ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, December 21, 2009


பாவம் இந்த மூதாதை
இந்தப் படத்தைப் பாருங்கள். இருந்தபடியே தூங்கும் இந்த முதியவரைப் பார்த்து ஏன் ஒருவரும் அனுதாபம் காட்டுகின்றார்களில்லை.எவ்வளவு பாவமாக இருக்கின்றது. அந்த அந்த வயதில் அவற்றைச் செய்ய வேண்டுமென்றே மேலை நாடுகளில் 65 வயதில் ஓய்வு கொடுக்கின்றார்கள். குழந்தமையில் தூக்கம் வேண்டியிருப்பதைப்போல முதுமையில் தூக்கமும் ஓய்வும் வேண்டும். அது கிடைக்காவிட்டால் இப்படி இருந்த படியே தூங்க வேண்டியது தான்.

மிருகங்கள் கொடுமைப்படுத்தப்படும் போது கூட "மிருக வதை தடைச்சட்டத்தில்" வேண்டிய பாதுகாப்பைக் கொடுக்கின்றார்கள்.

இந்த முதியவரை இவ்வாறு துன்பப்படுத்துவதை எதிர்த்து யாராவது பொதுநல வழக்குத் தொடுத்தால் நன்மையாக இருக்கும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil