்ல கூத்து!
வாங்க பராரி!
தமிழன் ஐயா..பச்சைத் தமிழன்
வாருங்கள் ttpian !
இதை விடக் கூத்து ..இன்னும் இருக்குன்னு பட்சி சொல்லுகின்றது...
http://www.mdmkonline.com/news/latest/kanimozhi-and-namal-rajapakse.html
http://www.mdmkonline.com/news/latest/another-lie-from-tamilwin.html
-Sangoli.
Post a Comment