ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, December 22, 2009


நடக்கப்போகும் சீன இந்தியப் போரில் ஈழத்தமிழர்


காலம் எப்போதும் சுற்றிக் கொண்டே வரும் என்பது உண்மையாகவே இருக்கின்றது. அதே போல உயர்வும் தாழ்வும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். அது தான் இயற்கை. இந்தியா எதை நினைத்து ஈழத்தமிழர்களைப் பலி வாங்கியதோ அதற்குத் தான் வெளிச்சம். அதற்காக அது ஆயிரங் காரணங்களைக் கூறிக்கொள்ளலாம். ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தியாவை ஆதரிக்க ஒரு காரணங்கூட இல்லை.

அத்தனை இடங்களையும் இந்தியா நயவஞ்சகத்தால், காட்டிக்கொடுப்புகளால்,துரோகங்களால் நிறைத்து வைத்திருக்கின்றது. இந்தியா மீது ஈழத்தமிழன் வைத்திருந்த அத்தனை நம்பிக்கைகளையும் தன் காலின் கீழ் போட்டுத் தேய்த்து விட்டது. இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்று போட்டது.

அதைச் செய்து முடித்த சிங்கள அரசைத் தோள்களில்ப் போட்டுத் தாங்கிக் கொண்டிருக்கின்றது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவை வெறுப்பதற்கும் அதை எதிர்ப்பதற்கும் இந்த ஒரு காரணமே போதும். அது நியாயமானதும் கூட. சீனாவை ஆதரிப்பதற்கும் எந்தக் காரணங்களும் இல்லை.ஆனாலும் ஆதரிக்க வேண்டும். நம்பிக்கெடுத்த இந்தியாவை விட அதன் தராசு உயர்ந்தே இருக்கின்றது.

இரண்டு நாடுகளிலும் போர் நோக்கம் உக்கிரம் பெற்றிருப்பதற்கு அவர்களுக்கிடையே உள்ள வர்த்தகப்போட்டியே முதன்மைக் காரணமே ஓழிய மக்களின் மீதுள்ள அக்கறையினால் அல்ல. ஒரு சில பணமுதலைகளின் பேராசையே இரு நாட்டு மக்களையும் துன்பத்தில் தள்ளப்போகின்றது. இது எப்படியும் நடந்தே தீரும். யாரோ ஒரு சிலரின் செளகரியங்களுக்காக தேசபக்தியின் பெயரால் குப்பனும் சுப்பனும் அவதிப் படப்போகின்றார்கள்.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், ஆக்கிரமிப்பு, தேசபக்தி என்ற வகையில் எத்தனை மோசமான காரணங்களைக் கூறியேனும் அவர்கள் இத்தகைய போர்களை நியாயப்படுத்துவார்கள். அதுவே ஈழத்திலும் நடந்தது. புலிகள் பயங்கரவாதிகள் தீவிர வாதிகள் என்றால் அது உண்மையானால் அவர்களை மட்டும் கொல்வதே நியாயம். அப்புறம் எப்படி மக்களைக் கொல்ல முடியும். அதில் தான் முதலாளித்துவத்தின் உளவியல் தங்கியுள்ளது. பயங்காட்டுவது. தங்களுக்கு எதிராக வரக்கூடிய கேள்விகளை முளையிலேயே கிள்ளியெறிவது. அதற்காகவே இந்திய அரச பயங்கரவாதம் சிங்களப்பேரின வாதத்துடன் சேர்ந்து கொன்று போட்டது ஐந்து இலட்சம் மக்களை.

அந்த யுத்தத்தின் செலவை இன்று மன்னார்க்குடாப்பகுதியில் இருக்கும் எண்ணெய்வளங்களை உறிஞ்சுவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்போகின்றார்கள்.அதற்கான ஒப்பந்தத்தை கெய்ன் லங்கா நிறுவனம் போட்டு ஒரு மில்லியன் டாலர் முற்பணமும் கை மாறிவிட்டது. காங்கேசன் துறை சீமெந்து ஆலையும் கை மாறிவிட்டது.அத்தனையும் செத்துப் போன அந்த அப்பாவி மக்களைச் சேர வேண்டிய சொத்து.

இந்தியாவின் யுத்தச் செலவுகளுக்கான பங்கு இதுவென்றால் சீனாவின் யுத்தச் செலவுகளுக்காக அம்பாறையில் கப்பல்த் துறைமுகம் கட்டும் உரிமை தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்தனையும் தமிழரின் பூர்வீகபூமிகள். தமிழரின் சொத்து என்பது சிங்களவனைத் தாரளமாகத் தாரை வார்த்துக் கொடுக்கத் தூண்டுகின்றது. ஆனால் இது ஸ்ட்ராவிற்கான துளை தான் என்பதை அந்த மடையன் மறந்து விட்டான். உறிஞ்சப்படப் போவதென்னவோ முழு இலங்கையும் தான்.

இது தான் நவீன உலக ஒழுங்கு. இதில் யார் வென்றாலும் உறிஞ்சப்படப்போவதென்னவோ சாதாரண மக்கள் தான். ஆனாலும் இனி ஈழத்தமிழர்களால் இந்தியாவுடன் நெருங்கி விட முடியாது. கொலை செய்யப்பட்டுக் கருகிப்போய்விட்ட அந்த ஐந்து இலட்சம் மக்களின் பிணங்களும் இடையில் மலைபோல உயர்ந்து நிற்கின்றன. சீனாவின் கையில் முழுவதுமாக இலங்கை போய் விடும் போது ஈழத்தமிழர்களுக்கு ஒரு நன்மையிருக்கின்றது. சிங்களவனும் முழு நேரக் கூலித் தொழிலாளி ஆகிவிடும் போது எந்த எதிர்ப்புச் சக்தியும் இல்லாது அடிமையாகிவிடுவான். தமிழர்கள் எவ்வாறு கூலித் தொழிலாளர்களாகி அடிமைகளானார்களோ அதைப்போல்.

அது தான் இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. பொருளாதாரமும் அதன் உறிஞ்சலும் வானம் போலக் கவிந்து நிற்கும் கருங்குடையாக உலகம் முழுவதும் போர்த்தி நிற்கின்றது. அமெரிக்கா வந்து பொட்டி தட்டுபவனும் இந்தியாவில் கல்லுடைப்பவனும் அதற்குள்த் தான் நிற்க வேண்டும். இருவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. டாலர் ரூப்பீஸ், பருப்புச்சாதம் பர்க்கர். அவ்வளவுதான் வித்தியாசம்.

சீனாவை ஆதரிக்கும் போது நம்பிக்கைத் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டதை மறந்து விடலாம். வஞ்சித்தவனைப் பழி தீர்த்துக் கொண்ட சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதை எங்கள் தலை முறையோடும் பகிர்ந்து கொள்ளலாம். பெரியார் சொன்னதைப் போல அடிமையாயிருக்கும் தமிழகத் தமிழன் அந்த அடிமைத் தனத்தையே மகுடமாகச் சூடிக்கொண்டு "நாம் இந்தியர்" என்று பீற்றிக்கொள்வதைப் போல, நாமும் இலங்கையர் என்று பீற்றிக்கொள்ளலாம்.

இந்தியா என்ற சாதி,சமய,வர்க்க வேறுபாடுகள் உள்ள நச்சு மரத்தை விட சீனா எவ்வளவோ மேல். மனிதனை மனிதன் கல்லால் அடித்துக் கொல்லும் காட்டுமிராண்டித் தனத்தில் இருந்து தப்பித்து விடலாம். பெண்களை ஆடை அவிழ்த்து அம்மணமாக ஓட விட்டு அவள் பிறப்புறுப்பில் உதைக்கும் அநாகரீகம் கற்க வேண்டாம்.இப்படி எத்தனையோ அநாகரீகங்களில் இருந்து தப்பித்து விடலாம். சீனா கற்றுத்தந்தால் பொதுவுடமை ஆவது மிஞ்சி நிற்கும். இங்கு மார்க்ஸீயம் பேசும் அறிவு ஜீவிகளும் அப்படியாவது சந்தோஷப்படக் கூடும்.

3 comments:

Anonymous said...

உண்மையைத்துலாம்பரமாக விளக்கியது உங்கள் ஆக்கம்.இலங்கைத்
தமிழன் ஒருவன் கூட இந்தியாவை
ஆதரிக்கமாட்டான். ஒவ்வொரு ஈழத்
தமிழனின் பிராத்தனை சீனா போர்
தொடுக்கவேண்டும் இந்தியா நாலு
துண்டாக உடையவேண்டும்.எங்கள்
பகையை சீனா முடிக்கவேண்டும்.
ம.பரணீதரன்.

NILAI said...

//உண்மையைத்துலாம்பரமாக விளக்கியது உங்கள் ஆக்கம்.இலங்கைத்
தமிழன் ஒருவன் கூட இந்தியாவை
ஆதரிக்கமாட்டான்.//

நண்பரே, கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல ஆனது உங்களது கருத்து .
உலக ஒழுங்கமைப்பு என்பது சிறுபான்மைகளை விழுங்குவது.
ஒத்திசைவுகளுக்கு அப்பாற்பட்டது. தன்னலம் கொண்டது.
தனிநபர் முடிவுகளுக்கு மாறானது.
ஒபாமா, ஒபாமா என்றால் ஈழத் தமிழரின் மீட்பராக முடியுமா
அவரால்?

சீனா என்ன..........? இந்தியா என்ன.........?
எல்லோரும் ஈழத்தமிழர்களின் ரணங்களின் மேல்
எமது வளங்களை சுரண்டுவது தான் முதன்மை நோக்கு
இது தவிர வேற எந்த செப்படி வித்தையும் இல்லை.
புரிந்து கொள்க.

இட்டாலி வடை said...

வாருங்கள் அனானி ! வாருங்கள் நிலை!

கட்டெறும்பு கூட தன் எதிர்ப்பைக் "கடித்து"ப் பதிவு செய்கின்றது. வஞ்சிக்கப்பட்ட மக்களின் கோபம் எப்போதும் அழிந்து போகாது...போகவும் கூடாது. எல்லாவற்றையும் மீறி அது அம்மக்களின் "உயிர் வாழ்தல்" உடன் இறுகிப் பிணைந்திருப்பது.

மக்கள் விழித்துக் கொள்ளும் வரை தான் சாம்ராஜ்ஜங்களின் ராஜபாட்டைகள் பளபளத்துக் கொண்டிருக்கும்.

கொஞ்ச நாள் வரை அமெரிக்கா-ரஷ்யா. இப்போது ரஷ்யா எங்கே?

இப்போது சீனா-அமெரிக்கா...?

உலக ஒழுங்கு பொருளாதார அடிப்படையில் என்பது இன்று நேற்றல்ல..காலனிய,நவகாலனிய காலத்திலே கூட இருந்து கொண்டிருந்தது தான்.

இக்காலத்தில் கூட பல இனக்குழுமங்கள் விடுதலை பெற்று சுதந்திர வாழ்வு வாழுகின்றன.

உதாரணம். வியற்நாம்,கியூபா,கிழக்கு தீமோர்.
கழுதை போன்று தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை போல ஆனது

உங்கள் நம்பிக்கை மட்டுமல்ல போராட்ட உணர்வும் தான்...

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil