ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, July 13, 2009


2012 இற்குள் தனித் தமிழ் நாடு


இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் பற்றி இப்பொழுது நிறையவே வெளிப்படையான "பயங்கள் ' உருவாகி இருக்கின்றன. உலக அரசியல் ஆதிக்கத்தில் ஏற்பட்டுவரும் அமெரிக்காவின் வீழ்ச்சியை நிரப்ப பல நாடுகள் முயன்று கொண்டிருக்கின்றன.கிழக்கு தூரகிழக்கு ஆசியப் பகுதிகளில் மேம்பட்ட வளர்ச்சியை சீனாவே அடைந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது அதன் இராணுவ சமநிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்து பெரும் வளர்ச்சியைத் தூண்டுகின்றது. தன் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள மற்றைய நாடுகளைப் போலவே சீனாவும் இராணுவத்தையே நம்பியிருக்கின்றது. அந்த நம்பிக்கையினால் சீனா பல துரித இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதில் முக்கியமான சில விடயங்களாக வடகொரிய ஏவுகணைப் பரீட்சார்த்த ஒத்திகைகளை ஊக்கப்படுத்தியது. மற்றும் இப்பிராந்தியத்தில் நலிவடைந்த நிலையில் இருக்கும் சிறு நாடுகளின் அரசாங்கங்களை பொருளாதார உதவிகள் என்ற போர்வையில் கையகப்படுத்திக் கொண்டமை,இராணுவ பொருளாதார உதவிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அந்த வகையில் இன்றைய நிலையில் வடகொரியா, வியற்நாம்,லாவோஸ் ,கம்பூச்சியா போன்ற தூரகிழக்கு ஆசிய நாடுகளுடன் இலங்கை ,பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சீன சார்பு அணியில் நெருங்கி நிற்கின்றன.

உலகப்பொருளாதார நலிவால் அதிகளவில் தன் இராணுவ செலவினங்களை நடத்த முடியாது திணறும் அமெரிக்காவின் சங்கடத்தை சரியாகப் புரிந்து கொண்டு சீனா காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.உதவி தேவைப்படும் நாடுகளும் இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு சீன அணியில் ஒன்று திரளுகின்றன. இதுவே சீனாவிற்கு ஆதாயமாகவும் ஆதிக்கப்போட்டியில் இருக்கும் மற்றைய நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.குறிப்பாக இந்தியாவிற்கு. "ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது" என்ற கலைஞரின் ஆவேச வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பெரியண்ணர் இனி சீனா தான். இது தவிர்க்க முடியாதது.

இதையே இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளரும் "இந்தியன் டிபென்ஸ் ரிவியூ" என்ற சஞ்சிகையின் ஆசிரியருமான பாரத் வெர்மா அபாயக் குரலில் அலறியிருக்கின்றார். இனி வரும் காலத்தில் ஏற்படக் கூடிய சீனாவுடனான மோதலில் இந்தியா மேலும் தன் நிலப்பரப்புக்களை இழக்கப்போகின்றது. கூடவே அதன் வலிமையையும். இந்தியா தன்னை நம்பி சீனாவை எதிர்க்க முடியாத கீழான இராணுவ பலத்தையே கொண்டிருக்கின்றது.

சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு உதவும் நிலையில் முன்னைநாள் கூட்டாளியான சோவியத் ரஷ்யா இப்போது இல்லை. அதே நேரம் புதிய கூட்டாளியான அமெரிக்காவோ தன் பொருளாதாரக் குழறுபடிகளுக்கிடையே மூழ்கித் தவிக்கின்றது.

இந்தியா தன்னை நம்பி சீனாவை எதிர்க்குமென்றால் இந்தியா பெருமளவு நிலப்பரப்பையும் மக்களையும் சீனாவிடம் பறிகொடுத்து விடும்.அவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது இந்திய மத்திய அரசு கலகலத்துப் போகும் நிலை உருவாகும். போருக்குப் பின்னான காலத்தை இந்தியாவால் முகங்கொடுக்க முடியாது போனால் உள்நாட்டுக்கிளர்ச்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது.அவ்வாறான ஒரு இக்கட்டு உருவாகும் நேரத்தில் இந்தியாவில் இருந்து பிரிந்து போய் சுயாதீனமாக அரசமைக்க முயலும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தமிழ் மக்கள் நினைத்தால் தமிழகமும் ஒரு தனி நாடாகும் வாய்ப்பு உண்டாகும். அவ்வாறு உருவாகும் தனி தமிழ் நாடு ஈழத்திற்கு முன்பாக அமையவும் கூடும். அப்போது மீண்டும் சேர சோழ பாண்டியரின் ஆட்சி பற்றிக் கனவு காணமுடியும். சங்கம் வைத்துத் தமிழும் வளர்க்கலாம்.

வெர்மா கூறியதைப் போல் 2012 வரை காத்திருக்கும் பொறுமை சீனாவிற்கு கிடையாது என்றே தோன்றுகின்றது. அதே வேளை இந்த ஆண்டும் தொடரும் பொருளாதாரச் சறுக்கலில் மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் மீள முடியாது போனால் சீனா தன் செயற்பாடுகளை வெகு சீக்கிரமாக ஆரம்பித்து விடும்.

4 comments:

Anonymous said...

unga karpanaikku alave illaya?

ஐந்திணை said...

தனித் தமிழ் நாடு???????
நாம் கனவு மட்டுமே காணமுடியும்!

இட்டாலி வடை said...

அனானியாரே!

ஒரு வேளை வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வராது விட்டிருந்தால் ..இப்போதுள்ள இமயம் முதல் குமரி வரை இந்தியா கற்பனையாகத் தான் இருந்திருக்கும்.. அதைப்போல தான் தனித் தமிழ் நாடும் சீனன் இந்தியா மீது படை எடுக்கும் வரை கற்பனை தான்..

இட்டாலி வடை said...

வாருங்கள் ஐந்திணை!
இப்போது இருக்கும் இலஞ்ச லாவண்ய அரசியல் வாதிகளை வைத்துக் கொண்டு...உங்கள் சோகம் எனக்குப் புரிகின்றது..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil